நாம் எளியோமான கோடியிலே அன்றோ
உமக்கு பேறு கை புகுந்து இருக்க
நீர் இங்கன் படுகிறது என் -என்ன
என் நெஞ்சு காண்கையிலே
விரையா நின்றது
என்கிறார்
————————————————————————————————————————————
அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே
—————————————————————————————————————————————–
அம்மானை
சர்வேஸ்வரனை –
அமரர் பிரானைப்
நித்ய சூரிகளுக்கு தன்னைக் காட்டிக் கொடுத்து
அனுபவிப்பிக்கும் உபகாரகனை –
பெரியானைப் –
அவர்களுடைய ஸ்வரூபம் ஸ்திதி முதலானவைகள்
தனக்கு உரிமைப் பட்டவையாய்
தன்னை அவர்களால் அளவிட்டு அறிய முடியாமல் இருப்பவனை –
பிரமனை முன் படைத்தானை –
பிரமனை முன்னே உண்டாக்கினவனை –
அரியாய –
படைக்கப் பட்ட உலகத்திலே
அடியவன் பொருட்டு
அவன் சூளுறவு செய்த அந்த சமயத்திலே
தன்னை அழிய மாறி வந்து அவதரித்தவனை –
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற –
அடியாருக்கு உதவுகை அன்றிக்கே
அவர்களோடு கலந்து இருக்கும் தன்மையானை
வரி வாள் அரவு
வரியையும் ஒளியையும் உடைய அரவு
வரி -அழகுமாம் –
கரியான் –
வெளுத்த நிறத்தை உடைய திருவநந்த ஆழ்வான் மேலே
ஒரு காளமேகம் சாய்ந்தால் போலே
ஆயிற்று கண் வளர்ந்து அருளுவது –
கழல் காணக் கருதும் கருத்தே
என்மனமானது காண வேண்டும் என்று விரையா நின்றது
படுக்கைக்கு பரபாகமான வடிவும்
அதற்கு பரபாகமான திருவடிகளும்
ஆகிய இவற்றை ஆயிற்று காண ஆசைப் படுகிறது
எளியோமான கோஷ்டிபேறு கை புகா நிற்க எதனால் பதற்றம் -என்ன
நெஞ்சு காண துடிக்கிறதே என்கிறார் இதில்
எளியவன் கோஷ்டி நீர்
பேறு கை புகுந்து இருக்க இங்கனே படுகிறது என்ன
நெஞ்சு உன் கழல் காண துடிக்க
சர்வேஸ்வரன்
அமரர் பிரான் நித்ய சூரிகளுக்கு கட்டுக் கொடுத்து உபகரிதவன்
பெரியான் -ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்தி இவன் அதானம்
யாராலும் அரிய முடியாத
பிரமனை முன் படைத்தானை அரியானே
அரியாய -நரசிம்கன்
பரத்வம் சொல்லி
ஸ்ருஷ்டமான ஜகத்தில்
பிரதிஞ்ஞா சம காலம் ஆஸ்ரீதருக்காக
அழிய மாறி தோற்றி
அரவின் ஆணை -சம்ச்லெஷக ஏக ஸ்வாபவன்
வரி அழகு -செர்தியால் வந்த
கரியான்
வெளுத்த அரவின் மேல் காள மேகம் பரப்பாக சோபை
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே
காண
கழல் -சிவந்த உள்ளம் கால்
பரபாகம்
நீல மேனி திருவடியில் -செம்கண் கருமேனி அம கை தலம் ஏறி
செங்கமலம் தேனை பருகும் சங்கு போலே -அங்கும் பரபாகம்
இந்த சேர்த்தி அழகைக் காண த்வரித்து நின்றது நெஞ்சு
—————————————————————————————————————————————————–
Leave a Reply