தாள தாமரை -பிரவேசம் –
முதல் பத்தால் -பகவத் விஷயம் -புருஷார்த்தம் -என்று அறுதி இட்டார் –
இரண்டாம் பத்தால் -அந்த கைங்கர்யத்தில் களை அறுத்தார் –
மூன்றாம் பத்தால் -களை அறுக்கப் பட்ட அந்த கைங்கர்யமானது பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் -என்றார்
நான்காம் பத்தால் -இப்படிப் பட்ட கைங்கர்யத்துக்கு விரோதிகள் ஐஸ்வர்ய கைவல்யங்கள் -என்றார் –
ஐந்தாம் பத்தால் -அந்த விரோதிகளைப் போக்குவானும் அவனே
என்றார்
ஆறாம் பத்தால் -விரோதிகளை அழிக்கும் தன்மையான சர்வேஸ்வரன் திருவடிகளிலே சரணம் புக்கார் –
ஏழாம் பத்தால் – இப்படி பெரிய பிராட்டியார் முன்னிலையாக சரணம் புக்க இடத்திலும்
தக்தபட நியாயம் போலே சம்சாரம் தொடருகிறபடியை கண்டு நோவு பட்டார் –
எட்டாம் பத்தால் -இப்படி பிரபன்னராய் இருக்கச் செய்தே தக்தபட நியாயம் போலே நம்மை விடாமல்
தொடருகிறது
நம்முடைய ஆத்மாவிலும் ஆத்மா உடன் சம்பந்தப் பட்ட
பொருள்களிலும்
நசை அறாத படியாலே -என்று பார்த்து அவற்றில் ஒரு நசை இல்லை என்றார் –
ஒன்பதாம் பத்தால் -இப்படி நசை அற்ற பின்பும் பாதுகாவாமல் ஒழிவான் என் -என்று ஐயம் கொள்ள –
நான் நாராயணன்
எல்லா ஆற்றலோடும் கூடினவன்
உம்முடைய விருப்பங்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறேன்
என்று அருளிச் செய்ய -அவனுடைய சீல குணத்தில் ஆழம் கால் பட்டார்
ஆழ்வார் உடைய பதற்றத்தைக் கண்டு
திரு மோகூரிலே-தங்கு வேட்டையாய் வந்து தங்கி
இவருக்கு அர்ச்சிராதி கதியையும் காட்டி \இவருடைய விருப்பத்தை நிறைவேற்றின படியை
அருளிச் செய்கிறார் இந்தப் பத்தாம் பத்தால் –
—————————————————————————————————————————————————-
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன -9-8-4- என்றார்
மரணம் ஆனால் -9-10-5-என்று அறுதி இட்டுக் கொடுத்தான் இறைவன் –
அவன் செய்கிறோம் என்று தலை துலுக்கினால்
அது பெற்ற தாய் மேலே நடக்கலாம் படியாய் இருக்கும் அன்றோ கார்யம் –
ஆகையாலே பெறக் கூடிய கார்யத்தைப் பெற்றாராய்
போக்கிலே ஒருப்பட்டார்
போமிடத்தில் முகம் பழகின தேகத்தையும் விட்டு
பலகாலம் பழகின பந்துக்களையும் விட்டு
தனியே யாய்ச் செல்ல வேண்டியதாலும்
போகிற இடம் தாம் கண்டு அறியாத நிலம் ஆதலானும்
அதுவும் நெடும் கை நீட்டு ஆதலானும்
வழியிலே தடைகள் பலவாய் இருத்தலானும் –
அதாவது
அவித்யா -அறிவின்மை /கர்மம் /வாசனை / ருசி
என்பன போன்று சொல்லுகிறவற்றைத் தெரிவித்த படி
இவற்றை அடியைப் போக்க வேண்டுமாதாலானும்
வழிக்கு துணையாக கொண்டு போம் போது
சர்வேஸ்வரனையே பற்ற வேண்டும்
அஃது ஏன்
இவன் தானே தனக்கு துணை ஆனாலோ -எனின்
இன்று அளவும் வர
பிறப்பு இறப்புகளிலே உழன்று திரிவதற்கு
காரியம் பார்த்து போந்தவன் அன்றோ இவன் –
இச் சரீரத்தோடு இருக்கிற நாளிலே நலத்தைச் செய்ய நினைத்தானே யாகிலும் -அதாவது
சரணாகதி செய்ய -நினைத்தானே யாகிலும் –
இவனுடைய முன் நிலையைப் பார்த்தால் இவன் தான் தனக்கு
துணையாக மாட்டானே –
வழியிலே கொடுபோம் இடத்தில் இவனுக்கு வரும் தடைகளை
அறிகைக்கு சர்வஞ்ஞனாக வேண்டும்
அறிந்தால் அவற்றைக் கொடு போகைக்கு-சர்வசக்தன் ஆக வேண்டும்
யா சர்வஞ்ஞ சர்வவித்- முண்டக உபநிஷத்
எவன் யாவற்றையும் பொதுப்பட அறிந்தவன் -தனித் தனி அறிந்தவன் -என்பன போன்ற
பிரமாணங்களால்
சர்வேஸ்வரனே சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -ஏன்னா நின்றதே அன்றோ –
எல்லாம் வல்லவனாய் இருந்தானே யாகிலும் -சம்பந்தம் உள்ளவனாய்
இராத போது பயன் இல்லையே
மாதா பிதா பிராதா நிவாச சரணம் ஸூ க்ருத்
கதி நாராயணா -சுபால உபநிஷத் –
தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும்
பாதுகாப்பவனும் சிநேகிதனும் பேறும்
ஆகிய இவை எல்லாம் ஸ்ரீ மன் நாராயணன் ஆகவே இருக்கிறான் -என்பன போன்றவைகளால்
அவனே எல்லா வித உறவினனாக சொல்லா நின்றது இறே
எம்மானும் எம்மனையும் என்னைப் பெற்று ஒழிந்ததின் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற -பெரிய திருமொழி -7-2-3-என்கிறபடியே
ஆசையாலே அறிவற்றவர்களாய் குழந்தையைப் பெற்று
இளமைக்கு விரோதி -என்று பொகட்டு போமவர்கள்
இவன் தான் பழகிப் போந்த முகத்தாலே -அம்மே -என்ற போதாக
பெண் குரலாலே -ஏன் -என்றும்
அப்பா -என்ற போதாக ஆன் குரலிலே ஏன் என்றும்
இப்படி முகம் கொடுத்துக் கொண்டு போகக் கடவனாய்
இருக்குமவன் அன்றோ -அவன் –
சரீரமானது கட்டுக் குலைந்து பரம பதத்திலே போய்ப் புகும் அளவும் செல்ல நடுவிலே உண்டாகும்
தடைகளை போக்கிக் கொடு போகைக்கு ஈடான விரகு அறியுமவனாக வேண்டும்
விரோதிகளை இரு துண்டமாக இட்டுக் கொடு போக வல்ல ஆற்றல் உடையவனாக வேண்டும்
அசுரரைத் தகர்க்கும்
துணிக்கும் வல்லரட்டன் –
தான் தனக்கு தஞ்சம் அல்லாத அன்று இவன் தனக்கு தஞ்சம் என்று
தன்னை இவன் கையில் காட்டிக் கொடுக்கும்படி நம்பத் தகுந்தவனாக வேண்டும்
சர்வஞ்ஞான்சர்வ சக்தன் -என்கிறபடியே தானே பிரமாணங்களால் பிரசித்தம் ஆக்கப் பட்டவன்
தஞ்சமாகிய தந்தை தாயோடுதானுமாய் -திருவாய்மொழி -9-6-2-என்று இவர் தாமே தஞ்சம் என்றாரே
மயர்வற மதிநலம் அருளினான் -என்று பேர் அருளினன்
என்னும் இடம்தாமே கைக் கொண்டார்
இனி சேஷியாய் இருக்கையாலே
தானே சம்பந்தம் உள்ளவனாய் இருக்குமன்றோ –
ஆக –
நம் விரோதிகளைப் போக்கி
பரம பத்து அளவும் கொண்டு போய்
வழி நடத்துவான் காளமேகம் -என்று அறுதி இட்டு
அரு நிலங்களிலே -செல்லுதற்கு அரிய – வழிப்போவார்
அகப்படை -என்று அந்தரங்கமான சேனை -என்று
மிடுக்கராய் இருப்பாரைக் கூட்டிக் கொண்டு
தம் கைப் பொருளை அவர்கள் கையிலே கொடுத்து
அமர்ந்த நிலத்திலே சென்றவாறே வாங்கிக் கொள்ளுவாரைப் போலே
உடலை விட்டு உயிர் பிரிகின்ற காலத்திலேயே
காளமேகத்தின் பக்கலிலே ஆத்மாவை அடைக்கலம் செய்து
பரம பதத்திலே புக்கால்
பின்னர் நமக்கு ஆக்கிக் கொள்ளக் கடவோம் -என்று
வழித் துணையாகப் பற்றுகிறார்-
இந்தத் தன்மைகள் ஒன்றுமே இல்லை யாகிலும்
அவன் முன்னே போக பின்னே போகா நின்றால்
தோளும் நான்குடைச் சுரி குழல் –
அவனுடைய வடிவு அழகினை அனுபவித்துக் கொண்டு
போமதுவே பிரயோஜனமாக போரும்படி ஆயிற்று இருப்பது –
ஸ்வ புருஷம் அபி வீஷ்யே பாசஹச்தம் வததி யம கில தஸ்ய கர்ண மூலே
பரிஹர மதுசூதன பிரபன்னான் பிரபு அஹம் அத்ய ந்ருனாம் ந வைஷ்ணவானாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-17-13-
திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தர் -இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு –
என்கிறபடியே எதிரிகள் கூசிப் போம்படி பெருமிதம் உடையவனாய் இருப்பான் ஒருவனைப் பற்ற வேண்டும் அன்றோ –
யமன் கையில் பாசத்தை தரித்த தன் வேலையாளைப் பார்த்து
பகவானை அடைந்தவர்களை விட்டு விடுங்கோள்
நான் எனையோர்க்கே தலைவன்
விஷ்ணு பக்தர்களுக்கு தலைவன் அல்லன்
என்று அவர்கள் உடைய காதிலே சொன்னான்
என்கிறபடியே அவனும் சொல்லி வைத்தான் அன்றோ –
—————————————————————————————————————————————————————-
மரணமான மிகப் பெரிய அச்சத்தை நீக்குதற்கு
பகைவர்களை அழிக்கும் தன்மையனான
காளமேகம் அல்லது துணை இல்லை –
என்று அவனைப் பற்றுகிறார் –
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
——————————————————————————————————————————————————————
தாள தாமரைத் –
சேற்றின் நன்மையாலே
உரத்த தாளை உடைய தாமரை -என்க –
மலையைச் சுமந்தால் போன்று பூமியின் பெருமையை
பொறுக்க வல்ல தாளை உடையதாதலின் –
தாள தாமரை -என்கிறார் –
உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட -பெரியாழ்வார் திருமொழி -4-9-8-
என்னக் கடவது அன்றோ –
சேற்று வாய்ப்பாலே உரம் பெற்று இருக்கிற
கமலமானது ஓங்கி அலர்ந்த போது-திரு உலகு அளந்த போது
எடுத்த திருவடிகளுக்கு போலியாய் இருந்தது-
சங்கை சூராணாம்திவி பூதலஸ்தை ததா மனுஷ்யை ககனே ச கேசரை
ஸ்துது க்ரமான்ய பிரசகார சர்வதா மம அஸ்து மாங்கள்ய விவிருத்தையே ஹரி -விஷ்ணு தர்மம் –
அப்போது தேவர்கள் உடைய கூட்டங்களாலும் -என்றபடியே
தேவர்கள் திரண்டு காலை நீட்டித் தலையாலே வணங்கி தண்டன் இட்டாப் போலே இரா நின்றது -செந்நெல் களானவை
விழுந்து தலை சாய்ந்து கிடக்கிற போது
தட மணி –
அணி தடம் –
இப்படிப் பட்ட பூக்களாலே அலங்கரித்தால் போலே
இருக்குமாயிற்றுத் தடம் –
அணி வயல் திரு மோகூர்-
இப்படிப் பட்ட தடங்களையும்
வயல்களையும் உடைய
திரு மோகூர்
ஊரில் இனிமை முழுதும் வயலிலே காணும் –
நாளும் மேவி –
நாள் தோறும் நாள் தோறும்
மிக்க விருப்பத்தைச் செய்து
அவ் ஊரில் விடிந்த விடிவு தோறும் அவனுக்கு
அத்ய மே சபலம் ஜன்ம சூப்ரபாதாச மே நிச
யத் உந்தித்ராப்ஜ பத்ராஜம் விஷ்ணோ த்ரிஷ்யாமி அஹம் முகம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-8
என்னும்படியாயிற்று இருப்பது –
நன்கமர்ந்து நின்று –
இவ் ஊரில் வசித்தலை ஒழிய
வேறு ஒரு பிரயோஜனத்தை கணிசியாதே
இது தானே பிரயோஜனமாய் நின்று –
அசுரரைத் தகர்க்கும்தோளும் நான்குடைச் –
அசுரக் கூட்டத்தைத் துணித்து அடுக்கி
விரோதியைப் போக்கிக் கொண்டு போக வல்லவன்
என்று தோற்றும்படியான
திருத் தோள்கள் நான்கினையும் உடைய –
இவர் இப்படி அறிந்தபடி எங்கனே என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்க –
விடுகாதானாலும் தோடு இட்டு வளர்த்த காத்து -என்று தெரியும் காண் -என்று அருளிச் செய்து அருளின வார்த்தை –
சுரி குழல் –
நெடு நாள் பட பிறப்பு இறப்பு களிலே உழன்று வருவதால்
உளவாய எல்லா துன்பங்களும்
ஆறும்படியாக இருக்குமாயிற்று
பின்னே போகிறவனுக்கு முன்னே போகிறவன்
ஒரு கால் திருக் குழலை குலைத்து நுழந்த
கேசவ கிலேச நாசந-மகா பாரதம் –
கேசவன் கிலேசத்தை நாசம் செய்பவன் எண்ணக் கடவது அன்றோ –
கமலக் கண் கனி வாய்-
மகளிருடைய பொய்யான நோக்கிலும்
பொய்யான முறுவலிலும்
அகப்பட்ட நெஞ்சாறல்
எல்லாம் தீரும்படி –
மெய்யான நோக்கும்
மெய்யான முறுவலும்
இருக்கும்படி சொல்கிறது –
இராஜாக்கள் போகும் போது முன்னே மேகம் நீர் விடுமா போலே
முன்னே காளமேகம் வனப்பாகிய அமிருதத்தை
பெய்து கொண்டு போக
பின்னே அக்குளிர் வாசத்தை அனுபவித்துப் போகலாம்படி
இருக்குமாயிற்று
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே-
காளமேகத்தை ஒழிய
வேறு வழித்துணை
உடையோம் அல்லோம் –
உடனே பெற துடித்து கிடக்க
சரீர சமனாந்தரம் -மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அறிந்து சமாகிதர் ஆகிறார்
ஆப்தன் வழித் துணை -ஆப்த தமன் -திரு மோகூர் காள மேக பெருமாளை பற்றுகிறார்
வழித் துணையாம் காள மேகத்தை கதியாக்கி
நாளேல் அறியேன்-மரணமானால் அறுதி இட்டு கொடுக்க
செய்கிறோம் தலை துலுக்கினால் பெற்றது போலே ஹிருஷ்டர் ஆகலாமே
அடுத்த ஷணம் கிடைத்தால் போலே பெற்றால் கிடைக்கிற -கட்டுச் சோறு கட்டி சித்தமாக
மேல் செய்ய வேண்டும்படி ஒருப்பட்டார்
முகம் பழகிய தேகம் விட்டு
பந்துக்களையும் விட்டு
பொய் சேருகிற இடம் தனியாக
நெடும் கை நீட்டு பரம பதம்
வழியிலே பிரதி பந்தங்கள்
அர்ச்சிராதி -அர்ச்சிஸ் தொடக்க்கமான -மார்க்கம்
ஆதி -முதலான –
மண்டலத்தை கீண்டு புக்கு –
கண்ணாவார் கண்ணில் பிறந்த கண் மணி -ஆச்சர்ய ஹிருதயம்
சஷூஸ் சூர்யா அஜாயத கண்ணில் பிறந்த சூர்யன் முக்ய மார்க்க தலை வாசல்
வழியில் தடைகள் -அவித்யா கர்மா வாசனை ருசிகள் உண்டே
அடையப் போக்கி வழித் துணையாக ஒருவரை பற்ற
சர்வேஸ்வரனைப் பற்ற வேண்டும்
இவன் -தானே துணையாக மாட்டான்
சம்சாரிக்க கார்யம் பார்த்து போந்தவன் இவன்
சரீரம் உடன் உள்ள நாள்களில்-முமுஷூ மோஷம் இச்சை -ஹித சிந்தை பண்ணினானே ஆகிலும்
பூர்வ வ்ருத்தம் பார்த்தால் இவன் துணை யாக மாட்டானே
துணையாக இருக்க மூன்றும் வேண்டும்
ஆபத்து அறிந்த சர்வஞ்ஞத்வம் வேண்டும்
போக்கும் சர்வ சக்தன் வேண்டும்
சம்பந்தமும் வேண்டுமே -பிராப்தி -சம்பந்தம் பிதா புத்திர -இத்யாதி
சர்வேஸ்வரன் ஒருவனே சர்வஞ்ன சர்வ வித்
பிராப்தி –
இதர தேவதைகள் அப்ராப்தம் -ஏற்பட்டது பகவான் இடம் மட்டும்
மாதா பிதா-பிராதா -சுஹ்ருத் நாராயண
எம்மானும் யெம்மனையும் என்னை பெற்று ஒழிந்த பின்பும்
அம்மானும் அடியேனுக்கு ஆகி நின்ற –
பிள்ளை இருந்தால் யவ்வன விரோதி பொகட்டு போவார்கள்
திரு மழிசை பார்க்கவா அப்சரஸ் பொகட்டு போக –
இவன் வாசனை அம்மா -கூப்பிட பெண் குரல் கொடுத்து முகம் கொடுத்து கொண்டு போவான்
சாமர்த்தியம் -விரகு அறிந்து போக்கும் சக்தி
இரு துண்டாக்கி விடுகை
தனக்கு தான் தஞ்சம் இல்லா அன்று தான் தஞ்சம் என்று காட்டிக் கொடுத்து
தஞ்சமாகிய தந்தை தாய் –
மயர்வற மதி நலம் அருளி -தயாளு -காட்டி கொடுத்தான்
சேஷி பிராப்தன்
விரோதிகளை போக்கி -பிராப்ய பூமி கூட்டி போக காள மேகம்
காட்டு வழியில் போவார் -போகி -வண்டி இழுத்து சாமான் தூக்கி
கைப்பணம் கூட அவர்கள் இடம் கொடுத்து
மெய்க்காவல் –
அமர்ந்த நிலத்தில் சென்றவாறே வாங்கிக் கொள்வாரை போலே
ஆத்மாவை கொடுத்து
பிராப்ய பூமி புக்கு வாங்கிக் கொள்ள வழித் துணையாக பற்றுகிறார்
இம் மூன்றும் இல்லை யாகிலும் அவன் வடிவு அழகை பின்னே பருகி அனுபவிப்பித்து போவதே கர்த்தவ்யம்
வள்ளலே உன் தமர்க்கு நமன் தமர் கள்ளர் போலும் -பெரிய திரு மொழி
ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரை பார்த்து இருந்து நமன் தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதும் -என்று தொடாமை கை கூப்பி ஸ்தோத்ரம் சோத்தம்
சோத்தம் பண்ணு தாச்சி ஸ்தோத்ரம் குழந்தை
எதிரிகள் கூசிப் போகும் படி
பரிகரம் மது சூதனன் பிரபன்னம் -கர்ண மூல -பிரபு ந வைஷ்ணவானாம்
இறைஞ்சி சாதுவராய் போக -நமனும் தம் தூதுவரைக் கூவி செவிக்கு
பேராயர் ஆட்பட்டால் -கீழ் வர மாட்டான் -எம் கோன் அவன் தமரே -என்று ஒழிவது அல்லால் நமன் தமரால் ஆராயப்ப் பட்டு அறியார் கண்டீர்
வீரனார் வேறு செய்து –இடாமையால் -நமன் கூறு செய்து —
கெடும் இடர் -ஆய வெல்லாம் கேசவா
காள மேகம் ஆப்தன் பற்றுகிறார்
மதிப்பான் –
விரோதி நிரசன சீலன்
அவன் அல்லது துணை இல்லை -மற்று ஓன்று இல்லை கதியே
தாள தாமரை
நாளங்கள் –
தடாகம் தாமரை குளம் -தாள தாமரை தடாகம் இன்றும் பெயர்
மலை சுமப்பது போலே
மலர் கமலம் -திருவரங்கம் நெல் கதிர் சாய்ந்து
திருவடி நீட்டி தேவர்கள் வணங்கு -பெரியாழ்வார்
சேற்றின் நன்மையால் -தாள்களை உடைய தாமரை
ஓங்கி -திருவடிகளுக்கு போலி
வரம்பற்ற -தேவர்கள் திரண்டு காலை நீட்டி அஷ்டாங்க நமஸ்காரம்
சென்னெல்கல் விழுந்து தலை சாய்க்க
தட மணி பூக்களால் அலங்க்ர்தம்
போக்யதை வயலில் காட்ட
நாளும் மேவி
விடிந்த விடுவுகள் தோறும் -நன்கு அமர்ந்து -ஆசை உடன் இருக்கும் திவ்ய தேசம்
நித்யம் -வாசம்
வேறு ஒரு பிரயோஜனம் கணிசியாதே நன்கு அமர்ந்து நின்று
நின்ற நிலையிலே அசுரர் தகர்க்கும் தோள் நான்கு உடை
அசுரர் சங்கம் -விரோதி போக்க வல்லவன்
இவர் இப்போது அறிந்த படி எங்கனே என்னில்
விடு காது ஆனாலும் தோடு இட்ட காது-அறியுமா போலே
சுரி குழல் சம்சாரம் தாபம் ஆறும்படி
பின்னே போக முன்னே கேசவ கிலேச நாசனன்
பரம ஆகர்ஷகம்
நரகம் -நமன் -கேசவா சொல்லாமல் போனாயே -கிம் துவா ந அர்ச்சித கேசவ கிலேச நாசன -பிரமாணம்
கமலக்கண் -பொய்யான நோக்கிலும் பொய்யான முறுவலில் அகப்பட்டு நெஞ்சாரல் துக்கம்
கனிவாய்
காள மேகம் வர்ஷிக்க
ராஜாக்கள் போகும் பொழுது மேகர் முன்னே நீர் இடுவாரைப் போலே
பரம பதம் போகும் ஆழ்வாருக்கு வர்ஷித்து கொண்டு போக
சௌந்த்ர்ய அமர்த்தம் வர்ஷித்து போக
குளிர் வாசம் அனுபவித்து போக
அப்படி பட்ட காள மேகம் அன்றி மற்று வழித் துணை இல்லை
——————————————————————————————————————————————————–
Leave a Reply