நிகமத்தில்
இத் திருவாய் மொழி கற்றார்
பரம பதத்தே செல்லுதல்
ஆச்சர்யம் அன்று –
தக்கதே –
என்கிறார் –
————————————————————————————————————-
சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே
——————————————————————————————————————–
சீலம் எல்லை இலான் அடிமேல் –
எல்லை இல்லாத சீல குணத்தை உடையவனுடைய
திருவடிகளிலே –
இதனால்
இத் திருவாய்மொழி சொல்லப் பட்டது -சீல குணத்தின் மேம்பாட்டை ஆயிற்று
அதனை முடித்துக் காட்டுகிறார் -சீலம் எல்லை இலான் -என்று
அணி கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல் மாலை-
அழகு மிக்கு இருந்துள்ள திரு நகரியை உடைய ஆழ்வார்
அன்றிக்கே
கோலம் நீள் என்ற சொற்கள் இருப்பதினாலே
அணி -என்பதனை
அடி மேல் அணி மாலை -என்று
மாலைக்கு அடையாகக் கோடலுமாம் –
ஆயிரத்துள் இவை பத்தினின் பாலர் –
இப்பத்தின் பக்கத்தில் உளராமவர் -என்றது
இப்பாசுரங்களை ஒருகால் சொல்லுதல்
இவற்றைப் பாடம் செய்தல்
இவற்றைப் பொருள் அறிவோடு படித்தல் –
என்னும் இவற்றில் ஒரு வழியாலே இதில் சம்பந்தம் உடையவர் -என்றபடி –
வைகுந்தம் ஏறுதல் பான்மையே –
பரம பதத்தில் செல்லுதல் இயல்பாகவே இருக்கும் –
யாங்கனம் -எனின்
மாக வைகுந்தம் காண்பதற்கு ஏகம் எண்ணினார் இவர் –
இப்பாசுரங்களில் யாதானும் ஒரு வகையில் சம்பந்தம் உள்ளவர்களுக்கு
பிரார்த்தித்துப் பெற வேண்டுவது தானாகவே கிடைக்கும் என்பதாம் –
தமப்பன் செல்வம் மகனுக்கு
தாய பாகமாக அடைய வேண்டியதாகவே
இருக்கும் அன்றோ –
நிகமத்தில்
பரம பதம் செல்லுகி பிராப்தம் நிச்சயம் சங்கை இல்லை பலன்
சீலம் எல்லை இல்லாத
திருவடி மேல் சொன்ன இந்த திருவாய் மொழி
அமர்யாத சீலன் கட்டுப் படாத எல்லை இல்லாத சீலாதிக்யம்
அணி கோல நீள் குரு கூர் சடகோபன்
சப்தம் –
இப்பத்தின் பரிசரத்தின் உள்ளார்
உக்தி மாதரம்
பாட தாரணம்
அர்த்த அனுசந்தானம்
எந்த வித சம்பந்தம்
வைகுந்தம் ஏறுதல் பான்மை
மாக வைகுந்தம் போக ஆழ்வார் எண்ணினார்
பித்ரு தனம் புத்ரனுக்கு தாய பிராப்தம்
———————————————————————————————————————-
ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் -பேருறவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டிவிடும் நம் மனத்து மை–83
சாரம்
உள்ளது எல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான்
பேர் உறவைக் காட்ட
அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன்
மனத்து மை மாட்டி விடும்
அருள் நம்மை சேர்த்து விடும்
—————————————————————————————————————————–
Leave a Reply