ஸ்ரீ திரு விருத்தம் -ஏழாவது பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

(இப் பாசுரம் தோழி பாசுரம்
கீழே த்ருஷ்ட்டி பந்தம் -கண்ணோடு கண் கவ்வி -ப்ரத்யாஹாரம் -உள்ளே இழுத்து -இலக்கு இல்லாத ஞான கூர்மை
இது கால மயக்க துறை
வருத்தம் தீர்க்க -காலத்தை மாற்றி தலைமகளை மயக்கி தரிக்க வைக்கிறாள்
ரக்ஷணத்துக்கு பொய் -பொய்மையும் நன்மை பயந்தால் சொல்லலாமே
சுக்ரீவன் மழைக்காலம் முடிந்து சீதாப்பிராட்டியைத் தேட போவதாக சொல்ல
இங்கு தலைமகன் வருவதாக சொல்லிப் போந்தான்
மழைக்காலம் வந்தால் வருவேன் என்று நம்பி இருந்தாள் தலைவி
அதுவும் வந்தது -அவன் வரவில்லையே -ஆகவே தோழி ஆற்றாமை தவிர்க்க இப்பாசுரம்
கீழ் வானம் வெள்ளென்று -முகம் ஒளி கிழக்கில் பட்டு பிரதிபலித்தது
எருமை சிறுவீடு மேயப் போனதை -முக காந்தி பட்டு இருட்டு விலகுகிறது
நிர்ணயம் செய்து கவலைப்படாதே என்று முன்பு சொல்லி
பின்பு சம்சயம் -இப்படியும் இருக்கலாம் என்று சொல்லியும் ஆஸ்வாஸப் படுத்துகிறாள்
என்று நம்பிள்ளை ஈட்டில் காட்டி உள்ளார்
நிர்ணயம் பண்ணி நாயகியை மனசைத் திருப்பி சிந்திக்க வைத்து -அடுத்து சம்சயம் )

இன்னுயிர்ச் சேவல் -9-5–இதன் விவரணம்

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

எம்பெருமானார் உகந்த பாசுரம்
திருவெள்ளறை இருந்து அரையர் திருவரங்கம் கூட்டி வந்த பதிகம்
ஸ்மாரக பதார்த்தம் -கிளி மேகம் -)

———-

அவதாரிகை –

கால மயக்கு துறை –

வர்ஷாவில் வரக் கடவதாக காலம் குறித்துப் போன தலைமகன்
வர்ஷாவாகச் செய்தே வராது ஒழிய
இவ்வளவிலே தலைமகள் மோஹிக்கிற படியைக் கண்ட தோழி
அவன் வரும் அளவும் இவள் சத்தையை தரிப்பிக்கைக்காக
வர்ஷா வந்தது அன்று
கறுத்தன இரண்டு ரிஷபம் அன்யோன்யம் விரோதத்தாலே
பூமியிலே இடம் போராமையாலே
ஆகாசத்திலே பிணங்குகிறது காண் -என்று
பிரபஞ்சாபலாபம் பண்ணுவாரைப் போலே -காலத்தை ஷேபிக்கிறாள் –

பிரபஞ்ச அபலாபம்  பண்ணி –
ஈஸ்வரனும்
ஜகத்தும் இல்லை என்பார்கள் -பாஹ்யர்கள்
(தர்க்கம் -சர்வ சூன்யம் -ஸப்த பந்தி வாதம்
பிரத்யக்ஷமாக காணும் பிரபஞ்சம் இல்லை என்பார்களே )

இவள் ஜகத்தும் ஈஸ்வரனும் உண்டாகைக்காக செய்கிறாள்
இப்படி கால ஷேபம் பண்ணாது ஒழியில்
நாயகி ஆற்றாளாய் முடியும்  –
இவள் இல்லையாகில் அவன் இல்லையாம் –
பின்னை விபூதியாக இல்லையாம் –

(அப்ருதக் ஸித்த விசேஷணங்கள் அன்றோ
திரு நெடும் தாண்டகத்தில் ஸேவை சாதித்து ஆழ்வார் -ஜகத் -தன்னையும் உளராக ஆக்கி
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் –
காணும் அளவும் போய் –மடலில் என்றாரே -காண்பித்து ரக்ஷித்து அருளினார் அன்றோ )

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-

பாசுரம் -7-ஞாலம் பனிப்பச் செறித்து -கால மயக்கு –

இன்னுயிர்ச் சேவல் -9-5–

பதவுரை

ஞாலம் பனிப்ப–உலகம் நடுங்கும்படி
செறித்து-தம்மில் தாம் நெருங்கி
நல் நீர் இட்டு–(தம் உடம்பின்) நீரை நன்றாக வெளிச் சிந்தி
கால் சிதைந்து–கால்களால் தரையைக் கீறிக் கொண்டு
நீலம் வல் ஏறு–கரிய வலிய எருதுகள்
பொரா நின்ற–போர் செய்யப் பெற்ற
வானம் இது–ஆகாசமாகும் இது;
திருமால்–எம்பெருமானுடைய
கோலம் சுமந்து–வடிவத்தை யுடையதாய்
பிரிந்தார் கொடுமை குழறு–பிரிந்து போன நாயகனது கொடுந்தன்மையைக் கூறுகிற
தண் பூ காலம் கொல் ஓ–குளிர்ந்த அழகிய கார் காலத்தானோ?
வினையாட்டியேன்–தீவினையுடைய நான்
காண்கின்ற–காண்கின்றவற்றை
அறியேன்–இன்னதென்று அறிகிற வில்லை.

—–

அப்பிள்ளை உரை

வர்ஷா சமயத்தில் வருகிறேன் என்று சொல்லிப் பிரிந்த தலைமகன் வராதே
அந்த கால தர்சனத்தாலே நோவு படுகிற தலைமகளை தோழியானவள்
தலைமகன் சொன்ன காலம் இது அன்று என்று மயக்குகிறாள்

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து நீல வல்லேறு பொரா நின்ற வானமிது
பூமியடைய நடுங்கும் படி செறிந்து நன்றான நீரை இட்டு -மதஜலத்தைப் பெருக்கி
கால் விழுந்த-ஆகாசத்தில் காலூன்றி பொருகின்றவாம் –
மேல் கால் என்று காற்று – –
கறுத்த நிறத்தை யுடைய வலியவான ரிஷபங்கள் பொரா நின்ற ஆகாசமானது

திருமால் கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் காலம் கொலோ வறியேன் –
மேகமானது ஸ்ரீ யபதியுடைய வடிவைத் தரித்து –
நம்மை விஸ்லேஷித்த வனுடைய கொடுமையை
அக்ஷரம் இல்லாத கொடு கொடு சப்தத்தால்
இவள் படுகிற துன்பம் ஸஹியாமல் குழறுகிறதோ
திருமால் கோலம் சுமந்தது நீல வல்லேறா
மேகமா என்று சம்சயம்
மேகம் பொழிந்த பின் வெளுத்துப் போகுமே -இவையே எப்பொழுதும் கறுத்தே இருக்குமே

வினையாட்டியேன் காண்கின்றவே
நாம் காண்கின்ற இவை
இவளை இப்படி துன்பம் படும் பாபத்தை காண
நாம் பண்ணின பாபமே ஹேதுவோ
மத் பாபம் நிமித்தம் -நானே தான் ஆயிடுக

ஸ்வபதேசம்
ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பிரிந்தால் அவர்கள் வரும் வரை தரிக்க ஒண்ணாத
ஆழ்வார் வியசனம் சொன்னவாறு
காசு பொன் மணி இழந்தவை மேலே மேலே துன்பம் வருமே
பெரு நிலம் கடந்த நல்லடிப்போது அயர்ப்பிலன் அவதாரம் -கிடைக்காமல் -தூது அஞ்சிறைய மட நாராய்
அடுத்து
அது காலாந்தரம் – வ்யூஹம் -காசு இழந்தது போல் -திருக்குறுங்குடி நம்பி -எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ
வாயும் திரை யுகளும் -பொன்னை இழந்த துக்கம் -அது அர்ச்சாவைத்தாராம்
அடுத்து –
அடியார் உடன் கூடுவது என்று கொலோ
ஆடி ஆடி –வாடும் இவ்வாண் நுதலே -மணியை இழந்த துக்கம் –
அதே போல் இங்கும் –

————–

வியாக்யானம் -ஞாலம் பனிப்பச் செறித்து-
லோகம் அடங்க இவ்வதி வ்ருஷ்டியாலே குளிர்ந்து நடுங்கும் படி பாராய் -என்று
நாயகி சொல்ல-

அங்கன் அல்ல காண்
இவை அந்யோந்யம் பிணங்குகிற படியைக் கண்டு பீதியாலே நடுங்குகிற படி காண்

செறுத்து –
அந்யோந்யம் சீற்றம் இருந்த படி

நன்னீரிட்டுக் –
நெடும் போது வர்ஷித்த படியாலே
தரையிலே அழுக்கு கழிந்து
அள்ளிப் பருகலாம் படி பெருகுகிற  நீரை கண்டு

இந்த சுத்தமான ஜல சம்ருத்திக்கு அடி என் -என்ன

விலஷணமான ருஷபங்கள் சீற்றத்தாலே எப்போதும் நீரிடுகிற படி காண் –

கால் சிதைந்து –
வர்ஷத்தின் உடைய பூர்வ அவஸ்தையிலே
கால் விழவு -என்று சொல்லும் அளவு தவிர்ந்து
(அங்கு ஓன்று இங்கு ஓன்று தூத்தல் முதலில் கால் சிதைந்து இருக்குமே )
வர்ஷத்தின் இடை மத்யமாய் ஆயிற்று –

பூர்வ அவஸ்தையில் காற்றுத் தவிர்ந்து
நிலை நின்ற வர்ஷ்மே ஆயிற்று -என்று சொல்ல

அங்கன் அல்ல காண்
கோபத்தாலே கால் சிதை கொள்ளுகிறபடி -காண்-

பிராட்டியும் ஈஸ்வரனுமான சேர்த்தியை-
மின்னும் மேகமும் – திருஷ்டாந்தமாக சொல்ல –

நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால் கோலம்
கறுத்து மிடுக்கை யுடைத்தான ரிஷபங்கள் இடைவிடாதே பொருகின்ற ஆகாசம் காண்

அன்றிக்கே
திருமால் கோலம்
மேலே மேகத்துக்கு அடைமொழியாக சொல்கிறாள்

நீல வல்லேறு பொரா நின்ற வானமிது –
இச் சொல்லால் இவற்றை சொல்லுவான் என் என்னில்
இவை விலஷண சப்தத்தாலே சொல்லக் கடவது காண் –
முடிய பொய் சொல்லும் அது அன்றிக்கே
தன்னை விச்வசிப்பைக்காக தானும் காலத்தை சம்சயிக்கிறாள்
இத்தசை வந்தால் நாயகன் வரவு சம்பவிக்கும் என்னும் அத்தாலே

திருமால்  கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு –
அவனுக்குப் போலியான வடிவோடு  கூடி நின்று
நான் வந்த போது
அவன் வந்திலன் கண்டாயே -என்று
அவனுடைய குற்றத்தை இவளுக்கு முன்னிடுகிறாள் போலே இரா நின்றது
குழறுகிறபடி  –

தண் பூம் காலம் கொலோ வறியேன் –
குளிர்ந்து அழகிதான காலமோ -அறிகிலேன்
சம்போக யோக்யமான காலம் தானோ -என்றபடி –

வினையாட்டியேன் காண்கின்றவே –
1-அவன் உகப்பாரை கை விடுமவன் அன்றே
2-இவளுக்கு ஆசை இல்லாமை அன்று
3-வர வேண்டும் தசை இல்லாமை அன்று
4-பிராப்தி இல்லாமை அன்று –
5-திருமால் -என்றதால் பிராப்தியும் சித்தம்-
காண்கின்ற என் பாபம் இத்தனை இறே
மத்பாபம் ஏவா துர் நிமித்தம்  –

(நம்பிள்ளை ஈட்டில்
ஆரண்ய காண்டம் ஸ்லோகம் -ரஷிணே தர்மம் இத்யாதி –
காப்பாற்றிக் கொள்
உன்னையே முடிக்கவா சக்கரவர்த்தி பெற்றார்
தர்ம உபதேசம் பண்ணி இளைய பெருமாள்
அதுக்கும் மேல்
சரணாகதி பண்ணி பெருமாளை ஆஸ்வசிப்பித்தார்
அதே போல் இங்கும் கால மயக்கு -நிர்ணயம் சம்சயம் இரண்டுமே இங்கும் )

ஸ்வா பதேசம் –
ஆழ்வார் உடைய விஸ்லேஷ தசையைக் கண்ட
வைஷ்ணவர்களுக்கு
பிரபஞ்ச அலாபம் பண்ணி யாகிலும்-
தரிப்பிக்க வேண்டு இருக்கிற படி –

—-

தாத் பர்யம்
இப்பாசுரத்தில் ஆழ்வார் தமக்குப் பகவத் ப்ராவண்யம் மிக்கு பகவத் அனுபவம் பிராப்தி உண்டாக –
அது பெறாமல் கலங்கி இருக்க அவரை ஆஸ்வாசப்படுத்த பாகவதர்கள் பாசுரத்தை
தோழியின் பாசுரத்தால் –
குறித்த காலத்தில் நாயகன் வாராமல் தளர்ந்த நாயகியை ஆஸ்வாசிப்படுத்திய பாசுரத்தால் அருளிச் செய்கிறார்

ஓ தோழி வர்ஷா காலத்தால் வருவதாகச் சொல்லிப் போந்தான்
மேகங்கள் சுற்றிச் சூழ்ந்து நெருங்கி குளிர வர்ஷிக்கத் தொடங்கிற்று
ஆறுகளும் குளங்களும் பெருகத் தொடங்கிற்று –
ஏக்க தசை -பர பக்தி தசை மாறி ஆர்த்தி அதிகார பூர்த்தி அடைந்த பின்பு -நாயகி சொல்ல –
தனது தசையைச் சொல்ல
இப்போதும் வரவில்லை
தோழி மாற்றக் கருதி
இது வர்ஷா காலம் அன்று
மேகமே இல்லை
‘இரண்டு எருதுகள் பூமியில் இடம் இல்லாமல் ஆகாசத்தில்
அந்யதா கரிக்கிறாள்
நம்மிடம் விஸ்வசிக்க மாட்டாள் என்று
ஸ்ரீ யபதியினுடைய வேஷம் கொண்ட மேகம் ஆகவுமாகலாம் என்கிறாள்
இது கர்ஜிப்பதை பார்த்தால்
நான் வந்த காலத்திலும் உன்னை விட்டுப்பிரிந்து நாயகன் வரவில்லை என்று
துக்கம் விசாரிக்க வந்தது போல் புலம்பு கிறது
உன்னுடைய அவஸ்தையைக் காண நேர்ந்தது நான் பண்ணிய பாபமே என்கிறாள்

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply