(தலை மகன் பாசுரம் இது
பாட்டுடைத் தலைவன்
அடியார்களும் தலைவன் -பரம நாயகனைப் பெற்று தர உபகரிக்கும் நாயக்கர் -கிளவித் தலைவன் -பாகவத உத்தமர்
உலகில் இரண்டு நாயகர்கள் இல்லை
தோழி சேர்ப்பாள்
இங்கு ஆத்ம பரமாத்மா விஷயம்
நாயகனாய் பாசுரத்தில் போல் –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்று ஓருவர்க்கு உரியேனோ என்றும் உன் அடியார்க்கு அடிமை என்றும் சொல்வதால்
இரண்டிலும் விரோதம் இல்லை
இவள் கண்ணான அம்புக்கும் புருவமான வில்லுக்கும் அகப் பட்டார் தப்ப முடியாதே
இவள் ஞானமே அம்பு
மன்மதனும் இவளையே அபாஸ்ரயமாகக் கொண்டான் -காமம் வளர்க்க
நின் கண் வேட்கை எழுவிப்பேன் -என்று அன்றோ இவர் அவதரித்தார்
திருப்புளிய மரம் அருகில் வந்தாலே தப்ப முடியாதே
செஞ்சொல் கவிகாள் உயிர் காத்து ஆட் செய்மின் போல்
அஹங்கார மமகாரங்கள் உள்ளார் அருகில் வந்தாலே அவை போகுமே
உயிரை யுடையார் நாராயணன் என்று அறிவார் இல்லையே
அத்தை உணர்த்தவே ஆழ்வார் எம்பெருமானார் அவதாரங்கள்
கிளவித் தலைமகன் பாசுரம் -இது )
காமம் சாரா வெறியதினிளமை காட்சி மகிழ தனலம் பாராட்டு -துறை –
(விருப்பப்பட்டது நடக்காத போது -பித்து பிடித்து
அவனது இனிமை இளமை போல்வன நலம் பாராட்டும் துறை )
அதாவது
சம்ஸ்லேஷ்சம் ஆகிற காமம் ஆனது
சாரா -கிட்டாமையால் உண்டான
வெறி உண்டு -பிச்சு
அதனுடைய இளமையாவது
காட்சி திருஷ்டி பந்தத்தை சொல்லுகையும்
மகிழ்தல் அநந்தரம் உண்டான ஹர்ஷ வசனமான மந்த ஸ்மிதத்தை நினைக்கையும்
நலம் பாராட்டு -சௌந்தர்யாதிகளை கொண்டாடுகை
கிளவித் துறை –
காமம் சாரா வெறி யதின் இளமை
காட்சி -இது தான் பிரதம த்ருஷ்ட்டி பந்தம் -கண்ணும் கண்ணும் கவ்விக் கொள்ளுதல்
16 வருஷம் யோக நிஷ்டையில் இருந்தாரே ஆழ்வார்
அம்பு போன்ற தெளிந்த ஞானத்தால் தர்சனம் கிட்டி
பார்க்க மாட்டாமல் வெட்க்கி கண்ணை சுருக்க
பார்ஸ்த்வத்தார் -இத்தைப் பார்த்து சொல்லும் பாசுரம் –
அநந்தரம்
மகிழ்தல்
மந்தஸ்மிதம் -இன்றும் மூலவர் இடம் சேவிக்கிறோமே
அருள் பார்வை -ஹர்ஷ வசனம்
மேல் நலம் பாராட்டுதல்
தலைமகன் தலைவியின் அழகு போல்வன சொல்லுதல் –
அஹங்கார மமகாரங்கள் உள்ளாருக்கு கூற்றம் ஆழ்வார் என்கிறார்
சாஷாத் மன்மதன் -காமக்கோல் நடத்திய கூற்றம் -பக்தியை விளைக்கவே ஆழ்வார்
மணிவல்லி யாக இருந்தாலும் அஹங்காரதிகளுக்குக் கூற்றம் போல் தானே ஆழ்வார்
உண்ணும் சோறு -6-7-இதன் விவரணம்
உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-திருத் தாயார் இவள் ஸ்வ பாவம் பேசும் பதிகம்
ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.–6-7-8-
அவன் விரும்பிய ஆழ்வார் தேக குணங்களும் ஆத்ம குணங்களும் உத்தேச்யம்
நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங் கண் இள மான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-
—————-
அவதாரிகை –
நாயகி உடைய முழு நோக்கிலே அகப்பட்ட நாயகன்
தாம் தாம் சத்தைக் கொண்டு தரித்து இருக்க வேண்டுவார்
இச் சந்நிவேசத்திலே செல்லாதே கிடிகோள்-என்கிறான் –
தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6-
பாசுரம் -6-தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் -தலைவியின் அழகை
தலைவன் வியந்து பேசுதல் –
உண்ணும் சோறு -6-7-
பதவுரை
இது–இவ்வடிவானது
தடாவிய–வளைந்த-தகுதியான
அம்பும்–பாணங்களையும்
முரிந்த–ஒடிந்த
சிலைகளும்–விற்களையும்
போக விட்டு–கொள்ளாமல் ஒழித்து
கடாயின கொண்டு–உபயோகிக்கத் தக்க அம்புகளையும் விற்களையும் ஏந்தி துவண்டு நடக்கிற
வல்லி எனும்–ஒரு பூங்கொடி போன்ற பெண் வடிவமாயிருந்தாயினும்
அசுரர் மங்க–அஸுரர்கள் அழியும்படி
கடாவிய–ஏறி நடத்தப்படுகின்ற
வேகம்–விரைவை யுடைய
பறவை–பக்ஷிராஜனாகிய வாஹனத்துக்கு
இன் பாகன்–இனிய பாகனாகிய எம்பெருமானது (ஸம்பந்தம் பெற்ற)
மதனன்–மன்மதனுடைய
செங்கோல்–ஆளுகையை
நடாவிய–நடத்துகிற
கூற்றம்–யமனாயிருக்கும்;
ஞாலத் துள்ளே–இந்நில வுலகத்திலே
கண்டீர்–(இவ்வழகிய வடிவத்தைப்) பார்த்தவர்களே!
உயிர் காமின்கள்–(உங்களது) உயிரைக் காத்துக் கொள்ளுங்கள்-
———-
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-
இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4-
பெருமாளைப் பற்றி ஆழ்வார் அங்கு
இங்கு தலைமகன் இவளைப்பற்றி
ஞாலத்தில் உண்டியே உடையே உகந்து போகும் சம்சாரிகளுக்கு கூற்றம் ஆழ்வார் கடாக்ஷம் என்றவாறு
——–—————
அப்பிள்ளை உரை
தலைமகனைக் கண்ட தலைமகள் -காட்ஷி த்ருஷ்ட்டி பந்தம்
வெட்கத்தால் அவனை நோக்காது இருக்க
போக்கி தன்னைப் பார்க்க
திண்ணிதாக நோக்க
அவனது சவுந்தர்யாதிகளில் ஈடுபட்டுப் பேசி
நம்மிடம் மயங்கினான்
என்று சொல்வதை பிறருக்குச் சொல்கிறான்
தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும்
வில்லோடு அடுத்த பிடித்த அம்பும்
வளைந்த விற்களும்
அவற்றுக்கு விஷயம் இல்லாமையால்
நாயகியின் பார்வை வாங்க ஆள் இல்லையே
தானும் ஆள் இல்லை
இட்டு வைத்து நிர்வகிக்க வேண்டும்
ப்ரத்யாஹாரம் -தன்னிடம் இழுத்து
அஷ்டாங்க யோகத்தில் ஒரு நிலை
யோகி தானே
அந்தர்முகமாக இழுத்து
இங்கு கண்ணுக்கு விஷயம் இல்லை பார்க்க வில்லை
உண்மையில் தங்க முடியாமல் பார்க்க வில்லை
மூன்றும் உண்டே
அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல் நடாவிய கூற்றம் கண்டீர்
பிரதிகூலர் மங்கும் படி யுத்தத்தில் நடத்தும் திருவடிக்கு பாகனுக்கு சேஷ பூதனான -மகன் மன்மதன் யுடைய
ஆணையை-செங்கோலை – நடத்திக் கொடுக்கும் கூற்றம் கிடிகொள்
உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே
சம்சாரத்தில் உள்ளார் உங்கள் பிராணனை நோக்கிக் கொள்ளுங்கோள் என்கிறான் தலைமகன் –
ராமனுக்கு என்னிலையைச் செப்பும் என்னையும் உளள் –
திருவடியை இங்கு சொல்லிற்று
அசுர நிரசனத்துக்கு த்வரிக்குமா போல் காமன் ஆஜ்ஜை நடத்த இவள் -வேட்கை எழுவிப்ப
மன்மதனையும்- பகவத் சம்பந்தம் இட்டே சொல்வது -இவள் இது -அல்லது அறிய மாட்டாளே
ஸ்வா பதேசம்
பகவத் விரஹத்தாலே அவசந்தனையாய் இருக்கும் ஆழ்வாரைக் கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள்
சம்சாரத்தில் அஹம் மம -நீர் நுமது என்ற இவை வேர் முதல் வாய்க்க வல்லார் –
இவருக்கு பகவத் அலாபத்தால் வந்த அவசாதம் தீரும் படி -ஆச்வாஸம் ஏற்படுத்த சொன்ன பாடல்
எம்பெருமானையும் ஸ்ரீ வைஷ்ணவர்களாக தலைமகனாகச் சொல்லலாமோ என்னில்
எம்பெருமான் பாட்டுடைத்தலைமகன் பிரதான சேஷி
இவர்கள் கிளவித் தலைமகன் த்வார சேஷிகள்
——–
வியாக்யானம்-
தடாவிய வம்பும் –
பரந்த வாயம்பும்-
காணாக் கோலாய் இருக்கை –
வில்லோடு கூட அடுத்துப் பிடித்த அம்பு-
புடை பெறுத்து இருக்கை
தடாவிய -வளைவாயாம்பு
கோடி வருகிறது மர்மத்திலே படுகை
பிடித்த பிடியிலே பயங்கரமாய் இருக்கை –
முரிந்த சிலைகளும் –
அகர்மகமாய்-
அகர்த்ருகமாய் இருக்கை –
(வளைந்த
நான் பழத்தை நறுக்கினேன்
நான் -கர்த்தா
கர்மா இல்லை-விஷயம் இல்லை
ஆளும் இல்லை வளைத்தவனும் இல்லை -தானே வளைந்த என்றபடி )
அம்பும் சிலைகளும் -என்பான் என் என்னில்
அம்பு -என்கிறது ஜாதி பன்மையாலே (பார்வை கடாக்ஷம் )
சிலைகளும் -என்கிறது இரண்டாகையாலே
அம்பும் சிலைகளும் உபமானமாக சொல்லாதே தானேயாக சொல்லுவான் என் என்னில் –
சர்வதா சாத்ருசம் உண்டாகையாலே –
போக விட்டு கடாயின கொண்டு-
(கடாயின-பயன் தரும் சாதனம் )
ஆர் எதிராக இவற்றை விடுவது என்று தன் பக்கலிலே இட்டு வைத்தது
தன்னுடைய ஸ்த்ரீத்வத்தோடே பாவம் –
போக விட்டுக் கடாயின தடாவிய அம்பையும் முதிர்ந்த சிலைகளையும்
தன் பக்கலிலே ப்ரத்யா ஹரித்து –
ஒல்கும் வல்லி ஈதேனும் –
ஒடுங்குகிற வல்லியே யாகிலும்
தனக்கு என்ன ஒரு கொள் கொம்பைப் பற்றி அல்லது நிற்க ஒண்ணாத அளவிலும்
செயல்கள் இப்படியாய் இருக்கை –
அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன் –
பிரதிபஷம் முடியும்படிக்கு ஈடான மிடுக்கை உடைய பெரிய திருவடியை நடத்துக்கிற நிர்வாஹகன் –
சர்வேஸ்வரன் காண வந்த சோழரோபாதி
எதிரிகளை முடிக்கைக்கு தானே அமையும் –
பறவையின் பாகன் -சர்வேஸ்வரத்வ ஸூசகம் –
மதன செங்கோல் நடாவிய –
இவளைப் பிராட்டியாக உடையவன்
காமனுடைய ஆஞ்ஞையை நிர்வஹிக்கிற –
கூற்றம் –
அவனைப் போலே பாணங்களாலே மோஹிக்கப் பண்ணுகை அன்றிக்கே
தானே முடிக்கை என்கிறது –
கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–
ஜீவிக்க நினைத்து இருப்பார் தம் தாமை நோக்கிக் கொள்ளுங்கோள்-
ஸ்வா பதேசம் –
சம்சாரத்திலே குடியும் தடியுமாய் இருக்க நினைத்தார்
ஆழ்வார் திருப்புளிக்கு கீழே இருக்கும் இருப்பு காணச் செல்லாதே
கொள்ளுங்கோள்-என்கிறது –
(அம்பு -கண் வில் புருவம்
அகர்கமாய் -தனக்கு விஷயம் இன்றிக்கே இருக்க
அகர்த்ருகமாய் -தன்னை வளைக்கக் கர்த்தாவும் இன்றிகே இருக்க
பெரிய திருவடி பாகன் -பக்தியை நடத்துகிற
குடி -க்ருஹம் தடி ஷேத்ரம் –போகட்டு போக விட்டு –
ஆழ்வாரை சேவிக்க சம்சாரம் அடி அறும் )
—
தாத்பர்யம்
இப் பாசுரத்தில் ஆழ்வார்
பகவத் ப்ராவண்யத்தால் -யோக நிலையில் -நேத்ரங்களை மூடிக்கொண்டு -தத் ஏக த்யான பரராய் இருக்க
அப்போது தம்மைக் கண்ட பாகவதர்கள் சொன்ன பாசுரத்தை
நாயகியின் கடாக்ஷத்தில் ஆழ்ந்த மூழ்கிய நாயகன் பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
இந்த நாயகி எப்போதும் வளைந்து இருக்கும் தனுஸூ போல் தன்னுடைய வட்டமான புருவங்களை நெரித்து
மேல் விழுந்து பாணம் போலே அதி சூஷ்மமான விசாலமான கண்களைத் திறந்து
பார்க்கத் தகுந்த விஷயம் ஒருவரும் இல்லை
அவனுக்கு ஆழ்வார் ஒருவர் கிடைத்தார் -எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணன் –
இவருக்கு 16 வருஷங்கள் கழித்து தானே மதுரகவி ஆழ்வார் கிட்டினார்
பார்வையை வெளியிடாமல் தன்னிடம் அடக்கிக் கொண்டு
கொடி போல் அதி துர்பலையாய் இருந்தாலும்
உபாயமாக அனுஷ்ட்டிக்க பலம் இல்லையே இவளுக்கு
ஆனால் கூற்றம் -தீமைகளைப் போக்க வல்லவள்
சத்ருக்களை மாளும் படி அதி வேகம் உடைய பெரிய திருவடியை வாஹனமாக யுடைய சர்வேஸ்வரனுக்கு
புத்திரனான மன்மதனுடைய ஆஜ்ஜையை
அப்ரதிஹதமாய் நடத்தக்கடவ மிருத்யுவாக எண்ணுங்கோள்
பூ லோகத்தில் நீங்கள் சில காலம் பிழைத்து
உங்கள் பிராணனை இவள் கையில் அகப்படாத படி காத்துக் கொள்ளுங்கோள்
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply