ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தம் -பாசுரம் 5-12–பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

கீழ்
உணர்ந்து பார் -என்கிற சம்பந்தம் தான் ஏது
நீர் அவர்ஜநீயர் ஆகைக்கு ஹேது ஏது என்று அவருக்குக் கருத்தாக
அத்தை நிதர்சன முகத்தாலே வெளியிடா நின்று கொண்டு
தேவர்க்கு அவர்ஜநீயன் – என்கிறார்-

தன் புதல்வன் கூடாமல் தான் புசிக்கும் போகத்தால்
இன்புறுமோ தந்தைக்கு எதிராசா -உன் புதல்வன்
அன்றோ யான் உரையாய் யாதலால் உன் போகம்
நன்றோ எனை ஒழிந்த நாள் —-5-

தன் புதல்வன் -தன்னுடைய புத்ரன்
கூடாமல் -கூடாதபோது
தான் புசிக்கும் -தாம் அனுபவிக்கும்
போகத்தால்-ஐஸ்வர்யாதி போகத்தால்
இன்புறுமோ தந்தைக்கு -தந்தைக்கு ஆனந்தம் உண்டாகுமோ-உறுதல் -கிட்டுதல்-
ஆதலால்
எதிராசா -எம்பெருமானாரே
உன் புதல்வன் யான் -தந்தையாகிய தேவரீருடைய புத்ரன் அடியேன்
அன்றோ -அல்லவோ
உரையாய் -பகர்ந்து அருளீர்
யாதலால் உன் போகம்-ஆகையாலே தேவரீருடைய போகம்
நன்றோ எனை ஒழிந்த நாள் -அடியேனை ஒழிந்த திவஸம் நல்லதாமோ ஸ -ரஸமாய் இருக்குமோ

அப்படி இராததாகையால் அடியேனையும் அருளிப் பாடிட்டு
அழைத்துக் கொண்டு அருள வேணும் -என்கிறார்

தன் பிரிய புத்ரனானவன் சங்கதன் ஆகாமல் தேசாந்தரஸ்தனாய் இருக்க
அவனை ஒழிய தானே ஏகனாய் புஜிக்கும் ஐஸ்வர்யாதி போகத்தாலே
அந்த பிதாவானவன் அப்படி புஜிக்கும் அந்த போகத்தாலே ஸூகத்தை அடையுமோ

எதிகளுக்கு நாதரானவரே
அப்படியே அடியேனும் –
கரீயான் ப்ரஹ்மதா பிதா -என்னும்படியான
தேவர்க்கும் அவர்ஜநீயனான புத்திரன் அன்றோ –
இதில் சந்தேஹம் இல்லை என்பதை தேவரீரே அருளிச் செய்து அருளீர்

(சரீர புத்ரன் – சக்ரவர்த்தி பரதாழ்வானை புத்ரன் அல்ல என்று கைவிட நேர்ந்ததே -இங்கு அப்படி அல்லவே)

இப்படி சம்பந்தம் அவர்ஜநீயம் ஆகையாலே
கட்டெழில் வானவர் போகம் -என்கிற தேவரீர் உடைய போகம்
அடியேனை ஒழிந்த திவசம் ச ரசமாய் இருந்ததோ –

அப்படி இராது ஆகையாலே
அடியேனையும் அருளப் பாடிட்டு அழைத்துக் கொண்டு அருள வேணும் –
யத் விநா பாரதம் த்வாஞ்ச சௌமித்ரே புஜ்யதே ஸூகம் -என்னக் கடவது இறே

———————————————–

உன் போகம் நன்றோ எனை ஒழிந்த நாள் என்று நம் பேரிலே பழி இடா நின்றீர் –
கால க்ரமத்திலே அதுக்கீடான பாகம் விளைந்தவாறே
அப்படியே செய்கிறோம் என்று திரு உள்ளக் கருத்தாக-அது அனுகூலர்க்கு அன்றோ அப்படியாம்(பேர் அமர் காதல் -பின் நின்ற காதல் -கழிய மிக்கதோர் காதல் -ஆழ்வாருக்கு காதல் மிக்கு வளர்ந்தது அன்றோ)
பிரதிகூலனான எனக்கு அரை ஷணம் தாழ்க்கிலும் பிராதிகூல்யமே கை விஞ்சி வரும்
ஆகையால் ஹேய குண வர்த்தகமான தேஹத்தை
தத் பூர்வமே போக்கும்படி பண்ணி அருள வேணும் என்கிறார் –

(ஆயர் அஞ்சா முன் -அப்போது உள்ள கல்லை எடுத்துக் கல் மாரி காத்து அருளினானே)

வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ் வினையேன்
தீம்பு முற்றும் தேகம் முற்றிச் செல்லும் கால் –ஆம் பரிசால்
ஏற்கவே சிந்தித்து எதிராசா விவ் வுடலைத்
தீர்க்கவே யான வழி செய்-–6-

வேம்பு முற்றக் –வேப்ப மரம் முற்ற முற்ற
கைப்பு மிகுவது போல் -கைப்பே விஞ்சி வருமா போலே
வெவ் வினையேன் -க்ரூர கர்மாவாய் இருக்கிற அடியேனுடைய
தீம்பு முற்றும் தேகம் முற்றிச் செல்லும் கால் — சரீரம் முற்றி விருத்தி அடையா நிற்கையில் துஷ் கர்மங்களே அதிகமாகும்
ஆகையாலே
ஆம் பரிசால்-ஸ்வரூப சத்தை யுண்டாம் பிரகாரத்திலே
ஏற்கவே சிந்தித்து -முற் கோலித்து சிந்தித்து
எதிராசா -யதிகளுக்கு நாதரானவரே
விவ் வுடலைத்-இந்த ஹேய சமுதாயமான தேஹத்தை
தீர்க்கவே யான வழி செய்-முடிக்கைக்கான உபாயம் செய்து அருள வேண்டும் –
எதிராச என்று அடியிலே சம்போதிக்கவுமாம்

ச ரசமான கரும்பாகில் இறே-நாள் தோறும் முற்ற முற்ற ரசம் ஏறி வருவது
வி ரசமான வேம்பு முற்ற முற்ற நாள் தோறும்
அந்த விரசமான கைப்பே விஞ்சி வருமா போலே
என்னுடைய தேஹமானது கால க்ரமத்திலே பக்வம் ஆகும் காட்டில்
க்ரூர கர்மாவாய் இருக்கிற என்னுடைய ஹேய குணமே அதிகமாம்

(அஹங்கார மமகாரங்கள் வளர்ந்து தேகத்தையே பார்க்கும் உணர்வு விஞ்சும் -)

ஆகையால்
இது ஸ்வரூப சத்தை யுண்டாம் பிரகாரத்தில் முற்கோலிச் சிந்தித்து –
எதிகளுக்கு நாதரானவரே
இந்த ஹேய சமுதாயமான தேஹத்தை முடிக்கைக்கேயான உபாயம் செய்து அருள வேணும் வழி -உபாயம்
எதிராசா -என்று அடியிலே சம்போதிக்கவுமாம் –

——————————————————-

உம்முடைய தோஷத்தை ஏற்கவே முற்கோலி நாம் போக்குகைக்கு பிராப்தி ஏது –
நீர் தான் ஸ்வ கார்யத்தில் அஜ்ஞராய் அசக்தராய் இருந்தீரோ என்ன

ஸ்த நந்த்ய பிரஜை தன் கார்யத்துக்கு வேண்டுமவை தானே செய்து கொள்ளில் அன்றோ
தேவர்க்கு நித்ய ஸ்தநந்த்யமான அடியேனும்
ஸ்வ காரியத்துக்கு ஷமனாய் செய்து கொள்வது -என்கிறார்-

(நற் செல்வன் தங்காய் -இளையபெருமாள் கைங்கர்யம் செய்யாமல் ஸாமான்ய தர்மம் -நித்ய அனுஷ்டானம் ஊர்மிளையுடன் செய்யாமல் போலே)

(ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38- உமக்கு இரக்கம் இல்லாமல் எதனால் -கேள்வி அல்ல இங்கு -மோக்ஷ ஏக ஹேது அன்றோ இவர் -கீழ் புறத்திட்டத்துக்கு ஸூஷ்ம அர்த்தம் இருக்க வேண்டும் –அத்தை அருளிச் செய்ய வேண்டும்)

அன்னை குடி நீர் அருந்தி முலை யுண் குழவி
தன்னுடைய நோயைத் தவிராளோ–என்னே
எனக்கா எதிராசா வெல்லா நீ செய்தால்
உனக்கு அது தாழ்வோ வுரை—7-

அன்னை -பிரஜையின் இடத்திலே அத்யந்த வாத்சல்ய யுக்தை யான மாதாவானவள்
குடி நீர் அருந்தி -பிரஜைக்கு ஏதேனும் ஒரு பிணி யுண்டானால் இது நம் குறையாலே வந்தது என்று தான் தாக தீர்த்த முதலான வற்றை ஒவ்ஷதத்துக்கு விரோதியாமல் பருகி-அருந்துதல் -உண்டல் –
முலை யுண் குழவி தன்னுடைய -ஸ்வ போஷ்யமாய் இருக்கிற ஸ்தனந்த்ய பிரஜையினுடைய
நோயைத் தவிராளோ-வியாதியைப் போக்காளோ
என்னே-இது என்ன ஆச்சர்யம்
எனக்கா -அடியேனுக்காக
மாத்ருவத் வத்சலரான தேவரீருக்கு நித்ய ஸ்தனந்த்யனாய் இருக்கிற அடியேனுக்காக
எதிராசா -எதிபதியே
வெல்லா நீ செய்தால்-அடியேனால் அநுஷ்டேய அம்ஸமாய் இருப்பனவைகள் எல்லாவற்றையும் நீரே  அனுஷ்ட்டித்து ரக்ஷித்தால்
உனக்கு அது தாழ்வோ -தேவரீருக்கு அது அவத்யமோ -தேஜஸ்கரமாய் இருப்பது ஓன்று அன்றோ
வுரை—பகர்
இவ் வர்த்தத்தை அஞ்ஞானன என்னைக் கொண்டு பேசுவிக்க வேணுமோ
ஸர்வஞ்ஞரான தேவரீர் தாமே அருளிச் செய்தலாகாதோ

பிரஜையினிடத்தில் அத்யந்த வாத்சல்ய யுக்தையான மாதாவானவள்
ஔஷத சேவைக்கும் ஷமம் அன்றிக்கே
அத்யந்தம் சைசவ யுக்தமாய்-ஸ்வ போஷ்யமாய்
இருக்கிற ஸ்தநந்த்ய பிரஜைக்கும் ஏதேனும் ஒரு அனுக்கம் உண்டானால்
இது நம் குறையாலே வந்தது என்று தான் குடி நீர் முதலான
ஔஷத சேவை பண்ணி அதனுடைய அனுக்கத்தைத் தவிர்க்குமே –

(பந்தனை தீரப் பல்லாண்டு -பிறந்த குழந்தை அன்றோ அப்போதே அவன் வீயத்தோன்றிய சிங்கப்பிரான் -குழந்தைக்கு ஏற்படும் களைப்பு சிரமம் அனுக்கம் -)

அப்படியே மாத்ரு வத்சலரான தேவர்க்கு நித்ய ஸ்தநந்த்யனாய் இருக்கும் அடியேனுக்காக
எதிகளுக்கு நாதரானவரே
அடியேனால் அனுஷ்டேய அம்ஸமாய் இருப்பனவைகள்
எல்லாத்தையும் அனுஷ்டித்து ரஷித்தால் தேவர்க்கு அவத்யம் அன்றே –
தேஜஸ் கரமாய் இருப்பது ஓன்று அன்றோ –

(பல பிறப்பாய் ஒளி வரும் தேஜஸ்ஸு அவனுக்கு)

(ஸாஸ்த்ர ஜன்ய ஞாநத்தை விட ஆச்சார்ய உபதேஸ ஜன்ய ஞானம் ஸ்ரேஷ்டம் -புள்ளு பிள்ளைக்கு இரை தேடித்தருமாபோலே
அபிவிருத்தி செய்து பெறுவதை விட கிருபா மாத்ர ப்ரஸன்னாச்சார்யார் ஸ்ரேஷ்டம்
அதிலும் பரகத -பொறுப்பு அவர் இடம்
நம்மை விட்டாலும் நாம் உன்னை விடோம் என்று இருந்தார் அன்றோ –
ப்ராப்யம் ஒன்றிலே கண் வைத்து இருக்க வேண்டும் -என்றும் உபதேஸம்)

இவ் வர்த்தத்தை அஜ்ஞனான என்னைக் கொண்டு பேசுவிக்க வேணுமோ
சர்வஞ்ஞரான தேவர் அருளிச் செய்யல் ஆகாதோ
இது என்ன ஆச்சர்யம்

ஆச்சார்ய அபிமானம் ஆவது
இவை ஒன்றுக்கும் சக்தி இன்றிக்கே இருப்பான் ஒருவனைக் குறித்து
இவனுடைய இழவையும்
இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு யுண்டாகும் பிரீதியையும் அனுசந்தித்து
ஸ்த நந்த்ய பிரஜைக்கு வியாதி யுண்டானால் தன் குறையாக நினைத்துத் தான்
ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே

இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி
ரஷிக்க வல்ல பரம தயாளுவான-மகா பாகவத அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் -என்று சொல்லுகிறபடியே
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவன் இட்ட வழக்கு ஆக்குகை-என்னும் அளவாக
அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை யாய்த்து
இவர் இப்படி அருளிச் செய்தது-

நாகணை மிசை நம்பரர், செல்வர் பெரியர் என்று எம்பெருமானை விட்டு விட்டு பெரியாழ்வாரையே தஞ்சமாகப் பற்றி, ”வில்லிபுதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே” என்று சரமபர்வ நிஷ்டையை – அதாவது ஆசார்யனே எல்லாம் – (அடியவர்க்கு ஆட்படுதல்) என்று நடத்திக் காட்டியவள் ஆண்டாள்-குருவால் அபிமானம் பெற்றவர் முதலில் பேறு -குருவை நாம் அபிமானித்தாலும் பேறு-

பூயோ பூய த்வயி ஹித பர அபி உத்பத அநாத்மநீந ஸ்ரோத மக்நாந் அபி பத நயந் த்வம் துராசா வஸேந ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி தத் தத் வர்ண ஆஸ்ரம விதிவச க்லிஸ்யஸே ரங்க ராஜ –உத்தர சதகம்-45-

ருக்னே தோகே ஸ்வ இவ ஜனதீ தத் கஷாயம் பிபந்தி–தன் குழந்தை நோயாளியாய் இருக்கும் போது-அது குடிக்க வேண்டிய கஷாயத்தை தாயான தானே குடிக்குமா போலே

த்வம் தத் தத் வர்ண ஆஸ்ரம விதி வச க்லிஸ்யஸே –அந்த அந்த வர்ணாஸ்ரம ஆசாரங்களை நியமிக்கும் சாஸ்திரத்துக்கு வசப் பட்டவராய் பல பல கார்யங்களை அனுஷ்டித்துக் கொண்டு வருந்துகின்றீர்-ராமனாகவும் கிருஷ்ணனாகவும் -பிறந்து -கர்ம வசப் படாமல் இருந்தும் வர்ணாஸ்ரமம் அனுஷ்ட்டித்து —-தாய்ப் பால் பருகும் குழந்தைக்கு உண்டான நோயைத் தீர்க்கும் விதமாக தாயானவள் கசப்பான மருந்தை குடிப்பது போன்றது-பர துக்க அஸஹிஷ்ணுதையால் கரண களேபரங்களைக் கொடுத்து அருளியும்-சேதனர் விஷயாந்தர ப்ரவணராய் ஸாஸ்த்ர நிஹிதங்களையே செய்து போந்து நிற்க – அவர்கள் நல் வழி வருவார்களோ என்னும் பேராசையால் – ஸ்தநந்த்ய பிரஜை ரோக பீடிதையாக-தான் ஒளஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே-ராம கிருஷ்ண அவதாரங்களையும் பண்ணி அதுகளில் வர்ணாஸ்ரம விதி பரதந்த்ரராய் நாட்டில் பிறந்து மனுஷர் படாதன பட்டு கிலேசிக்கிறது என்கிறார்

—————————————————–

கீழ் பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஷமம் அன்றிக்கே இருக்கிற ஸ்த நந்த்ய பிரஜையை மாதா ரஷிக்குமா போலே உம்மையும் ரஷிக்க வேணும் என்று -பிராப்தி சொல்லா நின்றீர் –
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு ஷமராய்
சத் கர்மங்களின் உடைய நிவ்ருத்தியிலும்
அசத் கர்மங்களின் உடைய பிரவ்ருத்தியிலும்
நிரதராய் ஸ்வ விநாசத்தை-விளைத்துக் கொள்ளுகிற உம்மை நம்மால் ரஷிக்கப் போமோ -என்று ஸ்ரீ எம்பெருமானார்க்கு திரு உள்ளமாக கருதி
அப்படியானாலும் அடியேனைக் காத்து ரஷியாது போது தேவர்க்கே அவத்யமாம் என்னுமத்தை-ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –

தன் குழவி வான் கிணற்றைச் சார்ந்து இருக்கக் கண்டு இருந்தாள்
என்பதன்றோ அன்னை பழி ஏற்கின்றாள் -நன்கு
உணரில் என்னாலே என் நாஸமேலும் எதிராசா
உன்னாலே யாம் உறவையோர் —–8-

ன் குழவி -தன்னுடைய சிசு
வான் கிணற்றைச் சார்ந்து இருக்கக் -பெருமை பொருந்திய கிணற்றின் அருகில் சேர்ந்து இருக்கக்
கண்டு இருந்தாள்–பார்த்துத் தகையாது இருந்தாள்
என்பதன்றோ –என்று அல்லவோ
அன்னை பழி ஏற்கின்றாள் -தாய் அபவாதத்தை அடைகின்றாள்
நன்கு உணரில்-நன்றாக விசாரிக்கும் அளவில்
என்னாலே –பாபமாகிற படு குழியைக் கிட்டின என்னாலே
என் நாஸமேலும்–என்னுடைய நாஸத்தை விளைத்துக் கொள்ளப் பார்த்தேனாகிலும்
எதிராசா–யதிகட்க்கு நாதரானவரே
உன்னாலே யாம் உறவை ஓர் –தேவரீராலே ஆகிற ஸம்பந்தத்தை விசாரித்து அருளீர்
கீழே ஸ்நந்தய பிரஜை -இதில் கொஞ்சம் வளர்ந்த குழவி
கிணறு -கர்மங்களாகிய படு குழி –ஸம் ஸாரம் கிலேச பாஜனம்

அஞ்சு வயசுக்கு உட்பட்ட பிரஜையினுடைய துர் மரணம் எல்லாம் மாதாவினுடைய அந்தவநத்தாலே வந்ததாக
அவளுக்கு சாஸ்திரம் விதிக்கையாலே அப்படி வாராமல் கண்ணில் வெண்ணெய் இட்டு நோக்க வேணும் இறே மாதாவுக்கு –
ஆகையாலே தன்னுடைய முக்த பிரஜையானது தனக்கு நாச கரம் என்று அறியாமல் தன் அளவன்றிக்கே
ஆழத்தாலும் அகத்தாலும் பெருத்து இருப்பதான கிணற்றை ஆசன்னமாக இருக்கக் கண்டு
அத்தை பிரதிஷேதியாமல் உபேஷித்து இருந்தாள் என்கிற மாத்ரம் கொண்டு அன்றோ அந்த மாதாவானவள் அபவாதம் பிராப்தை யாகா நின்றாள் –
அப்படியே -நன்றாக நிரூபிக்கில்
பாபங்கள் ஆகிற படு குழியை கிட்டி நின்ற என்னாலே ஸ்வ விநாசத்தை விளைத்துக் கொள்ளப் பார்த்தேனே யாகிலும்
அத்தை நிஷேதித்து ரஷிக்க வேணும்படி எதிகளுக்கு நாதரான தேவராலே யுண்டாம் சம்பந்தத்தை திரு உள்ளம் பற்ற வேணும் –
இத்தால் சம்பந்தம் அடியாக சர்வ தசையிலும் ரஷிக்க வேணும் -என்று கருத்து –

இதத்தாய் இராமானுசன் -என்கிற திவ்ய ஸூக்தியையும்
பிரஜையை கிணற்றின் கரையில் நின்றும் வாங்காது ஒழிந்தால் தாயே தள்ளினாள் என்னக் கடவது – இறே -என்கிற திவ்ய ஸூக்தியும்-ஆய்த்து இதுக்காகும் –

(எனக்கு நானே தீங்கு விளைத்துக் கொள்ளும் நிலையிலும் தேவரீரே ரக்ஷித்து அருள வேண்டும் –விலைப்பால் இல்லாமல் முலைப்பால் குழந்தைக்குப் போல்)

ஸ்ரீ வசன பூஷணம் -8-பிரகரணம்-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406-

ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது – பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –சூரணை -366
பய அபயங்கள் இரண்டும் மாறாடில் அஜ்ஞதையே சித்திக்கும் –சூரணை-367-
ஆனால் நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் – ஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் – என்கிற பாசுரங்களுக்கு அடி என் -என்னில் –சூரணை -368-
பந்த அனுசந்தானம் –சூரணை -369-
பிரஜை தெருவிலே இடறி –தாய் முதுகிலே குத்துமா போலே –நிருபாதிக பந்துவாய் –
சக்தனாய் -இருக்கிறவன் –விலக்காது ஒழிந்தால் – அப்படிச் சொல்லாம் -இறே –சூரணை -370-
பிரஜையை கிணற்றின் கரையின் நின்றும் வாங்காது ஒழிந்தால் – தாயே தள்ளினாள் என்னக் கடவது  -இறே –சூரணை -371-
இவனுடைய அனுமதி பேற்றுக்கு ஹேது அல்லாதாப் போலே – அவனுடைய அனுமதியும் இழவுக்கு ஹேது அன்று –சூரணை -372-அப்ரதிஷித்தம் அநுமதம்-என்கிற ந்யாயத்தாலே -விலக்காமையாவது-அனுமதியாய் யற்ற பின்பு –
அனுமதியோ பின்னை இழவுக்கு ஹேது என்ன –
அருளிச் செய்கிறார் –
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் –-சூரணை -373-
இழவுக்கு அடி கர்மம் – பேற்றுக்கு அடி கிருபை –சூரணை -374-
மற்றைப்படி சொல்லில் இழவுக்கு உறுப்பாம் –சூரணை -375-
எடுக்க நினைக்கிறவனை தள்ளினாய் என்கை – எடாமைக்கு உறுப்பு-இறே –சூரணை -376-
சீற்றம் உள என்ற அனந்தரத்திலே- இவ் வர்த்தத்தை – தாமே அருளி செய்தார் -இறே-சூரணை -377-
சீற்றம் உண்டு என்று -அறிந்தால் சொல்லும்படி என் -என்னில் –அருளும் – அர்த்தியும் –
அநந்ய கதித்வமும் சொல்லப் பண்ணும் –சூரணை -378-
சீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான் ஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இறே-சூரணை -379-
க்ருபயா பர்யபாலயத் – அரி சினத்தால் –சூரணை -380-சீறின தசையிலும் காலைக் கட்டிக் கொள்ளலாய் இருக்கும் படிக்கு பிரமாணம்
ஆக இவ்வளவும் பய அபயங்கள் இரண்டும் மாறாடில் அஜ்ஞ்ஞதையே சித்திக்கும் – என்கிறதின் மேல் வந்த சங்கா பரிகாரங்கள் பண்ணப் பட்டது –

——————-

நோற்றேன் பல் பிறவி -என்கிறபடியே
நீர் நும்முடைய துஷ் கர்மத்தாலே இஜ் ஜன்மமே அன்றிக்கே இன்னம் பல ஜன்மமும் எடுக்க வேண்டும்படியாய்
இப்படி கை கழிந்து இருக்கிற யுமக்கு ஸ்ரீ எம்பெருமானாராலே செய்து தலைக் கட்டலாவதே -என்று பார்ஸ்வஸ்தருக்கு கருத்தாக
அப்படி யானாலும் அடியேனுக்காக இன்னமும் அவதரித்து ரஷித்து அருளுவர் என்கிறார் –

கூபத்தில் வீழும் குழவியுடன் குதித்து அவ்
வாபத்தை நீக்கும் அந்த வன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பனேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை யுய்ப்பதா —9-

கூபத்தில் -கிணற்றில்
வீழும் –விழுகின்ற
குழவியுடன் குதித்து –சிசுவோடே கூடக் குதித்து
அவ் வாபத்தை நீக்கும் –அவ்விடரைப் போக்குகின்ற
அந்த வன்னை போல் -அந்த மாதாவைப் போலே
பாபத்தால்-அடியேன் பண்ணின பாபத்தாலே
யான் பிறப்பனேலும் –அடியேன் இன்னும் சில ஜென்மம் எடுக்கும்படி யானேனாகிலும்
எந்தை எதிராசன்-அடியேனுக்குப் பிதாவாகிய யதிகளுக்கு நாதரான எம்பெருமானார்
இனி தான் பிறக்கும் என்னை யுய்ப்பதா–அடியேனை உஜ்ஜீவிப்பிக்கைக்காக தாம் திரு வவதரித்து அருளுகிறார்

வந்து தோன்றிய அப்பொழுதே ஞானம் பிறந்து நாரணருக்கு ஆளாகிறோமே

உடமைக்கு ஒரு முழுக்கு -உடையவருக்கு உடைமைகள் அனைத்தும் கிடைக்கும் வரை முழுக்கு உண்டே

கிணற்றில் விழுந்த பின்பு அன்றிக்கே சற்றும் தாழாமல் நின்று
பேதைக் குழவி -என்னும்படியான முக்த பிரஜை யுடனே கூடக் குதித்து எடுத்து
அதின் அநவதாநத்தாலே வந்த ஆபத்தைப் போக்கி ரஷிக்கும் ஸ்நேஹ புக்தையான அந்த மாதாவைப் போலே
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் –என்கிறபடியே
ஏதச் சரீர அவசா நத்திலே மோஷமாம் படியான பிரபத்தி வைபவத்தையும் அழித்து நான் பண்ணின பாபத்தாலே
இன்னமும் சில ஜன்மங்களை எடுக்கும் படி ஆனேனே ஆகிலும்
இனி இப்படி கை கழிந்த பின்பு எனக்கு ஜனகராய் எதிகளுக்கு நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
நான் பிறந்த ஜென்மத்துக்கு ஈடாக தாமும் என்னை உத்தரிப்பதாக எதிர் சூழல் புக்கு அவதரித்து அருளுவார் –
ஆகையால் அதில் எனக்கு ஒரு நிர்பந்தமும் இல்லை —

உடைமைக்கு ஒரு முழுக்கு உடையவனுக்கு உடமை பெறும் தனையும் முழுக்க வேண்டி இறே இருப்பது – –

———————————–

எம்பெருமானார் திருவடிகளை அகன்று அந்ய மனஸ்தராய் இருக்கையாலே அன்றோ ஜென்மத்துக்கு அடியான கர்மம் புகுகிறது
இனி அந்தப் பிரசங்கம் இல்லாதபடி அவர் திருவடிகளை பொருந்தி வாழ் என்று திரு உள்ளத்தை குறித்து அருளுகிறார்-

பூ மகள் கோன் தென்னரங்கர் பூம் கழற்குப்
பாதுகமாய் தாம் மகிழும் செல்வச் சடகோபர் -தே மலர்தாட்கு
ஏய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ் ——10-

பூ மகள் -புஷ்பத்திலே பரிமளம் ஒரு வடிவம் கொண்டால் போலே இருக்கிற பெரிய பிராட்டியாருக்கு
கோன் –வல்லபரான
தென்னரங்கர் –பெரிய பெருமாளுடைய
பூம் கழற்குப் –நிரதிசய போக்யமான திருவடித் தாமரைகளுக்கு பாதுகமாய்-பாதுகைகளாய்
அத்தாலே
தாம் மகிழும் –தாம் ஆனந்திக்கும்
செல்வச் –ஸாத்விக ஜன சம்பத்தான-பெருமாளை உள் கொண்ட செல்வர்-யான் பெரியன் – என்றுமாம்
சடகோபர் -நம்மாழ்வாருடைய
தே மலர்-மதுஸ் யந்தியான புஷ்பம் என்னலாம் படியான
தாட்கு-நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளுக்கு
ஏய்ந்து -பொருந்தி
இனிய பாதுகமாம் -பிரியமான திருவடி நிலைகளாய்
எந்தை -அடியேனுக்குத் தந்தையாய் -அடியேனுடைய ஸ்வரூப ஸத்தைக்கு காரண பூதரான
இராமானுசனை -இராமாசன் என்று நிரூபக நாமத்தை யுடையரான எம்பெருமானாரை–
வாய்ந்து -ஆஸ்ரயித்து
எனது நெஞ்சமே -எனது பவ்யமான மனஸ்ஸே
வாழ் —-இந்த ஸம்பந்தத்தைப் பெற்று வாழ்

கோன் -அரசன் -பிரஜைகளுக்கு ஸ்வாமி குற்றம் பார்த்து தண்டனையும் அளிக்க வேண்டும்
எந்தை -மோக்ஷ ஏக ஹேது
பூம் கழல் -காரணம்
தேன் மலர் -காரியம்
பூம் கழல் பாதுகை -எடுப்பும் சாய்ப்பும் அனுபவத்தில் இழிந்து உபதேசமும் செய்தார்
ஏய்ந்த இனிய பாதுகமாய் -இரண்டு விசேஷணங்கள் இங்கு

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் -இத்யாதிப் படியே புஷ்பத்திலே பரிமளம் ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபரான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நிரதிசய போக்யமான
பூவார் கழல்களுக்கு – அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்று ஸ்ரீ சடகோபனாய்-
இப்படி முகில் வண்ணன் அடியை அடைந்து –
அத்தாலே உற்றேன் உகந்து பணி செய்து -என்னும்படி
தாம் ஹர்ஷிக்கும் (ஹர்ஷத்தாலே வந்த காரணப் பெயர் -மகிழ் மார்பன்-மகிழம்பூ ஸாத்திக் கொண்டு -வகுள அபிராமம் -)சாத்விக ஜன சம்பத்தான ஸ்ரீ நம் ஆழ்வார் உடைய வகுளாபிராமமாய்
மனுஸ்பந்தியான புஷ்பம் என்றலாம் படி நிரதிசய போக்யமாய் இருக்கிற திருவடிகளுக்கு
(பாகவத சேஷத்வ பாரதந்தர்ய)ஸ்வரூப பிராப்தமாய் இருக்கையாலே அனுரூபமாய்
மேவினேன் அவன் பொன்னடி -என்னும்படி பொருந்தி
அத்யந்த அபிமதமான திருவடி நிலைகளாய்(

நம்மாழ்வாருக்கு இனிய -ஆச்சார்யராலே அபிமானிக்கப்பட்டு

) என்னுடைய ஸ்வரூப சத்திக்கு காரண பூதராய்
ஸ்ரீ இராமானுஜன் என்று நிரூபகத்தை யுடையரான ஸ்ரீ எம்பெருமானாரை
இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி நெஞ்சே வாழ -என்கிறபடி
எனக்கு பவ்யமான மனசே
அநந்ய பிரயோஜனதையாலே பாத ரேகை போலே கிட்டி இந்த சம்பத்தை பெற்று வாழ் -(

பாதச் சாயைக்கும் மேல் பாதரேகை)

இத்தால் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யத்துக்கு எல்லை நிலம் இவர் ஆகையாலே
அவர் திருவடி நிலைகளுக்கும் ஸ்ரீ யதீந்திர பிரவணர் என்று நிரூபக மாக வேணும் இறே-

செல்வச் சடகோபர் -என்கிறதுக்கு
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -என்கிற செல்வத்தை பெற்றவர் ஆகவுமாம் –

(உண்ணும் நீர் –திருக்கோளூர் -வைத்த மா நிதிப்பெருமாள் -எங்கும் பக்க நோக்கு அறியா பைந் தாமரைக் கண்ணன் -இதுவே செல்வம்)

ஏய்கை-பொருந்துகை(பராங்குசருக்கும் அடியேனுக்கும் பொருத்தமாக)
வாய்கை -கிட்டுகை-

பூ மகள் -புருஷ காரம்
கோன் -ஸ்வாமித்வமும் உபாயத்வமும்
தென்னரங்கர் -ஸுலப்யம்
பூம் கழற்குப்-போக்யம் -ப்ராப்யத்வம்
பாதுகமாய் -அவனுக்கும் ரஷகமும்
தாம் மகிழும் -ஸ்வ கத ஆனந்தம்
செல்வச் -தமது ஆச்சார்யர் -விஷ்வக்சேனர் அவருக்கு ஆச்சார்யரான மிதுன திருவடிகளைப் பெற்ற செல்வம்
சடகோபர் -இந்திரியங்களை வென்றவர்
இவற்றால் ஆச்சார்ய லக்ஷணம் சொல்லப்பட்டன
தே மலர்தாட்கு
ஏய்ந்து
இனிய
பாதுகமாம்
எந்தை
இராமானுசனை
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ்-ஆச்சார்யர் திருவடி நிலைகளே வாழ்வு

 —————————————-

நிழலும் அடிதாறும் ஆனோம் -என்றும்
மேவினேன் அவன் பொன்னடி -என்றும்
ஸ்ரீ ராமானுஜ பதச்சாயா என்றும்
பேசும்படி அத்யந்த பரதந்த்ரராய் வாழும் அவர்கள் பேற்றைப் பெற வேணும் என்று அபேஷியா நின்றீர் –
அது நமக்கு அத்யந்தம் அந்தரங்கரான ஸ்ரீ வடுக நம்பி போல்வாருக்கு அன்றோ சித்திப்பது என்று திரு உள்ளக் கருத்தாக-
அப்படியே த்வத்தந்ய தேவரான ஸ்ரீ வடுக நம்பி நிஷ்டையை அடியேனுக்கும் உண்டாக்கி-
யாவதாத்மபாவி அடிமை கொண்டு அருள வேணும் என்கிறார் –

(வடுக நம்பி –
திருநக்ஷத்ரம்: சித்திரை அஸ்வினி
அவதார ஸ்தலம்: சாளக்ராமம், கர்நாடகா
பரமபத ப்ராப்தி ஸ்தலம்: சாளக்ராமம்
கிரந்தங்கள்: யதிராஜ வைபவம், ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம், ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி
ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே-தனியன்:-)

உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி –தன்னிலையை
என் தனக்கு நீ தந்து எதிராசா எந்நாளும்
உன் தனக்கே ஆட்கொள்ளு உகந்து—-11-

எதிராசா–எம்பெருமானாரே
உன்னை ஒழிய –தேவரீரை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா-தேவரீருக்கு உத்தேஸ்யரான பெருமாளையும் த்வத் அநுபவ கைங்கர்யாதிகளுக்கு நித்ய ஸத்ருவாகக் கருதி தேவரீரை ஒழிய -வேறு ஒரு பர தேவதையையும் அறியாத
மன்னு –ஸ்திரமான
புகழ் சேர் –கீர்த்தியை அடைந்த
வடுக நம்பி தன் –வடுக நம்பி தன்னுடைய நிலையை–சரம பர்வ நிஷ்டையை
என் தனக்கு –அதில் அபேக்ஷையுடைய அடியேனுக்கு
நீ தந்து –தேவரீர் ப்ரஸாதித்து அருளி
எந்நாளும்–ஸர்வ காலத்திலும்
உன் தனக்கே –தேவரீருக்கே ரஸாவஹமாம் படி
ஆட்கொள்ளு உகந்து–உகப்போடே அடிமை கொண்டு அருள வேணும் 

எதிகளுக்கு நாதர் ஆனவரே –
தேவரை ஒழிய-தேவர்க்கு தேஸ்யரான ஸ்ரீ பெரிய பெருமாளையும்
த்வத் அனுபவ கைங்கர்யாதிகளுக்கு நித்ய சத்ருவாகக் கருதி
தேவரை ஒழிய வேறு ஒரு பர தேவதையும் அறியாது இருப்பாராய்
அத்தாலே ஸ்வரூப அனுரூபமான யசஸ்சை பிராப்தராய்-இரு கரையர் அன்றிக்கே
பெரு மதிப்பராய் இருக்கிற ஸ்ரீ வடுக நம்பி
தம்முடைய சரம பர்வ நிஷ்டையை அதிலே அபேஷை யுடைய அடியேனுக்கு பிரசாதித்து அருளி
எனக்கே ஆட் செய் எக் காலத்தும் -என்கிறபடியே
தேவர்க்கே ரசவஹமாம்படி
சர்வ காலத்திலும் உகப்போடே அடிமை கொண்டு அருள வேணும்
அங்கே போகிலும் அவர் உகந்த அடிமையேயாக வேணும் என்று கருத்து – –

மன்னு நிலை சேர் வடுக நம்பி என்று பாடமான போது
பொருந்தி இருக்கிற சரம பர்வ நிஷ்டை ஆகவுமாம் –

எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளியபோது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று, முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில் நீராடிய உள்ளூரார் அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர். அவர்களில் ஒருவர் ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி. இவர் எம்பெருமானாரிடம் பூண்ட ஆசார்ய பக்தி அளப்பரியது, ஈடற்றது. எம்பெருமானார் இவர்க்கு சகல சாரார்த்தங்களும் போதித்தருளினார். அதனாலும் இவர் ஆசார்ய ப்ரதிபத்தி பள்ளமடை ஆயிற்றது.
வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார். தினமும் இவர் எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர். ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று கடிந்தபோது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளைவிட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.
எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி, அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின் திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர, “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!” (அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையேகூட காணாது) என்று திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.
வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின், கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம் செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார் கேள்வி எழுப்பவே, நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ, “தேவரீர் நேற்று உபதேசித்தபடியே அடியேன் செய்தேன்” என்றாராம். அதைக் கேட்ட எம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.
ஒரு முறை வடுக நம்பி எம்பெருமானாருக்கு, திருமடைப்பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக மடத்து வாசலில் எழுந்தருள, எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார். அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால், என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.
நம்பிகளின் அவைஷ்ணவ உறவினர் சிலர் வந்து, தங்கிச் சென்றதும், நம்பிகள் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து வீசிவிட்டு, முதலியாண்டான் திருமாளிகையின் பின்புறத்தில் வைத்திருந்த பழைய உபயோகித்த பாத்திரங்களைப் பயன்படுத்த எடுத்துக் கொண்டார். ஆசார்யர்கள் சம்பந்தம் நம்மை எல்லா வகையிலும் சுத்தி செய்யும் என இப்படி அனுஷ்டித்து விளக்கினார்.
எம்பெருமானார் திருவனந்தபுரம் சேவிக்கச் சென்றபோது அங்கு ஆகம முறையைச் சீர்திருத்தத் திருவுளம் பற்றினார். ஆனால் எம்பெருமான் திருவுள்ளம் வேறுமாதிரி இருந்ததால், அவன் அவரை இரவோடிரவாக உறங்குகையில் திருக்குறுங்குடி சேர்ப்பித்துவிட்டான். விடிவோரை திருக்கண் மலர்ந்த ஸ்வாமி நீராடித் திருமண் காப்புத் தரிக்க இன்னும் திருவனந்தபுரத்திலேயே இருந்த நம்பியை “வடுகா!” என்றழைக்க, திருக்குறுங்குடி நம்பியே வடுக நம்பி போல் வந்து திருமண் காப்பு தந்தருளினார். பின்னர் எம்பெருமானார் திருக்குறுங்குடி நம்பியையும் தம் சிஷ்யனாய் ஏற்றார்.
எம்பெருமானார் திருநாடலங்கரித்தபின் வடுக நம்பி மீண்டும் சாளக்கிராமம் வந்து எம்பெருமானார் க்ரந்தங்களைக் காலக்ஷேபம் செய்தும், தன் சிஷ்யர்களுக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்ற உபதேசம் செய்து கொண்டும், எப்பொழுதும் எம்பெருமானாருக்குத் திருவாராதனம் செய்தும், வேறு ஒரு ஸ்ரீ பாத தீர்த்தமும் ஏற்காமல் ஆசார்ய நிஷ்டையோடே எம்பெருமானார் திருவடியைச் சென்று அடைந்தார்.
வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருமந்திரம் ஓதவும், நம்பி, ”இது நாவகாரியம்” என்று வெறுத்து அகன்றாராம். ஏனெனில் திருமந்திரம் ஓதுமுன் குருபரம்பரையை ஒத வேண்டும், பிறகே திருமந்திரம் ஒத வேண்டும் என்பது முறை
பெரியாழ்வார் திருமொழி 4.4.7 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம், வடுக நம்பி திருநாடு எய்தினார் என்று ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தகவல் கூறவும், அவர் ஆசார்ய நிஷ்டர் ஆகையால் அவர் ஆசார்யர் திருவடி அடைந்தார் என்று கூற வேண்டும் என்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருத்தியருளினாராம்.
பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீ வசன பூஷணம் 411வது ஸூத்ரத்தில் “வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று சாதிக்கிறார்.
வடுக நம்பி எம்பெருமானாரிடம் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டினால், எம்பெருமானைத் தனியாக வணங்கவில்லை. ஆசார்யனை நாம் வழிபடும்போது, இயற்கையாகவே அவ்வாசார்யன் அண்டி இருக்கும் எம்பெருமானையும் வழிபட்டதாக ஆகி விடும். ஆனால், எம்பெருமானை மட்டும் வழிபட்டால், ஆசார்யனை வணங்கியதாக ஆகாது என நம் பூர்வர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர். ஆகையால் ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டு இருப்பதே நம் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான கொள்கை. இந்த அம்சம் வடுக நம்பியிடம் அழகாகப் பொருந்தியுள்ளது என்கிறார் மாமுனிகள்.

 ——

நீர் சொல்லுகிற அரும் தேவைகள் எல்லாம் நாம் செய்கைக்கு அடியான உறவு உண்டோ
என்று அவருக்குக் கருத்தாக உண்டு என்று
ஸ்ரீ பிள்ளை திருவடிகளிலே சம்பந்தம் பெற்ற பிரகாரத்தை பிரகாசிப்பித்தது அருளுகிறார்-

(நம ஸ்ரீஶைலநாதாய குந்தீ நகர ஜந்மநே
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஶாலிநே)

(வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே
துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே)

(எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
வந்த வுபதேச மார்க்கத்தைச் -சிந்தை செய்து
பின்னவரும் கற்க வுபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து —–1-
இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம் ———73-)

தேசம் திகழும் திருவாய் மொழிப் பிள்ளை
மாசில் திருமலை ஆழ்வார் என்னை -நேசத்தால்
எப்படியே எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசர்
அப்படியே நீ செய்து அருள் ——12-

தேசம் –திக் தேசங்கள் எல்லாம்
திகழும் –பிரகாஸிக்கும் படியான ப்ரபாவத்தை யுடையராய்
திருவாய் மொழிப் பிள்ளை–திருவாய் மொழி யோட்டை ஸம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாய் யுடையராய்
மாசில் –தம்மிடத்திலே ஆச்சார்யத்வத்தை ஏறிட்டுக் கொள்ளுகை முதலான க்ரூர நிஷித்தமான மாசு இல்லாமல் இருக்கிற
திருமலை ஆழ்வார் —ஸ்ரீ சைல நாதர் என்னை -தம்முடைய தயா பாத்ரமான அடியேனை
நேசத்தால்-கருணா பரிணாம ரூபமான ஸ்நேஹத்தாலே- என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்
எப்படியே எண்ணி –இவன் எப்படியானால் உஜ்ஜீவிப்பன் என்று விசாரித்து
நின் பால் -ப்ராப்த சேஷியான தேவரீர் திருவடிகளிலே
சேர்த்தார் –சேர்த்து அருளினாரோ
எதிராசர்–எம்பெருமானாரே –
அப்படியே நீ செய்து அருள் –அப்படியே தேவரீரும் திரு உள்ளம் பற்றி உஜ்ஜீவிப்பித்து அருள வேண்டும்

(தன்னையே தனக்கு ஆச்சார்யருடைய சிஷ்யர் என்றும் தன்னுடைய சிஷ்யரை அவருக்கே கோ சிஷ்யராக எண்ணிக் கொள்ள வேண்டும்
உடையவரே உத்தாரகர் என்று சொல்ல வந்த பிரபந்தம் என்பதால் தம்மிடத்திலே ஆச்சார்யத்வத்தை ஏறிட்டுக் கொள்ளுகை குரூரம் என்கிறார்)

(ஸ்ரீமந்யதீந்த்ர! தவ திவ்யபதாப்ஜஸேவாம் ஸ்ரீஸைலநாதகருணாபரிணாமதத்தாம் |
தாமந்வஹம் மம விவர்த்தயநாத!தஸ்யா: காமம் விருத்தமகிலஞ்ச நிவர்த்தயத்வம் (ஸ்ரீ யதிராஜ விம்சதி-19)
(ஸ்ரீமந்யதீந்த்ர – தம்முடைய ஆசார்யர்களோடு தம்முடைய ஸிஷ்யர்களோடு வாசியற மோக்ஷமளிக்கையாகிற என்றுமழியாத செல்வமுடைய யதிராஜரே, த்வம் – தேவரீர், மே – அடியேனுக்கு, ஸ்ரீஸைலநாத கருணாபரிணாமதத்தாம் – அடியேனுடைய ஆசார்யராகிய திருமலையாழ்வாரென்னும் திருவாய்மொழிப்பிள்ளையின் மிக்க கருணையினாலே தரப்பட்ட, தாம் – மிகச்சிறந்த, தவ திவ்யபதாப்ஜஸேவாம் – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் பண்ணும் கைங்கர்யத்தை, அந்வஹம் – நாடோறும், விவர்த்தய – விஸேஷமாக வளர்த்தருளவேணும், (அதாவது தேவரீரடியார் பரம்பரையில் கடைசிவரையில் அக்கைங்கர்யம் அடியேன் செய்யும்படி அதை வ்ருத்திசெய்விக்க வேணுமென்றபடி) நாத – ஸ்வாமியான யதிராஜரே, தஸ்யா: – அத்தகைய கைங்கர்யத்துக்கு, விருத்தம் – தடையாகிய, அகிலம் – எல்லாவற்றையும், காமம் நிவர்த்தய – அடியோடு போக்கியருளவேணும்.)

(கருணை அசாதாரணம் -ராவணன் இடமும் உண்டே -ஸ்நேஹமாக -பரிணாமம் அடைய ஒட்டவில்லையே)

(திருவாய் மொழியை வளர்த்த இதத்தாய் அன்றோ -அடியேனையும் விருத்தி செய்து அருள வேண்டும்)

ஸ்ரீ ஆழ்வார் யுடையவும்-
அவர் அடி பணிந்து உய்ந்த தேவருடையவும்
அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அந்விதராய்
ஜ்ஞான பக்தி விரக்தியாதி களாலும் பூரணராய்
அத்தாலே
திருவுடை மன்னரில் தேசுடையார் -என்று பேசும்படியான பெருமையை யுடையவர் ஆகையாலே
திக் தேசங்களில் எல்லாம் பிரகாசிக்கும் படியான பிரபாவத்தை யுடையராய்
ஸ்ரீ திருவாய் மொழியோட்டை சம்பந்தத்தையே தமக்கு நிரூபகமாக யுடையராய்
தம்மிடத்திலே ஆச்சார்யத்வத்தை ஏறிட்டு கொள்ளுகை முதலான க்ரூர நிஷிதமான மாசு இன்றிக்கே இருப்பராய் இருக்கிற ஸ்ரீ சைல நாதன்
தம்முடைய தயா பாத்ரமான என்னை
கருணா பரிணாம ரூப ஸ்நேஹத்தாலே
இவன் எப்படி யானால் ஜீவிக்கும் என்று விசாரித்து
பிராப்த சேஷியான தேவர் திருவடிகளிலே சேர்த்து அருளினார்
அப்படியே தேவரீரும் திரு உள்ளம் பற்றி உஜ்ஜீவிப்பித்து அருள வேணும் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading