ஸ்ரீ திரு விருத்தம் -தனியன்/பிரவேசம் -முதல் பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ நம்பெருமாளால் அபிமானம் -பெற்று பெற்ற திருநாமம்
வைகாசி விசாகம்
நான்கு வேத சமம் -வேதம் தமிழ் செய்த மாறன்

பெரும் கேழலார் -புண்டரீகம் நம் மேல் -ஓருங்கே பிறழ வைத்து – கடாக்ஷத்து -அருளி –
எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணன் –
பக்தி ப்ரபாவ –பராங்குச பயோதி -பக்திக் கடல்
க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
வகுளா பராணம் வந்தே ஜெகதாபரணம் முனி -ஸ்ருதி உத்தர பாகம் திராவிட –
ருக்வேத சமம் திரு விருத்தம் -முதலில் அருளிச் செய்தது –
இனி இனி மூன்று முறை இதில்
மேல் திருவாய் மொழியில் 17 தடவை இனி இனி கதறி –

வேத வேதாந்த தாத்பர்யம் -ரஹஸ்ய த்ரயம் -நான்கு பிரபந்தங்கள்
திரு மந்த்ரம் -ஓம் நம விவரணம் -திரு விருத்தம்
திரு மந்த்ரம் -நாராயணாய விவரணம் -திருவாசிரியம்
சரம ஸ்லோகம் விவரணம் -பெரிய திருவந்தாதி
த்வயம் விவரணம் திருவாய் மொழி

(இயற்பா மூன்றும் வேத த்ரயம் போலே பண்ணார் பாடல் பண்புரை இசை கொள்
வேதம் போலே-ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -50-

புண்புரை வேதம் போலே என்றும்
இசை கொள் வேதம் போலே என்றும்
தனித்தனியே ஆக்கவுமாம் -ஒரே வாக்யமாகக் கோடலுமாம்
பண் இராகம் -ஸ்வரங்கள் அமைப்பு -இசை அதன் சுவை கான ஆனந்தம்

அதாவது
இயற்பாவான திரு விருத்தம் திருவாசிரியம் , பெரிய ,திரு அந்தாதி
என்கிற பிரபந்தங்கள் மூன்றும் -அடைவே ருக், யஜுர், அதர்வணங்கள்
ஆகிற மூன்று வேதத்தின் உடையவும் ஸ்தானத்திலே ..
பண்ணார் பாடல்-திருவாய்-10-7-5–என்று -பண்ணோடு சேர்ந்து இருந்துள்ள இசையை உடைய திருவாய்மொழி –
பண்புரை வேதம்—திருவாய்-6-6-5-என்றும் -இசை கொள் வேதம்–பெரிய திருமொழி-5-3-2–என்றும்
பண்ணையும் இசையும் உடைத்தான சாம வேதம் போலே என்கை ..

———-

குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே -மதுரகவி ஆழ்வார்

இது கொண்டு ஸூத்ரங்களை ஒருங்க விடுவார்
ஞான தீபம் -உபய வேதாங்தங்களையும் கொண்டே அருளிச் செய்தார்

உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூ மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமானுசன் எனக்கு ஆரமுதே – – 19-

————-

வேத சதுஷ்ட (த்தயத்துக்கு-இங்கும் லுப்தம் )அங்க உபாங்கங்கள் போலே இந் நாலுக்கும்
இரும் தமிழ் நூல் புலவர் பனுவல் ஆறும்
மற்றை எண்மர் நன் மாலைகளும்-(இருமை -பெருமை -)ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -43-

ருக்கு சாமத்தாலே சரசமமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே
சொல்லார் தொடையல் இசை கூட்ட அமர் சுவை ஆயிரம் ஆயிற்று–ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -51-

அதே போல் திரு விருத்தம்-சொல்லார் தொடையல்- விரிவாக
அமர் சுவை ஆயிரம்-திருவாய் மொழி ஆனதே –

இவற்றுக்கு (நான்கு பிரபந்தகளுக்கு )
மந்த்ர
விதி
அநுசந்தான
ரஹஸ்யங்களோடே
சேர்த்தி ..ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -208-

(மந்த்ர ரஹஸ்யம் -திருமந்திரம் /விதி ரஹஸ்யம் -சரம ஸ்லோகம் /அனுசந்தான ரஹஸ்யம் -த்வயம் )

அளிப்பான் அடியேன் அடைக்கலம் சூடிய பொய் யாதானும் அழுந்தார் என்று
ஸ்வரூப விரோதி நிவ்ருத்திகளையும் –
தாமரை உந்திப் பெரு மா மாயன் ஆளாகவே வாழிய என்று -பிராப்ய பலங்களையும் –
நெறி காட்டி மனத்துக் கொண்டு கண்ணனால் அடித்துக்
கண்டிலமால் யாதாகில் என்று உபாயத்தையும் சொன்னவை
மந்த்ர ஸ்லோஹங்களோடே சேரும் ..ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -209-

(மந்த்ர ஸ்லோகங்கள் என்றது திருமந்த்ரத்தையும் சரம ஸ்லோகத்தையும்
திரு விருத்தம் -பிரணவம் நமஸ் விவரணம்
நாராயணாயா விவரணம் திருவாசிரியம்
சரம ஸ்லோகம் விவரணம் பெரிய திருவந்தாதி )

த்வயார்தம் தீர்க்க சரணாகதி என்றது சார சங்கரஹத்திலே-ஆச்சார்ய ஹிருதயம்–சூரணை -209-

———-

அவஜாநந்தி மாம் மூடா -மானுஷீம் தனும் -அவமதிக்கிறார்கள் –வாஸூ தேவம் சர்வம் துர்லபம் -என்று நொந்து போக

பூழியர் கோன் தென்னாடு முத்துடைத்து -பாண்டிய நாட்டின் ஒரு பகுதி -வழுதி நாடு -தலைநகர் -திருக்குருகூர்
கோவிந்தன் தனக்கே குடி அடியாரான வேளாள குல மன்னர் -திருவழுதி வள நாடர்(கௌரவர்)
இவர் திருக்குமாரர் -அறம் தாங்கியார் -செந்நெறிச் செல்வர்
இவர் திருக்குமாரர் சக்ரபாணியார்
இவர் திருக்குமாரர் -அச்சுதர்
இவருக்கு செந்தாமரைக் கண்ணர் என்றும் பொற் காரியர்
இருவரும் திருக்குமாரர்கள்
பொற் காரியாரது திருக்குமாரர் காரியார்
இவரே நம்மாழ்வாரைத் தோற்றுவித்து உலகை உய்வித்த புண்ணிய புருஷர் –

திரு வண் பரிசாரம் திருப்பதியில் -திருவாழ்மார்பருடைய செல்வப் புதல்வியார் -உடைய நங்கையார் -ஆழ்வாரது திருத்தாயார்

திருக்குறுங்குடி நம்பி நாமே உங்களுக்கு புதல்வராவோம் என்று அருளிச் செய்து ஆழ்வார் திரு அவதாரம்

ஆதி சேஷன் முன்னமே -திருப்புளிய -உறங்கா புளி -மரமாக திரு அவதரித்தார்
திந்த்ரிணி மூலம் -சேஷ பீடம் நம் பெருமாளுக்கு முன்பே வந்தது போல் –
உலகு இயல்புக்கு மாறாக இருக்க மாறன் என்று திரு நாமம் சாத்தினார்கள்
கலி யுகம் 42 நாள் வைகாசி விசாகம் வெள்ளிக்கிழமை பிரமாதி வருஷம் சுக்ல பக்ஷம் சதுர்த்தசி ஆழ்வார் திரு அவதாரம் -சேனை முதலியார் அம்சம் –

16 வருஷம் யோக நிலை –பூர்ண சந்திரன் போல் ஞானம் பக்தி வளர்ந்து வைராக்யம் மிக்கு அதிகாரம் பூர்த்தியாகி இருக்க
திருக்கோளூரில் அவதரித்த மதுரகவி ஆழ்வார்
பத்ரிகாஸ்ரமம் சேவித்து அயோத்யா ராமருக்கு கைங்கர்யம் செய்து இருந்தவருக்கு
ராமரே ஆழ்வாரைக் காட்டிக்கொடுக்க திரு உள்ளம் பற்றி
தேஜஸ்ஸைக் காட்டி அருளினார்
அயோத்யா திவ்ய தேசத்தில் இருந்து ஒளி தேஜஸ் ஈர்க்க இங்கே வந்து –

ஆழ்வாருடைய திருக்கண் கடாக்ஷம் பெற்றார்
அவனது 1000 கண்கள் நான்முகன் 8 கண்கள் சிவன் 3 கண்கள்
இதுவரை கவி-இனி மதுர கவி -தேவு மாற்று அறியேன்

செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடைக்கும் -கேள்வி
அத்தைத் தின்று அங்கே கிடைக்கும் -பதில்

அசேதனத்தில் ஆத்மா புகுந்து மாறி மாறி பிறவி சூழலில் உழன்று இருக்கும் என்றும்
அஞ்ஞானத்தில் உழன்று தேகம் போன்ற ஆத்மாவுக்கு கொஞ்சம் ஞானம் ஆச்சார்யர் மூலம் பெற
இதுக்கும் -அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்

திவ்ய தேச எம்பெருமான்கள் தங்கள் பரிவாரங்களுடன் திருப்புளிய மரத்தில் காட்சி கொடுத்து பாடல்கள் பெற்று மகிழ்ந்தனர் –

———-

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே
சங்கப் பலகை -மற்றவற்றைத் தள்ளி –

சேமம் குருகையோ செய்ய திருப்பாற் கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ தாமம் துளவோ வகுளமோ
தோள் இரண்டோ நான்கும் உளவோ பெருமான் உனக்கு

ஈ ஆடுவதோ கருதற்கு எதிரே
இரவிக்கு எதிர் மின்மினி ஆடுவதோ
நாய் ஆடுவதோ உறுமிப் புலி முன்
நரி கேசரி முன் நடை ஆடுவதோ
பேய் ஆடுவதோ அழகு ஊர்வசி முன்
பெருமாள் வகுளா பரணன் அருள் கூர்ந்து ஓவாதுரை
ஆயிரம் மா மறையின் ஒரு சொல் பொறுமோ உலகில் கவியே –

பின்னர் நாதமுனிகளுக்கு ஆனி அனுஷம் -காட்டு மன்னார் கோயிலில் திரு அவதாரம் –
அருளி இசை கூட்டி -வேதம் போலே ஓத வைத்து ஸாஸ்வதமாக -நாம் பெறப் பெற்றோம் –

————-

மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல
ச ஏவ வாஸூ தேவ சாஷாத் புருஷ உச்யதே ஸ்த்ரீ பிராயம் இதர சர்வம்
ஸ்வாமித்வ ஆத்மத்வ சேஷித்வ பும்ஸத்வாதி குணங்கள் அவனுக்கு
தாசஸ்த்வ சேஷ பூதர் சரீரம் ஸ்த்ரீ பிராயம் நாம்
பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மா மகள் கொல் –மூவரில் சிறந்து பிறந்திட்டாள்

சம்பந்த உபாய பலங்களில்–உணர்த்தி துணிவு பதற்றம் ஆகிற
ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்கு–தோழி தாயார் மகள் என்று பேர் —ஆச்சார்ய ஹிருதயம்-133–

(தோழி -கடகர் ஸமாஸ்ரயணம் -பிரணவார்த்தம் -ஆதாரம் –
அதுக்குத் தக்க உபாய அத்யாவசியம் -நமஸ் சப்தார்த்தம் -தாய் பாசுரம் –
ப்ராப்ய த்வரை தலைமகள் பாசுரம் -நாராயணாயா சப்தார்த்தம் )

அவஸ்தா பேதங்கள் பலவும் உண்டே இதில்
ஞானங்களில் பல பரிமாணங்கள் உண்டே
அத்யவசாயம் -அநந்யார்ஹத்வம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம் -ததேக நிர்வாஹத்வம்
ஸம்ஸ்லேஷத்தில் தரிக்கை -விஸ்லேஷத்தில் தரியாமை -போல்வன உண்டே

திடமான அத்யவசாய ஞானம் -தாய் -நாகணை மிசை எம்பிரான் சரணே சரண்
ப்ரேம தசை -ப்ராப்ய த்வரை-தலைமகள் என்றும்
கிளவித் தலைமகன் -அபிமத பாகவதர்களை ஸஹி என்றும் -உணர்த்தி -காதலை வளர்த்து –
ஆச்சார்யரைப் பற்ற வைத்து -பிரிவாற்றாமை தவிர்த்து
கடகரான ஆச்சார்யரை தூதுவர் -சேர்ப்பாரை பக்ஷிகள் -ஞான கர்மாக்கள் -இறக்கைகள்
அவ்வானவருக்கு மவ்வானவர் அடிமை என்று உவ்வானவர் உரைப்பாரே
ஸ்வ ஸ்வாதந்தர்யத்தால் ஈஸ்வர அபிமானத்தை தொலைத்த இவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்

ஞானம் வை லக்ஷண்யம் -கண் -சிறப்பு
இடை சிறுத்து வைராக்ய சிறப்பு -லோக யாத்திரை இந்திரியங்கள் ஆத்மாத்மீயங்கள்
ஐஸ்வர்ய கைவல்யங்களில் இவற்றில் வைராக்யம்
அநந்யார்ஹ போக்யத்வம் போக உபகரணம் முலை ‘
அனுஷ்டானம் நடை என்றும் -நடத்தை -பரம ஐ காந்த்யம் –
திண்ணம் என் இளமான் நடந்தாள் திருக்கோளூருக்கே
ஊரும் நாடும் உலகும் தன்னைப் போல் திருத்தி -இவை எல்லாம் நடைகள்

அநந்யார்ஹதா சிஹ்னங்கள் வளை என்றும்
அஞ்ஞானம் இருள் என்றும்
பாதக பதார்த்தங்கள் அன்றில் வாடை தென்றல் என்றும்
ஆலஸ்ய அசஹத்வம் இரவு நீண்டு போக்குவது என்றும்
ஊரெல்லாம் துஞ்சி -நள் இரவாய் நீள் இடவாய் நீண்ட –5-4—சோம்பலுக்கு
உபாய பாவத்தில் சோம்பல் மார்பிலே கை வைத்து உறங்கலாம்
ப்ராப்யம் -கைங்கர்யத்துக்கு கூடாதே

போக யோக்யதை -காலம் இருக்க -அவன் இல்லாமல் -பொழுது உடன் புலம்புவது என்றும்
விஸ்லேஷத்தில்-அலாப தசையில் விவேகம் – சந்த்ர உதயம்-சுடுமே -தலைமகன் இல்லாத பொழுது –
விவேக ஞானம் வந்த பின்பு அனுபவிக்க அவன் இல்லாத பொழுது வீண்
பாதகமான விவேகம் சந்த்ர உதயம்

இதில் நடந்த கார்யங்களைக் கூறுவதால் -விருத்த கீர்த்தனம் -நடந்தவற்றை அருளிச் செய்வதால் –
அடியேன் செய்யும் விண்ணப்பம் போல்வன உண்டே –
கலித்துறையில் விருத்தப்பா -தமிழில் பா இனம்
திரு -ஸ்ரேஷ்டம் -என்பதால் அடை மொழி

———

ஓராண் வழியாக வந்த அர்த்த விசேஷங்களை அபிமான புத்ரரான பிள்ளான் –
ராமானுஜர் ஏவ ஆறாயிரப்படி முதலில் உதித்த வியாக்யானம்
பின்னர் மற்ற ஆச்சார்யர்கள் இன்னருளால் பல வியாக்கியானங்கள் உதித்தன
பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோஹிணி -கண்ணனே இவராக அவதரித்து –
வியாக்கியான சக்ரவர்த்தி -பரம காருணிகர்

நம்பிள்ளை வியாக்யானமும் உண்டு -இது தழுவியே பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்
மூன்று அரும் பதங்கள் உண்டு –அருமையான ஆழமான பதங்கள் -சங்கதிகள் -விளக்கம் –
அப்பு அரும்பதம் சின்ன அரும்பதம் பெரிய அரும்பதம்
அடைய வளைத்து சேர்த்து அடைய வளைந்தான் அரும் பதமும் உண்டு
ரஹஸ்ய க்ரந்தங்களுக்கும் அரும் பதங்கள் உண்டு

ஸ்வா பதேசம் வியாக்யானம் -உள்ளுறை தேறிய பொருள் -வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் –
வரதராஜன் -பூர்வாஸ்ரம திரு நாமம்

ஸூந்தர ஜாமாத்ரு முநே ப்ரபத்யே சரணாம் புஜம்
ஸம்ஸார ஆர்ணவ ஸம் மக்ந ஐந்து சந்தார போதகம்

ஸம்ஸாரக் கடலில் அழுந்தி உள்ள ஜந்துக்களைத் தூண்டுவிக்கும் ஓடம் போன்றதான
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரின் திருவடித்த தாமரைகளை சரண் அடைகிறேன் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளைக்கும் அவர் திருக்குமாறார் ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளைக்கும் சிஷ்யரான இவர்
தென் தேசத்தில் ப்ரஹ்ம தேசம் மன்னார் கோயிலில்
ஆனிமாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் திரு அவதரித்தவர்
திருவாய் மொழிக்கு பன்னீராயிரப்படி அருளிச் செய்தவர்

இவர் அருளிச் செய்தவை
தீப பிரகாசம்
தீப ஸங்க்ரஹம்
தத்வ நிரூபணம்
ரஹஸ்ய த்ரய காரிகா வளி
பகவத் கீதை வெண்பா

இவர் அருளிச் செய்த கிடைக்காத
கீதை வியாக்யானம் -மணிப் பிரவாளத்தில் இவர் சாதித்தாராம்
யாமுனாச்சார்யர் -இவர் சிஷ்யர் ப்ரமேய ரத்னம் பார்த்தோம் –

பெரிய பரகாலன் ஸ்வாமி சிறிய வியாக்யானம் அருளிச் செய்துள்ளார்

மணவாள மா முனிகள் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான அப்புள்ளை உரையும் -முதல் 15 பாசுரங்களுக்கு கிடைக்கிறது –

தேசிகன் முதல் பாசுரத்துக்கு மட்டும் விபுலமான வியாக்யானம் –

——–

ஆழ்வார் அவனே தானோ நித்யாரோ முக்தரோ புலம்புவதால் சம்சாரியோ

அத்ரி ஜமதக்னி பங்கிதிரத
வஸு நந்த ஸூனுவானுடைய
யுக வர்ணக்ரம அவதாரமோ ?
வ்யாசாதிவத் ஆவேசமோ ?
மூதுவர் கரை கண்டோர் சீரியரில் ஒருவரோ ?
முன்னம் நோற்ற அனந்தன் மேல் புண்ணியங்கள் பலித்தவரோ ?

அத்ரி ஸூனு -தத்தாத்திரேயன் -அந்தணர் -கிருதயுகம் -ஜமதக்கினி ஸூ னு -பரசு ராமன் -த்ரேதா யுகம் –
பங்கிதிரத ஸூனு -சக்கரவர்த்தி திருமகன் -த்ரேதா யுகம் -க்ஷத்ரியர் -பங்க்தி -தச-
வஸூ நந்த ஸூனு -துவாபர யுகம்-வைசிய குலம்
காரிக்கும் உடைய நங்கைக்கும் ஸூனுவாக கலியுகத்தில் நான்காம் வர்ணத்தில் இவரோ
மூத்தவர் -நித்ய ஸூரிகள் – கரை கண்டோர் -முக்தர் – சீரியர் -ஸ்வேதத் தீவு வாசிகள் )
(பூதூரில் வந்த புண்ணியனோ-இத்யாதி எந்தை அவர் மூவரில் யார் -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் ஸ்ரீ மா முனிகள் பற்றி –
சேஷாவோ -சேனாதிபதி ஆழ்வானோ–ஸ்ரீ பதியா -ஸ்ரீ ராமானுஜர் பற்றி
சங்ககால புலவர்கள் -சேமம் குருகையோ –செய்ய திருப் பாற்கடலோ நாமம் பராங்குசமோ நாரணமோ
தோளும் இரண்டோ நான்கோ தாமம் துளவமோ வகுளமோ-போலே) என்று சங்கிப்பார்கள் –

பொய்யில் பாடல் —
மாறி மாறி பல பிறப்பும் பிறந்தேன் என்று சொல்லிக் கொள்கிறாரோ
இன்று -வெறிதே அருள் செய்வார் செய்வார்க்கு
வரவாறு ஓன்று இல்லை வாழ்வு இனிதானதே

————

ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் அருளிச் செய்த தனியன் –
(ஸ்ரீ ராம பிள்ளை அருளிச் செய்தார் என்றும் –
ஸ்ரீ ஆள வந்தார் அருளிச் செய்தார் என்றும் சொல்வர் )

(கருவரங்கம் தொடங்கி திருவரங்கம் வாஸம் –
ஸ்ரீ வைகுண்ட அரங்கம் அடையும் பெரிய பிரயாணம் -விவரணம்
ஆழ்வார் பாசுரம் ஒரு அடி கொண்டே பெறலாமே
அத்தைச் சொல்கிறது இத்தனியன் )

அவதாரிகை –
இதில் சப்த அவஸ்தாவஸ்திரரான சம்சாரிகளைக் குறித்து –
சம்சார துக்கம் அனுவர்த்தியாமல் ஸூகோத்தரமான திருநாட்டை பிராபிக்கையின் இடையாட்டமாக-
திரு விருத்தம் -என்கிற திவ்ய பிரபந்தத்தில் ஒரு பாதத்தை அப்யசித்து இருங்கோள்  -என்கிறது

அதாவது –
பொய் நின்ற ஜ்ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்  இந்நின்ற நீர்மை
இனி யாம் உறாமை -என்றத்தை நினைக்கிறது
(இந்த ஒரு அடி கற்றாலே போதும் -சம்சாரம் த்யாஜ்யம் என்று அறிந்தாலே
மற்றவை தன்னடையே கிட்டும் )
பொய் -1–
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு –திருமாலை வணங்குவனே -95
அழுந்தார் பிறப்பாம் -100-என்றார் இறே தாத்பர்யம்-

பொய் -யாதானும் -அழுந்தார் -என்று ஸ்வரூப விரோதி நிவ்ருதியையும் என்றார் இறே-ஆச்சார்ய ஹிருதயம்-209-

எல்லாம் கூட ஏக வாக்கியம் -என்றபடி
அடியேன் செய்யும் விண்ணப்பம் -1-
மாறன் விண்ணப்பம் செய்த -100-
பிரபந்தம் எல்லாம் கூட வ்ருத்த விஞ்ஞாபனம் –

கரு விருத்தக்  குழி நீத்த பின் காமக் கடும் குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு
ஒரு விருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த
திரு விருத்தத்து ஓர் அடி கற்றிரீர் திரு நாட்டகத்தே  –

கரு விருத்தக் குழி–கர்ப்ப ஸ்தானம் ஆகிற ஹேயமான பள்ளத்தில் நின்றும்
நீத்த பின் -நழுவிய பின்
காமக் கடும் குழி வீழ்ந்து-காமம் என்னும் குரூரமான பள்ளத்தில் விழுந்து -பஞ்ச அக்நி பிரகாரம் –
ஒரு விருத்தம் புக்கு -ஒரு காரியத்துக்கும் யோக்யதை இல்லாத கிழத் தனத்தை-மூப்பு அடைந்து
உழலுருவீர் -திரிகிற பிராணிகளே
உயிரின் பொருள்கட்கு-ஜீவாத்மாவாகிற வஸ்துக்களுக்கு
பொருளுக்கு-வஸ்துக்களுக்கு -பாடபேதம்
ஒண் பொருள் -பிறர் நன் பொருள் -ஆத்மா
ஒரு விருத்தம் புகுதாமல் -ஒரு துர் நடத்தையும் சேராமல் படிக்கு
குருகையர் கோன் உரைத்த திரு விருத்தத்து ஓர் அடி கற்றிரீர் திரு நாட்டகத்தே –இந்த திவ்ய பிரபந்தத்தில்
ஒரு பாதத்தை அப்யஸித்து ஸ்ரீ வைகுண்டத்தில் நிஸ் சிந்தையராய் இருங்கோள்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

வியாக்யானம் –
சம்சார தோஷத்தை தர்சிப்பிக்கையாய் இறே முதல் அடி தான் இருப்பது
(திரு விருத்தத்தில் முதல் அடி )

கருவிருத்தக்  குழி நீத்த பின் –
கர்ப்ப
ஜன்ம
பால்ய
யௌவன
ஜரா
மரண
நரகங்கள்
ஆகிற அவஸ்தா சப்தகங்களில் முந்தின அவஸ்தையைச் சொல்லுகிறது –

(1-கரு இருத்த குழி -கர்மாதீனமாக சிக்கி
2-கரு விருத்த குழி -நேர் விரோதமாய் -ஹேயமான
3-கரு விருத்தம் வட்டம் )

கருவிருத்த குழி -என்று
1-கரு -என்று கர்ப்பமாய்
இருத்தக் குழி என்று இருத்தப் பட்ட குழி -வைக்கப்பட்ட குழி என்றபடி
மாதா பஸ்த்ரா -என்று இட்டு வைக்கும் பையோபாதியாய் இறே மாதா இருப்பது –
மக்கள் தோற்றக் குழி -(பெரிய திருமொழி )–வயிற்ருக் குழியிலே உழல்கிறது
அது தான் அத்யந்தம் கர்ஹையாய் இறே இருப்பது –

2-அங்கன் அன்றிக்கே –
புறக் கருவாய் விருத்தமான குழி என்றுமாம்
மாதுர் ஜடரக உல்பக –
இதன் தோஷத்தை பஞ்சாக்னி வித்யையில் பரக்க பேசிற்றே –
(ஸ்வர்க்கம் நரகம் மேகம் பனி மழை நெல் அன்னம் ஆண் விந்து
பெண் கர்ப்பம் -ஆத்மாவுக்கு பொருந்தாத குழி )

3-அங்கன் அன்றிக்கே –
வ்ருத்தமாய்
வளைவாய் –
சூழ் பிறப்பு வளைய வளைய வருகிற –
கழற்றப் போகாதே இருக்குமே –

(பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே–திரு விருத்தம் -45 இந்த கருத்து )

இது தான் வயிற்றில் தொழு-பெரியாழ்வார் என்னும்படி கழற்றப் போகாது இருக்குமே
மாது ஜடரோ தோல் பை -உல்ப மூடப்பட்ட -நெருக்கப்பட்டதாய் இருக்குமே

குழி நீத்த பின்
கர்ப்ப வாசம் இல்லா விட்டாலும்
தலை கீழே பிறந்து
கிலேசான் நிஷ்க்ரந்தி ஆப்நோதி -துக்கத்துடன் கர்ப்ப மார்க்கத்தில் வெளியில் வந்து

அநந்தரம்
விஞ்ஞானம் ப்ரம்ஸம் ஆப்நோதி -கொஞ்சம் கர்ப்பத்தில் இருக்கும்
அது கூட போகுமே
அறிவு இல்லாத சைவ தசையை அடைந்து
ஸ்நான ஆகாரம் பானாதி -பர இச்சையா அசுத்த -பிரசுரமாய்
துக்கம் அனுபவித்து

அநந்தரம்
பால்யே க்ரீடந சக்தா
யவ்வன விஷயாந்தரங்களில்
தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்(திருமங்கை )

அநந்தரம்
காமக் கடும் குழி வீழ்ந்து ஒரு விருத்தம்புக்கு உழலுருவீர்-
வெம் காமம் கடும் குழி வீழ்ந்து
துயரம் செய் காமம் (திருவாய் 7-8 )
(கிருஷ்ண காமம் அல்ல -லௌகிக காமம் )
வழுக்கி அழுந்திக் கிடந்து –உழல்வேனை (பெரியாழ்வார் )
சாந்தேந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்பம் வெள்ளத்துள்  ஆழ்ந்தேன்
அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன் (திருமங்கை)

முற்ற மூத்து
அம்மை வயிற்றோடு யமன் கழுவோடு வளைய வளைய உழன்று திரிந்து
ஒரு விருத்தம் புக்கு -பொல்லா ஒழுக்கத்தில் விழுந்து –

என்றும் தப்பிக்க ஒண்ணாத படி பெண்களின் ஆசையில் உழன்று
விஷய அனுபவ யோக்கியமான பருவம் கழிந்த வாறே
ஒரு விருத்தம் புக்கு
அத்விதீயமான வார்த்தகத்தைப் ப்ராப்தராய் -மூப்பு -உண்மை யறிந்து –
வ்ருத்தன் -வயசான தன்மை
இந்த மூப்பின் கிலேசத்தை வதரி பதிகத்தில்
முற்ற மூத்து கோல் துணையா –இத்யாதியில் மூதலித்து அருளினார்

உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு –
இப்படி உழன்று
மாறி மாறி- ஜரா மரண நரக வேதனைகளிலே சுழன்று
(மூப்பு ஆரம்பித்து முந்தின அவஸ்தைகள் வேகமாகவே போனதே )
இதுவே யாத்திரையாக போரு கிறவர்கள் –
அம்மை வயிற்றோடு யமன் தண்டனையோடு -சூலத்தோடே மாறி மாறி உழன்று
யமாலய மஹா சூலே ஜடரே மதுரா -என்னக் கடவது இறே

அன்றிக்கே
ஒரு விருத்தம் -நேர் மாறாக
அநாதாரம் -ஒரு- இங்கு
பொல்லா ஒழுக்கத்தில் புக்கு உழன்று
துராசாரம்

இப்படி உழலாமல் உயிரின் பொருள்களுக்கு

(பொருள் ஆத்மா ஒரு பாடம்
பொருளுக்கு -ஆத்மாவின் பொருட்டு -ஆத்மாவின் பிரயோஜனத்துக்காக -என்று
இரண்டு நிர்வாகங்கள் )

இப்படி உழலாத படி
அந் நலத்து   ஒண் பொருள் -திருவாய் -1-2-10-என்றபடி
பகவத் அனுபவ யோக்யமான ஆத்மவஸ்து க்களுக்கு –
ஆத்மா பிரயோஜனத்துக்கு –

ஒரு விருத்தம் புகுதாமல் –
ஏவம் விதமான வ்ருத்தங்கள்-ஏக தேசமும் பிரவேசியாமல் –
துர்  வ்ருத்தங்கள் ஒன்றும் சென்று அணுகாமல்-
நடாவிய கூற்றம் -திரு விருத்தம் -6-இ றே
இப் பிறப்பு அறுக்கும் -திருவாய் மொழி-10-2-5-
அழித்தாய் யுன் திருவடியால் -திருவாய் -4-2-6-
அடியரை வல்வினைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடான்  -திருவாய் -1-7-2-
ஓயும் மூப்பு -அடித்தாமரை
உயிர் கொண்டு -அயர்வு தீர்ப்பான்
நமன் தமர் பற்றி இளைப்பு எய்த
நாய் தந்து மோதாமல் -தாமே ஆழ்வார்கள் அருளிச் செய்தார்கள் அன்றோ

இப்படி நிவர்த்தங்கள் ஆனவை பிரவர்த்தியாமல்
குருகையர் கோன் உரைத்த
குருகையர் கோன் சடகோபன்
நல்லார் நவில் குருகூர் நகராரான ஆழ்வார் அருளிச் செய்த

திரு விருத்தத்து ஓர் அடி கற்றிரீர்
பிரதம பிரபந்தமான திரு விருத்தத்திலே ஒரு பாதத்தை ஓதி இருங்கோள்
உங்களுக்கு உஜ்ஜீவனத்துக்கு ஓர் அடியே போதும்
(முதல் பாசுரம் முதல் அடியே போதும் என்றுமாம் )

கலித்துறை விருத்தம்
தம்முடைய வ்ருத்த விஞ்ஞாபனம்

ஓர் அடி கற்று இரீர்
ஆச்சார்ய உச்சாராண அனுச்சாராண முகத்தாலே
ஓர் அடி கற்று
தன் நிஷ்டராய் இருங்கோள்

ஆழ்வாரும்
திருமாலவன் கவி யாது கற்றேன் -48-என்றார் இறே

இத்தை அப்யசிக்கிற எதுக்காக என்னில்
திரு நாட்டகத்தே
திருநாட்டு இடையாட்டமாக –
அத்தைப் பிராபிக்கைக்காக

இருள் தரும்  மா ஞாலத்தில்
அவித்யாதி தோஷங்களை அனுசந்தித்தால் இறே
திரு நாடு  சித்திப்பது

(ஸம்ஸார நிர்வேதம் வருவதே முதல் படி –
கோவிந்த ஸ்வாமி நிஷ்டை அறிவோம்
இருந்து வா என்றானே
உள்ளுவார் உள்ளத்தில் இருந்து அறிவான் அன்றோ )

உயிர் கட்கு ஒருவிருத்தம் புகுதாமல்
திரு நாட்டகத்தே திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் -என்றுமாம்
(ஆத்மாவுக்கு விருத்தமான துராசாரம் வராமல் திவ்ய தேச கைங்கர்யங்களிலே இருக்கலாமே
காலம் முடிந்த பின் தன்னடையே அங்கெ கூட்டிச் செல்வானே )

ஊரும் நாடும் உலகமும் தம்மைப் போலே ஆக்கவில்ல தரம் உடையவர் ஸ்ரீ ஸூக்தி இறே

திருநாடு
திரு நகரியோடு அணித்தான திருவழுதி நாடு -என்றபடி

பவத் விஷய வாஸி ந -என்று இருந்தால் ஒரு விருத்தம் புகுதாது
(அயோத்யா வாசிகள் -அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அருளி
நான்முகனார் நாட்டுள்ளே போல் )

ந தத்ர சஞ்சரிஷ்யந்தி இதி
திரு அஷ்டாக்ஷர சம்சித்தர் இறே ஆழ்வார்
ஆகையால் சம்சார நிவர்த்தகராய் மோக்ஷ பிரதான தீக்ஷிதருமாய் இருப்பவர்
நின் கண் வேட்க்கை எழுவிப்பேன் என்றும்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -என்றும்

(அகம் -உள் -இடம் என்று இரண்டும் )
திரு நாட்டுக்குள்ளே என்னுதல்
திரு நாட்டு இடத்திலே என்னுதல் –
இரண்டு இடத்திலும் அவர் விஷய வாசம் உண்டு என்றபடி

ஆழ்வாருக்கு அவஸ்தா சப்தகங்களும் பகவத் விஷயத்திலேயாய் இருக்கும்
கண்ணன்  நீண் மலர்ப்பாதம் பரவிப் பெற்றவர் -திரு விருத்தம் -37-இறே
உடைய நங்கையார் திரு வயிற்றிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
அடிமை செய்யலுற்று இருப்பர் (கர்ப்பத்தில் பகவத் விஷயம் )
அன்று வயிற்றில் கிடந்தது இருந்தே அடிமை செய்யல் உற்று இருப்பன் –பெரியாழ்வார் -5–9

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அடிமை செய்யல் உற்று இருப்பர் -என்றும்
ஆழியங்கைப் பேராயர்க்கு ஆளாம் பிறப்பு –
திரு அவதரிக்கும் போதே சடகோபராக அவதரித்து-

கிருஷ்ண த்ருஷ்ணா தத்வ ஜென்மமாய்
(ஞானம் மட்டும் அல்ல -பக்தனின் பிறப்பு அல்ல- பக்தியின் பிறப்பு )
ஸூஜ்ஞான கந பூரணராய்
பின்பு அவன் முகத்தன்றி  விழியேன் நாச்சியார் முகுளி நயனராய் -என்று முலைப் பால் அருந்தாதராய்

அருளான் மன்னு குருகூர் சடகோபன்( 1-5 )-அருளே தாரகமாய் வளர்ந்து

அவ் ஊர் திரு நாமம் கற்ற பின்-என்னும்படி வார்த்தை கற்று

என்ன வார்த்தையும் கேட்குறாதே மிக மிழற்றும் பேதை
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும்–கைக் கண்டத்தையும் நடுக் கிடந்தத்தையும் சொல்லி
மேவி நைந்து நைந்து விளையாடல் உறாதே
யாவையும் திருமால் திரு நாமங்களேயாய்
பூவை பைங்கிளி இத்யாதி யாவையும் திருமால் திரு நாமங்கள் கூவி
ஸ்ரீ கிருஷ்ண கிரீடாம் ய ஆததே -என்று
தத் சேஷ்டித அநு சாரியாய்

பதினாறு திரு நஷத்ரம் நிரம்பினவாறே
அமுத மென் மொழியான திரு வாய் மொழி பாடி  அடிமை செய்து
எல்லாம் கண்ணன் -என்று

பின்பு
பால் போல் சீரில் பழுத்து

அநந்தரம்
பாடிப் போய் காயம் கழித்து அவன் தாளிணைக் கீழ் புகும் காதலை யுடையராய்
ஐயார் கண்டம் அடக்கிலும்  நின் கழல் எய்யாது  ஏத்த அருள் செய் -என்னும்
மநோ ரதத்தை யுடையராய்

போம் வழியைப் பெற்று
அவா அற்று வீடு பெற்று –

திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிக் கண் கூடி
வழு  விலா அடிமை செய்து வாழுமவர் இறே –

ஆகையால் அல்லாதார் ஸ்ரீ ஸூக்தி பந்த ஹேது
ஆழ்வார் திவ்ய ஸூக்தி முக்தி ஹேது-
என்றது ஆயிற்று

இத்தால்
இழக்கிறது ஹேயமான சம்சாரம்
பெறுகிறது விலஷணமான பரம பதம்

இதுக்கு உடலாக
சதாச்சார்யன் அருளிச் செய்த ஒரு நல்  வார்த்தையை
சத்துக்கள் இடத்திலே  அப்யசித்து
நிர்ப் பரனாய் இருக்கக் கடவன்-
என்னும் அர்த்தம் சொல்லிற்று ஆயிற்று  –

தாத்பர்யம்
கர்ப்ப -அவஸ்தா துக்க கரம் உழன்று
உங்களுக்கு ஓர் நல் வழி உபதேசிக்கிறேன் கேளுங்கோள்
நீங்கள் முதல் பாசுரம் முதல் ஒரு பாதத்தை அப்யஸித்து தேகாத்ம அபிமானம் விட்டு
நிர்ப்பரராய் இருங்கோள்
இனி உறாமை அறிவிக்க
ஆத்ம வஸ்து -விலக்ஷணம் என்று அறிந்தால் –
ஆழ்வார் அபிமானத்தில் ஒதுங்கி –பரமபதம் கிட்டுவீர் -என்றவாறு –

————————————————————————–

பிரவேசம் –

ஆழ்வாரை முக்தர் என்பார்கள் சிலர் –
(அடியார் நிலாகின்ற வைகுந்தமோ என்கையாலே நித்யரும் முக்தரும் என்பர்
முக்தர் என்றது முதல் திருவாய் மொழியில்
உபய விபூதியையும் ததீயத்வ ஆகாரரேண அனுபவித்த படியால்)

அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தார் ஒருவர் முத்த ப்ராயர் என்பர்
(முமுஷு -ஸ்வேத தீப வாசிகள்–நம சொல்லிக் கொண்டே இருப்பார்களே -என்றுமாம்
ஸ்வேத தீப வாசி –சீதனையே தொழுவார் என்றதாதல் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்கள் என்றதாதல்
முக்த பிராயர் என்றது வீடுமின் முற்றவும் -பிறருக்கு உபதேசித்த ஞான வைபவத்தைப் பற்ற
அங்குத்தை இருந்து வந்தவர் இங்கு திருத்தினதைப் பார்க்க வந்தார்கள் )-

அங்கு உள்ளார் ஒருவரை நீர் போய் பிறவும் என்னப் பிறந்தார் -என்பார்கள் சிலர்  –
(பின்னை கொல் நில மா மகள் கொல் திரு மகள் கொல் பிறந்திட்டாள் இத்யாதியைப் பற்ற )

வங்கி புரத்து நம்பி -எம்பெருமான் தான் இப்படி   வந்து அவதரித்தான் -என்பர்
(யானாய்த் தன்னைத் தான் பாடி -இதுக்கு மூலம் யான் நீ இத்யாதி ஆச்சார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி )

இப்படிச் சொல்லுகைக்கு அடி ஆழ்வார் உடைய பிரபாவத்தாலே –

முக்தரிலே ஒருவரை இங்கே போர விட்டதாகில்
நாம் போந்த கார்யம் முடிந்த வாறே போகிறோம் என்று ஆறி இருக்கக் கூடும்

அங்கன் இன்றியிலே
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை
பாவியேனை பல நீ காட்டிப் படுப்பாயோ(6-9-9)
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து (2-6-8 )
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ -(7-1-10 )
என்று எல்லாம் கூப்பிடுகையாலே
இவர் சம்சாரத்தில் ஒருவராம் இத்தனை –

அராஜகமான தேசத்திலே ஆனையைக் கண்ணைக் கட்டி விட்டால்
ஆனை எடுத்தவன் ராஜாவாமா போலே
எம்பெருமான் கடாஷித்தார் ஒருவராம் இத்தனை –

(இந்நின்ற நீர்மை என்றதால் முக்தர் அன்று
பல நீ காட்டி என்றதால் முக்த ப்ராயர் அன்று
மாறி மாறி என்றதால் நித்யர் அன்று
அமுதம் கொண்ட மூர்த்தியே என்றதால் எம்பெருமான் அன்று
இப்படி நிஜ ஆகாரம் காட்டி அருளுகிறார்
நிர்ஹேதுக விசேஷ கடாக்ஷ லப்த ஞானர் )

(கேவலம் ஸ்வ இச்சையா ஏவ -எனது இச்சையினாலேயே மட்டும்
ப்ரேஷ்யே கஞ்சித் கதாசன -எப்போதோ யாரையோ கூட்டிப் போவேன் -புருஷகாரமும் வேண்டாம்
நம்மிடம் கடாக்ஷம் கிருபை அடியாக
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து உழல்வதால் -இரக்கப் பட்டு கடாஷிக்கிறான்
ஆழ்வார் இடம் -அங்குளிக்கும் போதே திருத்துழாய் பரிமளம் போல் -கிருபைக்கு இடம் இல்லையே இங்கு –
ஆகவே ஸ்வா தந்தர்யம் அடியாக பிறந்த கடாக்ஷம் -அநிதர சாதாரணம் இது -இதர சாதாரணம்- பொதுவானது அல்ல -)

ஒருங்கே மறிந்து கிடந்தது அலர்ந்த மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன -திரு விருத்தம் -42-என்றும்
பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ  வைத்தார் -திருவிருத்தம் -45-என்றும்-
நிர்ஹேதுகமாக கடாஷித்து அருளினான்-

இந் நின்ற நீர்மை -என்கையாலே முக்தர்
பல நீ காட்டிப் படுப்பாயோ -என்கையாலே -முத்த ப்ராயர் -என்றும்
மாறி மாறி -என்கையாலே -நித்யர் என்றும்
அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்கையாலே எம்பெருமான் என்றும் சங்கை வருமே

சிரகாலம் சாத்யமான கர்மத்தை உடையார் ஒருத்தருக்கு
கடாஷித்த அநந்தரம்
இங்கனே ஆகக் கூடுமோ என்னில்
பிருந்தாவனம் பகவதா கிருஷ்ணேந அக்லிஷ்ட கர்மணா
சுபேந   மனசா த்யாதம் கவாம் வ்ருத்திம் அபீப்சதா (ஸ்ரீ விஷ்ணு புராணம் 5-6-28 )-என்கிறபடியே
நெருஞ்சிக் காடாய் கிடந்த ஸ்ரீ பிருந்தாவனம் கிருஷ்ணன் உடைய வீஷணத்தாலே
(வீஷணத்தாலே-என்றது பொதுவாக அனைத்தையும் –
கடாக்ஷம் ஒருவரை நினைத்து அருளுவது
தியானிக்க தியானிக்க கடாக்ஷம் பெறலாம்
வீக்ஷணம் -ஸ்வா தந்தர்யம் அடியாக )
உத்பன்ன நவ சஷ்பாட்யம் (ஸ்ரீ விஷ்ணு புராணம் 5-6-37 )-என்கிறபடியே
சாணரைப் புல்லாய் பசுக்கு பசுகு என்று  அறுக்க அறுக்க தொலையாதே கிடந்தால் போலே
இவர்க்கும் இது கூடும் –

சர்வேஸ்வரன் தன்னுடைய
ஸ்வரூப ரூப குண விபவங்களையும்
நித்ய  விபூதி யோகத்தையும்
லீலா விபூதி யோகத்தையும் காட்டிக் கொடுக்க
கண்டு

அநந்தரம்
அங்குள்ளார் ஞானத்தையும்
வ்ருத்தத்தையும்
அங்கு இருக்கும் இருப்பையும் கண்டு

அதுக்கு எதிர் தட்டான சம்சாரத்த்லே
அவ்வனுபவத்துக்கு  விரோதியான பிரகிருதி சம்பந்தத்தோடு
தாம் இருக்கும் இருப்பையும் அனுசந்தித்து
இவ்வனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று அபேஷிக்கிறார் –

ஜரா மரண மோஷாயா மமாஸ்ரித்ய யதந்தியே -ஸ்ரீ கீதை -என்று கேவலரைப் போலே
விரோதியைப் போக்கித் தர வேணும் என்பான் என் என்னில்
காந்தன் சந்நிதியில் காமினி அழுக்கு கழற்றுமா போலேயும்
ராஜ குமாரன் அபிஷேகம் என்றவாறே ஷய வியாதிகளைப் போக்க  நினைக்குமா போலேயும்
தத் அனுபவ விரோதி என்று கழிக்க நினைக்கிறார்

இது தான் ப்ரீதியோ அப்ரீதியோ என்னில் -இரண்டும்
மகாராஜருக்கு பெருமாளைக் கண்ட பிரியமும்
வாலிக்கு அஞ்சிப் போந்து இருந்த அப்ரியமும் போலே
இவருக்கும்
பிரக்ருதியோடே இருக்கிற அப்ரியமும்
எம்பெருமானைக் கண்ட பிரியமும் –

வைஷ்ணவர்களையும் தலை மகனாகப் பேசுவான் என் என்னில்
இமையோர் தலைவா -என்றும்
அடியார் அடியார் தம் அடியார் -என்றும்
அடியார் குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ (2-3-10 )-என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -என்றும்
சொல்லுகையாலே
பகவத் விஷயத்தில் அவஹாகிக்கும் போது கடகர் வேண்டுகையாலும்-
அனுபவ தசையில் வ்ருத்த கீர்த்தனம் பண்ணுகைக்கு இவர்கள் வேண்டுகையாலே –

(ஆக
1-அடியார்கள் அவனைப் போலவே ப்ராப்யம் என்றும்
2-இவர்களே கடகர் என்றும்
3-போதயந்த பரஸ்பரத்துக்கு என்றும்
மூன்று காரணங்கள் )

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்றும்
அழுந்தார் பிறப்பாம் -என்றும்
உபக்ரமமும் உபசம்ஹாரமும்  ஏகார்த்தம் ஆகையாலே
விரோதியைப் போக்கித் தர வேணும் என்கிறது இப் பிரபந்தத்தால் –

———————————————————————

அவதாரிகை –

சர்வேஸ்வரன் தன்னுடைய
ஸ்வரூப ரூப குண விபவங்களையும்
நித்ய  விபூதி யோகத்தையும்
லீலா விபூதி யோகத்தையும் காட்டிக் கொடுக்க
கண்டு
அநந்தரம்
அங்குள்ளார் ஞானத்த்தையும் வ்ருத்தத்தையும்
அங்கு இருக்கும் இருப்பையும் கண்டு
அதுக்கு எதிர் தட்டான சம்சாரத்த்லே
அவ்வனுபவத்துக்கு  விரோதியான பிரகிருதி சம்பந்தத்தோடு
தாம் இருக்கும் இருப்பையும் அனுசந்தித்து
இவ்வனுபவ விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தர வேணும் என்று அபேஷிக்கிறார் –

(மாறன் செய்த விண்ணப்பம் நிகமிக்கிறார்
அடியேன் மாறன் இரண்டும் பர்யாயம் போலும்
சேஷத்வம் விலகாதே -ஸ்வரூப நிரூபக தர்மம் -நிலையில் கொண்டு எப்போதும் இருப்பவர் –
கேட்டருளாய்–கேட்பதே அருள் -கேட்பதுக்கும் அருளுக்கும் கால விளம்பமே இருப்பாதே
அறிவிப்பமே அமையும்
மெய் சரீரம் உடம்புடன் இருந்து கேட்டு அருள வேணும்
நின்று கேட்டு அருள் -அடியேன் செய்யும் விண்ணப்பம் மெய்- ஸத்யம் என்றுமாம்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்–பத த்ரயம் –
சாஸ்த்ர அர்த்தங்கள் அனைத்தும் -மூன்று தோஷங்கள் அறிந்தாலே போதுமே
மற்றவை அனைத்தும் இதன் விவரணம்
உயர்வற உயர்நலம் -திருவாய் மொழிக்கு ஸங்க்ரஹம் போல் இப்பாட்டும்
பிரதம சதகே விஷ்ய வரதம்
அங்கு அமரரர்கள் அதிபதி
இங்கு இமையோர் தலைவா
அது உத்தேஸ்யமான அவனைப்பற்றி
இது தள்ள வேண்டியவற்றை –
அஜீரணம் தொலைந்த பின்பே சக்கரைப் பொங்கல் அனுபவிக்க வேண்டுமே
உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
என்று அழைத்து விண்ணப்பம் செய்கிறார் இதில் )

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–

பாசுரம் -1-பொய் நின்ற ஞானமும் -தாமான நிலையில் அருளியது -ஒழிவில் காலம் -3-3-

பதவுரை
உயிர் அளிப்பவன்–எல்லாப் பிராணிகளையும் ரக்ஷித் தருள்வதற்காக
எந் நின்ற யோனியும் ஆய்–பல வகைப்பட்ட பிறப்புகளை யுடையனால்
பிறந்தாய்–திருவவதரித்தவனே!
இமையோர் தலைவா–தேவர்களுக்குத் தலைவனே!
பொய் நின்ற ஞானமும்–பொய்ம்மை நிலை பெற்ற அறிவும்
பொல்லா ஒழுக்கமும்–தீய நடத்தையும்
அழுக்கு உடம்பும்–அசுத்தங்களோடு கூடின சரீரமும்
(ஆகிய இவற்றோடு கூடி)
இ நின்ற நீர்மை–இவ்வண்ணமான இயல்வை (பிறப்புத் துன்பத்தை)-இப்படிப்பட்ட அகலாத ஸ்வ பாவத்தை
இனி யாம் உறாமை –இனிமேல் நாங்கள் அடையாதபடி
அடியேன் செய்யும் மெய் விண்ணப்பம்–(உனது) அடியனாகிய யான் சொல்லும் உண்மையான விஜ்ஞாபகத்தை
நின்று கேட்டருளாய்–நின்று நீ கேட்டருள வேணும்.

(ஞானம் என்றாலே ஸத்யம் நம் சம்ப்ரதாயம்
முத்துச் சிப்பி பார்த்து வெள்ளி -கொஞ்சம் தன்மை இருப்பதாலே பிரமம்
சர்வம் ஞானம் ஸத்யம்
மாறிக் கொண்டே இருப்பதால் பொய் இங்கு -ஒருபடிப்பட்ட தன்மை இல்லையே –
விகாரம் ஸ்வ பாவம் என்றபடி
தேஹாத்ம அபிமான ஞானமே-பிரமமே – பொய் நின்ற ஞானம்
இந்த பிரமத்துக்குத் தக்கபடி ஆசாரம் -நடவடிக்கை -பொல்லா ஒழுக்கம்
தேகத்துக்காகப் பண்ணுவது எல்லாம் இப்படியே
ஆத்மாவுக்காகப் பண்ணுவதே நல்ல ஒழுக்கம்
அஞ்ஞானம் -துஷ் கர்மம் -ஜென்மம் -இந்த அடிப்படை அறிந்ததே போதுமே –
தாஸ பூதனான நான் -ஏக வசனம்
யாம் -பன்மை -நமக்காகவும் தாம் மன்றாடுகிறார்
யதார்த்தமான விண்ணப்பம் -மெய் இது
நின்று -ஸ்திரமாக இருந்து கேட்டு அருள வேணும் -)

எம்பெருமானை சாஷாத்கரித்த ஆழ்வார்-
த்வத் பகவத் விரோதியான பிரகிருதி சம்பந்தத்தை அறுத்து அருள வேணும் என்று-
தம்முடைய அபி லஷிதத்தை விஞ்ஞாபிக்கிறார் –

வியாக்யானம் –

பொய் நின்ற ஞானமும் –
அநாத்மநி ஆத்ம புத்தி -அஹங்காரம்
அந்யதா ஞானம்
பிரகிருதி ப்ராக்ருதங்களைப் பற்றிய ஞானம்
தேகத்துடன் -அனுபந்தி -சம்பந்தி -புத்ராதிகள் பற்றிய ஞானம்
ஸ்வர்க்காதிகள் -ஆத்ம அனுபவம் என்று தப்பாக புரிதலும்
அஸ் வேஸ்ய புத்தியையும் –

பொய்யான விஷயங்களைப் பற்றி நிற்கையாலே
நஸ்வரம் விஷயமாகக் கொண்ட அறிவு
எப்பொழுதும் மாறும் அசேதனத்தைப் பற்றிய ஞானம்
த்யாஜ்யம் என்று அறிய வேண்டும்

அநித்யமானதை நித்யம் என்றும்
அபோக்ய மானதை போக்யம் என்றும்
அஸ்திரமானதை ஸ்திரம் என்றும்
அல்பமானதை நிறைவாக என்றும்

நாஸ்தி -என்றால் அஸ்தி யாக இருந்து நாஸ்தி ஆவது
தத்வ தர்சிகள் நிர்ணயம் அசத்துக்கு பாவம் வராது -சத்துக்கு அபாவம் வராது
இப்படி யதார்த்த -ஒருபடிப்பட உள்ளதால் –

ஸ்வரூப அந்யதா ஞானம் -விபரீத ஞானம் -தேஹாத்ம அபிமானம்
ஸ்வ பாவ அந்யதா ஞானம் -அந்யதா ஞானம் -பரதந்த்ரனான தன்னை ஸ்வ தந்த்ரனாக நினைக்கை

தத் ஞானம் –அந்யத் அஞ்ஞானம் — ஸ்ரீ விஷ்ணு புராணம்
எந்த ஞானத்தால் தோஷம் அற்ற சுத்தமான நிர்மலமான ஆத்ம பரமாத்மா பற்றி –
அறியப்படுகிறதோ -காணப்படுகிறதோ -அடையப்படுகிறதோ -அதுவே ஞானம்
மற்றவை அஞ்ஞானம்
சந் யாயதே சந் த்ருச்யதே அதி கம்யதே

விஷ்ணு புராணம் ஸ்லோகங்கள் நம் சம்ரதாயத்துக்கு மூலம் அன்றோ
பக்த்யா அநந்ய –ஞாதும் த்ரஷ்டும் ப்ராப்த்தும்
ஞான தர்சன ப்ராப்தி அவஸ்தைகள்
பர பக்தி பர ஞானம் பரம பக்திகள்
உத்தேசியத்தை ஒழிந்த அர்த்த ஞானங்கள் அனைத்தும் அஞ்ஞானம்

காண்கின்ற ப்ரக்ருதி பொய் என்னலாமோ என்னில்
சூன்யவாதியைப் போலேயாய் என்கிறது அன்று
மாயாவாதி போலே துச்சம் என்கிறது அன்று
ஆத்மாவைப் போலே ஒருபடிப் பட்டு இராமையாலே
ஆத்மா ஏக  ரூபமாய் இருக்கும் இறே
அநாத்மன்யாத்மா புத்தியையும் -சொல்லுகிறது –
ஜடமாய் இருக்கும் தனக்கு ஞானமும் பாரீர்

யஸ்து -ந்ருப அரசனே -காலாந்தரத்தில் ஒருபடிப்பட இல்லாமல் -மாறுமே -உருவமும் பெயரும் மாறும்
புஷ்ப்ப மாலை -சருகாகுமே
சரீரம் பிணம் -தொட்டால் ஜில் என்று ஆகுமே
பரிணாமம் இல்லாத ஆத்மா பரமாத்மா பற்றிய ஞானமே ஸத்யம் -அதுவே அஸ்தி -அதுவே வஸ்து
அசேதனங்கள் வஸ்துவே ஆகாதே -இது அதிகப் படி -பராசர மகரிஷி இப்படி சொல்ல –
பாஷ்யத்தில் விசாரித்து -சமாதானம்
சித்துக்கு இல்லாமை இல்லை
அசித்துக்கு இருப்பு இல்லை
ஏக ரூபம் ஆத்ம ஸ்வரூபம்
ஆனால் நாம் அப்படி இல்லையே -அசித் நம்மை தன்னைப் போல் ஆக்குகிறது –
ஆனந்த மயம் ஞான மாயம் சேஷமாய் இருக்கும்
ஷயம் விருத்தி பரிணாமம் –
அஸ்தி இத்யாதி ஷட் பாவ மாறுதல்
ஷட் பாவ விகாரம்-அஸ்தி பிறக்கிறது மாறுதல் வளர்ந்து தேய்ந்து முடிதல்–சம்சார பிரக்ருதியைப் பொய் என்கிறது –

பாஷ்யத்தில்
ஆத்மா அஸ்தி சப்த பொருளாய் இருக்கும் -ஞான ஸ்வரூபம் -ஞானமே வடிவு
ஆதி மத்ய பர்யந்த -சதத ஏக ஸ்வரூபம் -எப்பொழுதும் அஸ்தி
அசேதனம் -நாஸ்தி -ஒருபடிப்பட இல்லை என்றவாறு
ஷேத்ரஞ்ஞனுக்கு போக்ய பூதம் -கர்ம அனுகுணமாக மாறிக் கொண்டே இருக்கும் –
ஸர்வதா நாஸ்தி அர்த்த கர்ப்பம்

புத்தன் ஞானத்தின் விகாரம் என்பர்
மீமாம் சகன் பொருளின் விகாரம் என்பர்
புத்திக்கு ஆகார விஷயம் -கிரஹிக்கப்படும் பொருளில் வேறுபாடு –
பொய் என்று சொல்லலாமா -பொய்யான இவற்றைப் பற்றிய ஞானம்

நின்ற
இது தான் என்றும் ஒக்க நிலை நின்ற படி -அழுந்தின படி –

ஞானமும்
ஜடமாய் இருப்பதுக்கு தனக்கு – ஞானம் என்பது பாரீர் -இதுக்கு ஞானம் என்ற பெயரா
தேஹாத்ம அபிமானம் அஞ்ஞானம் தானே

பொல்லா ஒழுக்கும்
ஞான கார்யமான விருத்தம் அனுஷ்டானம் உண்டாகில்
ஞானம் இல்லையாகில்
நல்ல அனுஷ்டானமும் இருக்காதே

பொல்லா ஒழுக்கும் –
அஹம் சர்வம் கரிஷ்யாமி
குருஷ்வமாம் அநு சரம்
என்று இருக்கும்
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தம் இன்றியே
கண்டது அடைய அஹம் என்று இருக்கை

பொய் நின்ற ஞான அனுகுணமான
பர த்ரவ்ய அபஹாராதி
சாரித்ரமும்  -(துராசாரங்கள் என்றபடி )

அழுக்கு உடம்பும் –
இதுக்கு எல்லாம் அடியான ஹேயமான சரீரமும்

மகா பாரதம் எல்லாம் கூளமும் பலாப்பிசினும் போலே
பிரகிருதி புருஷ விவேகம் பண்ண மாட்டிற்று இல்லை

இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் ஆகையாலே
மூன்று பதத்தாலே பிரகிருதி புருஷ விவேகம் பண்ணி அருளினார்

அநாதி கால அவித்யை
ஆத்ம தத்வம் நித்யம்
பிரகிருதி அநித்யம்
நிவ்ருத்த தேஹாத்ம நடத்தையே நல்ல ஒழுக்கம்
தேஹாத்ம அபிமானம் தொலைய வேண்டும்
நிர்மலம் -அழுக்கு இல்லாமல்
பிரகிருதி புருஷன் விவேகம் காட்டி
நின்ற நீர்மை -இந்த நிலை நின்ற ஸ்வ பாவம் காட்டி அருளினார் –

இந் நின்ற நீர்மை –
இப்படி நிலை நின்ற ஸ்வபாவம் -உதிரக்  கூறை காட்டுகிறார் -என்று அம்மாள்

ஏஹீ பஸ்ய சரீராணி -ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ருஷிகள் பெருமாளுக்கு
ராஷசர் தின்ற உடம்பை காட்டினால் போலே-
பிரகிருதி தின்ற ஆத்மாவைக் காட்டுகிறார் -ஆளவந்தார்

ஆழ்வார்  பிறர் படியை காட்டுகிறார்-அம்மாள் நிர்வாஹம்
தம் படியைக் காட்டுகிறார்  -ஆளவந்தார் நிர்வாஹம்

இது ஒரு வெட்டு -பொய் நின்ற ஞானம்
இது ஒரு வெட்டு – பொல்லா  ஒழுக்கம்
இது ஒரு வெட்டு -அழுக்கு உடம்பு

ஆச்சார்யன் உபதேசத்துக்கும் கேளாதே
பிரமாணங்களாலும் பேதிக்க ஒண்ணாதே
இதுவே ஸ்வரூபம் என்னலாம் படி இருக்கை

தேவரீர் திருவடிகளுக்கு இட்டுப் பிறந்த இஜ் ஜன்மம்
தப்பாமே பட்டேன் இது என்று கருத்து –

இனி –
ஈஸ்வரனும் ஒரு முழம் கை தண்ணீரும் என்று இருந்த காலம் அன்றியே
உன்னால் அல்லது செல்லாது என்று இருந்த பின்பு
குறைவாளனாய் தேவரீர் திருவடிகளிலே வந்த பின்பு

யாம் உறாமை –
பரா அநர்த்தம் நெஞ்சிலே படுகையாலே
நாட்டுக்காக தாம் மன்றாடுகிறார்

உனக்கு ஆட்பட்டும் இன்னும் உழல்வேனோ
மன்றாடியவர் வருஷம் தோறும் சென்று திரும்புகிறார்
தந்தோம் தந்தோம் என்று தருகிறான் அவனும்
மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ராமானுஜர் -வேறு பாடு உண்டே

நாங்கள் ஸ்பர்சியாத படி –
சம்சாரிகள் உடைய வ்யசனம் தம்மது ஆகையாலே -யாம் -என்கிறார்
ஆத்மனி பஹூ வசனம்வா –

உறாமை
சாஸ்திர பலம் பிரயோகத்ரி -என்கிற படியே
பலம் பெறுவார் அன்றோ அதுக்கு கிருஷி பண்ணுவார்-
நம்மைக் கிட்டுகைக்கு வழிகள் கண்டு வைத்தோம் ஆகில்
அவற்றின் படியே வந்து கிட்டுகிறீர்-என்ன

சர்வஞ்ஞனுமாய் சர்வ சக்தியாய் இருக்கிற நான் இவற்றைச் செய்து வருகிறேன்
உன்னுடைய அவதாரத்துக்கு பிரயோஜனம் சொல் என்கிறார் –
நீயோ நானோ உபாய அனுஷ்டாம் பண்ணுவது சொல்லு-

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம்
மாயவர் தாம் காட்டும் வழி–பெரிய திருவந்தாதி–56—

ஒரு வாறு ஒருவன் புகாதவாறு உருமாறும் ஆனவனே – அவதார பிரயோஜனம்
சாது பரித்ராணாம்
துஷ்ட நிக்ரஹம்
தர்ம ஸ்தாபனம்
மூன்றுக்கும் அல்லவே
ஸித்த உபாயம் ஆகவதர்க்கே அன்றோ நீர் அவதரித்தீர்

உயிர் அளிப்பான் –
உயிர்
பிராட்டிமார் திருவடி திரு வநந்த ஆழ்வான்  -என்று வ்யாவர்த்தித்ததோ
யோக்யதை அயோக்யதை பாராதே-
சகல ஆத்மாக்களையும் சம்ரஷணம் பண்ணும் அதே பிரயோஜனமாகை –

சால பல நாள் உகந்து உயிர்கள் காப்பான் அன்றோ கோலத் திரு மகளுடன் பிறந்தாய்

அளிப்பான்-எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா –
சிலர் அபேஷித்தது உண்டோ      –
உன் கிருபை இறே
தான் சொல்லும் போதும் பஹூநிம்(கீதை ) என்றான் இறே
(பிரார்த்தித்தால் கொடுக்க வில்லை
தானாகே அளிக்கவே
கேவலம் மதீய -இச்சை -புருஷகாரமும் எதிர்பார்க்காமல் )

யோனியுமாய்
ஆய்
அவதாரத்தில் மெய்ப்பாடு காட்டுகிறது

பிறந்தாய்
ஆத்மாநாம் மானுஷ்யம் மன்யம்
அஹம் வோ பாந்தவ

பிறந்தாய் –
தூணிலே தோன்றினால் போலே ஆதல்
ஆனைக்கு உதவினால் போலே ஆதல் -அன்றிக்கே
ஸதஸ துவாதச மாச
நாட்டில் பிறந்து படாதன பட்டு
பன்னிரண்டு மாசம் கர்ப்ப வாசம் இருந்து –
பன்னிரு திங்கள் மணி வயிறு வாய்த்தவனே

அகர்ம வச்யனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து
உன் கேவல கிருபையாலே
கர்ம வச்யர் பிறக்கும் பிறவிகளிலே
ஆத்மானம் மானுஷம் மன்யே -என்றபடி
அதுக்கு அவ்வருகு அறியாதானாய்க் கொண்டு
எல்லா யோநிகளிலும் வந்து பிறந்து அருளினவனே-

இதுக்குக் கருத்து
உம்முடைய கார்யம் நீரே நிர்வஹித்துக் கொள்ளும் -என்ன
அங்கனே யாகில்
தேவரீர் உடைய அவதாரங்களுக்கு வேறு பிரயோஜனம் என்ன -என்று    –

இமையோர் தலைவா –
இப்படி பிறந்தவன் குறைவாளனாய் இன்றிக்கே
அமரர்கள் அதிபதி
சூட்டு நன் மாலைப்படி ஒரு நாடாக தனக்கு என்று இருப்பவன் கிடீர்
அசங்குசித  ஜ்ஞானரையும் துடிப்பித்துக் கொண்டு நிர்வாஹகனாய் இருக்கிறபடி –
(நீதி வானவர் சேஷத்வ ஞானம் அனுஷ்டானம்
வானோர் இல்லாமல் இமையோர் -ஞான சுருக்கம் இல்லாதவர் )

மெய்-
இது எத்தனை குளிக்கு நிற்கும் –
கிட்டினவாறே மடி எற்ப்பர்கள்  என்ன –

மெய் -என்கிறார்
விஞ்ஞாபனம் இதம் சத்யம்
பொய் நின்ற ஞானம் தொடங்கி
மங்க வொட்டு உன் மா மாயை (10-7-10)-என்னும் அளவும் செல்ல
(இனி யாம் உறாமை என்றது சத்யம்
16 வருஷம் நின்று கேட்டு அருளாய் என்கிறார்
நான் பல பிறவிகளில் உழன்று நின்றேன்
நீ இதுவரை நிற்கக் கூடாதோ )

உபக்ரமத்திலே இங்கனே காணும் எல்லாரும் சொல்லுவது
நீரும் அவ்வோபாதி இறே-என்று
எம்பெருமான் அருளிச் செய்ய

அங்கன் அன்று
என்னுடைய விஞ்ஞாபனம் இதம் சத்யம் -என்கிறார்-

(இதில் இருந்து அது வரை மெய்
அடியேன் செய்யும் விண்ணப்பம் மெய்
இது அனைத்தும் மெய் நின்று கேட்டு அருளாய்
என்று மூன்றும் உண்டு )

நின்று கேட்டருளாய் –
கேட்கை தான் உத்தேச்யமாய் இருக்கிறது –
அறிவித்தால் இத்தலைக்கு செய்ய வேண்டுவது இல்லாமை
ருசியை அறிவிக்கையை வேண்டுவது
ஆசை உடையார்க்கு எல்லாம் –

எம்பெருமான் பேரா நிற்கப் புக
இத்தை நின்று கேட்டு அருள வேணும்
என்னுடைய சர்வ துக்கமும் போம் -என்று கருத்து –

அடியேன் செய்யும் விண்ணப்பமே –
வாக்ய பேதம் பிறக்கிறதோ -என்று –
நீர் ஆர் -என்றான்

அடியேன் -என்கிறார்
இவருடைய நான் -இருக்கிறபடி  –
(அடிச்சியோம் அடியேன் என்றே எப்பொழுதும் இவர் )

நான் என்றாகில் இறே –
சொன்ன வார்த்தை -என்பது
அடியேன் -என்கையாலே –
செய்யும் விண்ணப்பம் -என்கிறார்

அடியேன் உடைய விஞ்ஞாபனம்
இவருடைய உக்தியிலே
இவருடைய மெய்ப்பாடு அறியலாம் என்று எம்பெருமான் கேட்டருள
அடியேன் -என்று
தம்முடைய ஸ்வரூபத்தை விண்ணப்பம் செய்கிறார்

செய்யும் –
இவ் வபேஷைக்கு மேல் இல்லை –

(யாம்
ஆத்மநி பஹு வசனம்
நம்மையும் சேர்த்து என்றுமாம் )

பொய் நின்ற ஞானம் இந்நின்ற நீர்மை -என்கையாலே -விரோதி சொல்லிற்று
என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கையாலே -உபாயம் சொல்லிற்று
இமையோர் தலைவா -என்கையாலே பிராப்யம் சொல்லிற்று
அடியேன் -என்கையாலே பிராப்தாவைச் சொல்லிற்று
செய்யும் விண்ணப்பம் -என்கையாலே பிராப்தி பலம் கைங்கர்யம் என்று சொல்லிற்று –

ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை பொய் என்பதால் ஆத்மா மெய் என்றும்
ஞானம் என்பதால் ஞாத்ரு ஜேயத்வமும்
ஒழுக்கு என்பதால் கர்த்ருத்வமும்
உடம்பு என்பதால் சரீரத்வமும் தோன்றுமே

அவித்யா கர்மம் ஜென்மம் மூன்றும் மாறி மாறி -வந்து -இதுவே விரோதி
இனி யாம் உறாமை -சம்பந்தம் அறிந்த பின்பு பொறுக்க முடியாதே
ரக்ஷிக்க என்றே தாழ்ந்த ஜென்மங்களில் அவதரித்தாயே
இமையோர் தலைவனே
மெய் நின்று சரீரத்தில் இருந்து கேட்டு அருளாய்
நான் செய்யும் விண்ணப்பம் மெய் என்றுமாம் –
அர்த்த பஞ்சகம்
தத்வ த்ரயம்
ரஹஸ்ய த்ரயம்
அனைத்தும் இதிலே உண்டே
அடியேன் தாஸ்யம் அறிந்து
ப்ராப்திக்குப் பலம் செய்யும் விண்ணப்பம் வாசிக கைங்கர்யம்

ஒழி வில் காலம் -3-3- இதன் விவரணம் –

ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தா ஸர்வ கைங்கர்யங்களும்
காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -அடியேன் செய்யும் விண்ணப்பம்
இமையோர் தலைவா -எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

அப்பிள்ளை
எம்பெருமானை சாஷாத் கரித்த ஆழ்வார்
அதுக்கு பிரதிபந்தகமான -பகவத் ஸ்வரூப திரோதான கரி -அவனையும் நம்மையும் மறந்து
அவன் திருவடிகளில் விழுந்து விருப்பம் பிரார்த்திக்கிறார்

பொய் நின்ற ஞானம்
அனாத்மானி ஆத்ம புத்தி -தேஹாத்ம அபிமானம்
அஸ்மின் அஸ்வம்-என்னது அல்லாததை என்னது என்று நினைக்க

நின்ற
இது நிலை நின்று

பொல்லா ஒழுக்கும்
அறிந்தபடியே செயல்பாடு
தேக சுகம்
பொய்ந்நின்ற ஞானத்துக்கு அனுகுணமான சரித்ரம்

அழுக்கு உடம்பும்
சரீரமும் இவை செய்ய

நிலை நின்ற ஸ்வ பாவம்
தேவரீர் திருவடிகளுக்கு இட்டுப் பிறந்த ஜென்மங்கள் தப்பாமல் பாட்டன் இது

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை
தேவரீர் திருவடிகளை பிடித்த பின்பு
நாங்கள் ஸ்பர்சியாத படி
சம்சாரிகள் வியசனம் தம்மது என்று நினைப்பவர் ஆகையால் யாம் என்கிறார்
ஆத்மனி பஹு வசனம் என்றுமாம்

உயிர் அளிப்பான்
உலகத்தோர் -யோக்யதை யோக்யதை பாராமல் ஸம் ரக்ஷணமே பிரயோஜனமாக

இமையோர் தலைவா
கர்மவஸ்யன் அல்லவே –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து
சம்சாரிகள் பிறக்காத தாழ்ந்த பிறவியில் அவதரித்து
ஆத்மாநாம் மானுஷ்யம் மணியே ராமம் தசாரதாத்மஜம்
எல்லா யோனியிலும் -சஜாதீய மெய்ப்பாடு -காட்டி
மாயமான் போல் அல்லவே
எல்லா யோனிகளிலும்
உம்முடைய கார்யம் நீரே நிர்வஹித்துக் கொள்ளும் என்றால்
நீர் அவதரித்த பிரயோஜனம் எதுக்கு

மெய்
உபக்ரமத்தில் அனைவரும் இங்கனே சொல்லி பின்பு மாறுவார்கள்
அப்படி அல்ல
என்னுடைய விஞ்ஞாபனம் ஸத்யம் மெய்யே

நின்று கேட்டு அருளாய்
எம்பெருமான் பேரா நிற்க போக நின்று கேட்டு அருள வேணும்
என்னுடைய சர்வ துக்கங்களும் போகும்

இவர் உக்தியால் இவர் ஸ்வரூபம் அறியலாம் என்று நின்று கேட்க
அடியேன்
என்றதும் -ஸ்வரூபம் அறிந்தவர்
மெய்ப்பாடு அறியலாம்

செய்யும்
இந்த அபேக்ஷைக்கு மேல் வேறே ஒன்றும் இல்லை
என்றுமே இதே வார்த்தை
என்றுமே மாறாது
விண்ணப்பம் வாசா கைங்கர்யம் கொண்டு அருள வேணும் என்கிறார் –

தாத்பர்யம்

சர்வஞ்ஞரான நித்ய ஸூ ரிகளுக்கும் தலைவன்
ஓ ஸ்ரீ மன் நாராயணனே
சம்சாரிகளை உஜ்ஜீவிக்க ராமாதி அவதாரங்களும் கிருஷி பரம்பரைகள்
அத்யந்த நிஹீனமான சரீரம்
அதில் ஆத்ம புத்தி பண்ணி
ரக்ஷணத்துக்காக அநந்தமான அசத்தியமான செயல்களை பண்ணிக்கொண்டு
இல்லாதபடி செய்து அருள வேண்டும்
இந்த விண்ணப்பம் வேறே பிரயோஜனத்துக்காக அல்கா
இது யதார்த்தம் என்கிறார் –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading