திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

எல்லா பொருள்களுக்கும் அந்தராத்மாவாய் –
பிரமன் முதலாயினார்க்கு எல்லாம்
காரணன் ஆனவனை காணப் பெற்றேன்
என்று இனியர் ஆகிறார் –

——————————————————————————————————————————————–

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே

———————————————————————————————————————————————

உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம் –
மேல் எழுந்த பார்வையில் ஓன்று போல் இருக்க
சிலவற்றை விதிப்பது
சிலவற்றை விலக்குவது
விலக்கியனவற்றை ஒழிதலைச் சொல்லுவதாய்க் கொண்டு
உபதேசிப்பாரும் கேட்ப்பாருமாய் பொறுக்கிற புறச் சமயங்கள் எல்லாவற்றாலும் –

பொருவாகி நின்றான் -அவன் –
பொரு -தடை
அவற்றால் தன்னை இல்லை செய்ய ஒண்ணாத படி –
தடை அற்றவனாய் நின்றான் –

எல்லாப் பொருட்கும் அருவாகிய -வாதியைத்-
எல்லாப் பொருள்கட்கும் அந்தராத்மாவாய்
அவற்றை எல்லாம் நியமிப்பதில் முதன்மையன் ஆனவனை –

தேவர்கட்கு எல்லாம் கருவாகிய –
பிரமன் முதலானதேவர்களுக்கு எல்லாம் காரணனாய்
உள்ளவனே –

கண்ணனைக் –
காரியங்களிலே ஒன்றுக்கு-வசுதேவருக்கு -தான் கார்யம் ஆனவனை -சௌலப்யம் காட்ட

கண்டு கொண்டேனே –
அவதாரத்துக்கு பிற்பாடராய் இருக்க
கண்டு கொண்டேன் -என்கிறார் -இதற்கு கருது என் -என்னில் –
அன்பினால் நனைந்த மனத்தினர்க்கு என்றும் காணலாம்
அவதார சம காலத்திலும் காண ஒண்ணாது சிசுபாலன் முதலாயினர்க்கு-
புறச் சமயங்களால் அசைக்க முடியாதவனாய்
எல்லாப் பொருள்கட்கும் அந்தர்யாமியாய்க் கொண்டு
எல்லாரையும் நியமிக்கின்றவனாய்
பிரமன் முதலாயினார்க்கும் காரணனாய் இருந்து வைத்து
அடைந்தார்க்கு சுலபன் ஆனவனைக்
காணப் பெற்றேன் -என்கிறார்

அந்தராத்மா -அருவாகிய ஆதி
காரண பூதன்
காணப் பெற்றேன் -இனியர் ஆகிறார்
உருவாகிய ஆறு சமயங்கள்
பொறு தடையாக நின்றான் –
சார்வாகம் ஜைனம் வைசெஷிகன் சாணக்கியம் பாசுபதம் பாஹ்ய மாதங்கள்
பாசுபதி ஆகமம் பிரமாணம் கொண்டு
போருவாகி தடையாகி
ஆபாத பிரதியில் -உருவாக்கி உபதேசிப்பாரும் கேட்பாரும் உருவாக்கி இருப்பது போலே தோற்றும்
அவற்றால் தன்னை இல்லை செய்யாத படி
அருவாகி அந்தராத்மா நியாமகத்தால் பிரதானம்
ஆதி காரணம்
தேவர்களுக்கு கரு
கண்ணனை கார்யங்களில் ஒன்றுக்கு தான் காரியம்
கண்டு கொண்டேனே
அவதாரத்துக்கு பிற்பாடராக
அவதாரம் காண ஒண்ணாது சிசுபாலாதி
இவர் கண்டு கொண்டார்
பாஹ்ய சமயங்களால் இல்லை செய்ய முடியாத
அருவாகி ஆதி கரி -மென்மை
கண்ணனை சௌலப்யம்
ஆஸ்ரித சுலபன்
கண்டு கொண்டேனே என்கிறார் –

————————————————————————————————————————————————-

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading