திரு விருத்தம் -இரண்டாம் பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

(உபகார கௌரவம் முதல் பாசுரம்
இது தோழி பாசுரம்
ஆனந்தமாக -தனக்கு கிடைத்த பேறு
பராங்குச நாயகி பேறு கிடைக்காமல் அழுது அலற்ற -பார்க்கும் பாக்யம்
இந்த நோய் இவளை விலகாமல் இருக்கட்டும்
வாழியரோ
உற்ற நல் நோய் அன்றோ )

(தன்னுடைய ஜீவனைத் தேடிப் போனவள் என்னுடைய ஜீவனத்தைக் கொண்டு போக வேண்டுமோ
முகம் கழற்றி வைத்து போகக் கூடாதோ
அங்கு தாய் இழந்தாள்
இங்கு தோழி பெற்றாள் -இது நீடூழி இருக்க மங்களா சாசனம் செய்கிறாள் )

——–

அவதாரிகை –
இமையோர் தலைவா -என்று அவனுடைய பரம பும்ஸ்வத்தை முதலிலே அனுசந்தித்து
அப்படி அவனைக் கிட்டப் பெறாமையாலே
ஆண் -பெண்ணாம் படி யாயிற்று –

இங்கனே செய்யக் கூடுமோ -என்னில்
பும் பாவம் மனசா –
(சாகுந்தலை திரௌபதி கண்டு பெண்கள் ஆண்கள் பாவம் இல்லையே என்பர் -அப்ராப்த விஷயத்தில்
பெருமாளைப் பார்த்து ரிஷிகள்
ஆடவர் பெண்மை அளாவும் தோளிணாய் )
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம் -என்றும் உண்டாகையாலே இதுவும் கூடும்

அங்கனம் ஆகில் கேவலம் ஸ்திரீ மாதரம் அன்றியிலே
ஒரு பிராட்டி தசையாம்படி எங்கனே என்னில்
சம்ஸ்லேஷத்தில் இனிமையும்
விஸ்லேஷத்தில் தரியாமையும்
ஸ்வத சித்தமான சம்பந்தமும் —
அனந்யார்ஹ சேஷத்வம் -உண்டாகையாலே –

(அநந்ய சரணத்வம் அநந்ய போக்யத்வம் ததேக நிர்வாஹ்யத்வம் மூன்றும் உண்டே )

அத் திரு அவனைப் பற்றும்
இத் திரு இருவரைப் பற்றும்

தோழி தசையும்
திருத் தாயார் படியும் உண்டாகிற படி எங்கனே என்னில்
கிண்ணகம் பெருகா நின்றால்-ஆறுகளும் கால்வாய்களும் குளங்களும் நிறைந்து
சமுத்ரத்திலும் குறைவற்றுப் புகுமோபாதி
விஷயம் அபரிச்சின்னம் ஆகையாலே-
(அந்த விஷயத்தில் ப்ராவண்யமும் அபரிச்சின்னம் ஆகையாலும்) இதுவும் கூடும்

இவருக்கு இங்கு உண்டான விரோதிகளையும் காட்டி
அவற்றில் உண்டான  ருசிகளையும் தவிர்த்து
தன்னுடைய நித்ய விபூதி யோகத்தையும் காட்டிக் கொடுக்க
(திரு விண்ணகர் சேர்ந்த பிரான் பெய்த காவான சம்சாரத்தில் வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
யாத்ருச்சிகாதிகளாலே விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளி )

அநந்தரம்
அங்கு உள்ளாரின் ஜ்ஞானத்தையும் –
அங்குத்தை பரிமாற்றத்தையும் –
தேச விசேஷத்தையும் கண்டு
அவ்விடத்தை பிராபித்து அல்லது நிற்க மாட்டாத த்வரையும் பிறந்தது –

(பொய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கம் அழுக்கு
உடம்பு இவற்றுக்கு பிரதிசம்பந்திகள் உண்டே
தேக விசேஷம் -அரும்பதம்
அழுக்கு உடம்புக்கு பிரதிசம்பந்தி ஏற்கும்
தேக விசேஷம் உடையவர் வர்த்திக்கிற தேச விசேஷம் என்றும் கொள்ளலாம் )

ஆகில் –
இவர் அபேஷிதம் செய்து கொடாது ஒழிவான் என் என்னில்

சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராக்கி
நம்மை அல்லாது அறியாத படியும் பண்ணி
அலாப தசையில் கூப்பிடும்படி பண்ணி
இவருக்கு ஸ்வரூபமான அடிமையையும் வாசிகமாக கொள்ளா நின்றோம் ஆகில்
அவ்வருகில் பிராப்தியும் செய்வோம் நாம் ஆன பின்பு
செய்து கொடுக்கிறோம் என்று ஆறி இருந்தான் –

இவருக்கு கீழ்ச் செய்தது ஜ்ஞான லாபம் ஆகையாலே
அநந்தரம்
பிராப்தி பண்ணித் தர வேண்டும் என்று த்வரிக்கிறார்

ஈஸ்வரனுக்கு இங்கனே இருப்பதொரு புடை உண்டு
பிரஜைகள் பசித்திருக்க விருந்தினரைப் பேணுமா போலே
அசாதாராண பரிகரத்துக்கு தாழ்த்தும்
அல்லாதார் கார்யம் தலைக் கட்டும் -எங்கனே என்னில்

கைகேயி கார்யம் தலைக் கட்டின அநந்தரம் ஸ்ரீ பரத ஆழ்வான் கார்யம் செய்கையாலும்
மகா ராஜர் கார்யம் செய்து பின்னை பிராட்டி கார்யம் செய்கையாலும் –
இவர்களுக்கு முற்பட செய்கிறது என் என்னில்
கார்யத்து அளவே இறே அவர்களுக்கு உள்ளது
அசாதாராணருக்கு அபேஷிதம்  செய்தானோ என்னில்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு முடியைத் தவிர்த்து கொடுக்கையாலே இவர்கள் அபேஷிதமும் செய்யும் –
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நித்ய கைங்கர்யமும் அருளினானே –

நாயகியும் தோழியுமாக உத்தியான வனத்திலே பூ கொய்ய என்று புறப்பட்டு
ஒரு வ்யாஜ்யத்தாலே நாயகனும் அங்கே வரவும்
ஒரு வ்யாஜ்யத்தாலே பிரிய
தைவ யோகத்தாலே கூடி கூடின வழியே பிரியவும்
பிரிவு தானும் கலவியில் ஒரு வகையோ -என்று இருந்தாள் –

(திருவிண்ணகர் சேர்ந்த பிரான் பெய்த -கா -சம்சார தோட்டம்
சம்சாரத்தில் அவனும் ஜீவாத்மாவும்
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன்
இன்புறும் இவ்விளையாட்டு உடையான்
ஆத்மா -பராங்குச நாயகி –
இவர்களை சேர்த்து வைப்பது ஆச்சார்யர் ஆழ்வாருக்கு அவனே -என்றபடி
கர்மம் வியாஜ்யம் யாதானும் பற்றி நீங்கும் விரதம் -பிரிந்து –
பூர்வ ஸூஹ்ருதம் -யாதிருச்சிகம் -சேர்ந்து -மீண்டும் பிரிந்து
ஸம்ஸார ஸ்வ பாவம் சேர்ந்தே இருக்க விடாதே
கர்மம் -கிருபை -சம்சார ஸ்வ பாவம் -மாறி மாறி வருமே )

பிரிவின் மெய்ப்பாட்டாலே புளகித காத்ரையாய்க் கொண்டு
நோவு படுகிற படியைக் கண்டு
இவளுக்கு சம்ஸ்லேஷம் வ்ருத்தமாக கழிந்தது என்று அறிந்து
இனி நாம் உடன்பட்டு இவள் சத்தையை உண்டாக்கிக் கொள்வோம் என்று

இது ஓர் வடிவு இருந்த படி என்
இவ் விருப்பு நித்யமாக வேணும் –
என்று மங்களா சாசனம் பண்ணுகிறாள்  –

(உடன் பாடு துறை அகத்துறையில் உண்டே)

(ஆஹ்லாத -இந்த நிலை காணவே கண்கள் பெற்ற பிரயோஜனம்

தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-வாழியரோ
அன்பையே மாலையே ஸமர்ப்பிக்கிறாள் -ப்ரேமமே மாலை
பா மாலையையே பூ மாலையாக -சூட்டினாள்

கோவை வாயாள் -4-3-இதன் விவரணம்

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-

பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-)

————————-

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர்  முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-

பாசுரம் -2- செழு நீர்த் தடத்துக் கயல் -தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் –

கோவை வாயாள் -4-3-

பதவுரை

முழு நீர் முகில் வண்ணன் கண்ணன்–நிறைந்த நீரை யுடைய காளமேகம் போன்ற நிறத்தை
யுடைவனான பவ்யனான எம்பெருமானுடைய
மூதுவர் ஆம் விண் நாட்டவர் தொழுநீர் இணை அடிக்கே–(யாவர்க்கும் முற்பட்டவரான
பரம பதத்து நித்ய ஸூரிகள் வணங்குந் தன்மையை யுடைய திருவடியிணைகளில்
அன்பு சூட்டிய–தனது அன்பைச் செலுத்தின
சூழ் குழற்கு–அடர்ந்த கூந்தலை யுடைய பெண்மகளுக்கு.
அன்பாகிய மாலையை சூட்டிக் கொடுத்த இவள்
செழுநீர் தடத்து–மிக்க நீரையுடைய ஒரு தடாகத்தில்
கயல்–கயல் மீன்
மிளிர்ந்தால் ஒப்ப–பிறழ்ந்தாற் போல
சே அரி கண்–சிவந்த ரேகைளை யுடைய கண்கள்
அழுநீர் துளும்ப–(நாயகனுடைய பிரிவை ஆற்றாமையால்) புலம்பின நீர் ததும்ப
அலமருகின்றன–தடுமாறுகின்றன;
வாழி–இந்த அன்பு நிலை என்றைக்கும் நிலைத்து நிற்கவேறும், (அரோ அசை.)

வியாக்யானம் –
செழு  நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப -சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ –
(உவமை அணி -அலங்கார சாஸ்திரம் இதில் )
ஸூத்த ஜலமாய் இருக்கிற தடாகத்திலே-
ஒரு கயல் இடம் வலம் கொண்டால் போலே இருக்கை –
உபமானமே பிடித்து திருத்திக் கொண்டு சொல்ல வேண்டி இருக்கிறது –
உபமேயத்தின் உடைய வைலஷண்யம்

(சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனிக்கு ஒவ்வா
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் போல்
உபமானத்துக்கு விசேஷங்கள் சொல்ல வேண்டுமே )

ஒப்ப -என்றது
சர்வதா சாம்யம் அன்று –
ஒருவகைக்கு ஒப்பாம் இத்தனை

சேயரிக் கண் அழுநீர் துளும்ப
அஸி தேஷணை-கண் கிடீர்
சேய் -அழகாய் -அரி -வண்டாய்
அன்றிக்கே
ஹரிக்கிற மநோ ஹாரி என்றுமாம்
அன்றிக்கே
சிவந்த அரியை உடைத்தான
அன்றிக்கே
சிவந்து மநோ ஹரிக்கும் கண்கள்-ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமி நிர்வாகம் –
கறும் கண்ணி தவிர்ந்து விஸ்லேஷத்தால் கரும் கண்ணி மாறி சிவந்து இருக்கை
அஸ்ரு பிரவஹிக்கிறது

என் கார்யம் தலைக் கட்டிற்று
இவள் கார்யம் தலைக் கட்டும் அத்தனை
பகவத் வ்யதிரேகத்தில் கண்ணும் கண்ணீருமாய் இருக்கும் இது இறே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்
(ஆஹ்லாத ஸர்வதேஹிபி; புலகீக்ருத காத்ரவாந், ஸதா பரகுணவிஷ்ட; பண்ணின கிருஷி பலித்ததே )
இத்தைக் காணும் அது இறே இவர்களுக்கு உத்தேச்யம்
இவ்விருப்பை இவனும் காணப் பெற்றதில்லை –
அசலிட்டுக் கேட்கும்-தோழி சொல்ல – இத்தனை இறே  –
(அவனால் நேராகக் காண முடியாதே
மதுரா மதுரா லாப கிமாஹ பெருமாள் திருவடி மூலம் கேட்டு அருளினார் )

கிமர்த்தம் -இத்யாதி
ஆர் குடி வேர் பறிய இக்கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறது
ஆரைச் சேதனராகக் கொண்டு -என்றுமாம் –
அவன் கண்டு உகக்கும் –
அலமருகின்றன -தடுமாறா நின்றன

வாழியரோ –
இவ் வவசதாம் நீண்டு ஜீவித்திடுக

(துன்பத்துக்கு நடுவில் வாழியரோ
ஜடாயு மஹாராஜர் -ஆயுஷ்மான் – பிரிந்த சீதையைப் பார்த்தேன் –
தானும் குற்று உயிராக இருக்கும் பொழுதும் )

முழுநீர்   முகில் வண்ணன் கண்ணன்-
இக் கடலைத் தரையாக பருகின மேகம் இருந்தபடி-( கீழே தடாகம் இங்கு கடல் )
(கடல் நீர் மேலோட்டமாக அர்த்தம் இங்கு -பராங்குச நாயகி -மணிமாமை குறைவிலமே -)
தூமஜ்யோதீஷ் சலில மாருதாம் சந்நிபாத   -என்று
அன்னலும் துன்னலுமாய் -கண்டதும் கடியதும்-ஆன தூமாதிகள்  போலே -இருக்கை அன்றிக்கே
ஆதார ஆதேயம் இரண்டும் தானேயாய் இருக்கை
(மேகம் நீர் -தண்ணீரால் ஆன தண்ணீர் )

கடலைப் பருகிற்று என்றால்
புஷ்கலா வர்த்தகம் (மேகக்கட்டம் )என்று இருக்க வேண்டாவோ
கடலைக் கலக்கிற்று என்றால் மந்தரம் என்று அறியுமா போலே
இந்நிறத்தை இங்கனே ஆக்கியவன்
(கறும் கண்ணியை -இழந்து சேயரிக் கண் ஆக்கினான் )
இந்நிறம் உடையவன் இறே

இவ் வடிவு அழகைக் கொண்டு சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் வர இருக்குமா போலே
எல்லாரும் வர இருக்கும் இத்தனையோ என்னில்
இவ்வடிவு உடையானும் தானேயாய்
வருவானும் தானேயாய் இருக்கிறபடி –
மேகம் ஜலம் இரண்டாய்  இன்றிக்கே ஜலமாகவே இருக்கை –

விண்ணாட்டவர் மூதுவராம்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா -என்றும்
யத்ர ருஷய பிரதம ஜாயே புராணா -என்றும்
பழையராய் இருக்கிறவர்கள்(நித்யர்களை சொன்னபடி )
இவர்கள் சத்தாகாரமாக  தொழா நின்றார்கள்

தொழுநீர் –
நம இத்யேவ வாதின -என்கிறபடியே
தொழுகையே ஸ்வ பாவமாக இருக்கும் –
தொழுவித்துக் கொள்வதே அவனுக்கு ஸ்வ பாவகமாக இருக்கும்

இணையடிக்கே –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான அடிகள்
ஓர் அவயவம் நன்றாய் இருக்குமவன்  நமக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கும்
ஒருவனுக்கு பவ்யமாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு நீர்மை உடையார் இல்லை என்று இருக்கும்
ஒருவனுக்கு நிர்வாஹகனாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு நிர்வாஹகர் இல்லை என்று இருக்கும்
இம் மூன்றும் கண் அழிவு அற உண்டான பசும் கூட்டு இறே பரதத்வம் ஆகிறது-
சந்தன கற்பூர குங்கும கூட்டு போலே-இதுக்கு இறே இவள் ஈடுபட்டது
நீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவாரம் தொழும் -பத த்ரயத்துக்கும் வியாக்யானம் –
(சவுந்தர்யம் ஸுலப்யம் பரத்வம் மூன்றும் சேர்ந்த பசும் கூட்டம் )

அடிக்கே அன்பு சூட்டிய-
குண ஜிதரால் விழுவது காலில் இறே

சூட்டிய -என்பான் என் என்னில்
வாசகம் செய் மாலையே – என்னுமா போலே
(சாத்தின- பாடிய- போல் இல்லாமல் சூட்டிய என்பதால்
பா மாலை -அன்பு மாலை )

சூழ் குழற்கே –
1-சூழ்ச்சியை உடைய குழல்
2-கண்டாரைச் சூழ்த்துக் கொள்ளும் குழல்
3-சுருண்ட குழல் -என்றுமாம்

சூழ் குழற்கு வாழியரோ -என்று  அந்வயம்

——

தாத்பர்யம்

சர்வேஸ்வரனுடைய நித்ய விபூதி ஐஸ்வர்யத்தை அனுபவித்து
ஆழ்வார்
அப்போதே அங்கு அடைந்து அனுபவிக்க
கிட்டாமையாலே
அத்யந்தம் ஆர்த்தராய்

தனது ஸ்வ பாவம் மறந்து
தன்னைப் பிராட்டியாகப் பாவித்துக் கொண்டு இருக்க
அங்குள்ள பாகவதர்கள் -இவரை சில பாசுரங்களாலே ஆஸ்வசிப்பிக்க
அப்படி வந்தவர்களே தோழிகள்
அவர்கள் சொல்லும் பாசுரம் -நாயகன் உடன் ஸம்ஸ்லேஷித்து பிரிந்து விரஹ வேதனையில் இருக்கும் தம்மை ஆஸ்வசிப்பிக்க
ஆர்த்தி உடன் தவிக்க -ஆச்சார்யர் நம்மை -சேர்ப்பிப்பார்களே
சீதாப் பிராட்டி திருவடி ஸ்ரீ ராமாயணம் சொல்ல சுற்றி சுற்றிப் பார்த்தால் போல் இவள் கண்கள்

நீர் கொண்ட மேகம் போல் அதி ஸூந்தரமான சர்வேஸ்வரனுடைய வடிவு அழகை ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய ஸூரிகள்
எல்லாரும் ஆஸ்ரயித்து அனுபவிக்கிறாப் போலே
இவள் தானும் அனுபவிக்க ஆசைப்பட்டு அது கிடைக்கப் பெறாமல் வியசனமுற்று
தன்னுடைய மத்ஸ்யம் போன்ற கண்களில் நின்றும்
கண்ணீரை தாரை தாரையாகப் பெருகிக் கொண்டு
தன்னுடைய நாயகன் எந்தத் திக்கில் நின்றும் வருவானோ என்று நாலு பக்கங்களிலும் கண்களைச் சுழற்றி
விழித்துப் பார்த்துக் கொண்டு இருக்க
பூர்ண தடாகத்தில் துள்ளுகிற இரண்டு மத்ஸ்யம் போன்ற இவளது கண்கள் அழகை அனுபவிக்க இப்பொழுது
இவளது கணவனுக்கு பிராப்தி இல்லையே
இனி சீக்கிரத்தில் இவள் நாயகனுடன் சேர்ந்து இவ் வவஸ்த்தையைத் தவிர்ந்து ஸூகிக்கக் கடவள்

——–

இப் பாட்டுக்கு ஸ்வாபதேசம் –

பிரதம தர்சனத்திலே
பிரகிருதி பிராக்ருதங்களிலே உபேஷை பிறக்கும்படி தமக்கு
பகவத் விஷயத்தில் பிறந்த ப்ராவண்யத்தைக்-கண்டார்
உகந்து பேசும் படியை
தாம் அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

(மங்கையர் தோள் கை விடமால் இருக்க பால் மனம் சுழிக்க வேண்டுமே
இப் பாசுரம் முதல் பாசுரத்துக்கு அடி என்றவாறு )

———

ஸ்ரீ அப்பிள்ளை உரை

முழுநீர்   முகில் வண்ணன் -பரி பூர்ணமான ஜலத்தைப் பானம் செய்த நீல மேக ஸ்யாமளன்
ஆதார ஆதேயம் இரண்டுமே நீரேயான மேகம் போல்
கண்ணன் -பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணன் உடைய
விண்ணாட்டவர் மூதுவராம்-பரமபத வாசிகளான நித்ய ஸூரிகள்
தொழுநீர் இணையடிக்கே -தொழும் நீர்–ஆஸ்ரயிக்கத் தக்க ஸ்வ பாவம் உடைய சேர்ந்து இருக்கும் திருவடிகளுக்கே
அன்பு சூட்டிய சூழ் குழற்கே -ப்ரேமம் ஆகிய மாலையை சமர்ப்பித்த சுருண்ட மயிர் முடியை உடையவளான இவளுக்கு
செழு நீர்த் தடத்துக் -அழகிய ஜலத்தை யுடைய தடாகத்தில் -பெரிய நீர் என்றுமாம் –
கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்-மத்ஸ்யம் புரண்டது உடன் சமானமாய் இருக்கிற
சிவந்த ரேகைகளை யுடைய நேத்ரங்களானவை
அழுநீர் துளும்ப அலமருகின்றன -அழுகிற அஸ்ரு ஜலம் அலையும் படி சுழலம் இடுகின்றன
வாழியரோ-இவ் வவஸ்தை நித்யமாகச் செல்ல வேணும்

தலைமகனோடே இயற்கையிலே புணர்ந்து பிரிந்து மிகவும் அவசந்தனையான தலைமகள்
லஜ்ஜையால் சொல்லாமல் ஒழிய
வடிவில் வேறுபாட்டால் தோழியானவள் விருத்தமான சம்ஸ்லேஷம் சொல்லி ஆஸ்வசிப்பிக்கிறாள்

(இவர் நேர் பட்டதே திருத்துழாய் கமழும்
மடமானை அவன் செய்ததை கட்டுவிச்சியும் சொல்வாளே)

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப
அழகிய நீரை உள்ள தடாகத்திலே
இரண்டு கண்கள் மீன்கள் விம்ம

சேயரிக் கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன
கறுப்பும் சிவந்தும் இருக்க
செவ்வரி யுடைய நீண்ட அப் பெரிய வாயா கண்கள் போல்

செழு நீர்
பெரிய நீர் என்றுமாம்

வாழியரோ
இந்த ஐஸ்வர்யம் நித்தியமாக வேண்டும்

முழுநீர்  முகில் வண்ணன்
அவனை விஸ்லேஷித்த இவள் வடிவைக் கண்டால்
ஆதார ஆதேய இரண்டுமே நீராயாயேயான மேகம் போலே இருக்கும்
இவளைப் பிரிந்த அவன் வடிவு என்று நிச்சயிக்கிறாள்
இவளைக் கண்டு அனுமானிக்கிறாள்

இது தான் முழு நீர் மேகம்
மேகத்தில் உள்ள நீர் மேகமே நீர்
அவன் இடத்தில் கறுமை -கறுமையே அவன்
கண்ணன் என்னும் கறும் தெய்வம்

கண்ணன்
பவ்யதா உச்யதே
எடுக்கவும் கட்டவும் அடிக்கவும் ஆஸ்ரித பரதந்த்ரனானவன்

விண்ணாட்டவர் மூதுவராம்
யஸ்ய பூர்வே ஸாத்யா சந்தி தேவா பழையவர்
தொழுகையே ஸ்வ பாவம் இவர்களுக்கு

தொழுநீர் இணையடிக்கே
நீர்மை உடைய திருவடிகளிலே -தொழுகை ஏற்றுக் கொள்ள இவற்றுக்கு ஸ்வ பாவம்

அன்பு சூட்டிய சூழ் குழற்கே
ஸ்நேஹம் அவன் தானே ஆதரவு
வாசகம் செய் மாலை
ப்ரேமம் மாலை
அவனை சூழ வற்ற மயிர் முடியை யுடைய இவளுக்கு
பலாத்க்ருத்ய ஆண்டாள் மாலையால் காட்டியது போல்
சூழ்ந்து இருந்த குழல் என்றுமாம்

ஸ்வா பதேசம்

(இனி யாம் உறாமை என்று )தாம் அபேக்ஷித்த போது
அபேக்ஷித்தம் செய்யாமையாலே – உடனே செய்யாமல்
பெண் நிலை எய்து தனது
அவசாதம் அருளிச் செய்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply