தாம் நிர்பந்தித்த படிகள் எல்லாம் கொண்டருளும்படி ஸூலபரான ஸ்ரீஎம்பெருமானாருடைய சௌந்தர்யாதிகளிலே தோற்றுத்
தாம் மங்களா சாசனம் பண்ணி
அவ்வளவில் நில்லாதே
சம்பந்த சம்பந்திகள் அளவும் சென்று அத்தாலே பெற்ற பேற்றை
அந்ய பரோக்தியாலே அருளிச் செய்கிறார் –
(ப்ராசங்கிக திருவாய் மொழி -5-1- போல் இந்த ஸ்லோகமும் ப்ராசங்கிகம்)
எதிராசன் வாழி எதிராசன் வாழி
எதிராசன் வாழி என்று என்று ஏத்திச் -சதிராக
வாழ்வார்கள் தாளிணைக் கீழ் வாழ்வார்கள் பெற்றிடுவர்
ஆழ்வார்கள் தங்கள் அருள்—13-
எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி -எதிராசருக்கு மங்களம் உண்டாகுக -எதிராசருக்கு மங்களம் உண்டாகுக-எதிராசருக்கு மங்களம் உண்டாகுக
என்று என்று -இப்படி பல காலும் சொல்லி
ஏத்தி -ஸ்துதித்து
சதிராக–ஸாமர்த்யமாக
வாழ்வார்கள் –வாழுமவர்களுடைய
தாளிணைக் கீழ் –திருவடிகளின் கீழே
வாழ்வார்கள் –வாழுமவர்கள்
ஆழ்வார்கள் தங்கள் அருள்-ஆழ்வார்கள் பதின்மருடைய அருளையும்
பெற்றிடுவர்–பத்தும் பத்துமாகப் பெற்றிடுவார்கள்
அவர் தாம் திருப் பல்லாண்டு முகேன
பஹூ பிரகாரமாக பகவத் விஷயத்தில் மங்களா சாசனம் பண்ணுவது எல்லாம்
தாம் இவ் விஷயத்திலே
எதிராசன் வாழி -என்று தொடங்கி
அத்தையே பல காலும் சொல்லி-ஸ்துதித்து
அடியேன் சதிர்த்தேன் இன்றே -என்னும்படி சரம பர்வத்தில் நிஷ்டராய்
அத்தாலே
சாமர்த்தியமாக வாழுமவர்களுடைய திருவடிகளின் கீழே
தாய் நிழலிலே ஒதுங்குமா போலே ஒதுங்கி
நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி -என்னும்படி
அதுவே வாழ்வாக வாழுமவர்கள்
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களாய்-
அத்தாலே
அருள் கொண்டாடும் அடியவராய்-
அதிலும்
எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தராய்-
இருக்கிற ஆழ்வார்கள் பதின்மருடைய அருளையும் பத்தும் பத்தாக பெற்று விடுவார்கள்-
தசமாம் தயோன-(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -ஸ்ரீ பட்டர் பிரார்த்தித்த படி ) -என்னக் கடவது இறே
இத்தால்
இவர்களுக்கு சரம அவதி தாஸ்யம் நிலை நிற்கும்படி கடாஷிப்பார்கள் -என்றபடி
முதல் பாட்டிலே
மங்களா சாசன பரருடைய சம்பந்த சம்பந்திகளை
அயர்வறும் அமரர்கள் ஆதரிப்பார் என்றார்
வாழி எதிராசன் வாழி எதிராசன்
வாழி எதிராசன் என வாழ்த்துவார் -வாழி என
வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில்
தாழ்த்துவார் விண்ணோர் தலை—-1-
இதில்
அவர்களை மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ஆதரிக்கும் படியை
அருளிச் செய்கிறார் –
—————————————
தேசம் திகழும் -(12)-என்கிற பாட்டோடு இதுக்கு சங்கதி
நடுவில் பாட்டு -பிராசங்கிகம் –
உம்முடைய ஆச்சார்யர் நம் பக்கல் ஆஸ்ரயிப்பித்த அந்த ஆஸ்ரயணமே
உம்முடைய பேற்றுக்கு சாதனமாக சொல்லா நின்றீர்
அந்த ஆஸ்ரயண பலம் போருமோ –
ஏதேனும் பேற்றுக்கு உடலான அதிகார சம்பத்து உம் பக்கலிலே வேண்டாவோ என்று
மீளவும் ஸ்ரீ எம்பெருமானார்க்குத் திரு உள்ளக் கருத்தாக
அதுக்கு ஈடான அதிகாரம் யுண்டாகில் தேவரை அபேஷிக்க வேணுமோ –
அப்படிப் பட்ட யோக்யதை இல்லார்க்கு அன்றோ தேவரை அபேஷிக்க வேண்டுவது
ஆகையால் அதிகார ஸூந்யரான அகதிகளை தேவரீர் ரஷியா விடில்
வேறு புகல் உண்டோ என்கிறார் –
அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ -எதிராசா
நீ இரங்க வேண்டுவது நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம் ––14-
அதிகாரம் உண்டேல் –ஞானம் அனுஷ்டானம் பூர்த்தி யாகிற அதிகாரம் உண்டானால்
அரங்கர் இரங்காரோ–பெரிய பெருமாள் இரங்கி அருளாரோ
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ -அப்படிப்பட்ட அதிகாரம் இல்லாதவர்களுக்கு அன்றோ
எதிராசா–எம்பெருமானாரே
நீ இரங்க வேண்டுவது -தேவரீர் இரங்கி ரக்ஷித்து அருள வேண்டுவது
நீயும் அதிகாரிகளுக்கே இரங்கில் -கதி அற்றவர்களுக்கே கதியாய் இருக்கும் தேவரீரே அதிகார ஸம்பத்தை யுடையவர்களுக்கே கிருபை பண்ணி ரக்ஷிக்கில்
என் செய்வோம் யாம்-அநதிகரிகளாய் இருக்கிற அஸ்மா தாதிகள் என்ன யோக்யதையை உபபாதித்திக் கொண்டு உஜ்ஜீவிக்கப் போகிறோம் –
அநாதி காலத்தோ பாதி இழந்தே போம் அத்தனை அன்றோ
தண் அம் துழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய் -(திரு விருத்தம் )-என்றத்தை
அர்த்தித்தவர்களுக்கு-
அருள் சூடி உய்ந்தவன் -(7-2-11 )-என்னும்படி
தாத்ருச அதிகாரம் உண்டானவர்களுக்கு அன்றோ
ஸ்ரீ பெரிய பெருமாள் இரங்கி அருளுவது
அப்படிப் பட்ட அதிகாரம் இல்லாத மாத்ருசர்க்கு அன்றோ எதிகளுக்கு நாதரானவரே
தேவரீர் இரங்கி ரஷித்து அருள வேண்டுவது
அகதிகளுக்கே கதியாக இருக்கிற ஈத்ருச ஸ்வ பாவரான தேவரும்
அதிகார சம்பத்தை உடையவர்களுக்கே கிருபை பண்ணி ரஷிக்கில்
அநாதிகாரிகளாய் இருக்கிற அஸ்மதாதிகள்
எந்த யோக்யதையை உப பாதித்து கொண்டு உஜ்ஜீவிக்கப் புகுகிறோம்
அநாதி காலத்தோபாதி இழந்தே போம் அத்தனை அன்றோ-
உபாயாந்தரங்கள் தவிர்ப்பதும் ப்ராப்யாந்தரங்கள் தவிர்ப்பதும் -நாம் பற்றும் பிரதிபத்தியும் உபாயம் அன்று என்று உணர்ந்து கொள்வதும் -நம் ஆனந்தத்துக்காகக் கைங்கர்யம் என்னும் புத்தியைத் தவிர்ப்பதுவும் -நம்மால் செய்ய வேண்டியவை –பெருமாள் த்ரவ்யம் ரக்ஷிக்கக் கூட ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமமும் பாராயணம் செய்யக் கூடாது என்றார் பட்டர்
அடிப்படையான ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் இல்லாத அன்றும் இவற்றை ஏற்படுத்து பேற்றை அளிப்பவர் ராமானுஜர்-இந்த அதிகாரங்களை எம் பெருமானாரே ஏற்படுத்து அருள வேண்டும் என்கிறார்-அன்று வைத்த கரணங்கள் உமக்கு என்று உணர்த்தி அருளுவார் அன்றோ –
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69-
சம்சார துக்க நிவ்ருத்தி பூர்வகமாக பரம புருஷார்த்தமான தம்முடைய ஸ்ரீ சரணார விந்தத்தை தந்திலன் -சேர்த்து கொண்டது இல்லை –என்னுடைய அதி கர்ம பாஹூள்யத்தைப் பார்த்து -பிரதம சங்கல்ப-ரூபமாய் சம்சார ப்ரவர்த்தகமான தம்முடைய நிஹ்ரக சக்தியை பிரவர்த்திப்பித்தான் சம்சார சாகரத்தில் நிமக்நனாய் இருக்க –எந்தை இராமானுசன் –சஹி வித்யா தஸ்தம் ஜனயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும் -அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்-மறந்திலேன் -என்றும் அஸ்தி ப்ரக்மேதி சேத்வேத சந்தேமேனம் ததோவிது -என்கிறபடியே -அது தானெது என்ன –
நாராயண சரணவ் -என்றதை கொடுத்த பிதாவான எம்பெருமானார் -இன்று வந்து –இந்த தசையிலே ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து -காஞ்சி நகரிலே தேவப் பெருமாளுடைய அனுக்ரகம் பெற்று இருந்து -என்னை உத்தரிக்க வேணும் என்று நான் இருந்த தேசத்தை தேடி வந்து -பரகத ச்வீகாரத்தாலே அநேக க்ர்ஷிகளை பண்ணி என்னை பரிக்கிரகித்து – தானது தந்து -யச் ஸ்ரேயஸ் யான் நிச்சிதம் ப்ரூஹி தன்மே சிஷ்யச்தேகம் சாதிமாம் த்வாம் பிரபன்னம் -என்று
உபசன்னனாய் அர்த்தியாதே இருக்கச் செய்தே -தானே நிர்ஹேதுக மாக -ஸ்ரீ ரெங்க நாதனுக்கும் கொடுக்க அசக்யமான அந்த நாராயண சரண த்வத்வங்களை உபாய உபேயமாக கொடுத்து –என்னை எடுத்தனன் – அமுதனார் திரு உள்ளத்திலே ஓடுகிறது தம்மையே உத்தரித்தார் என்று காணும் —என்னையே -பிரபல பாபிஷ்டனான என்னையே -சர்வ சக்தி யுக்தனான சர்வேஸ்வரனாலும் எடுக்க அசக்யனான என்னையே உத்தரித்தார் -ஸ்ருதா ஸ்ருதமான அர்த்தத்தைக் கொண்டு சொன்னேனோ -இதுக்கு உதாஹரணம் அடியேனே – சம்சார சாகரத்தில் நின்றும் உத்தரித்தார் -மக்னா நுத்தரதே லோகன் காருண்யா சாஸ்திர பாணினா -என்ற அர்த்த த்தை பிரத்யஷமாக கண்டேன் -ஸ்வ அனுபவத்தாலே தெளிந்தேன் என்றது ஆய்த்து –
—————————————————–
(அடுத்த இரண்டு பாசுரங்களும் நன்மை ஒன்றும் இல்லை என்றும் தீமைகள் பூர்ணமாக உள்ளன என்றும்-தொண்டரடிப் பொடி ஆழ்வார் பத்து பாசுரங்களால் அருளிச் செய்தது போல் அருளிச் செய்கிறார்)
ஸ்ரீ இராமானுசன் மிக்க புண்ணியன் -என்னும்படி பரம தார்மிகராய் இருக்கிற அவரை
அடுத்து அடுத்து பழி இடா நின்றோம்
நாம் அவர் திருவடிகளை ஸ ஸ்நேஹமாக அனுசந்தித்தால்
அவர் தாமே எல்லாம் செய்து அருளுவார் ஆகையாலே
தத் விஷய ஸ்நேஹம் தான் யுண்டோ என்று ஆனவளவும் பார்த்து
அது தமக்கு அத்யாபி இல்லை என்று விஷண்ணர் ஆகிறார்-
மருள் சுரந்தாகம வாதியர் கூறும் அவப் பொருளாம்
இருள் சுரந் தெய்தவுலகிருள் நீங்கத் தான் ஈண்டிய சீர்
அருள் சுரந் தெல்லாவுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம்மிராமானுசன் மிக்க புண்ணியனே – – -91 –
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
என்பதுவே நா யுரைக்கும் இத்தால் என் -அன்பு அவர் பால்
இப்போது அளவும் யான் ஒன்றும் காண்கின்றிலேன்
எப்போது யுன்டாவது இனி-—-15-
எம்பெருமானார் திருவடிகளே சரணம்–எமக்கு ஸ்வாமியான எதிராஜருடைய திருவடிகளே ரக்ஷகம்
என்பதுவே –என்று சொல்லப்படுகிற இந்த வாசகத்தையே
நா யுரைக்கும் –என் நாவானது ப்ரேமம் இன்றிச் சொல்லா நிற்கும்
இத்தால் என் -இத்தால் என்ன பிரயோஜனம்
அன்பு -ப்ரேம புரஸ் ஸரமான றுக்தி
அவர் பால்–அவர் விஷயத்தில்
இப்போது அளவும் -இந்த க்ஷண பர்யந்தமும்
யான் ஒன்றும் காண்கின்றிலேன்-ப்ரேம லேஸமும் அற்று இருக்கிற அடியேன் ஒன்றும் காண் கிறிலேன்
எப்போது யுன்டாவது இனி -இப்போது இல்லாதது இனி எப்போது உண்டாகப் போகிறது
ஸ்ரீ பிள்ளை கொல்லி காவல் தாசருக்கு ஸ்வரூப உஜ்ஜீவனமாயும்
ஸ்ரீ சோமாசி ஆண்டானுக்கு நித்ய பிராப்யமுமாய் இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று சொல்லப் படுகிற இந்த வாசகத்தையே
அஹ்ருதயமாக என் நாவானது சொல்லா நிற்கும் –
இப்படி நிஸ் ஸ்நேஹியாக திருநாமம் சொல்லுகிற இத்தால்
சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்தது -என்கிறபடியே
விஷய அனுகுணமாக என்னுடைய ஸ்நேஹமானது
அவர் விஷயத்திலே சரம தசா பன்னமான இக்காலத்து அளவும்
பிரேம லேசமும் அற்று இருக்கிற நான் காண்கின்றிலேன் –
இனி இப்போது இல்லாது எப்போது யுண்டாகப் போகிறது –
(இந்த ப்ரபந்தமே மா முனிகள் சரம தசையில் சரம ப்ரபந்தமாக அருளிச் செய்தார் என்பர் )
சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-
அஹ்ருதயமாக என் நாவானது சொல்லா நிற்கும் –திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன-நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
இத்தால் என் என்று –
நிஸ் ஸ்நேஹியாய்த் திரு நாமம் சொல்லுகிற இத்தால்
என்ன பிரயோஜனம் -என்னவுமாம்
அடியிலே
ஸ்ரீ இராமானுசாய நம -என்று
உத்தர வாக்ய தாத்பர்யத்தையும்
இதில்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளிலே சரணம் -என்று
பூர்வ வாக்கியம் தாத்பர்யத்தையும்
வெளியிட்டு அருளுகிறார் –
(ஸ்ரீ ராமானுஜ த்வயமே சரம பர்வ நிஷ்டர்க்கு ஸதா வக்த்தவ்யம்
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -மதுர கவி ஆழ்வார் -அனுபவ தசையில் )
———————————————————-
நம் பக்கல் ஆனுகூல்யமான பிரேம லேசமும் இல்லாவிடில்
பிராதிகூல்ய நிவ்ருத்தி தான் யுண்டோ -என்ன
அதுவும் இல்லை
அப்படிப்பட்ட அஜஞனான அடியேனுடைய தோஷத்தை போக்யமாகக் கொண்டு
அருளுகிற தேவரீர் திருவடிகளை என்று தான் பிராபிப்பேன் – என்கிறார் –
ஆகாதது ஈது என்று அறிந்தும் பிறர்க்கு உரைத்தும்
ஆகாததே செய்வனாதலால் மோகாந்தன்
என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா
என்று உன்னடி சேர்வன் யான் —16-
ஆகாதது –ஸத்துக்களால் பரி த்யஜிக்கப் படுவதான த்யாஜ்யம்
ஈது என்று -இன்னது என்று
அறிந்தும் –தெளிய அறிந்தும்
பிறர்க்கு உரைத்தும்-இப்படி அறிந்த அளவன்றிக்கே பர உபதேஸம் பண்ணியும்
ஆகாததே செய்வன் -அந்த நிஷித்த க்ருத்யர்த்தத்தையே நித்ய அநுஷ்டானமாக நடத்தா நிற்பன்-மா ஸாஹஸம் குரு –உபதேசம் செய்யும் பறவை போல்
ஆதலால் –இப்படிச் சொல்லுவது ஓன்று செய்வது ஓன்று ஆகையாலே
மோகாந்தன் என்று –மோஹத்தாலே அந்தகன் -மயக்கத்தால் குருடன்-என்று
நினைத்து –திரு உள்ளம் பற்றி–
என்னை –அடியேனை
இகழேல் –உபேஷிக்க வேண்டாம்
எதிராசா–எம்பெருமானாரே
என்று -எப்போது
உன்னடி சேர்வன் யான் –அடியேன் தேவரீருடைய திருவடிகளை அடையக் கடவேன்
(நன்மை இல்லை தீமைகள் நிறைந்து இருப்பதால் உன்னிடம் இருந்து விலகுகிறேன் -ஆழ்வார்
இங்கு எப்போது கூடுவேன் –பேறு நிச்சயம் -கால நிர்ணயமே வேண்டும்
இதுவே சரம பர்வ நிஷ்டருடைய ஏற்றம்)
ஸத்துக்களால் பரி த்யஜிக்கப் படுவதான த்யாஜ்யம் இன்னது என்று தெளிய அறிந்தும்-பிறர்க்கு உரைத்தும் ஆகாததே செய்வனாதலால்
இப்படி அறிந்த அளவு அன்றிக்கே பரோபதேசம் பண்ணியும்
அந்த நிஷித்த கர்மம் தன்னையே நித்ய அனுஷ்டானமாக நடத்தா நிற்பன் –
இப்படி சொல்லுவது ஓன்று செய்வது ஓன்று ஆகையாலே
மோகாந்தன் என்று நினைத்து என்னை இகழேல் எதிராசா
மோஹாந்தகன் என்று திரு உள்ளம் பற்றி
உபேஷியாமல் ரஷித்து அருளுகிறவரே
(களிப்பது என் கொண்டு நம்பி கடல் வண்ணா கதறுகின்றேன் –கர்ம யோகாதிகள் இல்லை என்றாலும் இருந்தவன் போல் கதறுகின்றேன் -இதுவே கர்ம யோகாதிகள் இல்லாதவற்றுக்கு உதாரணம்
இருப்பவருக்கு பரிசு -அடியேனுக்கு பிச்சை இரக்கத்தால் -அங்கு யோக்யதையைப் பார்த்தும் இங்கு அயோக்யதையைப் பார்த்தும் அளிக்கிறான்)
இனி இஸ் சாதன அனுஷ்டானம் பண்ணின நான்
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் -என்கிறபடியே
என்று தான் தேவர் திருவடிகளை அடையக் கடவேன்
இனி இழந்தே போம் அத்தனை அன்றோ
(நிகரின்றி நின்ற என் நீசதைக்கு –பயன் இருவருக்கும் ஆன பின்பே)
அன்றிக்கே
இப்படி மோஹாந்தனாய் முன்னடி தோன்றாதே இருக்கிற
அடியேனுக்குத் தளப்பம் தீரும்படி
சர்வஞ்ஞரான தேவரீர்
ஒரு நாள் அவதி இட்டு தந்து அருள வேணும் என்கிறார் ஆகவுமாம்-
——————————————–
கீழ்
நாள் அவதி இட்டு தந்து அருள வேணும் -என்று அபேஷித்த இவருக்கு
அப்படியே–மரணமானால் -என்று சரீர வியோக சமயத்திலே
பரம் தாமம் என்கிற திவம் தருகிறோம் -என்று
ஸ்ரீ எம்பெருமனார்க்கு கருத்தாக எண்ணி இப்படித் தருகிறோம் என்கிற தேவரீர்
கடுகச் செய்து அருளாமல் தாழ்க்கைக்கு ஹேது எது என்கிறார் –
பொல்லாங்கு அனைத்தும் பொதிந்து கொண்டு நன்மையில் ஓன்று
இல்லா எனக்கும் எதிராசா -நல்லார்கள்
நண்ணும் திருநாட்டை நான் தருவன் என்று நீ
தண் என்று இருக்கிறது என் தான் –-17-
பொல்லாங்கு –துஷ் க்ருத்யங்கள்
அனைத்தும் –எல்லாவற்றையும்
பொதிந்து கொண்டு –தகட்டில் பதித்தால் போலே பதித்துக் கொண்டு
நன்மையில் –ஸத் க்ருத்யங்களில்
ஓன்று இல்லா எனக்கும் –லவ லேசமும் இல்லாத அடியேனுக்கும்
எதிராசா -எம்பெருமானாரே
நல்லார்கள்–ஸத் புருஷாள்
நண்ணும் –அடையத் தக்க
திரு நாட்டை –பரம பதத்தை
நான் தருவன் என்று நீ–நம்மோடு உண்டான ஸம்பந்தம் அடியாக நாமே தருகின்றோம் என்று அருளிச் செய்த தேவரீர்
தண் என்று இருக்கிறது என் தான் -விளம்பம் செய்து கொண்டு இருக்கிறது என்ன காரணம்
அநந்ய கதியாய் அகிஞ்சனனாய் இருக்கிற அடியேனுக்குப் பரம பதத்தை ஸீக்ரத்தில் பிராபித்து அருள வேண்டும் என்று கருத்து
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் -என்றும்
அக்ருத ஸூக்ருதக–( வரதராஜ ஸ்தவம்-83- ) இத்யாதிப் படியே அநாத்ம குண பரி பூர்ணனாய்
ஆத்ம குண லேச கந்த ரஹிதனாய்
அத்யந்த நிக்ருஷ்டனாய் இருக்கும் எனக்கும்
பிராப்யம் அர்ச்சி பதா சத்பிஸ் தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று
சத்துக்களால் பிராபிக்குமதாய் இருக்கும் திருநாட்டை
நம்மோடு யுண்டான சம்பந்தம் அடியாக
நாமே தருகிறோம் என்று அருளிச் செய்த தேவரீர்
இப்போது தாழ்த்து இருக்கைக்கு ஹேது தான் என்ன –
வேறு சிலர் ரஷகர் யுண்டோ-
தானே சாதன அனுஷ்டானம் பண்ணி வருகிறான் என்றோ –
எத்தாலே தான் தாழ்க்கிறது-
அநந்ய கதியாய் அகிஞ்சனனாய் இருக்கும் அடியேனுக்கு
சீக்ரமாக பிராப்ய தேசத்தை பிராபித்து அருள வேணும் -என்று கருத்து-
(களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் என் நான் செய்கேன்-இதில் மூன்றும் உண்டே -அஞ்ஞானம் ஞான ஆதிக்யம் பக்தி பாரவஸ்யம்)
அக்ருத ஸூக்ருதகஸ் ஸூ துஷ் க்ருத்தரஸ் சுப குண லவலேச தேச அதிகஸ்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ் வரதம் உருதயம் கதிம் த்வாம் வ்ருணே -83-
அக்ருத ஸூக்ருதகஸ் –அல்ப ஸூஹ்ரு தத்தையும் அனுஷ்டிக்காதவனாய்
அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை எம்பெருமான் ஆரோபித்து மடி மாங்காய் இடுவதற்கு ஏற்ற க்ருத்ய லேசமும் செய்திலேன்
ஸூ துஷ் க்ருத்தரஸ் –பாபிஷ்டர்களில் அக்ர கண்யனாய்
சுப குண லவலேச தேச அதிகஸ் –நல்ல குணத்தின் லவ லேசத்துக்கும் அதி தூரஸ்தனாய்
அஸூப குண பரஸ் சஹஸ்ர ஆவ்ருத்தஸ்– காம க்ரோதம் முதலிய பல்லாயிரம் தீய குணங்கள் சூழப்பட்டவனான அடியேன்
ஒரோ மயிர்க்குழிக்கும் ஓராயிரம் துர் குணங்கள் காணக் கிடைக்கும் என்கிறார் போலும்
உருதயம் வரதம்–பேர் அருளாளனாய் வரம் தரும் பெருமாளாக
த்வாம் கதிம் வ்ருணே —உன்னை சரணமாக அடைகிறேன் –
—————————————————————-
இவருடைய அபேஷிதத்தை அவரும் செய்வாராக-அனுமதி பண்ணி இருக்க
அவன் அருள் பெரும் அளவு ஆவி நில்லாது -என்கிறபடியே
க்ராம ப்ராப்தி பற்றாமல் ஊரெல்லாம் துஞ்சியில் அவஸ்தையை பிராப்தராய்(5-4)
என்னுடைய சம்சாரம் ஆகிற விடியா வெம் நரகமான காள ராத்ரிக்கு என்று
ஒரு நல் விடிவு பிறக்கும் என்று ஸ்ரீ ராமானுஜ திவாகரான அவர் தம்மையே கேட்கிறார் –
என்று விடிவது எனக்கு எந்தாய் எதிராசா
ஒன்றும் அறிகின்றிலேன் உரையாய் -குன்றாமல்
இப்படியே இந்த வுயிர்க்கு என்றும் இருளே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு –18-
எந்தாய் –அடியேனுக்குப் பிதாவாகிய
எதிராசா –யதிகளுக்கு நாதரானவரே
குன்றாமல்-குறையாமல்
இப்படியே –இந்தப் பிராகாரமே
இந்த வுயிர்க்கு –இந்த ஆத்ம வஸ்துவுக்கு
என்றும் இருளே விளைக்கும்-எக் காலமும் அஞ்ஞான அந்தகாரத்தையே விளைக்கும்
இப் பவமாம் நீண்ட இரவு–இந்த ஸம்ஸாரமாகிற பெரிய
நீள் இரவு -காள ராத்ரி
என்று விடிவது எனக்கு –அஞ்ஞான அந்தகாரத்தில் அகப்பட்டுக் கொண்டு வழி தெரியாமல் திகைத்துக் கொண்டு இருக்கிற அடியேனுக்கு
ராமானுஜ திவாகராகிய தேவரீருடைய தர்சன யோக்யமான ஸூ ப்ரபாதமாக எப்போது ஆகும்
ஒன்றும் அறிகின்றிலேன் –ஏதத் விஷயமான ப்ரதிகிரியை ஒன்றுமே அறிகின்றிலேன்
உரையாய் -ஸர்வஞ்ஞரான தேவரீர் இதற்கு ஒரு நல் விடிவு
கண்டு அருளிச் செய்ய வேண்டும்
(பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -கைங்கர்யமே யாத்ரை யாக பகல் -இராம திவாகரன்-அச்யுத பாநு-வகுள பூஷண பாஸ்கரர் -லோக திவாகரன் -ராமானுஜ திவாகரர்)
(கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59 –)
எனக்கு ஜனகராய்-எதிகளுக்கு நாதரானவரே
தன்னுடைய ஆகாரத்தில் சற்றும் குறைதல் இன்றிக்கே
ஏவம் வித ரூபேண இந்த ஆத்மாவுக்கு
சர்வ காலத்திலும் ஞானோதய லேசமும் இன்றிக்கே
அஜ்ஞ்ஞான அந்தகாரத்தையே விளைப்பதான
பவ துர்தினம் -என்னும்படி-சம்சாரம் ஆகிற பெரிய நீள் இரவானது
அவிவிவேகக அநந்த திக்முகே (ஸ்தோத்ர ரத்னம் )-இத்யாதிப் படியே
பதச் கலிதனாய்-வழி திகைத்து-அலமருகின்ற எனக்கு
எந்த காலம் ஸ்வ தர்சன யோக்யமான ஸூ ப்ரபாதம் யுண்டாகுவது
அஜ்ஞ்ஞான திமிராந்தனான நான் –
ஏதத் விஷயமான பிரதிகிரியை ஒன்றும் அறிகிறிலேன்-
நிகில குமதி மாயா ஸர்வரீ பால ஸூர்ய–(யதிராஜ சப்ததி )என்னும்படி சர்வஜ்ஞ்ஞரான தேவர்
ஸூ ப்ரபாதாத்ய ரஜநீ -என்னும்படி-
இதுக்கு ஒரு விடிவு கண்டு அருளிச் செய்ய வேணும் –
குன்றுதல் -குறைதல்
பவம் -சம்சாரம் –
அவிவேக கநாந்த திங்முகே
பஹுதா ஸந்தத து:க்கவர்ஷிணி |
பகவந்! பவதுர்திநே பத:
ஸ்கலிதம் மாம் அவலோகயாச்யுத ||-ஶ்லோகம் 49 –
ஞானம், பலம் முதலிய ஆறு குணங்களால் பூர்த்தியை உடைய பகவானே! உன்னுடைய அடியார்களை நழுவ விடாதவனே!
திசைகள் கரிய மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும், மழைக்கால இருட்டை உடைய, பெரிய மழை தொடர்ந்து பொழியும்
இந்த ஸம்ஸாரத்தில், நல்வழியில் இருந்து நான் நழுவுகிறேன்; உன்னுடைய கருணைக் கடாக்ஷத்தை எனக்கு அருள்.
28-ஜயதி சகல வித்யா வாஹி நீ ஜன்ம சைல
ஜனி பத பரிவ்ருத்தி ஸ்ராந்த விஸ்ராந்தி சாகீ
நிகில குமதி மாயா சர்வரீ பால ஸூர்ய
நிகம ஜலதி வேலா பூர்ண சந்த்ரோ யதீந்திர
அனைத்து வித்யைகளும் நதி போன்று ப்ரவாஹம் எடுப்பதாக உள்ள மலை போன்றும்
ஸம்ஸாரத்தில் உழன்று திரிந்து களைப்பு அடைந்தவர்கள் வந்து இளைப்பாறும் மரம் போன்றும்
புற வாதிகளின் வாதமாகிய அந்தகாரம் இந்த உலகில் சூழ்ந்து விடாதபடி ரஷித்து நிற்கும் பால ஸூர்யன் போன்றும்
வேதம் என்னும் கடல் பொங்கி எழும் படிச் செய்யும் முழு நிலவு போன்றும் ஸ்வாமி உள்ளார்
——————————————————————-
கீழ்
சம்சாரம் ஆகிற காள ராத்ரிக்கு அவதி கண்டு அருளிச் செய்ய வேணும் -என்றார் –
இதில் தத் கார்யமான தேக கிங்கிரிதை முதலான நிஹீன வியாபாரமும்
தேவர்க்கு அவத்யாஹமம் அன்றோ என்கிறார் –
(வீடு அகங்கார மமகார த்யாஜ்யம்-சொன்னால் விரோதம் -அஸேவ ஸேவ்யை-தேக கிங்கிரிதை முதலான நிஹீன வியாபாரமும்-அன்று நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்)
அல்லும் பகலும் யான் ஆக்கை வழி உழன்று
செல்லுமது உன் தேசுக்கு தீங்கு அன்றோ -நல்லார்கள்
தம் தனயர் நீசர்க்கு ஆட் செய்ய சகிப்பரோ
எந்தை எதிராசா இசை —19-
அல்லும் பகலும் –இரவும் பகலும்
யான் –அடியேன்
ஆக்கை வழி உழன்று–சரீர மார்க்கத்தில் ஸஞ்சரித்து தேஹ கிங்கரனாய்
செல்லுமது –ப்ரவர்த்திப்பது
உன் தேசுக்கு –தேவரீருடைய ப்ரபாவாதிக்யத்துக்கு
தீங்கு அன்றோ -ஹானி அன்றோ
அது எப்படி என்னில்
நல்லார்கள்–ப்ரஹ்ம வித் அக்ரேஸரராய் இருக்கிற ஸத் புருஷர்கள்
தம் தனயர் -தம் புதல்வர்
நீசர்க்கு ஆட் செய்ய சகிப்பரோ–அத்யந்த நிஹீனரான நீசருக்கு நிஹீன விருத்திகள் செய்யப் பொறுப்பரோ
எந்தை எதிராசா –அடியேனுக்குத் தந்தையாய் -யதிகளுக்கு நாதரானவரே
இசை -இத்தைத் தேவரீர் தாமே அருளிச் செய்ய வேண்டும்
உன் நாமம் எல்லாம் என் தன நாவினுள்ளே அல்லும் பகலும் அமரும் படி நல்கு -என்கிறபடியே
தேவரீர் உடைய திருநாம சங்கீர்த்த நாதி அனுபவ கைங்கர்யங்களுக்கு யோக்யமான காலம் எல்லாம்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -என்கிறபடியே
தேக கிங்கரனாய்-அதுவே யாத்ரையாய்த் திரிகிறது –
உனக்குப் பணி செய்து இருக்கும்-(பெரியாழ்வார் ) இத்யாதிப் படியே
தேவர்க்கு தேஜோ ஹானி அன்றோ
அது எப்படி எனில்
ப்ரஹ்ம வித அக்ரேசராய் இருக்கிற சத்துக்கள் தங்கள் புத்ராதிகளை
அத்யந்த நிஹீநரான நீசருக்கு நிஹீன வ்ருத்திகள் செய்ய ஷமிப்பரோ –
இசை –
எனக்கு ஜனகராய் எதிகளுக்கு நாதரானவரே
இத்தை தேவரீர் தாமே சம்மதித்து அருளீர் –
ஆகையால் அத்தைத் தவிர்த்து இவ் வாத்மாவுக்கு சேஷியான தேவரே
அநவரதம் அடிமை கொண்டு அருள வேணும் என்று கருத்து –
தேசு -பெரும் மதிப்பு
(சொல்லின் தொகை கொண்டு உனது அடிப்போதுக்குத் தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் என் தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம; இராமானுஜ! இது என் விண்ணப்பமே!)
(முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-)
(உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் புனத்தினை கிள்ளிப் புதுவவி காட்டி உன் பொன்னடி வாழ்கவென்று இனக்குறவர் புதியது உண்ணும் எழில் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்.-5-3-3-)
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply