தமக்கும்
தம்முடைய மனதுக்கும் உண்டான
காதல் பெருக்கை
அருளிச் செய்கிறார்-
———————————————————————————————————————–
கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே –
—————————————————————————————————————————-
கண்ணே –
எனக்கு கண் ஆனவனே
உன்னைக் காணக் கருதி-
எல்லை இல்லாத இனியனான உன்னைக் காண ஆசைப் பட்டு
கண்ணைக் கொண்டே கண்ணை காண இருக்குமா போலே
காணும் இவர் இருக்கிறது –
காண்பதற்கு கருவியான கண்களும்
காணப்படும் விஷயமும்
அவனே என்கிறார் –
சஷூஸ்ச த்ரஷ்டவ்யஞ்ச நாராயண
ஸ்ரோத்ரஞ்ச ஸ்ரோதவ்யஞ்ச நாராயண -சுபால உபநிஷத்
பார்கின்ற கண்களும் பார்க்கப் படுகின்ற பொருள்களும்
நாராயணனே -என்னக் கடவது அன்றோ –
அவனாலேயே அவனைப் பெறுமவர் அன்றோ இவர்
பேற்றிலே உள்ள நியதியைப் போன்றே -அதனைப் பெறுதற்கு உரிய
வழியிலும் இவருக்கு உள்ள நியதியும் –
என்நெஞ்சம் –
நல்வினை தீவினைகட்கு காரணமாய் கொண்டு
விஷயங்களிலே பரகு பரகு என்று
வாரா நிற்கும் அன்றோ சம்சாரிகள் உடைய மனம்
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர் மனம் அன்றோ -தொழுது ஏழு -எனபது
எண்ணே – கொண்ட சிந்தையதாய் —
எண் கொண்ட என்னத்தை உடையதாய் -என்றது
பலவிதமான எண்ணங்களை எண்ணி -என்றது –
காண வேண்டும்
காணாதே பட்ட துக்கத்தைப் போக்க வேண்டும்
அடிமை செய்ய வேண்டும் –
என்று எண்ணி என்றபடி –
நின்று இயம்பும்-
எப்பொழுதும் கூப்பிடா நிற்கும்
கூப்பிடிகை யாகிற செயலையும் தானே ஏறிட்டுக் கொள்ளா நிற்கும்
கண்ணே -என்கையாலே வழியும் அவனே -என்பதனைச் சொல்லிற்று
உன்னைக் காண -என்கையாலே பேறும் அவனே -என்பதனைச் சொல்லிற்று
எண்ணே கொண்ட -என்கையாலே -அந்த வழியைக் கொண்டு
இந்த பேற்றினைப் பெற வேண்டும் என்று
இருக்கும் அதிகாரியினுடைய வாழ்க்கை இருக்கிறபடி சொல்லிற்று –
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயைநண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே –
இதனால்
இது தான் மனத்திற்கேயாய் நான் செயல் அற்று இருக்கிறேனோ
என்பதனை தெரிவித்தபடி
பிரமன் முதலான தேவர்களுக்கும்
சனகன்முதலான முனிவர்களுக்கும்
என்றும் ஒக்க காண அரியையாய் இருக்கிற உன்னை
நான் கிட்டாது ஒழிவனோ
பெற்றே முடிப்பேன் -என்று நான் கூப்பிடா நின்றேன்
இவர் பெற்றே முடிப்பன் எனபது என் கொண்டு -என்னில்
வேறுபட்ட சிறப்பினை உடைய தேசங்களில் வாழ்கின்ற வர்களாய்
தங்களுக்கு என்ன ஒரு கைம்முதல் உண்டாய் இருக்குமவர்கள் ஆகையாலே விளம்பத்துக்கு காரணம் உண்டு அவர்களுக்கு
அங்கன் ஒரு கைம்முதல் இல்லாதவர்களுக்கு விளம்பத்துக்கு காரணம் உண்டோ
இல்லையே என்னும் உறுதியைக் கொண்டு கூப்பிடா நின்றார் என்க –
நண்ணாது ஒழியேன் -என்பதற்கு
அவனைக் கிட்டாத போது நான் தரியேன் -என்று பொருள் அருளிச் செய்வர் ஆய்த்தான் -பட்டரின் சிஷ்யர் –
நண்ணாது ஒழியேன் -என்கிற இடம் மகா விசுவாசத்தை சொல்லுகிறது
தேவர்கள் வேறுபட்ட சிறந்த தேசத்தில் இருக்கையாலே கிரமத்திலே எடுக்கலாம்
அங்கன் அன்றிக்கே இவ் உலகத்தில் அகப்பட்டு நிற்கிற இவரை அன்றோ கடுக எடுக்க வேண்டுவது
எடுக்க வேண்டும் நிலத்தில் இருந்தேன் –
எடுக்க வேண்டும் என்று இருந்தேன்
எடுப்பான் தானாய் இருந்தான்
எடுத்தால் பெறுவது தன்னையே இருந்தது
ஆனா பின்பு
எனக்கு என்ன கண் அழிவு உண்டு –
நெஞ்சு சாபலம் இதில்
கண்ணே எம்பெருமானே
உன்னை காண கருதி
எண்ணே கொண்ட சிந்தை
எண்ணிக் கொண்டே
நண்ணாது ஒழியேன் கிட்டாவிடில்முடியென்
கிட்டாமல் போகேன்
கண்ணே கண்ணாக இருப்பவனே
நிரதிசய போக்கின்
கண்ணைக் கொண்டு கண்ணை பார்க்க ஆசைப் படுகிறார்
கண்ணாடி கொண்டு இல்லை –
காண்கைக்கு சாதனம் காணப் படும் அவனே
சஷூஸ் நாராயண -த்ரஷ்டவ்ய நாராயண
அவன் தன்னாலே அவனை பெற
உபாயமும் உபேயமும் அவனே
பிராப்ய நியதி போலே பிராபக நியதி உண்டே
அவனைக் கொண்டே அவனை பெற –
வேறு ஒன்றாலும் அவனை பெற கூடாது
அவனை கொண்டு வேற ஒன்றை பெற கூடாதே
கண்ணே காணக் கருதி
ஏன் நெஞ்சம்
பந்த ஹேது சம்சாரிகள் உலகியல் விஷயம் பரக் பரக் பார்த்து வாளா நிற்கும்
இவர் நெஞ்சு மயர்வற மதி நலம் அருளப் பெற்றார் நெஞ்சு தொழுது ஏழு
எண்ணே கொண்ட
மனோ ரதம் பல
எண்ணிக்கை உள்ள
காண வேண்டும் ஆசை
காணாத பட்ட துக்கம் போக்க
கண்ட பின்பு அடிமை செய்ய ஆசை
நின்று நிரந்தரமாக
இயம்பும்
துடிப்பின் காரணம் பிரவர்த்தி
எண்ணே -அதிகாரி ஸ்வரூபம் யாத்ரை
நஞ்சீயர் இரக்கம் உபாயம் -இரங்கேலோ
இனிமை -உபேயம் அனுபவிக்க
இச்சை அதிகாரம் -தகுதி –
கண்ணே உபாயம்
உன்னைக் காண -பிராப்யம்
எண்ணே கொண்ட இச்சை அதிகாரி ஸ்வரூபம் யாத்ரை சொல்லுகிறது -தேக யாத்ரை உயிர் உள்ளவரை செய்ய வேண்டியது
தேகம் தரித்து இருக்க செய்ய வேண்டியது இச்சை ஒன்றே
எண்ணே கொண்ட சிந்தையராய்
விண்ணோர் முனிவர் காண்பதற்கு அறியா
நெஞ்சுக்கு தான் கை வாங்கி இல்லாமல்
கிட்டாது ஒழிய
பெற்று முடிப்பன் கூப்பிடா நின்றேன்
கிட்டாது ஒழியேன் – நான் தரியேன் -ஆயத்தான் நிர்வாகம் -பட்டர் சிஷ்யர்
மகா விசுவாசம் சொல்கிறது –
நம்பிள்ளை -கிட்டாமல் இருக்க மாட்டேன் நிச்சயமாக கிட்டி விடுவேன் பிரகரணம் சேர அர்த்தம்
எத்தை கொண்டு
நித்ய சூரிகள் காண முடியாத வஸ்துவை இவர் காண்பேன் என்கிறது
விலஷன தேச வாசி கை முதல் ஞான சக்தி உள்ளவர்கள்
விளம்ப ஹேது சுபிரவ்ர்த்தி –
ப்ரஹ்மாதிகள் சனகாதிகள் விண்ணோர் முனிவர் -அர்த்தம்
ஒன்றுமே கை முதல் இல்லாமல்
வாளேறு தெலெரு கதை போலே
சம்சார அகப்பட்ட இவரை எடுக்க
எடுக்க வேண்டிய நிலத்தில் இருந்தேன்
எடுக்க ஆசை பட்டு பிரார்திக்கிற
யெடுப்பானும் சர்வ சக்தன்
எடுத்தார் பெறுவது தனக்கு லாபம்
என்ன கண் அழிவு உண்டு
நண்ணாது ஒழிவேன் மகா விசுவாசம் -இது தானே
பேறு பெற்றே தீருவேன் –
————————————————————————————————————————————————————–
Leave a Reply