திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

தூணிலே தோற்றி
பிரகலாதனுடைய துன்பத்தை தீர்த்தால் போன்று
தம் துன்பத்தை தீர்த்த படியை நினைந்து
ஏத்துகிறார்

—————————————————————————————————————————

உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே

—————————————————————————————————————————-

உகந்தே யுன்னை உள்ளும் –
பிரிந்த துயரத்தோடு தலைக் கட்டும் உகப்பு அன்றிக்கே
ஒரே தன்மையாக உன்னை அனுபவிக்கும்படியாக –

என்னுள்ளத்து –
எண்ணே-கொண்ட சிந்தையை உடைத்தான
என் உள்ளத்து –

அகம்பால் அகந்தான் –
உள்ளுக்கும் உள்ளே -என்றது
உள் உள் ஆவி -என்னும்படியே
கமர் பிளந்த இடம் எங்கும் மறு நினையும்படி -என்றவாறு –

அமர்ந்தே –
தன பேறாக மிக்க காதலைச் செய்து –

யிடங்கொண்ட –
இடம் உள்ள எங்கும் தானே ஆம்படி நிறைந்த –

வமலா –
இவ்விருப்புக்கு அவ்வருகு ஒரு பயனைக் கணிசித்து அன்றிக்கே -ஸுயம் பிரயோஜனமாகவும்
ஒரு காரணத்தையும் பற்றியும் இன்றி நிர்ஹெதுகமாக இருக்கையும் –
எண்ணே கொண்ட சிந்தையதாய் -என்றதனை ஒரு சாதனமாக நினைத்து இலர் –

மிகுந்தானவன் –
பகைமையில் ஒரு அளவில்லாத தானவன் -என்றது
தன்னை இல்லை செய்கை அன்றிக்கே
தன் உயிர் நிலையிலே நலிந்தவன் -என்றபடி
உதாரா சர்வ ஏவ எத ஜ்ஞாநீது ஆத்மா ஏவ மே மதம்
ஆஸ்தித சஹி யுக்தாத்மா மாமேவ அநுத்தமாம் கதிம் – ஸ்ரீ கீதை -7-18-
ஞானியானவன் என் உயிர் என்னக் கடவது அன்று –

மார்வகலம் இரு கூறா நகந்தாய் –
அகன்ற மார்வானது இரண்டு கூறு ஆகும்படி செய்ய வல்ல
நகத்தை உடையவனே
நகத்தாய் -எனபது நகந்தாய் -என்று வந்தது -மெலித்தல் விகாரம் –

நரசிங்கமதாய வுருவே –
என்றும் ஒரே தன்மையை உடைய உருவம் –
சதைக ரூப ரூபாயா விஷ்ணவே சர்வ ஜிஷ்ணவே-ஸ்ரீ விஷ்ணு புராணம் –
என்கிற விக்ரகத்தை இப்படி கொள்வதே –
இத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என்னில் –
அடியார்கள் சூளுறவு செய்த காலத்தில் வந்து
தோற்றுமவன் ஆகையால்
தூணிலே தோற்றினால் போலே வந்து தோற்றி
மனத்தின் இடம் எல்லாம் புகுந்து
கமர்பிளந்த இடம் எங்கும் நீர் பாய்ச்சுமாறு போலே
நிரம்ப என்னை அனுபவிப்பித்தான் –
என்கிறார் என்பது –

தூணிலே தோற்றி பிரகலாதன் ஆர்த்தி தீர்த்து அருளியது போலே
உகந்து உள்ளும் நெஞ்சு
உகந்தே -பிரியாமல் சம்ச்லேஷம் ஒன்றாலே ஏவ காரம் –
அனுபவிக்க
எண்ணே கொண்ட சிந்தை நினைத்த மாதரம்
அகம்பால் -அகம் -உள்ளுக்கும் உள்ளே -ஏகாந்தம் -அறைக்கு உள்ளே பிறை
கமர் பிளந்த இடம் எங்கும் -நனையும் படி மறு நனையும் படி அமர்ந்தே
இடம் கொண்ட அவகாசம் கொண்ட இடம் எங்கும்
அமலா -ஹேது இன்றி தனது பேறாக
இருப்பே பிரயோஜனம் அவனுக்கு
இசைவுக்கே இவ்வளவு அனுக்ரஹம் செய்து அருளி
எண்ணே கொண்ட சிந்தை அதுவும் சாதனம் இல்லை
நிர்ஹெதுக கிருபை
கிடைத்த பேறு
எண்ணம் ஸ்வரூபம் தான்
தானவன் -மிகுந்த விரோதம் பிரதிகூல்யம் மிக்கு
தன்னை இல்லை செய்து அன்றி
தன் உய்ர் நிலை பிரகலாதனனை ஹிம்சித்து
ஞானி ஆத்மைவ மே மதம் –
என்னுடைய அபிப்ராயம்
வேதாந்த சித்தமா விசாரம் வேண்டாம்
ஞானிகள் என்னுடைய ஆத்மா
வேதாந்தம் –
அறிவார் உயிர் ஆனாய் -வேற்றுமை தொகை அன் மொழி தொகை இரண்டும்
மிகும் தானவன் –
முதுகில் அடிக்கலாம் வயிற்றில் அடிக்காதே போலே
அகன்ற மார்வி இரண்டு கூஒராக நகத்தால்
நகந்தாய் நகற்றாய் -நகம் உள்ளவன்
சதைக ரூபா ரூபாயா நரசிங்க உருவாக்கி
இரண்டு வடிவை
பிரதிஞ சமகாலம்
உள்ளே புகுந்து எல்லா இடமும் நிரம்பி
கஜேந்த்திரன் உதவ வந்த வேகமும் கூட பொறுக்க மாட்டாமல் ஆழ்வார் நிலை –

———————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading