திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-9-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

மேலே தனித் தனியாகவும்
திரண்டும் வந்த
பாதகப் பொருள்கள்
ஒன்றுக்கு ஓன்று முற்கோலி
நலியா நின்றன
என்கிறாள்

————————————————————————————————————

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ
பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வ ண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்

——————————————————————————————————————–

பொங்கிள வாடை -புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ –
பெண் கொலை என்றவாறே கிளர்ந்து
இளகிப் பதிக்கிற வாடைக் காற்றானது புது மனத்தைக் கொண்டு எறியா நின்றது –

புன் செக்கராலோ –
செக்கர் வானமும் சென்று மறையும் அளவாயிற்று -என்றது
மேல் வருகிற காலத்தின் தண்மையைப் பார்த்தவாறே
பகலைப் போன்று மாலைப் பொழுதும் தேட்டமாய் வந்து விழுந்தது
ஆளவந்தார் நிர்வாஹம் படி வியாக்யானம் இது –
எம்பெருமானார் நிர்வாஹம் -கொடிய செக்கர் வானமும் வாரா நின்றது

அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில்கொடிது –
அது -பேச்சுக்கு நிலம் இல்லாத படிக்கு ஆயிற்று கலந்தது –
சோக விஷயமாக 24000கிரந்தம்-i கிரந்தம் -32 எழுத்துகள் – சொன்னவன்
கலவி விஷயமாக ஒன்றும் சொல்லிற்றிலன் அன்றோ
பேச்சுக்கு நிலம் அல்லாமையாலே
ஸ அநு வ்யாகரனாத் பூய சோக ஸ்லோகத்வம் ஆகத-பால -2-40-
சோக வேகத்தால் கூறியது இலக்கணங்கள் உடன் கூடியது ஆயிற்று -என்கிறபடியே
சோக விஷயமாகவே அன்றோ சொல்லிற்று -ராமஸ்து சீதயா ஸார்த்தம் –
அப்படி கலந்து அகன்ற நம் கண்ணபிரானுடைய
கலக்கிற போதை தாழ்ந்த பேச்சுக்களும்
அவன் வருத்துவதைக் காட்டிலும் வருத்தா நின்றன
கலக்கிற போது நமக்கு உரிமைப் பட்டவன் என்னும்படி இருந்த
கிருஷ்ணன் உடைய அக் காலத்து செயல்கள் அவனைக் காட்டிலும் வருத்தா நின்றன
ஆதலின் கண்ணனில் கொடிது -என்கிறாள் -என்றது
இச் செயல்களைக் காட்டிலும் இன்னமும் அவன் தானே நல்லன் -என்றபடி –

இனி அதனில் உம்பர் –
பின்னையும் அதற்கு மேலே
மது மண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்து –
மதுவையும் மணத்தையும் உடைத்தான
மல்லிகையாலே செறியத் தொடுத்த மாலை
அழகிய பசும் சாந்து
இவையும் நலியா நின்றன –
அதற்கு மேலே பஞ்சமம் வைத்து –
பஞ்சமம் ஆகிற பண்ணையும் கூட்டிக் கொண்டு
குழல் ஓசை துன்புறுத்துகிறது -என்னுதல்
இவற்றில் பஞ்சமம் என்கிற பண்ணையும் கூட்டிக் கொண்டு -என்னுதல்

அது மணந்து –
அப்படியே கலப்பதற்காக -என்னுதல்
அன்றிக்கே
அது மணந்த -என்று கொண்டு
அப்படிக் கலந்த ஆயர் மகளிர்க்காக -என்னுதல்

இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் -அத் தீம் குழற்கே
தன் திரு அருளுக்கு இலக்கான ஆயர் பெண்களுக்கே
காவல் காத்து கிடக்கிறவர்களை தொடை குத்தி உறங்கச் செய்து
ஒரு பருவத்தில் பெண்களை மயிரைப் பற்றி இழுக்கும் ஆயிற்று இக் குழல் ஓசை
ஆதலின் -இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும்-என்கிறாள்
இன்னார்க்கு தொடுத்த அம்பு -என்னுமா போலே –

குழற்கே உய்யேன் நான் –
துன்புறுத்தும் மற்றைப் பொருள்களுக்கு பிழைத்து இருந்தேன் ஆகிலும்
இக் குழல் ஓசைக்கு நான் பிழைக்க மாட்டேன்
அவை எல்லாம் ஒரு படியும்
இது ஒரு படியும் ஆயிற்று நலிகிறபடி

ஒன்றுக்கு ஓன்று முற் கோலி நலியா நின்றன இவை
புது மணம் முகந்து கொண்டு எறியா நின்றது -வீசி -எறிதல் –
ஸ்த்ரீவதம் என்றவாறே
செக்கர் வானம் புன்மையான சிகப்பு -மறையும் அளவு
பகல் ஆறி சந்த்யா இரவை நினைத்தவாறே சந்த்யா தேவலை
அவிஷயாம -அது -என்பதால் –
கலந்த பொழுது ஆனந்தம் உண்டாகும் படி கலந்து அகன்றான்
அத்தை கொடுத்தான் -சந்தோஷம் வர்ணிக்க முடியாமல்
வாக்குக்கு அவிஷயமாம் படி கலந்தது
சோகா விஷயமாக 240000 ஸ்லோகம் அருளிய வால்மீகி
சம்ச்லெஷ விஷயமாக ஒன்றும் சொல்ல வில்லையே
சம்ச்லெஷம் சொல்ல வில்லை -யோ என்ன
மானுஷாச்ன் போகான் –
மிதுனம் பறவை சோகத்தால் ஸ்லோகம்
சம்ச்லெஷம் ஓன்று இரண்டு
விச்லெஷம் பின்னால் சொல்ல இது வேண்டுமே
கள்வன்
கண்ணனில் கொடிது கலவம்
நமக்கு ஸ்வம் போலே கலந்து
அவன் தன்னில் காட்டில் கிரித்ரிமம் பாதகம்
அதுக்கு மேலே
மதுவையும் மணத்தையும் சேர்ந்த கோவை மாலை மல்லிகை மாலை
குழல் ஓசை பாதகம்
உய்யேன்
கலக்க –
இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும்
காட்டுக்கு வந்தது அறிவிக்க
காவல் காத்தார் –
குழல் ஓசை கேட்டு தூங்க வைக்க -தொடை தட்டி உறங்க
இளம் பெண்கள் ஓடி வர வைக்கும் -மயிர் பற்றி இழுக்கும்
அல்லாத பாதக பதார்ந்தங்கள் போலே இல்லை
இது மாய்த்து விடுகிறது

———————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply