திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-4-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

இப்படிக் கூப்பிடச் செய்தேயும் வரக் காணாமையாலே
துன்பத்தையே கைம்முதலாக கொண்டு காப்பாற்றுகின்ற
உன் குணத்துக்கு புறம்பு ஆனேனோ –
என்கிறார்

————————————————————————————————————————————-

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே

——————————————————————————————————————————————

அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்-
தகுதி அற்றவனாய்
அற்பனாய் இருந்து வைத்து
துயரத்தாலே கூப்பிடா நின்றேன்
ருசியாலே தவிர மாட்டார்
கிட்டினால் அத்தலைக்கு குற்றமாம்படி ஆயிற்று தம்முடைய நிலை
நாய் தன் தலைவனுக்கு தான் விரும்பிய பொருளில் ருசியை தெரிவிப்பது வாலாலே ஆயிற்று
அவ்வால் தான் கூழை
ஆனால் தெரிவிக்கை அரிதாகும் அன்றோ –
அது போலே என் மனமானது நோவு படா நின்றது
இதனால் நமக்கு ஓடுகிற துயரம் பேச்சுக்கு நிலம் அன்று
என்பதனைத் தெரிவித்தபடி –
அன்றிக்கே
சாதனம் ஒன்றும் இல்லாதவனாய் வைத்தும் ஆசைப் படா நின்றேன் -என்கிறார் -என்னுதல்

மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் –
இந்த்ரன் கல் மழையைப் பெய்த அளவிலே
மலையை எடுத்து ஆயர்களையும் பசுக்களையும்
துயரமே கைம்முதலாக பாதுகாத்தவனே –

பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே –
அருள் -பிழைக்கின்றது – என்று பேதுறுவனே –
வரையாதே காத்த மகா குணம் எனக்கு உதவாமையாலே அதனை இழக்கப் புகா நின்றாய் என்று
பேகணியா நின்றேன் -என்று ஆளவந்தார் அருளிச் செய்யும்படி –
அதனை எம்பெருமானார் கேட்டருளி
இது பொருள் அழகிது
ஆனால் இது இப்போது இவர்க்கு ஓடுகிற நிலைக்கு சேராது
ஆனபின்பு
பசுக்களும் ஆயர்களும் மழையிலே நோவு படாதபடி மலையை எடுத்து மறித்த
இம் மகா குணத்துக்கு நான் புறம்பு ஆகிறேனோ
என்று பேதுறா நின்றேன் -என்கிறார் என்று அருளிச் செய்தார்
அவ்வருள் அவனை தப்பி போகிறது -ஆளவந்தார் நிர்வாகம்
அவ்வருள் இவரை தப்பிப் போகிறது -எம்பெருமானார் நிர்வாகம்

கூப்பிட செய்தேயும் வர காணாமை யாலே
புறம்பு ஆனவனொ ரஷிக்கும் வர்க்கத்துக்கு –
உனக்கும் அப்படி -வரம்பு உண்டோ
எம்பெருமானார் நிர்வாகம்
ஆர்த்தியே கைமுதல் கதற கூட வேண்டாம்
ரஷிக்கும் குணம் உண்டே
அடி நாயேன் -அழைக்கின்றேன்
வாலால் -ஆட்டி ப்ரீதி காட்டும்
குதறிப் போன வால் கொண்டு
மழைக்கு -துக்கமே காரணம் -கோவர்த்தனம் கொண்டு காத்தாயே
எனக்கு மலை எடுக்க வேண்டாம்
கண்ணால் கண்டால் போதும்
அடி நாயேன் அயோக்யன் சூத்திரன் ஆர்த்தியால் கூப்பிடுகிறேன்
கிட்டினாலும் அவத்யம் –
ஆசை -துடிக்க பண்ணும்
கிட்டினால் -நைச்ச்ய பாவம் –கொண்டு அவத்யம் -ஆகும்
நாய் -வால் கொண்டு ருசி தெரிவிக்கும்
மொட்டை கூழ் ஆனால் தெரிவிக்க முடியாதே
ஸ்வரூபம் அயோக்கியம் நீசம்
கிலேசம் பேச்சுக்கு நிலை இல்லை
ஆசைப்படா நின்றேன் -சாதனம் உள்ளவர் போலே -மொட்டை வால் கொண்ட நாய் போலே
இந்த்ரன் கல் மழை-ஆர்த்தியே கை முதலாக ரஷித்து
இழக்க -ஆளவந்தார் -திருமாலை ஆண்டான் -வரையாதே ரஷிக்கும் குணம் இல்லை என்று சொல்லும் படி ஆனதே –
மகா குணம் -ஆடுகள் கன்றுகள் இடையர்கள் அனைவரையும் ரஷித்தாயே
பேகணியா நின்றேன் வருந்தினேன்
எம்பெருமானார் ஓடுகிற தசைக்கு சேராதே
குணம் கொண்டாடும் பிரகரணம் இது
குணம் இருந்தும் நான் இழக்கிறதால் நான் புறம்பு ஆனேனோ
அப்பால் பட்டவனோ நான் –
இரண்டு நிர்வாஹம்
அருள் பிழைக்கின்றது
தப்பி தவறி போகின்றது சப்த அர்த்தம்
உன்னிடத்தில் ஆளவந்தார் நிர்வாகமாக திருமாலை ஆண்டான் –
என்னிடத்தில் எம்பெருமானார் நிர்வாகம்

—————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading