திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-2-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

நிகமத்தில் –
இத் திருவாய்மொழி கற்றார்
எப்பொழுதும் நினைக்கப் பெறுவார்
என்கிறார்-

——————————————————————————————————————————–

கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்
அடி இணை யுள்ளத்தோர் வாரே

—————————————————————————————————————————–

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை –
குரை கடல் கடைந்தவன் தன்னை -கூவுதல் வருதல் செய்திடாய் என்று-ஆயிற்று இவர் சொல்லிற்று
முறை கெடவுமாம்
முறையிலே ஆகவுமாம்
காணும் இத்தனையே வேண்டுவது –
குரை கடல் கடைந்தவன் தன்னை —
இந்த விருப்பம் இல்லாதார்க்கும் உடம்பு நோவ கடல் கடைந்து அமுதம்
கொடுத்தவனை ஆயிற்று இவர் விரும்பியது

மேவி நன்கு அமர்ந்த –
இந்த தன்மையின் நினைவாலே பொருந்தி
கால் தரையிலே பாவினார் ஆயிற்று –

வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் –
பரந்த புனல் நிறைந்த திருப் பொருநலை உடைய
திரு வழுதி நாட்டுக்கு தலைவரான ஆழ்வார்

நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் –
மனத்தின் துணையும் இன்றிக்கே ஆயிற்றுச்

சொல்லிற்று
அங்கனம் சொன்ன ஆயிரம் பாசுரங்களுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் – வல்லவர்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத்தோர் வாரே –
யுலகம் மூன்று அளந்தான் அடி இணை -யுள்ளத்து -ஓவுதல் இன்றி-ஒர்வாரே
அடியவர்கட்கு சுலபன் ஆனவனுடைய திருவடிகளை மனத்தால்
எப்பொழுதும் அனுபவிக்கப் பெறுவார்
இத்தனை போதும் இவர் தாம் -இவற்றைப் பெற வேண்டும் -என்னும் ஆசையோடு
திருக் கண்களால் குளிர நோக்கி அருள வேண்டும்
திருவடிகளை தலைக்கு மேலே வைத்து அருள வேண்டும்
தேவரீர் எழுந்து அருளி இருக்கும் இருப்பைக் காண வேண்டும்
நாய்ச்சிமாரும் தேவருமான இருப்பைக் காண வேண்டும்

உலாவும்படி காண வேண்டும்
புன்முறுவல் இருக்கும் படி காண வேண்டும்
என்று ஆசைப் பட்ட இவருக்கு அப்போதே கிடையாமையாலே
இவற்றைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் தானே பேறு ஆகத் தோற்றிற்று
இதனைக் கற்றவர்களுக்கும் இந்த எண்ணம் மாறாமலே முடியச் செல்லும் என்கிறார்
உன்னை அடைந்து இருக்கிற என்னுடைய எண்ணமானது கெடாமல் இருந்ததே ஆனால்
அதனால் எல்லா காலத்திலும் விரும்பினவற்றை எல்லாம் பெற்றவனாய் இருக்கிறேன் -என்கிறபடியே –
துர்க்க தாவபி ஜாதாயாம் த்வத்கதோ மே மநோ ரத
யதி நாசம் நவிந்தேத தாவதாஸ்மி கருதி சதா -ஜிதந்தா ஸ்தோத்ரம்

நிகமத்தில்
நிரந்தரம் அனுபவம் பெறுவார்
ஓவுதல் இன்றி அடி இணை உள்ளத்தில் சிந்தை செய்வர்
கடல் கடைந்தவன் தன்னை
முறை அற்ற வலியாலும் காண
அபேஷை இல்லாதாருக்கும் காட்ஷி கொடுப்பவன்
மேவி -இப்பொழுது தான் தரித்தார்
அவன் ஸ்வபாவம் அறிந்த பின்பு
நாவில் பாடல் நாவால் சொன்னால் போதும்
பெற வேணும் -கடாஷம் -திருவடி -காண உலாவ ஸ்மிதம் காண ஆசை பட்டார் ‘மநோ ரதம் மாறாதே முடிய செய்யும்
மநோ ரதமே பலம்
நின் புகழும் வைக்கும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அருளும் வைகுந்தம் -போலே

——————————————————————————————————————————————————–
பண்டை உறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் -தண்டற நீ
செய்தருள் என்றே இரந்த சீர் மாறன் தாள் இணையை
உய் துணை என்று உள்ளமே ஓர்

சார பாசுரம் மா முனிகள்
பந்துவை கண்டு –
எல்லா உறவின் கார்யம்
செய்து அருள் என்றே இருந்த
சீர் மாறன் அடி இணை களே நமக்கு உய்ய துணை

————————————————————————————————————————————————————

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading