இவனை ஒழிய வேறு ஒன்றனை ரட்ஷகம் என்று பற்றினவர்கள்
பண்டு நின்ற நிலையும் கெட்டு அழிந்து போவார்கள் –
ஆனபின்பு -இவன் அல்லது சரண் இல்லை -என்கிறார்
அன்றிக்கே
கைவல்யம் ஆகிற பேற்றினைச் சொல்லுகிறார் -என்னாலும் ஆம் –
————————————————————————————————————————————————-
யாதும் இல்லை மிக்கதனில்
என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து
கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட
வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்
இல்லை கண்டீர் சரணே
——————————————————————————————————————————————————
யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி –
பகவானுக்கு வேறுபட்டதாய் இருப்பது ஒன்றனைப் பற்றி –
இது ஒழிய நமக்கு பாதுகாவலாய் இருப்பது வேறு ஓன்று இல்லை -என்று சொல்லி
அதனையே பாது காக்கும் பொருளாக நினைத்து -என்றது
ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தனே
சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம் – பிரமாணம் படி
செல்வத்தை கொடுப்பதிலும் ஆபத்துக்களை போக்குவதிலும்
அந்த புருஷோத்தமனை விட ஆற்றல் உடையவனாக வேருஒருவனும்
காணப் படுகிறான் இலன் –
என்னும் நினைவினை அதிலே பண்ணி -என்னும்படி –
காது செய்வான் கூதை செய்து –
காதினைப் பெருக்கப் புக்கு பண்டுள்ள நிலையினும் கெடுத்துக்
கூதை ஆக்கினாப் போலே –
கடை முறை வாழ்க்கையும் போம் –
தண்ணிதான முறைமையாலே வாழக் கடவ வாழ்வு உண்டு
சம்சாரத்தில்-
பசலும் குட்டியுமாய் அளாய் குளாயாய் போருமது –
பசல் பையன் குட்டி பெண் குழந்தை அளாய் குளாய்-களிப்பின் கார்யம்
அதுவும் கூடக் கெடும் இத்தனை -என்றது
ஆபத்தில் -அது பாதுகாவலாக மாட்டாது
அதன் பக்கலிலே தன் பாரத்தை எல்லாம் விட்டானாய் இருக்கையாலே
தான் செய்து கொள்ளும் அத்தனையும் இழக்கும் -என்றபடி –
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த –
கம்சன் வாழ்கிறானாய் -அலங்காரமாக கட்டின கொடியை
கிருஷ்ணன் உடைய அவதாரத்துக்கு என்றே நினைத்து இருக்கிறார் ஆயிற்று இவர்
சிசுபாலன் திரு மணத்துக்கு உடலாக செய்த சடங்குகள் அடங்க தனக்கு
உடலாக செய்ததாக நினைத்து கைப் பிடித்தான் அன்றோ ஸ்ரீ கிருஷ்ணன் –
தாதுசேர் தோள் கண்ணன்-
வைஜயந்தி தொடக்கமான மாலைகளால் அலங்கரிக்கப் பட்ட
திருத் தோள்களை உடையவன் -என்றது
வேறு ஒரு பயன் தான் வேண்டா என்றபடி –
அல்லால் இல்லை கண்டீர் சரணே –
அவனை ஒழிய பாதுகாக்க கூடியதாக உள்ள வேறு ஒரு பொருள்
இல்லை காணுங்கோள்
கைவல்ய பரமான போது-
முதல் இரண்டு அடிகட்கு
இவ்வாத்மா அனுபவ சுகத்துக்கு மேற்பட்டு இருப்பது ஓன்று இல்லை என்று
அவ்வருகே பகவானை அனுபவிக்கிற சுகம் உண்டே ஆகிலும்
அதனையே புத்தி பண்ணி காது பெருக்கக் புக்கவன்
அதனை பல காலும் அறுத்து வைத்து முன்புத்தை நிலையும் கூடக் கெடுக்குமாறு போலே
பகவானை அடைவதற்கு தகுந்ததான இவ் உலகத்திலே
சிற்றின்பத்தை அனுபவித்து இருக்கும் -அதனையும் இழக்கும்
ஆனபின்பு
அறப் பெரியனான கிருஷ்ணனே அடையத் தக்க மேலானவன் -என்று பொருள் கொள்க –
சரண் -பெறத் தக்க பேறு
வேற பற்றி அனர்த்தப் பட்டு போகாமல்
கைவல்யம் –
முன் இருந்த நிலைமையும் போகுமே –
அது -ஏதோ புருஷார்த்தம்
மிக்கது இல்லை
காதை பெருக்கி –
காத்து செய்வான் கூத்தை செய்து
மா துகில் வடமதுரை
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண்
சமர்த்தோ த்ருஷ்யதெ புருஷோத்தம் -பிரதிபத்தி வேறு ஒன்றில் பண்ணி
அவனை தவிர இல்லை -இந்த பிரதி பத்தி எங்கோ யாவர் இடம் பண்ணி
காதை பெருக்க புக்கு அறுந்த காது கூத்தை ஆக்கி
சம்சாரம் பசலும் குட்டியுமாக இருந்த இருப்பும் போக்கி –
பசல் ஆண் பிள்ளை குட்டி பெண் பிள்ளை
கிருஷ்ணன் அவதாரம் கட்டிய கொடி கம்சன் கட்டிய கோடியை ஆழ்வார் நினைக்க
சிசுபாலன் -சடங்குகள் தனக்கு செய்ததாக -நினைப்பது போலே
பாணிக்ரஹனம்
பூர்வாங்கம் சரீரம் செய்ய
சிசுபாலன் சரீரம் தானே
தாது சேர் வைஜயந்தி
தோள் அழகை நினைந்து இருப்பதே
யாதும் இல்லை கைவல்யம் பிரமித்து
அத்தை புத்தி பண்ணி –
விழுந்தால் யோக்யமான சம்சாரமும் இழந்து
சர்வாதிகனான கிரிஷ்ணனே துணை -இல்லை கண்டீர் சரண்
————————————————————————————————————————————————————————–
Leave a Reply