நிகமத்தில்
உங்களுடைய துன்பங்கள் எல்லாம்
வாசனையோடு போக வேண்டி இருக்கில்
இத் திருவாய் மொழியில்
ப்ரீதி முன்னாகச் சொல்லிக் கொண்டு
அவன் திருவடியைப் பற்றுங்கோள்
என்கிறார்
—————————————————————————————————————
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே
—————————————————————————————————————–
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
வினைகள் உங்கள் பக்கத்தில் வந்து கிட்டாதபடி
வாசனையோடு போகவேண்டி இருந்தீர்கோள் ஆகில்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல் –
அழியாத மாடங்களை உடைத்தான
திரு நகரியை உடைய ஆழ்வார் அருளிச் செய்த
ஆப்தர் உடைய உபதேசம் ஆகையாலே
திருவாய் மொழியில் பிறந்த வற்றில் அர்த்தவாதம் இல்லை
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
நம்பத் தகாதவர்கள் சொல்லிலும் விட ஒண்ணாத
இனிமையை உடைத்தான இப்பத்து
மலர் மணத்தோடு மலருமா போலே
இசையோடு கூடிப் பாடின தமிழ் –
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே –
ப்ரீதி முன்னாகப் பாடி
இருந்த இடத்தில் இராதே ஆடி
ப்ரீதியினால் தூண்டப் பட்டவர்களாய் கொண்டு
அவன் திருவடிகளில் விளுங்கோள்
இது அன்றோ நான் உங்களைக் குடிக்கச் சொல்லுகிற
வேப்பங்குடி நீர்
தேனே மலரும் திருப் பாதத்தை அன்றோ சேரச் சொல்லுகிறது –
நிகமத்தில்
இத் திருவாய் மொழி சொல்லி
பிரதி பந்தங்கள் எல்லாம் போகப் பெரும்
வினைகள் கிட்டாத படி
வேர் உடன் சவாசனமாக போகும்
அக்னி -மிச்சம் வைக்க கூடாது
மாடங்கள் உடைய திரு குருகூர்
ஆப்தர் குருகூர் சடகோபன்
ப்ரீதி உடன்
பள்ளியில் -மகன் -சொல்லிய ஆயிரம் நாணங்கள்
சொன்ன்னது யார்
சொல்லிய வார்த்தை யார்
ஆனாலும் விரோதி
அது போலே சொன்னது ஆழ்வார்
சொல்லப் பட்டது திரு வாய் மொழி
இசை உடன் கூடி
புஷ்பம் பரிமளம்
பாடலான தமிழ் இசை உடன்
பாடி
ஆடி
ப்ரீதி தூண்ட
திருவடிகளில் விழ
இது வன்றோ வேப்பம் குடி
திருவடியில் சேர்ந்து
பலம் இனிமை
சாதனம் இனிமை
தேனே ஒழுகும் திருப்பாதம்
தேனை பற்றி தேன் பருக
—————————————————————————————————————
மால் உமது வாஞ்சை முற்றும் மன்னு முடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து -மேலவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நத்தமக்குத் தாள்
சாரம்
உமது முடிவின் முடிவி;ல் உமது வாஞ்சை முற்றும் தந்து அருளுவேன்
செய்கிறேன் சொன்னதும்
சீரார் கணபுரம்
வேத நாவர் உள்ள சீர்மை
மாறன் தாள் நமக்கு கொடுத்து அருளுவார்
சரண்யா முகுந்தத்வம் உத்பலாக விமானம்
முகுந்தன்
முக்தி தருபவன்
மரணமானால் வைகுந்தம்
மோஷ பரதத்வம்
உத்பலம் மாமிசம் -விரும்பாத முனிவர் -மேம்பட்ட எம்பெருமான் முமுஷுக்கள் ஆத்மாவில் கண் வைத்து உத்பலர்
———————————————————————————————————————–
Leave a Reply