யஸ்ய ஆத்மா சரீரம் -ஜெகதாகாரம் -வேதார்த்தமான அவனை ப்ரேமம் உடன் -பக்தி பாரவஸ்யத்தால்
ஞானம் மிகுந்து கூப்பிட்டு -தவித்து -ஆறி இருக்காமல் கூப்பிடுகிறார்
ஆறாம் பத்து தொடக்கத்திலும் கீழும் தூது-ஜெகதாகாரம் அறிந்தவராலும் –
அவனை அவனாகவே காண ஆசைப்பட்டுக் -கூப்பிடுகிறார் –
கிடந்த திருக் கோலத்தால் மண்ணும் விண்ணும் மகிழும் குலசேகரப் பெருமாள்
நடந்த திருக் கோலத்தால் மண்ணும் விண்ணும் மகிழ இவர் இதில் –
பிரவேசம் –
எங்குச் சென்றாகிலும் கண்டு” என்றும், “வானவர் கோனைக் கண்டு” என்றும் தூது போகச் சொன்னார்;
அவை போக மாட்டாதபடி தம்முடைய துயர ஒலியாலே அழித்தார்;
“மரங்களும் இரங்கும் வகை” திருவாய். 6. 5 : 9.-என்று அறிவில் பொருள்கள் இரங்கா நின்றால்,
சிறிது அறிவை யுடைய பறவைகள் அழியக் கேட்க வேண்டா அன்றே,
“ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய்” திருவாய்.6. 8 : 11.-என்றது,
தூதரை ஒழிய அல்லவே.
ஆகையாலே, தம் பக்கத்திலே கால் நடை தந்து போவார் இல்லையே.
“அறிவில் பொருள்களுங்கூட அழிகிற இடத்தில், பரம சேதனனானவனுக்குச் சொல்ல வேணுமோ?” என்று பார்த்து,
தம் மிடற்று ஓசையை இட்டு அழைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.
தம்முடைய துயரத்தைக் காட்டுகின்ற ஓசை கிடக்க, வேறு ஒருவர் போக வேண்டும்படியாய் இருந்ததோ?
கலங்காப் பெருநகரமான ஸ்ரீ வைகுண்டத்திலும் தரிக்க ஒண்ணாத படி,
கால் குலைந்து வரும்படி பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.
இனித் தான், தூது போவார்க்குக் காலாலே யாதல் சிறகாலே யாதல் போக வேண்டுகையாலே தடை உண்டு;
இவர் மிடற்று ஓசைக்குத் தடை இல்லை அன்றோ.
இவர் படுகிற வியசனத்துக்குக் காரணம் சொல்லப் போகாது,
பிராட்டி சிறை இருந்தமைக்குக் காரணம் சொல்லப் போகாதவாறு போலே.
அவள் இருப்பு பிறர் மேல் வைத்த திருவருளாலே ஆனாற் போலே,
இவருடைய வியசனமும் பிறர் மேல் வைத்த திருவருளுக்குக் காரணமாய் இருக்கிறபடி.
கர்மம் ஹேது வானாலோ என்னில் ஆகாது -ஹேது சொல்லப் போகாது –
காரணம் -கார்யம் பூர்வ வ்ருத்தி இருக்க வேண்டுமே –
அதுக்கு த்ருஷ்டாந்தம் பிராட்டி -சிறை இருந்தவள் ஏற்றம் –
ஆழ்வாரை இங்கு வைத்து வியசனம் செய்ய வைத்தது -பிறர் உஜ்ஜீவனத்துக்காகவே -அவன் ஸங்கல்பமே ஹேது –
அவள் சிறையிருந்த படியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதி வைக்க இன்று நாடு எல்லாம் வாழுமாறு போலே,
அன்று இவர் தாம் வியசனப் பட்டாரே யாகிலும்
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் உலகத்திற்குத் தண்ணீர்ப் பந்தலாயிற்றது.
திருக்குழல் ஓசையாலே திருவாய்ப் பாடியில் பெண்கள் எல்லாம் பட்டனவற்றைத்
தம் மிடற்று ஓசையாலே அவன் படும்படி பண்ணுகிறார்.
“வாரீர்! நீர் நம்மை இருந்த இடத்தே இருக்க ஒட்டாமல் இங்ஙன் படுத்துகிறது என்?
நாம் உம்மை விட்டுத் தூரப் போனோமோ? –
ஏதேனும் ஒன்றைப் பற்றினாலும் அது நம்மைப் பற்றிற்று என்று சொல்லலாம்படி
இருக்கிற உலகமே உருவமாக இருக்கும் தன்மையைக் காட்டினோமே” என்று அவன் திருவுள்ளமாக;
அதில் குறை என்?
நீ உலகமே உருவமாய்க் கொண்டிருக்கிற இந்த ஞானம் எனக்கு இல்லையோ?
இந்த ஞானந்தானே அன்றோ “அசாதாரண ஆகாரத்தையும் காண வேணும்” என்னப் பண்ணுகிறது;
ஆதலால், எனக்குப் பேறானது கிடக்க, அல்லாதனவற்றைக் காட்டினால் பிரயோஜனம் இல்லை என்கிறார்.
அதுவும் உன் ஐஸ்வரியத்திற்குப் புறம்பு அல்லாமையாலே வேணுமாகில் அறிதல் செய்கிறேன்;
அதனால் -ஜகதாகாரம் அறிந்து பாடியதால் -வந்தது –
உன்னதானவற்றை ‘என்னது’ என்று இருக்கிற மயக்கம் நீங்குகிறது.
அருச்சுனனும் ஸ்ரீ விஸ்வரூபம் கண்ட உடனே “உம்மைக் கிரீடத்தை யுடையவராயும் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்;
பல கைகளை யுடையவரே, விஸ்வரூபத்தை யுடையவரே, நான்கு கைகளுடன் கூடின அந்த உருவமாக ஆகக் கடவீர்”
“கிரீடினம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ருஷ்டும் அஹம்ததைவ
தேநைவ ரூபேண சதுர் புஜேந ஸஹஸ்ர பாஹோ பவ விஸ்வ மூர்த்தே”-என்பது, ஸ்ரீ கீதை, 11 : 46.
என்கிறபடியே, அசாதாரணமான வடிவை எனக்குக் காட்ட வேணும் என்றான் அன்றோ.
என்னுடைய துயர ஒலியைக் கேட்டு இரங்கி வந்திலையாகிலும்,
உன்னுடைய விபூதி அழியாமல் நோக்க வேணுமாகில் வா என்கிறார் என்றுமாம்.
இவருடைய துயர ஒலி தான் அவனுக்கு உபய விபூதியிலும் குடி இருப்பு அரிதாய்க் காணும் இருக்கிறது.-
ஞானமும் பிரேமமும் கலந்து அருளிச் செய்த பதிகம் -அசாதாரணமான மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார் –
அசாதாராணமான திவ்ய மங்கள விக்ரகம் காண ஆசைப்பட்டு அருளிச் செய்கிறார்
——————————————————————————————————-
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-
அகில ஜகத் ஆகாரனாய் இருக்கும் நீ உன்னுடைய அசாதாராண சின்னங்களுடன் திவ்ய மங்கள விக்ரகம் காணுமாறு அருள வேண்டும்
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்-அப ஏவ -தண்ணீர் -நீரின் கார்யம் பிருத்வி -உபய காரணமாய் அக்னி –
ஆராதனம் -பண்ணி கம் ஆகாசம் சுகம் -அளவிட அறிய சுகம்
தத் காரணமான வாயுவும் -பூத சதுஷ்தடயா பிரதானம் -மகா -ஆகாசம் -அவகாசம் -இடை வெளி -சமஷ்டி கொண்டு
வியஷ்டி சிருஷ்டி சங்கல்பித்து -பகுஸ்யாம்-அனுஷ்டானம் போது சமஷ்டி சிருஷ்டிக்கு அப்புறம் -வியஷ்டி சிருஷ்டி
அந்தராத்மா -அனுப்ரேவிசித்து-தாது தாது ஆத்மாவாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்-சூர்ய சந்திர -அண்டாந்த வர்த்திக்களில் பிரதானம் -அழிந்ததே படைக்கப்படும் –
124/24/வ்யூஹம் -சங்கர்ஷண-ஞானம் பலம் சம்ஹாரம் தொடங்கி -அங்கும் -அது தானே ஜாக்ரதையாகப் பண்ண வேண்டும் –
கர்மங்களை மாறாமல் வைக்க -அதனால் சிவன் முதலில் -பொதுவான ஆகாரம் -அப்புறம் தான் ஸ்ருஷ்டிக்க அநிருத்தன் –
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன் பால்-ஆஸ்ரிதர் அனுபாவ்யமான -ஒருவர் ஒருவருக்கு உபகரிக்க -நாட்டியம் பாட்டு -ஓளியும் ஒலியும்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.-மண் -லீலா விபூதி விண் நித்ய விபூதியும் -மகிழவே -பொன்னுலகு ஆளீரோ புவனி எல்லாம்
ஆளீரோ-குருவி கையில் ந சாஸ்திர ந கிராமம் ஆழ்வாருக்கு -உம்மை நிர்பந்திக்கும் கொடியேன் -பால் வாராய்
நடை அழகை காண வேணும் -ஒரு நாள் ஆகிலும் -தீர்த்த தாகம் பஞ்சில் நனைத்து தீர்த்தம் கேட்பது போலே
தண்ணீராகிப் பூமியாகி நெருப்பாகிக் காற்றாகி நீண்ட ஆகாசமாகிச் சிறப்புப் பொருந்திய சூரிய சந்திரர்களாகிச் சிவனாகிப் பிரமன் ஆனாய்;
மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும் படியாகக் கொடியேனாகிய அடியேனிடத்து, கூர்மை பொருந்திய சக்கரத்தையும்
வெண்மை பொருந்திய சங்கையும் கைகளிலே ஏந்திக் கொண்டு ஒரு நாள் வர வேண்டும்.
உலகமே உருவமாக இருக்கும் தன்மை, முதல் இரண்டு அடிகளில் கூறப்பட்டது. மகிழ ஏந்தி வாராய் என்க.
வாராய் – வர வேண்டும்; விதிவினை. இத் திருவாய்மொழி, கலிநிலைத்துறை.
“உலகமே உருவமாயிருக்கும் தன்மையைக் காட்டித் தந்தோம் அன்றோ” என்ன, அது போராது;
அசாதாரணமான வடிவைக் காண வேண்டும் என்கிறார்.
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய் சீர் ஆர் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய் –
“இது அறியாமல் அவ் வருகே ஆசைப்படுகிறார் என்று கொள்ள ஒண்ணாதபடி,
தாம் அறிந்தமை தோற்ற விண்ணப்பம் செய்கிறார்.
யாவையும் யாவரும் தானே நின்ற மாயன் என்றாரே கீழே-திரளச் சொல்லி -கணக்கு சொல்லி
ஞானம் உண்டு என்று காட்டி அருளுகிறார்
நீராய் –
நாராயணன் ஆவது பண்டே அறிவன் என்கிறார்.
“நீர் தோறும் பரந்துளன்” –திருவாய். 1. 1 : 10.-என்றாரே யன்றோ மேல்.
“ஆபோ நாரா இதி ப்ரோக்தா:, நீர்கள் நாரம் என்று சொல்லப்பட்டன” என்பது ஈண்டு அநுசந்தேயம்.
“அந்தப் பரமாத்மா முதலில் தண்ணீரையே படைத்தார்” என்கிறபடியே,-பெரிய நீர் படைத்து -அங்கு உறைந்து –
முதல் முதல் தண்ணீரைப் படைத்துப் பின்னர் மண் முதலான பூதங்களை உண்டாக்கி,
இவற்றைக் கொண்டு காரியம் கொள்ளுமிடத்தில் ஒன்றில் ஒன்று அதிகமாக வேண்டி இருக்குமன்றோ;
பஞ்சீகரணம் பண்ணி -அண்ட ரூபமான கார்யம் -பாதி -நாலாக்கி நாலில் கலந்து -தன் தன் அம்சம் பிரதானமாக இருக்கும்
விபக்த அம்சம் – அப்ரதானம் –அவிபக்த அம்சம் -பிரதானம் என்றவாறு
இப்படி பஞ்சீ கரணம் பண்ணினால் தானே கார்ய கரம் ஆகும் -நாநா வீர்யம் -உள்ள இவை –
“ஐம் பெரும் பூதங்களும் ஒன்றில் ஒன்று கலத்தல் பெற்றன; ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் பெற்றுள்ளன” என்றே அன்றோ
படைக்கும் முறை தான் இருப்பது;ஒன்றில் ஒன்று அதிகமாக’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘ஐம் பெரும் பூதங்களும்’ என்று தொடங்கி.-
“ஸமேத்ய அந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாஸ்ரய:”- என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 2 : 54.
இந்தஸ் ஸ்லோகத்தில் “பரஸ்பர ஸமாஸ்ரய:” என்றதனால்,
ஆஸ்ரய ஆஸ்ரயி பாவத்தாலும், ஆதார ஆதேய பாவத்தாலும் ஒன்றில் ஒன்று அதிகமாக இருக்கவேண்டும் என்பது போதரும்.
இவை தாம் ஒரு பொருளும் அன்றே; பல பொருள்களாக இருக்கச் செய்தே ஒரே பொருளாக்கி ஒரு காரியம் கொள்ள வேணும் அன்றோ:
அது செய்யும் போது, குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகும் கூட்டிச் சேரத் துகைத்துக் குடம் முதலான பொருள்களாய்க் கொண்டு
தோற்றுவிக்குமாறு போலே, தண்ணீரை உண்டாக்கி, அது நீர்ப் பண்டமாகையாலே அதனோடு கடினமான பொருளைக் கூட்டி,
பின்னையும் நெகிழ்ந்திருக்கையாலே அதனைச் சிறிது வலிக்கைக்காக ஒளிப் பொருளை உண்டாக்கி,
அதுதான் மிகைத்துத் தீயுமளவானவாறே அதனை ஆற்றுகைக்குக் காற்றினை உண்டாக்கி,
அது தனக்குச் சஞ்சரிக்கைக்காக இடத்தைக் கொடுக்கின்ற ஆகாசத்தை உண்டாக்கி.
இவ்வளவும் முதலில் சங்கல்பந்தன்னையே கொண்டு அண்ட சிருஷ்டியைப் பண்ணி நின்றது.
இனி, பெரியதொரு மாளிகையைச் சமைத்து இருள் உறைய விட்டு வைக்க ஒண்ணாதே அன்றோ;
அதற்கு இரண்டு விளக்குகள் இட்டாற் போலே சந்திர சூரியர்களை உண்டாக்கி.
நீர்க் களிப்பு அறுகைக்கும் வளர்ச்சி பெறுகைக்குமாக இருவரையும் உண்டாக்கின படி.
அண்டங்களுக்குள்ளே வாழ்கின்றவர்களாய்க் கொண்டு நின்று, ஒருவன் மனைந்து கொண்டு வர
ஒருவன் அழித்துக் கொடு வரும்படி பிரம ருத்திரர்களை உண்டாக்கி.
ஆயின், சிவனை முறை படச் சொல்லுவான் என்? என்னில்,
அழித்தலை முன்னாகக் கொண்டே யன்றோ படைத்தல் தான் இருப்பது.
‘நீராய் நிலனாய்’ என்றதனோடு ஒக்க, சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்கையாலே,
“யாதொருவனுக்கு ஆத்மாக்கள் எல்லாம் சரீரமோ, யாதொருவனுக்கு மண் முதலியவை சரீரமோ” என்கிறபடியே,
சேதன அசேதனங்கள் இரண்டும் அவனுக்குச் சரீரத்தைப் போன்று பரதந்திரப்பட்டவை என்னுமிடம் சொல்லுகிறது.
‘சீரார் சுடர்கள் இரண்டாய்’ என்றும், ‘சிவனாய் அயனானாய்’ என்றும் ஒற்றுமைப் படுத்திச் சொல்லுகையாலே,
நியமிக்கப்படுகின்ற பொருளோடு நியமிக்கின்றவர்களாக அபிமானித்திருக்கிறவர்களோடு வாசி அற
அவனுக்குப் பரதந்திரப்பட்டவர்கள் என்னுமிடம் சொல்லிற்று.
உலகத்தைப் படைத்தது உன்னை அடைவதற்காக அன்றோ?
உன்னை அடைதலைப் பண்ணித் தந்தால் அன்றோ நீ ஒரு காரியம் செய்தாயாவது?
படைப்புக்குப் பிரயோஜனமாவது, எப்பொழுதும் துக்கத்தை அடைந்து கொண்டிருக்கிற ஒருவனை
அந்தமில் பேரின்பத்தே கொடு போய் வைக்கை அன்றோ.
அது கிடக்க,
இதனை உண்டாக்கியதற்குப் பிரயோஜனத்தை நீ பெற வேண்டாவோ?
‘நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயன் ஆனாய்’என்று,
இவர் தமக்கு ஈஸ்வர வியாபாரம் அடங்கலும் மனை அடைவே எண்ணுவாரைப் போலே மிக்க பிரகாசமாய் இருக்கிறபடி.
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி –
ஸ்ரீ பாஞ்சஜன்யத்தில் வெண்மை போன்று திருவாழியில் கூர்மையும் இவர்க்குக் கவர்ச்சி யாயிருக்கிறபடி
பகைவர்களைத் துணிக்கத் துணிக்கச் சாணையில் ஏறிட்டாற் போலே கூர்மை மிக்கிருத்தலின் ‘கூர் ஆர் ஆழி’ என்கிறது.
அசாதாரண விக்கிரஹத்துக்கு லக்ஷணமோ தான் கையும் திருவாழி யுமாயிருக்கை.
கொடியேன் பால் –
எனக்கு இங்ஙனே ஒரு நிர்ப்பந்தம் உண்டாவதே! என் ஸ்வரூபத்திற்கு விரோதங்காண் நான் பண்ணுகிறது.
ஸ்ரீ பரதாழ்வானைப் போலே பொகட்ட இடத்தே கிடக்க வல்ல தன்மையனாகப் பெற்றிலேன்;
இளைய பெருமாளைப் போலே, ‘நில்’ என்ன, “என்னை அடியவனாகக் கொள்”
“குருஷ்வமாம்” என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 22.– என்று நிர்பந்திக்கும் தன்மை யனாவதே!
வாராய் –
ஆசைப் பட்டாலும் நடக்க வல்லார் வருமித்தனை அன்றோ.
இளைய பெருமாள் போலே உன் பின்னால் என்னால் நடக்க முடியாதே -சாதனா புத்தி இல்லையே –
பரகத ஸ்வீகார நிஷ்டன் -வாராய் என்கிறார் –
‘வாராய்’ என்ற அளவிலே வந்து கொடு திரியப் போமோ? என்னில்,
ஒரு நாள் நான் உளன் ஆகைக்காக –
ஒரு நாள்-
விடாயர் ‘ஒரு கால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர்’ என்னுமாறு போலே ‘ஒரு நாள்’ என்கிறார்.
மண்ணும் விண்ணும் மகிழவே –
மண்ணும்
எனக்காக வந்திலை யாகிலும் உன் விபூதி அழியாமைக்கு வா என்கிறார்.
‘மானாவிச் சோலை போலே ஆவது-மானாவிச் சோலை – நவராத்ரியில் மஹா நவமியில் செய்யும் அலங்காரம்.-
அழிவதான இது போனால் என் செய்ய வேணும்?’ என்று இருக்கிறாயாகில்,
விண்ணும்-
அவ் விபூதியும் அழியுங்காண்;
இது அழியவே அதுவும் அழிந்ததாமன்றோ.
அதுவும் இருக்கச் செய்தே அன்றோ, இது அழிய
“அந்தப் பரமாத்மா தனித்து இருக்கும் போது சந்தோஷத்தை அடைய இல்லை” என்றது.
இனித் தான், பிரளயத்துக்கு அழியாது என்ற அளவில்,
ஆழ்வாரின் ஆர்த்திக்கு துன்பத்துக்கும் அழியாது என்றதாகாதே!
மகிழவே –
அழிகை தவிர்ந்து தரிக்கைக்காக–ஒரு நாள் வாராய் –
தேசிகன் -நான் போனதும் தயா தேவி உனக்கு ஆகாரம் இருக்காதே –
ஆர்த்திக்கு அழியும் -காதல் இருந்தால் தானே உனக்கு பெருமை –
மண்ணும் விண்ணும் மகிழவே ஒரு நாள் வாராய் –
—————————————————————————-
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே.–6-9-2-
மகா பலிக்கு உன் அழகைக் காட்டி -ஆச்சர்ய சக்தன் -ஆனந்யார்ஹத்வம் காட்டி- நான் கண்டு உகக்கும் படி நடக்க வேண்டும் ஞானத்தில்
நடந்து ஞாலம் அளக்க வேண்டாம் இரண்டு திருவடி நடந்து காட்டினால் போதும்
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி-அர்த்தித்த அநந்தரம் கையில் நீர் பட்டு சிலிர்த்து வளர்ந்து சர்வ சக்தி யோகம் பிரகாசித்து
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே-ஆச்சார்ய -ஸ்வாமி
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட-அடியேன் அடைந்து -பிரயோஜநாந்தர பரர்களுக்கு காட்டிய நீ –
நான் கண்டு அல்லது தரிக்காத சபலன் நான் உன் வடிவு அழகை கண்ணாலே கண்டு -மானச அனுபவம் போதாதே
யஜ்ஞ்ஞாவாடம் வந்தால் போலே நீர் வந்து கிட்டி -நண்ணி ஒருநாள் ஞாலத் தூடே நடவாயே -நடந்து அருள வேணும்
மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் மகிழும்படியாக வாமனாவதாரமாகி வலியைக் காட்டி மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும்
அளந்து கொண்ட ஆச்சரியத்தை யுடைய அம்மானே! நான் உன்னை அடைந்து கண்டு மகிழ்ந்து கூத்தாடும்படியாக
நீ தானே வந்து கிட்டி இந்தப் பூமியிலே ஒருநாள் நடந்து வரல் வேண்டும்.
மகிழக் குறளாய்க் காட்டிக் கொண்ட அம்மான் என்க. நான் கூத்தாட நடவாய் என்க,
நடவாய்: விதிவினை; நடக்கவேண்டும் என்பது பொருள்.
“வாராய் என்று நிர்ப்பந்தித்து அன்று காணும் நம்மைக் காண்பது;
உம்மை ஒரு தேச விசேடத்தே அழைத்துக் காணும் காட்டுவது” என்ன,
அவ்வடிவு தன்னையே இங்கே கொடு வந்து இதர சஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ? என்கிறார்.
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் –
இவ்வளவில் ஸ்ரீ வாமனனாய் வந்து தோற்றிற்றிலையாகில், உபய விபூதியும் அழியுமாகாதே.
அனைவருக்கும் நியந்தா ஸ்வாமி குணம் போகுமே -அதனால் அனைத்து விபூதியும் அழியுமே –
ஒரு பாட்டம் மழை விழுந்தால் பொருள்களெல்லாம் செவ்வி பெறுமாறு போலே.
(செவ்வி பெறுமாறு–தரித்தல் -வளர்த்தல் -உகப்புடன் இருத்தல் )
அன்றிக்கே,
உகவாதாரும் மகிழும்படி யன்றோ வந்து தோற்றிற்று என்னுதல்.
வலம் காட்டி –
கொடை என்ற குணம் சிறிது கிடக்கையாலே
இராவணன் முதலியோர்களைப் போலே அம்பாலே அழிக்கப் போகாதே;
அழகாகிற பலத்தைக் காட்டி வாய் மாளப் பண்ணின படி.
சுக்கிரன் முதலானோருடைய தடை உண்டாயிருக்கச் செய்தே அன்றோ,
அழகுக்குத் தோற்றுக் கொடுத்துக் கொண்டு நின்றபடி.
குறளாய் –
கோடியைக் காணி ஆக்கினாற் போலே முகந்து கொள்ளலாயிருக்கை.
கண்ட திறத்திது கை தவம் ஐய! கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்
அண்ட முற்றும் அகண்டமு மேனாள் உண்டவனா மிதுணர்ந்து கொள் என்றான்.- என்பது, கம்பராமாயணம், வேள்விப் பட. 26.
மண்ணும் விண்ணும் கொண்ட –
பூமி ஆகாசம் முதலானவற்றைக் காற்கீழே இட்டுக் கொண்ட.
இந்திரனுக்குக் கொடுத்த என்னாமல், ‘கொண்ட’ என்கிறது,
அவன் அசுரத் தன்மை வாய்ந்தவனாகையாலே அவன் பக்கல் தானே கொண்டானாகக் கொண்ட படியும்,
தன்னை யடைந்தவனான இந்திரனுடைய வேறுபாடில்லாத ரசத்தாலும்-அ விபாக ரசம் – என்க.
என்னையே உபாசிப்பாய் -என்றான் இந்த்ரனும் ரிஷிகள் இடம் -அவிபாக ரசம் -அந்தராத்மா என்பதால் —
மாய அம்மானே –
திருமகள் கேள்வனானவன் இரப்பவனானபடியும்,
வடிவழகைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடியும்,
“கொள்வன் நான் மாவலி மூவடி ” என்றாற் போலே சில மழலைச் சொற்களைப் பேசினபடியும்,
சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்த படியும் தொடக்கமான ஆச்சரியங்களைச் சொல்லுகிறது.
அம்மானே
“தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்” –“தேவாநாம் தானவாநாஞ் ச ஸாமாந்யம் அதி தைவதம்”
என்பது, ஜிதந்தா. -என்கிற ஸ்வாமித்வமன்றோ அங்ஙன் செய்ய வேண்டிற்று என்பார் ‘அம்மானே’ என்கிறார்.
நான் உனை நண்ணி உகந்து கூத்தாட
இந்திரன் முதலானோர்களைப் போன்று எனக்கு இராஜ்ய அபேக்ஷை இல்லை காண்;
நீ செய்து தந்த ஞானத்தாலே நிறைவு பெற்றவன் ஆகிறிலேன்.
நான் உன்னைக் கிட்டிக் கண்டு உகந்து கூத்தாடும்படி வர வேணும்.
வருகைக்கு உண்டான வியாபாரம் அவன் தலையது;
வந்தால் உகக்கை தான் இவரது செயல்.
நான் உகக்க வேண்டும் –சாதனம் அந்வயம் இல்லை–கண்டு உகக்க வேண்டும் –
நான் கண்டு உகந்து கூத்தாட –
மஹாபலியைப் போலே ஒன்று கொடுக்க இருக்கிறேன் அல்லேன்;
இந்திரனைப் போலே ஒன்று கொள்ள இருக்கிறேன் அல்லேன்;
‘எனக்கு’ என்று இருப்பாரோடும், ‘என்னது’ என்று இருப்பாரோடுமோ நீ கொடுத்துக் கொண்டு பரிமாறுவது?
உன்னையே கண்டு உகப்பார்க்கு உன்னைக் காட்டலாகாதோ?
நான் கண்டு உகந்து கூத்தாட –
கேட்டால் மட்டும் போதாதே-நான் கண்டு உகக்க வேண்டும் -நான்-அநந்ய பிரயோஜனன்
“கிருஷ்ணா!எங்களுடைய பரபரப்பினால் மாத்திரம் சந்தோஷமடையும்; இது தான் எங்களுக்குப்
பெரிய செல்வம்” என்கிற இதிலே அன்றோ இவர்க்குச் சம்பந்தம்.-
விதுரனின் பரபரப்பே -பீஷ்மர் -துரோணர் -துரியோதனன் -மூவரையும் விட்டு -துராபிமானர்கள்
நண்ணி-
நான் இருந்த இடத்தே நீ வந்து கிட்டி.
ஒரு நாள் –
பின்பு ஒரு நாள் அச் செயல் செய்யலாகாதோ?
மண்ணும் விண்ணும் மகிழ நடக்கலாவது அசுரன் முன்பேயோ?
வேறு பிரயோஜனங்களைக் கருதாதவர்கள் முன்பு நடக்கலாகாதோ?
ஞாலத்தூடே நடவாய்-
நடை அழகில் வாசி கண்டு அதிலே ஈடுபடாதே கொடையைக் கொண்டாடி இருக்கும்
அவன் முன்னேயோ நடக்கலாவது?
நடை அழகில் உள்மானம் புறமானம் கண்டு அதுவே ஜீவனமாயிருக்கிற என் முன்னே நடக்கலாகாதோ?
———————————————————————
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3-
உனக்கு ஆட்பட்டும் இன்னம் உழல்வேனோ -5-9-10–அங்கு திருக் குடந்தை –
அகில பிரகாரத்தாலும் ஆஸ்ரித சம்ரஷணம் அர்த்தமாக வியாபாரம்
சக தர்ம சாரிணி ஸ்ரீ லஷ்மி உடன் அனுபவியாமல் தளர்வேனோ
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்-அவதரித்து -நடந்து -நின்றும் வில்லைக் கோத்து-பிரதிச்சிச்யே –
கடல் முன்னே குணக் கடல் போலே கிடந்தும் -இருவருமாக சித்ர கூடம் ச ராகவ சீதா சஹ –
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே!-சர்வ ரஷகன் -யுகம் தோறும் -சதா வர்ஷ சகஸ்ராணி 11000 வருஷம்
கோலத் திருமா மகளோடு உன்னைக் கூடாதே-விஷ்ணோ தேக அனுரூபம் -ஆபி ரூப்யை-வடிவு அழகு கோல வராஹம் -பொருந்திய அழகுடன்
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?-அநாதி காலம் இழந்தால் போலே உறவு அறிந்த பின் இன்னும் கிட்டி அனுபவிக்காமல் –
சம்பந்தம் அறிந்த பின்பு விஷயாந்தர ருசி விட்டு உங்கள் மேல் ருசி வந்த பின்பு கிலேசத்தால் துடித்து இருக்கவோ
யுகங்கள் தோறும் பூலோகத்திலே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் மிகப் பலநாட்களாக உயிர்களைப் காப்பாற்றுகின்றவனே!
அழகிய பிராட்டியாரோடு சேர்ந்திருக்கின்ற உன்னை அடியேன் அடையாமல் மிகப் பலநாள் இன்னம் தளர்வேனோ?
ஞாலத்தூடு – பூமியிலே. அடியேன் உன்னைக் கூடாதே இன்னும் தளர்வேனோ? என்க, சால : மிகுதியைக் காட்டும் உரிச்சொல்.
உலகமே உருவமாக இருக்கிற வடிவு காட்டினது போராது;
அசாதாரணமான விக்கிரஹத்தைக் கொடு வந்து காட்ட வேணும் என்றார் முதற் பாசுரத்தில்;
அது உமக்குக் காட்டுவது ஒரு தேச விசேடத்தே கொடு போய்க் காணும் என்ன,
அது தன்னை இங்கே கொடுவந்து இதர சஜாதீயமாக்கிக் காட்டிற்றிலையோ என்றார் இரண்டாம் பாசுரத்தில்;
அது ஒரு நாள் சற்றுப் போது காட்டாறு பெருகினாற் போலே செய்தோம் என்ன,
‘அது ஒரு காலத்திலே நிகழ்வது’ என்ன ஒண்ணாதபடி யுகந்தோறும் இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்து
காப்பாற்றுதல் உன்னுடைய ஸ்வபாவமாக இருக்க, நான் நோவு படக் கடவேனோ என்கிறார்.
ஞாலத்தூடே நடந்தும் –
எப்பொழுதும் காணக் கூடியவர்கள் முன்னே நடக்கக் கடவ நடையை,
யாதானும் ஒரு காலத்தில் வந்தாலும் பாராதவர்கள் முன்னே காணும் நடப்பது;
குருடர்களுக்கு முன்னே நடக்குமாறு போலே.
“ஸ்ரீ ராம பிரான் முன்னே நடந்து சென்றார்”
“அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதா மத்யே ஸூ மத்யம ” என்பது, ஸ்ரீராமா. ஆரண். 11 : 1.-என்றும்,
“பின்னர் விஷ்ணுவானவர் மனித உருவத்தோடு சக்கரவர்த்தித் திருமகனாய் வீரராய் மஹாபல முள்ளவராய் இராமன் என்ற
பிரசித்தியு டையவராக இந்தப் பூமியில் சஞ்சரித்தார்” என்றும் சொல்லுகிறபடியே, நடந்தும்.
( பொய்யோ இடையாளொடும் இளையானொடும் நடந்தான் -கம்பர் )
வட தேசத்தினின்றும் போரப் பாட வல்லவராயிருப்பார் ஒருத்தர் ‘பெருமாளைத் திருவடி தொழ வேணும்’ என்று வர,
ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் ஒரு தீர்த்தத்தின் அன்று இருந்து திருமாலையைப் பாடிச் சமைந்து,
பெருமாளை ஒரு மத்த கஜத்தைக் கை வசப் படுத்துமாறு போலே ஏத்தி-ஸ்தோத்ரம்-வசமாக்கிக் கணிசம்-சபதம் -கொண்டு,
“நாயன்தே! தேவரீர் திருவடிகளுக்குப் போர நல்லான் ஒருவன் தேவரைத் திருவடி தொழ நெடுந்தூரமுண்டு வந்திருக்கிறது;
இவனை அழைத்துக் கொண்டு சம்பாவனை பண்ணி யருள வேணும்” என்ன,
அவரைப் பெருமாள் அருளப் பாடிட்டு, திருப் புன்னைக் கீழ் நின்றும் அவர் நின்ற விடத்தே திருக் கைத்தலத்தே எழுந்தருளி,
விண்ணப்பஞ்செய்வார்களை அருளப் பாடிட்டு,
“வாரீர்கோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கு எல்லாம் போருமோ செய்த தரம்?” என்று திருவுள்ளமானார்;
அப்படியே அன்றோ நம் இழவுகளும் திருவுள்ளத்தே பட்டு, அவை எல்லாம் ஆறும்படி முகம் தந்தருளும் படியும்.
நின்றும் –
“கம்பீரமான வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற இராமனையும் இலக்ஷ்மணனையும்
தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்’’ –
“அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 19 : 25.
தன் கணவனைக் கொன்ற பெருமாளைத் ‘தப்பச் செய்தீரே’ என்கை யன்றிக்கே,
இவரது குற்றமுண்டோ? தம்மை யடைந்தவர்களுடைய பகையைப் போக்கத் தவிர்வர்களோ?
இவனும் அநுகூலித்தானாகில் ரக்ஷியாரோ? தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலை கீழதாக விழுந்து
சாவாரைப் போலே தன் குற்றத்தால் கெட்டானத்தனை காண் வாலி என்றாள் அன்றோ!-
மரகத மணித்தடம் -வல்லரக்கர் புக்கு அழிந்த –
இப்படி உகவாதாருடைய பெண்களுக்கும் கவர்ச்சி கரமாம்படி யன்றோ கையும் வில்லுமாய் நிற்கும் நிலை இருப்பது.
கிடந்தும் –
“பாம்பின் உடல் போலே இருக்கிற திருக்கையைத் தலைக்கு அணையாகக் கொண்டு பகைவர்களை அழிக்கும் பெருமாள்
கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக் கொண்டு சமுத்திரத்திற்கு நேர் முகமாகப் படுத்தார்” என்கிறபடியே,
கடலை வேண்டி நின்று கிடக்கிற கிடை தானே இலங்கை குடி வாங்க வேண்டும்படி இருக்கை.
“பிரதிசிஸ்யே-எதிராகப் படுத்தார்” என்கிறதாயிற்று,
கடல் தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று,
அதற்காக, ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற்போலே இருக்கை;
“கருணையங் கடல் கிடந்தது கருங்கடல் நோக்கி” என்னும்படி அன்றோ.-கம்பர் பாசுரம்
ஈட்டிலே உள்ளதே -பிரமாணமாக காட்டி -நாத முனிகள் காலம் கம்பர் என்பர்
இருந்தும் –
அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:
பாஹு ம் புஜகபோகாபம் உபதாய அரிஸூதந:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 1.
“அலங்காரஞ்செய்து உட்கார்ந்திருக்கிறவரை” உபவிஷ்டம் ஸ்வலங்கிருதம்” என்பது, ஸ்ரீராமா. அயோத்.-16 : 8.-என்றும்,
“பர்ண சாலையில் எழுந்தருளியிருக்கிற சடையோடு கூடிய இராமனை” என்றும் சொல்லுகிறபடியே இருக்கை.
“திருவயோத்தியி லிருக்கும் பேரோலக்கம் சிறியது” என்னும் படியன்றோ தனியிடத்தில் ஓலக்கம் இருந்தபடி.
உடஜே ராம மாஸீநம் ஜடாமண்டல தாரிணம் க்ருஷ்ணாஜிநதரம் தம்து சீரவல்கலவாஸஸம்
ததர்ஸ ராம மாஸீநம் அபித: பாவகோபமம்”- என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 25.
அந்த ஓலக்கத்தில் கிட்டும் தம்பிக்கும்-பரதனுக்கும் – கிட்ட ஒண்ணாதபடி அன்றோ இந்த ஓலக்கம் இருந்தபடி:
“சுற்றிலும் நெருப்புப் போல் இருக்கிறவரை” என்கிறபடியே,
நெருப்பு எரியா நின்றால் கிட்டப் போகாதவாறு போலே கிட்டுதற்கு அரியராயிருந்த இருப்பு
சாலப் பல நாள் –
உன்னுடைய ரக்ஷணம் அநாதி அன்றோ?
அன்றிக்கே,
நூறு ஆண்டு
பதினோராயிரம் ஆண்டு என்றுமாம்.
உகந் தோறும் –
“யுகங்கள் தோறும் பிறக்கிறேன்” என்னுமாறு போலே.
(கல்பம் தோறும் -ஸம்பவாமி யுகே யுகே )
உயிர்கள் –
ஒரு திருவடி, திருவனந்தாழ்வான், பிராட்டி இவர்களுக்காக அன்று கண்டீர்,
எல்லா ஆத்மாக்களையும் ரக்ஷிப்பது அன்றோ உன்னது.
காப்பானே –
இவர்களுக்கு அழித்துக் கொள்ளூகை பணியானாற் போலே அன்றோ அவனுக்கும் நோக்குகை பணியானபடி.
நான் கை வாங்கினேன், (ஸ்வ ரக்ஷணம் தவிர்ந்தேன் )
இனிக் காவற் சோர்வு படாமல் வேணுமாகில் நோக்கிக் கொள்.
“இராமபிரானாலும் இலக்ஷ்மணனாலும் காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை”
“ராம லக்ஷ்மண குப்தா ஸா ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை: அபி ஸுராஸுரை:”- என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.
கடற்கரையிலே விட்ட போது பெருமாளை நோக்குகைக்கு, தம்பிமார் மஹாராஜர் மைந்தர் துவிவிதர்கள்
உள்ளிட்ட முதலிகள் எல்லாரும் இலங்கையிலே கிட்ட, ஆகாசம் எல்லாம் வெளிக் காவல் அடைத்து,
நிதி நோக்குவாரைப் போலே பெருமாளை நோக்கிக் கொண்டு கிடக்க, இவர்கள் இத்தனை பேரும் கண் சோர்ந்த அளவிலே,
பெருமாள், தாம் கையும் வில்லுமாய்க் கொண்டு இவர்களுக்குப் புறம்பே நின்று உலாவினார் அன்றோ.
அவன் நோக்குகைக்கு இத்தலை கண் செம்பளிக்குமத்தனை யன்றோ வேண்டுவது.
நாம் அவனுக்கு ரக்ஷகராக நினைத்திருக்குமது மயக்கம். அன்றோ;
உணர்ந்து பார்த்தால் ரக்ஷகனாக வல்லான் அவனே அன்றோ.
(ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்யவம் இல்லாத போது தானே அவன் ரக்ஷித்து அருளுவான் –
முதலிகள் பரிவாலே நோக்கிக் கொண்டு இருந்தார்கள் -பக்தி பாரவஸ்யத்தால் பரிந்து –
பொங்கும் பரிவாலே -தட்டு மாறிக் கிடந்ததே )
கோலம் திருமாமகளோடு உன்னைக் கூடாதே –
தாயும் தமப்பனும் கூட இருக்கக் கிட்டப் பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து
துடிக்குமாறு போலே இருக்கிறது காணும்.
“வேறாகாதவள்” என்கிறபடியே, அவனும் அவளுமான சேர்த்தி யன்றோ இவர்க்குப் பேறு.
இன்னும் தளர்வேனோ –
முன்னம் அநாதி காலம் இழந்த நான் இன்னம் – அநந்த -பல காலம் இழக்கவோ?
அடியேன் –
அது கிடக்க, “உன்னாலே இழந்தாய்” என்று சொல்லிக் கை விடலாம் என்று இருக்கிறாயோ?
இன்னும் தளர்வேனோ –
“ஒரு மிதுநம் எனக்குப் பேறு” என்று அறிந்த பின்பும் தளருமத்தனையோ?
‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல்,
‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல்,
அனுபவமும் எனக்கு -‘எனக்கு நான் உரியேன்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு;
ருசி பிறந்த பின்பு இழக்கவோ?
இப் பாசுரத்தால், அகாரத்தின் பொருளை முறைப்படி வியாக்கியானம் செய்கிறார்;
“அவ-ரக்ஷணே” -(காப்பான் )அன்றோ தாது.
ரக்ஷிக்குமிடத்தில்,
எல்லா வகையாலும் ரக்ஷிக்க வேண்டும்;
அது தான் எல்லாக் காலமும் ரக்ஷிக்க வேண்டும்;
அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாக வேண்டும்;
இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில்,
“குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும்,
“என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று;
ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று.
“ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே,
எல்லா வகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;
“சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக் காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று;
“உயிர்கள்” என்கையாலே, சர்வ ரக்ஷகத்வம் சொல்லிற்று;
‘கோலத் திருமாமகளோடு உன்னைக் கூட’ என்கையாலே, திருமகள் கேள்வனே பிராப்யம் என்றது.
அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும்-அர்த்த பஞ்சகமும் – சொல்லுகிறது;
“கோலத் திரு மா மகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
“அடியேன்” என்கையாலே, ஜீவாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று;
‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று;
‘உன்னைக் கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று,
‘உன்னைக் கூடாதே – தளர்வேனோ’ என்கையாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று.
ஏவம் அஷர ரூபம் காரணத்வம் -ரக்ஷணம் தாது சேஷித்வம் பத ரூபம் –
ஸ்ரீ வாஸ்ய சக்தி -மூலம் -உஜ்யதே பரமாத்மா
(நமஸ் -சேர்த்து உபாயம் -அகண்ட நமஸ்
பிரித்து விரோதி -அஷ்ட ஸ்லோகி பார்த்தோம் )
————————————————————————————
தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே.–6-9-4-
பிரபல சகடாசுரனை நிரசித்த நீ -பிரதிபந்தகங்கள் போக்கி வந்து அருள வேணும் -திருவடியால் விரோதி நிரசனம்
பண்ணி நடந்து வந்து அருள வேணும் -திருக் காலாண்ட பெருமான் –
தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்-கோப்புக் குலைந்து சின்ன பின்னமாகும் படி
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!-திருவடியால் கார்யம் செய்த –
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ-சூழ்ந்து சேவிக்க
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே-ஔஜ்வல்யம் தோற்றும் படி கஜேந்த்ரனுக்கு வந்தால் போலே வந்து அறுக்க வேணும்
சகடாசுரனுடைய உடலானது கட்டுக்குலைந்தும் நடுவே முறிந்தும் வேறாகும்படி பிளந்து உருமாயத் திருவடியால் காரியம் கொண்ட பெருமானே!
பிரமன் சிவன் இந்திரன் மற்றைத் தேவர்கள் இவர்கள் கிளர்ந்து சூழ்ந்து சேவிக்க, உன் முதன்மை தோன்றும்படி நான் காண விண்மீதே ஒரு நாள் வாராய் என்க.
அசுரர்: இகழ்ச்சியின் கண் வந்தது. வீய ஆண்ட பெருமான் என்க. வீய – இறக்க. கிளர்ந்து சூழ விளங்க விண் மீதே காண ஒருநாள் வாராய் என்க.
வாராய்: விதிவினை; வரவேண்டும் என்பது பொருள்.
தளரக் கடவீர் அல்லீர்; உம்முடைய தளர்த்தியை நீக்கக் கடவோம்; ஆனாலும், தடைகள் கனத்திரா நின்றன காணும்’ என்ன,
‘ஓம், அப்படியே; சகடாசுரனைக் காட்டிலும் வலிய தன்றோ என்னுடைய விரோதி?’ என்கிறார்.
‘உன் கால் கண்ட போதே போகாதோ?’ என்கிறார்.
‘அடிபடின் செய்வது என்?’ என்று சும்மெனாதே கைவிட்டோடும் – பெரியாழ்வார் திருமொழி, 5. 4 : 3.-அன்றோ.
சகட அசுரர் உடல் தளர்ந்தும் முறிந்தும் வேறா பிளந்து வீய –
சகடாசுரன் கட்டுக் குலையா, முறியா, உடல் வேறாகப் பிளந்து வீய;
“ஸ்ரீராமபிரானால், அறுக்கப்பட்டதாகவும் பிளக்கப்பட்டதாகவும் பாணங்களால் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும்-
சிந்நம் பிந்நம் ஸரை: தக்தம் ப்ரபக்கம் ஸஸ்த்திரபீடிதம் பலம் ராமேண தத்ருஸு: நராமம் சீக்ரகாரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.-
கத்தி முதலிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதாகவும் அரக்கர் சேனையைக் கண்டார்கள்” என்கிறபடியே,
பின்பு, துகளும் காண ஒண்ணாத படியாகை. சகடாசுரனைக் கொன்றான் என்று திரளச் சொல்ல அமைந்திருக்க,
‘தளர்ந்தும், முறிந்தும்’ என்று தனித்தனியே சொல்லுகிறாரன்றோ,
பகைவர்களைக் கோறல் ஆகையாலே அந்த அந்த நிலைகள் தமக்கு இனியவாயிருக்கையாலே.
திருக் கால் ஆண்ட –
அடியார்களை ஆண்டால் ஆபத்துக்கு உதவுவர்கள் அன்றோ
இவன் இளமையாலே ஒன்றும் அறியாதே கிடக்க, திருவடிகள் காண் நம்மை நோக்கிற்று என்கிறார்.
“பால் வேண்டினவனாய் அழுதான் “என்கிறபடியே, முலை வரவு தாழ்த்தவாறே அனந்தலிலே திருவடிகளை நிமிர்த்தான்;
அவ்வளவிலே பொடி பட்டானித்தனை;
“உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்” –பெரிய திரு.-10. 8 : 3.-என்று இவனும் அறிந்து செய்தானல்லன்.
தன்னை உணர்ந்து பரிமாறும் போது திவ்விய ஆயுதமும், அவை உதவாத போது கையும்,
அதுவும் உதவாத போது திருவடிகளுமாய் இருக்கிறபடி.
நம்முடைய ஆபத்துக்களுக்கே அன்றிக்கே, அவனுடைய ஆபத்துக்கும் திருவடிகளே காணும் உதவுவன;
திருமேனி தான் அடியார்களுக்காக ஆகையாலே,
அவர்கள் விரோதி போகைக்கும் அதுதானே உறுப்பாயிருக்கை.
பெருமானே –
அன்று சேஷியை உண்டாக்கின உனக்கு, இன்று சேஷ வஸ்துவை உண்டாக்குகை பெரிய பணியோ?
அவன் பிரகாரியானால், பிரகாரமாயுண்டாவது அன்றோ இது.
பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் கிளர்ந்து சூழ விளங்க ஒரு நாள் காண விண் மீதே வாராய் –
“கும்பிடு நட்டமிட்டாடி” –திருவாய். 3. 5 : 4.-என்கிறபடியே, வேறு பிரயோஜனத்தைக் கருதாதவரைப் போலே,
தம் வசம் அற்றவர்களாய்க் கொண்டு பிரமன் சிவன் முதலானோர்களால்,
பிரதாநரோடு பிரதான மில்லாதாரோடு வாசியறக் கிண்ணகம் சுழித்தாற்போலே சூழச் சூழப்பட்டு,
இருட்டில் விளக்குப் போலே “ஒளிகளின் திரள்” “தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்” என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா 1. 9 : 67.-என்கிறபடியே
தேஜஸ்ஸே வடிவான திருமேனியைக் கொண்டு, ஒருநாள் யானைக்கு வந்து தோற்றினாற்போலே,
ஆகாச மடங்கலும் இடம் அடைக்கும்படி வந்து தோற்ற வேணும் என்கிறார்.
விளங்க-
இவன் சந்நிதியில் பிரமன் முதலானோர்களுடைய ஒளிகள் ‘இருட்டு’ என்னும்படி இருத்தலின் ‘விளங்க’ என்கிறார்.
ஒரு நாள்
‘நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள்’ என்று விரும்பினேனோ என்பார் ‘ஒரு நாள்’ என்கிறார்.
காண வாராய்
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் -திருவிருத்தம், 92.-என்கிறேனோ என்பார் ‘காண வாராய்’ என்கிறார்.
விண் மீதே
இங்கே வந்து அவதரிக்கச் சொல்லுகிறேனோ என்பார் ‘விண் மீதே’ என்கிறார்.
———————————————————————————————-
விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5-
பகல் ஓலக்கம் இருந்து கறுப்பு உடுத்துச் சோதித்து காரியம் மந்தரித்து வேட்டையாடி
ஆராமங்களிலே விளையாடும் ராஜ நீதி
ஆதும் சோராமல் செங்கோல் நடாவுகிற பாரளந்த வென்னும் முடிக்கு உரிய இளவரசுக்கு
விண் மீது என்கிற ஐந்திலும் காணலாம் -சூர்ணிகை –157
அடியார்க்கு இன்ப மாரி — பின் சொல்லியவை -பரத்வாதி அவஸ்தா பஞ்சகம் –
நெஞ்சிலே பிரகாசிப்பித்தது உன் வடிவைக் காட்டாதே -மறைக்கலாமோ –
அந்தர்யாமி இரண்டு நிலை ஸ்வரூப வியாப்தி -வஸ்துவுக்கு சத்தைக்கு-ரூப வியாப்தி –
லஷ்மி விசிஷ்டனாக -தேஜஸ் விக்ரகம் உடன் -யோகி ஹ்ருத் த்யான கம்யம் –
மறைந்து உறைவாய் -மானச பிரத்யஷம் பெற்றார் பாஹ்ய இந்த்ரிய விஷயம் அணைத்து குலாவி
ஐந்து புலன்களுக்கும் அவன் இந்த விபூதியில் -ஆகவேண்டும் என்கிறார் –
விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!-நித்ய ஆஸ்ரிதற்கு அனுபாவ்யம் –
நித்ய சம்சாரிகளுக்கு அனுபாவ்யம் அர்ச்சா ரூபத்தில் -அர்ச்சா அடுத்து -நீசர்களான நமக்கும் -பின்பு நடுவில் உள்ளோருக்கு
ப்ரஹ்மாதிகளுக்கு-ஆபத்து போக்க -வ்யூஹ -அநிருத்தாதி-வ்யூஹாதி –
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!-ராம கிருஷ்ண -சஜாதீயன் -அளவில்லாதவர் கண் கூட தர்சிக்க
பாக்கியம் உள்ளவர்கள் -அழகாலே வசீகரித்து -உழல்வாய் -தாழ்ந்த செயல் –
கஷ்ட நஷ்டங்கள் நம் போல் அனுபவித்து -சஜாதீயன் சஞ்சரித்து -மனிசரும் படாதன பட்டு –
இஜ் ஜகத்தில் சமஸ்த பதார்த்தங்களிலும் இந்த்ரிய கோசரம் ஆகாதபடி வர்த்திப்பானாய்
எண் மீதி யன்ற புற அண்டத்தாய்! எனதாவி-எண்ணிக்கையில் அடங்காத -அண்டங்களுக்கு புறத்தாய் –
என்னுடைய ஆவியுள் பிராண ஆஸ்ரமான நெஞ்சுக்குள்
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ-நடை யாடி விட்டு இப்போது மறைக்கலாமா –
பரமபதத்தில் வீற்றிருக்கின்றவனே! திருமலைமேல் நிற்கின்றவனே! திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கின்றவனே!
பூவுலகத்தில் பல அவதாரங்களைச் செய்கின்றவனே! இந்தப் பொருள்கள் எல்லாவற்றினுள்ளும் மறைந்து வசிக்கின்றவனே!
எண்ணுக்கும் அப்பாற்பட்ட புறத்தேயுள்ள அண்டங்களிலும் இருக்கின்றவனே!
என்னுடைய உயிருக்குள் அதிகமாக நடையாடிவிட்டு கண்களுக்கு இலக்கு ஆகாமல் மறையக் கடவையோ?
முதல் இரண்டு அடிகளில் இறைவனுடைய ஐவகை வடிவுகள் கூறப்பட்டுள்ளமை காண்க.
ஸர்வத்ர ஸந்நிஹிதனாய் -எல்லாவிடங்களிலும் அண்மையிலிருப்பவனாய்
என் மனத்திலும் தெளிவாகப் பிரகாசித்து வைத்து,
என் கண்களுக்கு விஷயமாகாது ஒழிந்தால் நான் தளரேனோ? என்கிறார்.
விண் மீது இருப்பாய் –
எப்பொழுதும் காணும்படியான பாகம் பிறந்தவர்களுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும்படி.
இவர்க்கு இங்குத்தையிற் காட்டிலும் பரம பதத்தில் இருப்புக் காணும் முற்படத் தோற்றுகிறது.
மலை மேல் நிற்பாய் –
நித்திய ஸூரிகளையும் நித்திய சம்சாரிகளையும் ஒரு துறையிலே நீர் உண்ணப் பண்ணுகிற இடம். என்றது,
இங்குள்ளாரும் தன் நிலையின் வாசி அறியும்படி ருசி உண்டாக்குமவனாய் நின்றபடி.
வேங்கடத்து ஆடு கூத்தன் அல்லனோ–பெரிய திருமொழி, 2. 1 : 9.-
கடல் சேர்ப்பாய்-
கால் நடை தந்து போக வல்ல பிரமன் சிவன் முதலாயினோர்களுக்காகத் திருப்பாற் கடலிலே வந்து சாய்ந்தபடி.
‘விண் மீது இருப்பாய்’ என்று இருப்பில் வீறு சொன்னார்,
‘மலை மேல் நிற்பாய்’ என்று நிலையில் வாசி சொன்னார்.
‘கடல் சேர்ப்பாய்’ என்று திருப்பாற்கடலிலே கிடை அழகு நிரம்பப் பெற்றது-பர்யவசியம்
பர்யவசிப்பாய் -சப்தங்கள் அவன் வரை பர்யவசிக்கும் போலே ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் –
ஆறு கடலில் சேருமா போலே திருப் பாற் கடலில் சேர்ந்து இருப்பார் என்றவாறு
மண் மீது உழல்வாய்-
அவ்வளவு போக மாட்டாத சம்சாரிகளுக்காக அவதரித்து அவர்கள் கண் வட்டத்தில் திரியுமவனே!
“தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளகப் பாம்பால் ஆப்புண்டு பாடற்றாலும் –பெரிய திருவந். 18.– என்கிறபடியே,
அநுகூலராய்க் கட்டுவாரும் பிரதி கூலராய்க் கட்டுவாருமான சம்சாரமாதலின் ‘உழல்வாய்’ என்கிறார்.
அனுகூலை யசோதை பிரதி கூலன் காளியன் பாடாற்றல் துக்கம் -இளக-இரட்டிப்பாக –
இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் –
கண்ணாலே காணில் சிவிட்கு என்னுமவர்களுக்கு, அவர்கள் காண ஒண்ணாதபடி மறைந்து வசிக்கின்றவனே!
சிற்றின்பத்திலே ஈடு பாடுடைய ஒருவன் ‘தாய் முகத்திலே விழியேன்’ என்றால்,
தான் மறைய நின்று அவன் உகந்தாரைக் கொண்டு ரக்ஷிக்கும் -இரா மடம் ஊட்டும் -தாயைப் போலே.
“அதாவது, சிசுபாலன் முதலாயினோர் நறுகு முறுகு -பொறாமை -என்றால்,
அவர்கள் கண்களுக்குத் தோற்றாதபடி அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி.
எண் மீது இயன்ற புற அண்டத்தாய் –
எண்ணுக்கு மேலே இருக்கிற மற்றுள்ள அண்டங்களிலும் இப்படி வசிக்கின்றவனே!
“இப்படிப்பட்ட அண்டங்கள் கோடி நூறு கோடியாக இருக்கின்றன” என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம்
அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராணி அயுதாநி ச ஈத்ருஸாநாம் ததா தத்ர
கோடி கோடி ஸதாநி ச”–என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 2. 7 : 97.
எனது ஆவியுள் மீது ஆடி –
என் மனத்தினுள்ளே குறைவறச் சஞ்சரித்து.
அன்றிக்கே,
என் ஆத்மாவுக்குள்ளும் புறம்பும் சஞ்சரித்து என்னுதல்.
உருக் காட்டாதே ஒளிப்பாயோ –
வடிவு காணப் பெறா விட்டால், மறந்து பிழைக்கவும் பெறாது ஒழிவதே.
குண ஞானத்தாலே தரிப்பார்க்கே அன்றோ வடிவு காணாது ஒழிந்தாலும் தரிக்கலாவது?
————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply