சூர்ணிகை -87-
ஏவம் பூதமான அசித்து தான்
கார்ய காரண ரூபேண அநேக தத்வமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார்
இதுதான்
பொங்கைம்புலனும்
பொறி ஐந்தும்
கருமேந்த்ரியம்
ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய
பிரகிருதி
மானாங்கார
மனங்கள் -(திருவாய் -10-7-10 )
என்கிறபடியே
இருபத்து நாலு தத்வமாய் இருக்கும் –
அதாவது
ஐம்புலன் சப்தாதிகள் பொங்குதலால் சேதனரை விக்ருதரராய் பண்ணும்படிக்கு ஈடான
இவற்றினுடைய உத்ரேகம் சொல்லுகிறது
இவ் விடத்தில் விசேஷ்யம் மாத்ரமே அபேஷிதம்
பொறி ஐந்தாவன -ஸ்ரோத்ராதிகள்
கருமேந்த்ரியம் -வாக்காதிகள்
ஐம்பூதம் -கக நாதிகள்
இங்கு இவ் உயிர் ஏய பிரகிருதி -என்கிறது
சம்சார தசையில் இவ்வாத்மாவோடே அத்யந்த சம்ஸ்ருஷ்டையாய்க் கிடக்கிற பிரகிருதி -என்றபடி –
இங்கும் விசேஷ்யம் மாத்ரம் இறே தத்வ சங்கையைக்கு வேண்டுவது
மானாங்கார மனங்கள் ஆவன –
மகானும் -அஹங்காரமும் -மனஸ் ஸூம்
இப்படி இருபத்து நாலு தத்வங்களையும் அருளிச் செய்கிற ஆழ்வார்
தன் மாத்ரைகளை அருளிச் செய்யாதே
சப்தாதிகளை அருளிச் செய்தது
தன் மாத்ரங்களுக்கு பூதங்களோடு ஸ்வரூப பேதம் இன்றியிலே
அவஸ்தா பேதம் ஆகையாலே
தன் மாத்ரங்களான பூதங்கள் பத்தையும் அஞ்சு தத்வமாக்கி
சப்தாதிகள் ஐந்தையும் ஐந்து தத்வங்களாகக் கொண்டு
இவையும் ஏகாதச இந்த்ரியங்களும்
பிரகிருதி மகான் அஹங்காரம்
இப்படி
சதுர் விம்சதி தத்வம் என்று கொள்ளுவதும் ஒரு பஷம் யுண்டாகையாலே
உபய பஷத்திலும் தத்வ சங்கையையில் ந்யூநாரிரேகம் இல்லை இறே
ஆகையால் இப் பாட்டில் சொன்னபடியே இருபத்து நாலு
தத்வமாய் இருக்கும் என்றது ஆயிற்று –
——————————————————————————————-
சூர்ணிகை -88
இப் பாட்டில் தத்தவங்களை சொன்ன இத்தனை ஒழிய
இவற்றினுடைய க்ரம கதனம்
பண்ணிற்று இல்லை இறே
ஆகையால் இதில் பிரதம தத்வம் ஏது என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –
இதில்
பிரதம
தத்வம்
பிரகிருதி
பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் அவ்யக்தம் என்றும்
பிரதம தத்வதுக்கு பேர்
பிரகிருதி என்று சொல்லுகைக்கு அடி முன்பே சொல்லப் பட்டது
பிரதானம் -என்கிறது -எம்பெருமானுடைய லீலைக்கு பிரதானமான உபகரணம் ஆகையாலே
அவ்யக்தம் என்கிறது அநபி வ்யக்த குண விபாகம் ஆகையாலே-
——————————————————–
சூர்ணிகை -89-
இப்படி பிரதம தத்வமான பிரகிருதிக்கு யுண்டான
அவஸ்தா விசேஷங்களை அருளிச் செய்கிறார் –
இது அவிபக்த தமஸ் -என்றும்
விபக்த தமஸ் என்றும் -என்றும்
அஷரம் என்றும்
சில அவஸ்தைகளை
யுடைத்தாய் இருக்கும் –
அதாவது
அவ்யக்தம் அஷரே லீயதே
அஷரம் தமஸீ லீயதே
தமே பரே தேவ ஏகீ பவதி -(ஸூபால உபநிஷத் )
(அவ்யக்தம் அக்ஷரத்திலும் அக்ஷரம் தமஸ்ஸிலும் லயிக்கின்றன
தமஸ் உயர்ந்த தேவன் இடம் சென்று ஒன்றாகிறது )என்கிறபடியே
சம்ஹ்ருதி சமயத்திலே அவ்யக்த அவஸ்தை குலைந்து
அஷர அவஸ்தமாய்
அது தானும் குலைந்து அதி ஸூஷ்மமாய் தமஸ் சப்த வாச்யமாய்
அது தானும் நாம ரூப விபாகம் அனர்ஹமாம்படி சர்வேஸ்வரன் பக்கலிலே ஏகி பவித்து நிற்கையாலே
அவிபக்த தமஸ் -என்றும் –
சர்க காலம் வந்தவாறே
ப்ராதுர் ஆஸீத் தமோ நுத (மநு -1-6-இருளை விரட்டும் விதமாக வெளிப்படுத்தினான் ) -என்கிறபடியே
அவனாலே ப்ரேரிதமாய்க் கொண்டு நாம ரூப விபாகம் யோக்யமாம்படி
அவன் பக்கல் நின்றும் விபக்தமாய்
கார்ய உந்முகம் ஆகையாலே விபக்த தமஸ் என்றும்
அநந்தரம்
தத் சங்கல்ப விசேஷததாலே
புருஷ சமஷ்டி கர்ப்பமான அசேதனம் என்று விவேகிக்கைக்கும்
அபத மாம்படியான தமோ அவஸ்தை குலைந்து புருஷ சமஷ்டி கர்பத்வம் தோன்றும்படியான
அவஸ்தையைப் பிராபித்து நிற்கையாலே அஷரம் என்றும்
இங்கனே சில அவஸ்தைகளை யுடைத்தாய் இருக்கும் -என்கை –
ஆகையால்
இது அவி பக்த தமஸ் ஆகையாவது
அவ்யக்த அஷர அவஸ்தைகளை குலைந்து தமஸ் சப்த வாச்யமாய்
நாம ரூப விபாக அனர்ஹமாம்படி சர்வேஸ்வரன் பக்கலிலே ஏகி பவித்து நிற்கை –
விபக்த தமஸ் ஆவது –
நாம ரூப விபாகம் அர்ஹமாம்படி விபக்தமாய் கார்ய உந்முகமாகை –
அஷரம் ஆகையாவது –
இது அசித் என்றும் இதன் உள்ளே புருஷ சமஷ்டி கிடக்கிறது என்றும்
விவேகிக்க ஒண்ணாத படி அதி ஸூ ஷ்மமாய் இருக்கிற
தமோ அவஸ்தை குலைந்து
புருஷ சமஷ்டி கர்பத்வம் தோன்றும்படியான அவஸ்தையை பஜிக்கை-என்றது ஆயிற்று –
குண த்ரய வைஷம்யஸ் யா நந்தர பூர்வ அவஸ்தா குண சாம்யம் குண சாம்ய லஷணம் அவ்யக்தம் -என்றும்
அவ்யக்தம் அஷரே லீயதே இதி -என்றும்
யஸ்யாம் அவஸ் தாயாம் குண சாம்ய மப்யஸ்புடம் தத் அவஸ்தம்
சேதன சமஷ்டி கர்ப்பம் தத் அஷர சப்தேநே உஸ்யதே
தனு சேதன மாத்ரம் தஸ்ய அவ்யக்த பிரக்ருதித்வ தமோ விக்ருதித்வ அயோகாத்
அதசஸ் சர்வம் தத்வ ஜாதம் சித் அசித் ஆத்மகம் மந்தவ்யம்
ப்ரதா நாதி விசேஷாந்தம் சேதன அசேதன ஆத்மகம்– இதி பரசார வசனாத்
அத்ர து சித் கர்ப்பே வஸ்துநி அஷர சப்த உபசரித ப்ரயோகேந் யதா சித்தே
சக்தி அந்தர கல்பநா யோகாத்
அஷரம் தமசி லீயதே இதி –
சித் கர்ப்பத்வம் அசித்வம் அபி யத்ர விவேகதும் அசக்யம் தத் அவஸ்தத் அதி ஸூஷ்மம் பிரதானம்
தமஸ் சப்தேந அபி லப்யம் அஷராதி அவஸ்தா ப்ராப்த யௌவன முக்க் ய விசிஷ்டம் ததேவ விபக்தம்
தமஸ் ததௌந் முக்க்ய ரஹிதம் அபிபக்தம் தமஸ் பரமாத்ம சரீர தயாபி சிந்தயிதும் அஸக்யம்
சலில விலீந லவண சந்த்ர காந்தஸ்த சலில ஸூர்ய காந்தஸ் தவஹ்நி கல்பம்
சர்வஜ்ஞ பரமாத்மைக வேத்யம் அவதிஷ்டதே பூதல விநிஹித
பீஜஸ் ஸ்தாநீய மவி பக்தம் தமஸ் ம்ருந் நிஸ் ஸ்ருத பீஜ வத் விபக்தம் தமஸ்
சலில சம்ஸ்ருஷ்டாத்ரா சதில அவயவ பீஜ துல்யம் அஷரம் உஸ் சூன பீஜ சமாநம் அவ்யக்தம்
அங்குர ஸ்தாநீயோ மகாந் இதி விவேக -என்று ஸூபால உபநிஷத் வ்யாக்யானத்திலே ஸ்ருத பிரகாசர்
இதனுடைய அவஸ்தா விசேஷங்களை ஸூஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்
(ப்ரக்ருதியானது மூன்று குணங்களுடைய ஏற்றத் தாழ்வை அடைகிறது –
அந்த நிலைக்குப் பின்னர் முந்தைய நிலையானது சமநிலை எனப்படுகிறது
குணங்கள் சமமாக உள்ள நிலையானது கண்களுக்குப் புலப்படாத அவ்யக்தம் எனப்படும்
எந்த ஒரு நிலையில் அனைத்து குணங்களும் சமமாகவோ அல்லது ஏற்றத்தாழ்வுடன் கூடியதாக வெளிப்படையாகவோ
காண இயலாமல் உள்ளதோ அப்படிப்பட்ட நிலையை அடைந்துள்ளதான தொகுத்த ஜீவாத்ம கூட்டம்
எதில் அடங்கி உள்ளதோ அது அக்ஷரம் எனப்படும் –
இது ஏன் என்றால் அக்ஷரம் என்பது ஜீவாத்மாக்களை மட்டும் குறிப்பது அல்ல
காரணம் -அதற்கு பிரக்ருதியானது காரணமாகவும் அது தமஸ்ஸுக்கு காரியமாகவும் உண்டானது அல்ல என்பதால் ஆகும்
ஆகவே ப்ரக்ருதி தத்வம் முதலாக இந்த பூமி முடிய உள்ள அனைத்தும்
சித் மற்றும் அசித் என்ற ஸ்வரூபங்களாகவே எண்ணப்பட வேண்டும்
பராசரர் -ப்ராதாநாதி விசேஷாந்தம் சேதன அசேதன ஆத்மகம் -பிரதானம் தொடக்கமாக விசேஷமான பொருள்கள்
முடிய உள்ள அனைத்தும் சேதனம் மற்றும் அசேதனம் என்பவற்றை உள்ளடக்கிய தாகவே உள்ளன -என்கிறார்
இங்கு ஜீவர்கள் அனைவரும் ப்ரக்ருதியில் உள்ள நிலையானது சூல் கொண்ட பயிர்களை போன்று உள்ளனர் –
என்பதைக் குறிக்கும் சொல்லானது உபசாரமாகவே மட்டுமே கூறப்பட்டது
இதற்கு வேறு விதமாகப் பொருள் ஏற்கக் கூடாது
இவ்விதமாக சித் வஸ்துக்களைக் கர்ப்பத்தில் கொண்டதாக உள்ள நிலையும் அசித் வஸ்துக்களினுடைய தன்மையும்
எந்த ஒரு நிலையில் பிரித்து அறிய முடியாதபடி உள்ளதோ அப்படிப்பட்ட ஸூஷ்ம மான நிலையானது
பிரதானம் மற்றும் தமஸ் போன்ற சொற்களால் கூறப்படுகிறது
இப்படிப்பட்ட அக்ஷர நிலையை அடைவதற்கான எதிர்த்தன்மையுடன் கூடி உள்ளது விபக்த தமஸ் என்னப்படும் –
இவ்விதம் எதிர் தட்டாக இல்லாதது அவிபக்த தமஸ் எனப்படும்
அது பரமாத்மாவின் சரீரம் என்று பிரித்து அறிய இயலாத படியும் -நீரில் கலந்துள்ள உப்பு –
சந்திரக்காந்தக் கல்லில் உள்ள நீர் -ஸூர்யகாந்தக் கல்லில் உள்ள நெருப்பு -போன்றதாகவும்
அனைத்தும் அறிந்த பரமாத்மாவால் மட்டுமே அறியக் கூடியதாகவும் உள்ளது
பூமியில் விதைக்கப்பட்ட விதை போன்றதே அவிபக்த தமஸ் ஆகும்
நீருடன் ஒன்றாகக் கலந்து சிதைவுடன் கூடிய விதை போன்றதே அக்ஷரம் ஆகும்
அந்த விதையில் இருந்து வெளிவந்த முளையைப் போன்றதே மஹான் ஆகும் -என்று கூறினார்
இதன் மூலம் அக்ஷரம் மற்றும் தமஸ் ஆகியவை ஒரு மலருடைய மொட்டு மற்றும் அரும்பு
முதலான நிலைகளை போன்று பிரகிருதியின் சுருங்கிய நிலை யாகிறது
ஆகவே இவை மஹான் அஹங்காரம் என்பது போன்ற வேறு தத்வங்கள் அல்ல என்று தேறுகிறது -)
இத்தால்
அஷரமும் தமஸ்ஸூம்
குஸூமத்தினுடைய முகுள கோரக அவஸ்தைகள் போலே
இதனுடைய சங்கோச தசை யாகையாலே
மகாதாதிகளைப் போலே தத்வாந்தரம் அன்று என்னும் இடம் சித்தம்-
—————————————————————————————–
சூர்ணிகை -90-
இனி இந்த பிரக்ருதியில் நின்றும் மஹதாதி விகாரங்கள்
ஜநிக்கைக்கு மூலம் இன்னது -என்கிறார் –
இதில் நின்றும்
குண வைஷம்யத்தாலே
மஹதாதி விசேஷங்கள்
பிறக்கும் –
குணங்களுக்கு வைஷம்யம் ஆவது -பரஸ்பர உத்தரேகம்-
———————————————————————
சூர்ணிகை -91-
அப்படி இருக்கிற குணங்கள் தான் எவை என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –
குணங்கள் ஆகிறன
சத்வ
ரஜஸ்
தமஸ் ஸூக்கள் –
—————————————————————–
சூர்ணிகை -92-
இவை தான் இருக்கும்படி எங்கனே என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –
இவை பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுபந்திகளான
ஸ்வ பாவங்களாய
பிரக்ருத அவஸ்தையில்
அனுத் பூதங்களாய்
விகார தசையில்
உத் பூதங்களாய்
இருக்கும் –
இவை பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுபந்திகளான ஸ்வ பாவங்களாய-
சத்வம் ரஜஸ் தமஸ் இதி குணா பிரகிருதி சம்பவா (ஸ்ரீ கீதை -14-5)
(சத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் -என்பதான ப்ரக்ருதியில் இருந்து உண்டான குணங்கள் )-என்றும்
பிரக்ருதே க்ரிய மாணிநி குணை கர்மாணி சர்வச (ஸ்ரீ கீதை -3-27)
(அனைத்து செயல்களும் அனைத்து விதங்களிலும் பிரகிருதியின் குணங்களால் இயங்குகின்றன )-என்றும்
சத்வம் ரஜஸ் தமஸ் இதி பிரக்ருதேர் குணா
(சத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவை பிரகிருதியின் குணங்கள் )-என்றும்
சொல்லக் கடவது இறே-
ஸ்வ பாவ அனுபந்திகள் -என்றது ஆகந்துகங்கள் அன்றிக்கே
சத்தா பிரயுக்தங்கள் ஆகையாலே
இவற்றை ஒழிந்து ஓர் அவஸ்தையும் இல்லை -என்கை-
இவற்றை ஸ்வ பாவங்கள் என்றும்
பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுப பந்திகள் என்றும் சொல்லுகையாலே
மூல பிரக்ருதிர் நாம ஸூக துக்கா மோஹாத் மகாநி லாகவ பிரகாச சலனோ பஷ்டம்பன கௌரவா வரண
கார்யாண்யத் யந்தா தீந்தரியாணி கார்யைக நிரூபண
விவேகாநி அந்யூனா நதிரே காணி சமதா முபேதானி சத்வ ரஜச தமாம்சி த்ரவ்யாணி -(ஸ்ரீ பாஷ்யம் -2-2-1)
மூலப்பிரக்ருதி என்பது சத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய மூன்று த்ரவ்யங்களைக் கொண்டதாகும்
இவை மூன்றும் சரிசமமான நிலையில் -ஒன்றை ஓன்று விஞ்சாத விதத்தில் உள்ளன
இவற்றின் இயல்பான தன்மைகள் முறையே ஸூகம் துக்கம் மற்றும் மோகம் -மயக்கம் -என்பதாகும் –
சத்வம் அதிகமாகும் போது ஸூகம் ஏற்படும் -சரீரம் எடை குறைவாக இருப்பதாகத் தோன்றும் –
இந்திரியங்கள் நன்கு இயங்கும் -இதுவே லாகவே ப்ரகாசங்கள் என்பர்
ரஜஸ் அதிகமாகும் போது துக்கம் ஏற்படும் -அசைவு மற்றும் இந்திரியங்கள் செயலாற்றுவதும் நிகழும்
சலனம் -சஞ்சலமான இயல்பு கொண்டபடியும் -உஷ்டம்பனம் -யாரையேனும் வாக்குவாதத்துக்கு இழுத்த படியும் இருப்பர்
தமஸ் அதிகமாகும் போது மயக்கம் ஏற்படும் -சரீரம் பழுவாக உணரப்படும் இந்திரியங்கள் மறைக்கப்படும் -கௌரவம் ஆவரணம் –
இப்படிப்பட்ட குணங்களானவை இந்த்ரியங்களால் உணர இயலாதபடி உள்ளதாகும் –
அவற்றின் கார்யத்தைக் கொண்டே உணர வல்லதாக -நிரூபிக்கும் படியாக -இருப்பதாகும்
சத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய மூன்றையும் சமநிலையில் கொண்டதான மூல அசேதனமாக உள்ள போதிலும்
ப்ரக்ருதியானது எண்ணற்ற சேதனர்களுடைய இன்பத்துக்கும் மோக்ஷத்துக்கும் உதவுவதாக உள்ளது -)என்று
இவற்றைத் த்ரவ்யங்களாயும்
இவை தான் பிரகிருதி ஸ்வ ரூபமாகவும் கொள்ளுகிற சாங்க்ய மதம் நிரசமாயிற்று-
இந்த மத நிராகரண அர்த்தமாக விறே ஆளவந்தார்
குணா பிரதானம் (ஸ்தோத்ர ரத்னம் -17-குணங்களும் பிரக்ருதியும் )-என்று பிரித்து அருளிச் செய்தது
பிரக்ருத அவஸ்தையில் அனுத் பூதங்களாய் விகார தசையில் உத் பூதங்களாய் இருக்கும் –
அதாவது
சாம்யா பன்னங்களாய் இருக்கையாலே பிரகிருதி அவஸ்தையில் இவற்றின் யுடைய ஸ்வரூப விபாகம் தோற்றாது –
வைஷம்யா பத்தியாலே விக்ருத அவஸ்தையில் இவற்றினுடைய ஸ்வரூப விபாகம் தோற்றி இருக்கும் என்கை –
ஸத்வ ரஜஸ தமாமசி த்ரயோ குணா பிரக்ருதேஸ் ஸ்வ ரூப அனுப பந்திநஸ் ஸ்வ பாவ விசேஷா பிரகாசாதி
கார்யைக நிருபணீயா பிரக்ருத அவஸ்தாயம் அனுத் பூதாஸ்
தத் விகாரேஷூ மஹதாதி ஷூத் பூதா – (ஸ்ரீ கீதா பாஷ்யம் –14-5 )
(சத்வம் ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவை பிரகிருதியின் ஸ்வரூபத்தை அண்டி உள்ளன –
இவற்றின் ஸ்வ பாவத்தில் உள்ள சிறப்புக்கள் அனைத்து காரியத்தில் மட்டுமே நிச்சயிக்கத் தக்கவையாக –
ப்ரக்ருதி என்ற நிலையில் வெளிப்படாமல் பிரகிருதியின் மாற்றங்களாகிய
மஹத் முதலானவற்றின் மூலம் வெளிப்படுகின்றன -)என்று இறே
ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தது –
————————————————————————–
சூர்ணிகை -93-
விகார தசையில் இவை தான் கார்யைக நிரூபணீயங்கள் ஆகையாலே
கார்ய கதன முகத்தாலே இவற்றினுடைய ஸ்வரூபங்களைத் தர்சிப்பிக்கிறார் –
சத்வம்
ஜ்ஞான
ஸூகங்களையும்
உபய சங்கத்தையும்
பிறப்பிக்கும் –
அதாவது
சத்வ குணம் நிர்மலம் ஆகையாலே
ஜ்ஞான ஸூகாவரணம் இன்றிக்கே
அவற்றுக்கு ஜநகமுமாய்
அவற்றினுடைய பேற்றுக்கு ப்ரவர்த்திக்கும் படி
அவை இரண்டிலும் சங்கத்தை யுண்டாக்கும் -என்கை
தத்ர சத்வம் நிர் மலத்வாத் பிரகாசக மநாமயம் ஸூக சங்கேன பத்நாதி ஜ்ஞான சங்கேன சாநக (ஸ்ரீ கீதை -14-6 )
( அந்த மூன்று குணங்களில் சத்வமான தூய்மை யானதாக உள்ளதால் ஒளிர்ந்தபடி இருக்கிறது –
மாற்றங்கள் அடையாதது -ஆனால் அது இன்பத்துடன் கொண்ட சம்பந்தம் மற்றும்
ஞானத்துடன் கொண்ட சம்பந்தம் காரணமாக கட்டுப்படும்படிச் செய்கிறது ) -என்னக் கடவது இறே –
———————————————————————
சூர்ணிகை -94-
ரஜஸ்ஸூ
ராக த்ருஷணா
சங்கங்களையும்
கர்ம சங்கத்தையும்
பிறப்பிக்கும் –
அதாவது
ரஜோ ராகாத்மகம் விததி த்ருஷ்ணா சங்க சமுத்பவம் தந் நிபத நாதி கௌந் தேய கர்ம சங்கேந தேஹி நாம் -(ஸ்ரீ கீதை -14-7 )
(விருப்பம் என்பதே வடிவமாக உள்ள ரஜோ குணமாவது கர்மம் மற்றும் பற்றுதல் ஏற்படக் காரணமாக உள்ளது
இது கர்மங்களிலும் கர்ம பலன்களிலும் உள்ள சம்பந்தம் காரணமாக் கட்டுப்படுத்து கிறது ) என்னக் கடவது இறே
ராகமாவது
யோஷித் புருஷர்களுக்கு அந்யோந்யம் யுண்டான ஸ்பருஹை
த்ருஷணை யாவது
சப்தாதி சர்வ விஷய ஸ்ப்ருஹை
சங்கமாவது –
புத்திர மித்ராதிகள் அளவில் சம்ஸ்லேஷ ஸ்ப்ருஹை
காம சங்கம் ஆவது –
கிரியைகளில் ஸ்ப்ருஹை-
—————————————————————-
சூர்ணிகை -95-
தமஸ்ஸூ
விபரீத ஜ்ஞானத்தையும்
அநவதா நததையும்
ஆலஸ் யத்யையும்
நித்ரையையும்
பிறப்பிக்கும் –
அதாவது
தமஸ்த்வ ஜ்ஞனாஜம் வித்தி மோஹனம் சர்வ தேஹிநாம்
ப்ரமாதா லஸ்ய நித்ராபிஸ் தந்நிபத்நாதி பாரத – (ஸ்ரீ கீதை -14-8 )
(சரீரத்தில் பற்றுதல் கொண்ட அனைவரையும் மயக்க வல்லதான தமஸ்ஸானது அஞ்ஞானத்தால் ஏற்படுவதாகும்
அது ஜீவாத்மாக்களை தேவையற்ற செயல்களில் ஈடுபடுத்தல் சோம்பல் மற்றும் உறக்கம்
முதலியவற்றால் காட்டுகிறது ) என்னக் கடவது இறே
விபரீத ஞானம் ஆவது –
வஸ்து யாதாத்ம்ய விபரீத விஷயமான ஜ்ஞானம்
அநவதாநமாவது –
செய்யுமது ஒன்றில் குறிக்கோள் இல்லாமை
ஆலஸ்யமாவது –
ஒரு கார்யத்திலும் ஆரம்பம் அற்று இருக்கும் சொப்பம்
நித்ரையாவது –
புருஷனுக்கு இந்திரிய ப்ரவர்த்தன ஸ்ராந்தி அடியாக வருகிற சர்வ இந்த்ரிய ப்ரவர்த்தநோபரதி-
———————————————————————————————
சூர்ணிகை -96-
இனி இக் குணங்களை உடைய சம தசையிலும்
விஷம தசையிலும்
பிரக்ருதியினுடைய விகாரங்கள் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –
இவை சமங்களான போது
விகாரங்கள் சமங்களுமாய்
அஸ்பஷ்டங்களுமாய்
இருக்கும்
விஷமங்கள் ஆன போது
விகாரங்கள் விஷமங்களுமாய்
ஸ்பஷ்டங்களுமாய்
இருக்கும் –
அதாவது
இக் குணங்கள் பரஸ்பர உத்ரேகமாதல்
க்ருத்ஸ்ன உத்ரேகம் ஆதல் இன்றிக்கே சாம்யா பன்னங்களாய் இருந்த போது
பிரக்ருதியினுடைய விகாரங்கள்
நாம ரூப விசேஷ ராஹித்யத்தாலே -தன்னில் -சமங்களுமாய்
பிரமாணங்களால் தர்சிக்கப் போகாத படி ஸ்பஷ்டங்களும் அன்றிக்கே இருக்கும்
இக் குணங்கள் உத்ரேகித்து விஷமங்கள் ஆன போது பிரக்ருதியினுடைய
விகாரங்களும் நாம ரூப விசேஷ சாஹித்யத்தாலே
தன்னில் விஷமங்களுமாய்
பிரமாணங்களால் தர்சிகலாம் படி ஸ்பஷ்டங்களாய் இருக்கும் என்கை-
பிரதேச பேதத்தாலும்
கால பேதத்தாலும் -என்று கீழ்ச் சொன்னதுக்கும் (சூர்ணிகை-85)
இந்த குண சாம்ய வைஷமயங்கள் இறே ஹேது
அது இங்கே விசதமாயிற்று –
—————————————————————————-
சூர்ணிகை -97-
இந்த குண வைஷம்ய பிரயுக்தமான விஷம விகாரங்களில் பிரதம விகாரம் ஏது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –
விஷம விகாரங்களில்
பிரதம விகாரம்
மகான் –
அதாவது
குண சாம்யாத் ததஸ் தஸ்மாத் ஷேத்ரஞ்ஞா திஷ்டிதாந் முநே குண வயஞ்ஜன சம்பூதி
சர்க காலே த்விஜோத்தம (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-36)
(ஸ்ருஷ்டியின் போது சம நிலையில் உள்ள மூன்று குணங்களும் ஷேத்ரஞ்ஞன் என்பதான ஆத்மாவால்
உட் புகப்பட்டு ப்ரக்ருதியில் இருந்து குணங்கள் வளருவதற்குக் காரணமாக உள்ள
மஹான் ஏற்படுகிறது –என்னக் கடவது இறே
அதாவது –
குணா சாம்யத்தை யுடைத்தாய்
ஷேத்ரஞ்ஞனான பக்த சேதனனாலே அதிஷ்டிதமான அவ்யக்தத்தில் நின்றும்
வ்யக்த குணோந் மேஷ ஹேதுவாகையாலே குணா வ்யஞ்ஞனம் என்று பேரான
மகத் தத்வம் உத் பந்நமாம் -என்றபடி —
——————————————————————
சூர்ணிகை -98-
இதனுடைய ஸ்வரூபம் இருக்கும்படி எங்கனே என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –
இது சாத்விகம்
ராஜசம்
தாமசம்
என்று த்ரிவிதமாய்
அத்யவசாய ஜனகமாய்
இருக்கும் –
அதாவது
இந்த மஹத் தத்வம்
சாத்விகோ ராஜஸச் சைவ தாமஸச்ச த்ரிதா மகான்(ஸ்ரீ விஷ்ணு புராணம் – 1-2-36 )
(மகத்தானது சாத்வீகம் ராஜஸம் மற்றும் தாமஸம் என்று மூன்று வகையாகும் ) -என்று
பிரகாச பிரவ்ருத்தி மோஹ உன்மயமான சத்வ ரஜஸ் தமோ ரூப குண அன்வயத்தாலே
சாத்விகம் ராஜசம் தாமசம் என்று த்ரி விதமாய்
மகான் வை புத்தி லஷண (மஹத்தானது புத்தியை லக்ஷணமாகக் கொண்டது )-என்று
புத்தி லஷணம் ஆகையாலே அத்யாவசாய ஜனகமாய் இருக்கும் -என்கை-
அதில் சாத்விக புத்தி யாவது
பிரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே பந்தம் மோஷம் ச யா வேத்தி
புத்திஸ் ஸா பார்த்த ஸாத்விகீ (ஸ்ரீ கீதை -18-30 )
(ஸ்வர்க்கம் முதலானவற்றை அடைவதில் முயற்சி மற்றும் மோக்ஷ சாதனங்களான கர்மம் போன்றவற்றை அடைதல் –
எவை செய்யத் தக்கவை மற்றும் செய்யத் தகாதவை என்பதை அறிதல்
சாஸ்திரங்களில் கூறப்பட்டவற்றை மீறுதலால் அச்சம் மற்றும் அச்சம் இன்மை
சம்சாரம் மற்றும் மோக்ஷம் போன்றவற்றைக் குறித்து அறிதல் ஆகியவற்றை
எந்த ஒரு புத்தி அறிகிறதோ அந்த புத்தியானது சாத்வீகம் ஆகும் )
என்று பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் அடையவும்
கார்யாகார்யங்களினுடையவும்
பயாபயங்களினுடையவும்
பந்த மோஷங்களினுடையவும்
யதாவத் யவசாயம் என்றும் –
ராஜச புத்தி யாவது –
யயா தர்ம மதர்மம் ச கார்யம் ச கார்யமேவ ச அயதாவத் பிரஜாநாதி புத்திஸ் ச பார்த்த ராஜசீ (ஸ்ரீ கீதை -18-31)
(எந்த ஒரு புத்தியால் தர்மம் மற்றும் அதர்மம் -செய்யத் தக்கவை மற்றும் செய்யத் தகாதவை ஆகியவற்றைக்
குறித்து உள்ளது உள்ளபடி அல்லாமல் அறிகிறானோ அந்தப் புத்தியானது ராஜஸம் ஆகிறது )-என்று
தர்ம அதர்மங்களையும்
கார்யாகார்யங்களையும்
அந்யதாவாக அறுதி யிடுகை என்றும்
தாமச புத்தியாவது
அதர்மம் தர்மம் இதி யா மந்யதே தமசா வ்ருதா சர்வார்த்தாந் விபரீதாம்ச ச புத்திஸ் சா பார்த்த தாமசீ (ஸ்ரீ கீதை -18-32)
(எந்த ஒரு புத்தியால் அதர்மத்தைத் தர்மமாகவும் அனைத்துப் பொருள்களின் தன்மையை
மாறாக அறிகிறானோ அது தாமஸ புத்தி ஆகிறது )-என்று
அதர்மத்தை தர்மமாகவும்
தர்மத்தை அதர்மமாகவும்
இப்படி சர்வார்த்தங்களையும் விபரீதமாகவும் நிச்சயிக்கை என்றும்
பகவான் தானே கீதோபநிஷத்திலே அருளிச் செய்தான் இறே –
ஆக
பிரக்ருதியினுடைய விஷம விகாரங்களில் பிரதம விகாரம் இன்னது என்றும்
அதினுடைய ஸ்வரூபம் இருக்கும் படியையும்
அதனுடைய க்ருத்யமும்
சொல்லிற்று ஆயிற்று –
———————————————————
சூர்ணிகை -99-
இனி மற்று யுண்டான விகாரங்களும் க்ரமத்திலே சொல்லப் படுகிறது –
இதில் நின்றும்
வைகார்யம்
தைஜசம்
பூதாதி என்று
த்ரிவிதமான அஹங்காரம்
பிறக்கும் –
அதாவது
இந்த மஹானில் நின்றும்
வைகாரிகஸ் தைஜ சச்ச பூதாதிஸ் சைவ தாமச த்ரிவிதயோம் அஹங்காரோ
மஹத் தத்வாத ஜாயதே (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-37 )
(வைகாரிகமானது சாத்விக அஹங்காரம் ராஜஸ அஹங்காரம் மற்றும் தாமஸ அஹங்காரம் -என
மூன்று விதமாக உள்ளன -இவை மஹத் தத்துவத்தில் இருந்து வெளிப்படுகின்றன ) -என்கிறபடியே
சாத்விக ராஜச தாமச ரூப பேதத்தாலே
வைகாரிகம் என்றும்
தைஜசம் என்றும்
பூதாதி என்றும்
த்ரிவிதமான அஹங்காரமும் பிறக்கும் -என்கை
இத்தால்
த்ரிகுணாதமிகையன மூல பிரக்ருதியில் நின்றும் பிறந்ததாகையாலே
மஹானும் திரி குணமாய் இருக்கும் -என்கை –
அப்படியே
த்ரி குணாத் மகமான மஹானில் நின்றும் பிறந்தது ஆகையாலே
அஹங்காரமும் த்ரி குணமாய் இருக்கும் என்கை
—————————————————————-
சூர்ணிகை -100-
அஹங்காரம்
அபிமான
ஹேதுவாய்
இருக்கும் –
அதாவது தேஹாத்மா அபிமாநாதிகளை ஜனிப்பிக்கை
இத்தால்
இதனுடைய க்ருத்யம் சொல்லப்பட்டது –
—————————————————————–
சூர்ணிகை -101-
இதில் வைகாரிகத்தில் நின்றும்
ஸ்ரோத்ர
த்வக்
சஷூர்
ஜிஹ்வா
க்ராணங்கள்-
என்கிற ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தும்
வாக்
பாணி
பாத
பாயு
உபஸ்தங்கள்
என்கிற கர்ம இந்த்ரியங்கள் ஐந்தும்
மனஸ்ஸூம் ஆகிற
பதினோரு இந்த்ரியங்களும் பிறக்கும் –
அதாவது –
இப்படி த்ரிவிதமான அஹங்காரத்தில்
வைகாரிகமாவது சாத்விக அஹங்காரம் ஆகையாலே
இதில் நின்றும்
சாத்விக கார்யமான லகுத்வ பிரகாசத்வங்களை யுடைத்தான இந்திரியங்கள்
பதினொன்றும் பிறக்கும் என்கை –
வைகாரிகத்தில் நின்றும் ஏகாதச இந்த்ரியங்களும் பிறக்கும் என்று சொல்லி விடாதே
இப்படி அருளிச் செய்தது
இவற்றினுடைய கார்ய பேதத்தையும் சம்ஞ்ஞா பேதத்தையும் ஒழிய
இவற்றின் யுடைய ஸ்வரூப பேதமும் வ்யவஹார பேதமும்
தோற்றாது என்று
மனஸ்ஸூ க்கு கார்யம் உபய சஹ காரித்வம்
அது தான் இவ்விடத்தில் சொல்லாது ஒழிந்தது மேலே இவை தன்னை விஸ்தரேண்
சொல்லுகிற இடத்தில் சொல்லுகிறோம் என்று –
இந்த்ரியங்கள் சாத்விக அஹங்கார கார்யம் என்று அருளிச் செய்கையாலே
இவற்றை ராஜச அஹங்கார கார்யம் என்கிற பஷம் பிரதிஷிப்தம்-
தைஜசா நீந்த்ரியாண் யாஹூர் தேவா வைகாரிகா தச ஏகாதசம்
மனஸ் சாத்ர தேவா வைகாரி காஸ் ஸ்ம்ருதா (ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-47 )
(இந்திரியங்கள் அனைத்தும் தைஜஸம் -ஒளி -எனப்படும் -பத்து இந்திரியங்களும் வைகாரிகா எனப்படும் –
மனம் பதினொன்றதாக ஆகும் -இவை தேவதைகளால் புகப்பட்டதால் தேவ என்னும் சப்தத்தால் கூறத்தக்கதாக ) -என்றும்
அக்னிர் வாக் பூத்வா முகம் பிராவிசத் வாயு க்ரானோ பூத்வா நாசிகே ப்ராவிசத் ஆதித்யச்
சஷூர் பூத்வா அஷிணீ ப்ராவிசத் திசஸ் ஸ்ரோத்ரம் பூத்வா கர்னௌவ் பிராவிசத் ஔஷதி
வனஸ்பதயோ லோமானி பூத்வா த்வசம் ப்ராவிசத் சந்தரமா மனோ பூத்வா ஹ்ருதயம் ப்ராவிசத்
ம்ருத யுர பானோ பூத்வா நாபிம் ப்ராவிசத் ஆபோரேதோ பூத்வா சிஸ்நம் ப்ராவிசத் (ஐத்ரேய உபநிஷத் -2-1-4 )
(அக்னி வாக்காக மாறி முகத்தை அடைந்தான் -வாயு முகரும் இந்த்ரியமாக மாறி மூக்கை அடைந்தான் –
ஸூர்யன் பார்வையாக மாறி கண்ணை அடைந்தான்
திசையின் அபிமான தேவதையானவன் கேட்க்கும் இந்த்ரியமாக மாறி செவியை அடைந்தான் –
செடிகள் மற்றும் கொடிகள் தங்களுடைய அபிமான தேவதைகளாக மாறி மரங்களும் முடியும் என்றாகி
தொடு இந்திரியங்களை அடைந்து நின்றன -சந்திரன் மனமாக மாறி இதயத்தை அடைந்தான்
யமன் அபான வாயுவாக மாறி நாபியை அடைந்தான் –
நீரானது ரேதஸ்ஸாக மாறி மர்மக் குறியை அடைந்தது – ) -என்கிறபடியே
தேவ அதிஷ்டிதங்களாலே தேவ சப்த வாச்யங்களான இந்த்ரியங்கள் பதினொன்றும்
ராஜச அஹங்கார கார்யம் என்பார்கள் சிலர்
சாத்விக அஹங்கார கார்யம் என்பார்கள் சிலர்
என்று சொல்லி
அதில்
சாத்விக அஹங்கார கார்யம் என்கிறதே ஸ்வ பஷமாக ஸ்ரீ பராசர பகவான் நிச்சயிக்கையாலே
இவருக்கு இப்படி அருளிச் செய்யக் குறை இல்லை-
இந்த்ரியங்கள் பதினொன்று என்கிற நியமமும் வியஷ்டி விஷயம் அன்று –
சமஷ்டி விஷயம்
தேஷாந் த்வ வயவான ஸூஷ்மான் ஷண்ணா மப்யமி தௌஜசாம் சந்நிவேஸ்யாத்மா
மாத்ராஸூ சர்வ பூதாமி நிர்மமே-(மநு ஸ்ம்ருதி -1-16 )
(மிகுந்த தேஜஸ் கொண்ட ஆறு இந்த்ரியங்களைக் காட்டிலும் ஸூஷ்மமான தன் மாத்திரைகளில்
தனது மாற்றங்களைச் சேர்த்து அனைத்து பூதங்களையும் ஈஸ்வரன் ஸ்ருஷ்ட்டி செய்தான் )என்று
அணுக்கள் ஆகையாலே ஸூஷ்மங்களான இந்த்ரியங்களினுடைய அம்சங்களை ஆத்ம மாத்ரைகளிலே
பிரவேசிப்பித்து
சர்வ பூதங்களையும் ஈஸ்வரன் சிருஷ்டித்தான் என்று மனு வசனம் யுண்டாகையாலே
இதில் ஸூஷ்ம -என்கையாலே
அணவச ச (2-4-6 -இந்திரியங்களும் அணு அளவே ஆகும் )-என்கிற ஸூத்திர மரியாதையாலே
இந்த்ரியங்கள் அணு வென்றும்
அவயவான் -என்கையாலே
இந்திரியங்கள் தோறும் வ்யக்தி பாஹூள்யம் யுண்டு என்றும்
ஆத்மா மாத்திரைகளில் கூட்டினான் என்கையாலே
அடியிலே கொடுத்த இந்த்ரியங்களே யாவத் சம்சாரம் அனுவர்த்திக்கும் என்றும்
சரீரம் யத் அவாப்நோதி யச்சாப் யுத் க்ரமா தீஸ்வர க்ருஹீத வைதானி சம்யாதி வாயுர் கந்தா நிவாசயாத் – (ஸ்ரீ கீதை -15-8 )
(காற்றானது எவ்விதம் மலர்களில் உள்ள நறு மணத்தைக் கவர்ந்து செல்லுமோ அது போன்று
உயிர் பிரிந்த பின்பு ஜீவன் தன்னுடன் இந்திரியங்களை அனைத்தையும் எடுத்துச் செல்கிறான் )என்கிறபடி
சரீரத்தை விட்டு சரீராந்தரத்தை பிரவேசிக்கும் போது
இந்த்ரியங்களை க்ரஹித்துக் கொண்டு போம் என்று தோற்றுகிறது-
ஷண்ணாம் என்றும்
மனஷ் ஷஷ்ட்டாநி -என்றும் சொல்லுகிற சங்க்யா நிர்தேசத்தில் நிர்பந்தம் இல்லை
இந்த்ரியாந்தரங்களும் கூடிப் போகையாலே-
—————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply