இப்படி
அவனைப் பெற்று
கிருதார்த்தன் ஆனேன்
என்கிறார் –
————————————————————————————————————————-
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே
———————————————————————————————————————————-
அடியான் இவன் என்று –
மேல் செய்யப் புகுகிற கொடை தக்கதே -என்று சொல்லுகைக்காக
அடியான் என்று
ஒரு பெயரை இட்டாயிற்றுக் கொடுத்தது –
எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியானை-
கொள்ளுகிற என் அளவு அன்றிக்கே
தன் அளவிலே அருள் செய்த சர்வேஸ்வரனை –
அருள் பெறுவார் அடியாரே அன்றோ –
புத்ரர்களுக்கு அம்சம் அன்றோ உள்ளது
எல்லா வற்றிலும் கூறு உண்டாய் இருக்கும் அடியார்க்கு –
பிள்ளை அகளங்க பிரமராயர் -பட்டரைசமாதானம் செய்ய வேண்டும் என்று
பட்டர் திரு உள்ளத்துக்கு உகந்த -இருகை மத வாரணம் –
என்கிறவனை பட்டர் பக்கல் வரவிட
அவனும் சில வார்த்தைகளை விண்ணப்பம் செய்து
திரு உள்ளம் மகிச்சியை உடையதாய் இருக்கிற அளவிலே
இவனுடைய வைஷ்ணத்வம் இருக்கும் படி திரு உள்ளம்
பற்றி இருக்கை உண்டே -என்றானாக
சொல்ல வேண்டுமோ கர்ப்ப தாசர்கள் -கருவிலே திரு உடையார் -அன்றோ என்றது தொடக்கமாக
இப்பாசுரத்தை அருளிச் செய்தார் பட்டர் –
ஆர் அருள் செய் நெடியானை –
பெறுகிற என் அளவில் அன்றிக்கே
தருகிற தன் அளவிலே தந்தான் –
தனக்கு அளவு தான் என் என்ன –
நெடியானை –
சர்வேஸ்வரன் -என்னும் அத்தனை –
நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் கொடியானைக் –
இது தான் நான் இன்று இருந்து விரித்து கூற வேண்டி இருந்ததோ
கட்டிக் கொண்டு இருக்கிற கொடியிலே தெரியாதோ –
சூரம் வீரம் முதலிய குணங்களில் பிரசித்தியை உடையனாய்
பகவானை எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு இருக்கும் அனுபவத்தாலே
காட்சிக்கு இனிய வேஷத்தை உடையனாய்
இருக்கிற பெரிய திருவடியை கொடியாக உடையவனை
பெரிய திருவடியை அங்கீ கருத்தால் போலே என்னை அங்கீ கரித்தவனை –
இப்படி அங்கீ கரித்த தற்கு இத்தலையில் என்ன நன்மை உண்டு -என்னில் –
குன்றாமல் உலகம் அளந்த அடியானை –
குணத்தையும் குணம் இல்லாமையையும்
நிரூபணம் செய்யாதே
திரு உலகு அளந்து அருளினாப் போலே
ஒரு காரணமும் இல்லாமல் நிர்ஹெதுகமாக -அங்கீ கரித்தான் -என்கிறார்
ஒரு அடியும் குறையாமல்
பூமிப் பரப்பை அளந்து கொண்ட
திருவடிகளை உடையவனை –
தன் பெருமையையும் சௌலப்யத்தையும் என்னை அனுபவிப்பித்தான் –
அடைந்து அடியேன் உய்ந்தவாறே –
அடிமைத் தன்மையே காரணமாக
உஜ்ஜீவித்த படி -என் –
அடிமைப் பட்டு இருக்கும் ஞானத்துக்கு
இத்தனை பிரயோஜனம் உண்டோ –
அடைந்து அடியேன் உய்ந்தவாறே
ஆரருள் செய்த நெடியான்
அடியான் இவன் என்று தேர்ந்து எடுத்து
மேல் பண்ண புகுகிற ஔதார்யம்
சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக அடியான் பெயரைக் கொடுத்து
தன்னளவில் கொடுத்த –
கொள்ளும் இவன் அளவு அன்றி –
அருளை வாரி வழங்கி
யோக்யதை ஒன்றும் இல்லாமல் அற அருள்
அருள் பெறுவார் அடியார் இ றே
புத்ரர்களுக்கு அம்சம் மட்டும்
அகளங்க பிரமராயன் ஐதிகம் பட்டரை சமாதானம் செய்ய
பிரமராயன் மந்த்ரி –
திருக் கோஷ்டியூர் -போக
இருகை மத வாராணம் அனுப்பி -அந்தரங்க கைங்கர்யம் சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர் பட்டர் ப்ரீதி கொண்டவர்
வார்த்தை பேச திரு உள்ளம் பிரசன்னமாக
கர்ப்ப தாசர்கள் -தொண்டைக்குலம் -பாக்யம்தான் –
அடியான் -கர்ப்ப தாசன்
தீர்த்த காரர் குடும்பம் –
தீர்த்த காராராக திரிந்து போகிறார்கள் அருமை தெரியாமல் இப்பொழுது
திருவேலைக்காரனை அனுப்பி -கைங்கர்ய பரர
நெடியான் சர்வேஸ்வரன்
புள்ளின் கொடியான் –
கட்டிக் கொண்ட கொடியாலெ
நிறை புகழ் அழகிய சிறகை
சௌர்ய வீராதி புகழ்
நிரந்த பகவத் தர்சனீயத்தால் அழகிய
அவனை விஷயீ கரித்தால் போலே என்னையும்
நிர்ஹெதுகமாக
ஓர் அடியும் குறையாமல் பூமிப் பரப்பை கொண்ட -எளிமை
பெருமை சௌல்பயம் இரண்டையும் அனுபிப்பித்து
சேஷத்வ ஞானத்துக்கு இவ்வளவு பிரயோஜனம் உண்டோ
—————————————————————————————————————————————————
Leave a Reply