திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

தன்னை அனுபவிக்கப் பெற்று
அதற்கு மேலே
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அமுதமாம்படி
திருவாய்மொழி பாடவும் பெற்றேன் –
என்கிறார் –

—————————————————————————————————————————————-

கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –

—————————————————————————————————————————————-

கண்டு கொண்டு-
நான் அழைப்பன் -என்ற விடாய் எல்லாம் கெட
கண்களால் காணப் பெற்று –

என் கண்ணினை ஆரக்-
காணக் கருதும் என் கண்ணே -என்ற கண்கள் விடாய் கெட
கலியர் -வயிறார உண்டேன் -என்னுமா போலே
ஆரக் கண்டு கொண்டு -என்கிறார்

களித்து-
மறுகின நெஞ்சு களித்து –

பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத் –
இவ்வுகப்புக்கு இடைச் சுவரான
பழைய கர்மங்களை
வாசனையோடு போக்கி –

தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன் –
என்னளவும் அன்றிக்கே –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் உபகாரகன் ஆகப் பெற்றேன் –
நானும் உண்டு
என் வேலையாள்களும் ஜீவித்து
என் உறவினர்களுக்கும் விருந்திட வல்லேன் ஆனேன் –
என்பாரைப் போலே –
சொல் மாலைகள் சொல்லப் பெற்றேன்
அடியார்கட்கு அடிமை யாதலை
எல்லையாக உடைய பேற்றினைப் பெற்றேன் –
பெற்ற பேற்றின் கனம் இருந்த படியாலே
இது தான் தோன்றியான கைப்பற்று அடியாக வந்தது ஓன்று அன்று –

அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –
சர்வேஸ்வரனாலே
அடியவனாக
அங்கீகரிக்கப் பட்டவன் ஆனேன் –

ஸ்ரீ வைஷ்ணவர் போக்யமாக
திருவாய் மொழி சொல்லப் பெற்றேன்
தொண்டர்க்கு அமுது சொல்லப் பெற்றேன்
அனுபவம் வெளி
வண் குருகூர் வண் சடகோபன்
ஆழ்வாரை கொடுத்த வண்மை
திருவாய்மொழி கொடுத்த வண்மை
கண்டு கொண்டு கண் இணை ஆர கண்டு கொண்டு விடாய் தீர
ஆரா அமுதம்
வயிறு ஆர
திருப்தி ஆர்தல்
கண்ணார சேவித்தேன் -என்கிறார் ஐவரும்
மறுகின நெஞ்சு களித்து
பண்டை வினை பற்றோடு
கர்மங்கள் பிரார்ர்தன சவாசனமாக போக்கி
தொண்டர்க்கு அமுது உண்ண
ஸ்ரீ வைஷ்ணவர்
நானும் உண்டு பரிகரமும் உண்டு
உபகரிக்கும் படி
சொல்மாலைகள்
ததீய சேஷத்வம் பரிந்த பேறு பெற்றேன்
பாகவத கைங்கர்யம் திருவாய் மொழி பாடி
தான் தோன்றி இல்லை
பேற்றின் கணம்
கிருபையால்
அண்டத்து அமரர் பெருமான்
சர்வேஸ்வரன் விஷயீ கரித்த பலத்தால்
பக்தாம்ருதம் -இத்தை கொண்டே தனியன் நாத முனிகள் –
மாலும் -7 பத்து
தூ முதல் பத்தருக்கு தான் தன்னை சொன்ன வாய் முதல் அப்பன்
அமரர் பெருமான் அடியேனே -ததீய சேஷத்வம் பர்யந்தம் ஆக்கி வைத்தானே

——————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading