திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-1-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

பகவானைப் பற்றுதல் மிக மிக எளியது
இனிமை வாய்ந்தது
என்று அருளிச் செய்கிறார்

———————————————————————————————————————–

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம்
மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன்
வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல்
வாழ்தல் கண்டீர் குணமே

———————————————————————————————————————————-

மற்று ஓன்று இல்லை –
இதனோடு ஒக்க வேறு எண்ண லாவது இல்லை -என்னுதல்
அன்றிக்கே
இப்போது இதனை சொல்லி வேறு ஒரு போது வேறு ஒன்றைச் சொல்லுகிறான்
என்று இருக்க வேண்டா -என்னுதல்

சுருங்கச் சொன்னோம் –
இதனைப் பரப்பு அறச் சொன்னோம் –
அன்றிக்கே
நினைவிற்கு விஷயம் ஆகாதபடி சொல்லுகை அன்றிக்கே
உள்ளம் கொள்ளும்படி தெளிவாகச் சொன்னோம் -என்னுதல்
இத்தால் சொல் சுருக்கமும் பொருள் சுருக்கமும் சொல்லிற்று என்னுதல்

மா நிலத்து-
இதற்கு அதிகாரிகள் இந்த உலகத்திலே
இவ்வர்த்ததுக்கு அண்ணி யார் பரம பதத்தில் உள்ளார் ஆயினும்
உபதேசத்துக்கு அதிகாரிகள் இந்த உலகத்தில் உள்ளவர்களே என்பார் -மா நிலத்து -என்கிறார் –

எவ் உயிர் க்கும் –
குறித்த சிலருக்கு மாத்ரம் உரியது அன்று
எல்லாருக்கும் உரியது –

சிற்ற வேண்டா –
வருந்த வேண்டா
சிற்றுதல் -சிதறுலதாய்-பரக்க வேண்டா -என்கை
வேறு ஒரு செய்கை வேண்டா -என்றபடி –

சிந்திப்பே அமையும் கண்டீர்கள்-
வார்த்தைகள் வேண்டா
நினைப்பே அமையும்
கண்டீர் கோள் -என்றது
அவனைப் பற்றி பேசுதல் வணங்குதல் வேண்டா -என்பார்
சிந்திப்பே – எனப் பிரிநிலை ஏவகாரம் கொடுத்துப் பேசுகிறார்-

அந்தோ –
நல்ல பொருள்கள் கிட்டே இருக்கச் செய்தேயும்
அது கை விடுகைக்கு உடலாவதே -என்கிறார் –

குற்றம் அன்று –
மேலே கூறிய நன்மைகள் ஒன்றும் இல்லையே யாகிலும்
இது சொன்னாலும் உங்கள் தலையிலே முந்துற முன்னம் இடி விழாது
ப்ரதா தேவேதி கிருஷ்னே தி கோவிந்தேதி ச ஜல்பதாம்
மத்யாஹ்னே ச அபராஹ்னே ச ய அவசாத ச உச்யதாம் -பிரமாணம் படியே
காலை மாலை நடுப்பகல் என்னும் மூன்று வேளையிலும் தேவா என்றும் கிருஷ்ணா என்றும் கோவிந்தா என்றும்
சொல்லுகிறவர்களுக்கு யாதேனும் குறை உண்டோ
இருந்தால் கூறுங்கோள்-என்றார்
அன்றிக்கே
இவ் உபாயத்துக்கு பலம் இல்லை யானாலும்
இது தானே பிரயோஜனம் போரும் -என்னுதல் –

எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் –
வந்து பிறப்பதற்கு முன்பே
பெற்றத்து ஆயன் போலே காணும்
வந்து அவதரிப்பதாக நினைப்பட்டதில் புரை அற்று இருக்கிறபடி
அடியார்கட்காக வடமதுரை பிறந்தானான பசு மேய்க்கும் ஆயன் -என்னுதல்
அடியார்கட்காக பசு மேய்க்கும் ஆயன் ஆவானாக வடமதுரை பிறந்தான் -என்னுதல் –

குற்றமில் சீர் கற்று –
குற்றங்கட்கு எல்லாம் எதிர் தட்டான
கல்யாண குணங்களைக் கற்று -என்னுதல்
அன்றிக்கே
பிறப்பிலும் செயல்களிலும் புரை அற்று இருக்கும் கல்யாண குணங்களைக் கற்று -என்னுதல்

நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ நாசா தாநவ
அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதத் சிந்த்யம் அதோன்யதா-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13-13-
நான் தேவன் அல்லன் கந்தருவன் அல்லன் யஷன் அல்லன் அசுரன் அல்லன்
உங்கள் பந்துவாய் பிறந்தவன்
ஆதலால் வேறு நினைவு வேண்டா -என்றான் ஸ்ரீ கண்ணபிரான் –

வைகல் வாழ்தல் கண்டீர் குணமே –
கற்பது ஒரு காலாய்-ஒரு தடவையாய்
பின்பு வாழ்ச்சி நித்தியமாய்
இருக்கும் ஆயிற்று
ஏவகாரத்தால் -இது ஒன்றுமே குணம்
இது ஒழிந்தன அடையத் தக்கன அல்ல -என்கிறார் –

பகவத் சமாஸ்ரயணம் எளிமையும் இனிமையும் -இரண்டும் உள்ளது -என்கிறார்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
சுருங்க சொன்னேன்
எல்லாருக்கும் இதுவே
பத்து விஷயம் வாய் வைக்க வேண்டாம்
சிந்திப்பே அமையும்
குற்றம் ஒன்றும் இல்லை -தலையில் இடி விழாதே –
பெற்றது ஆயன் வடமதுரை பிறந்தான் சீர் கற்று
இத்தோடு சமம் வேறு எங்கும் எப்பொழுதும் இல்லை
ஒன்றே சொல்வேன்
சுருங்க சொன்னோம்
குறைவான விஷயம் விரித்து சொல்லி மனசில் புரிய வைக்க
சுக்ரகமாக
அனைவரும் அதிகாரிகள்
உபதேசம் பெற
அனுஷ்டானம் கிட்டி இருப்பவர் பரம பதம்
சர்வாதிகாரம்
சிற்ற சிதறுதல் சிரமம் வியாபாரம் வேண்டாம்
உக்தி நிரபேஷமாக சிந்தா மாதரம் போதும் நாக்கை
பேசி முத்து உதிருமோ திரு முத்துக்கள் பல்
மனஸ் வியாபாரம் மட்டுமே போதும்
பிரபத்யே கத்யர்த்தா புத்யர்த்தா
அந்தோ
நல சரக்கு கிட்டினாலும் கை விட
உபதேசித்து நெஞ்சில் பட வைக்க வேண்டி
குற்றம் -இடி விழாது சிந்தித்து பாரும்
அவசாதம் துக்கம் -நாமம் கிருஷ்ண கோவிந்த ஜல்பம் செய்தாலும்
தேவன் -கிருஷ்ணன் கோவிந்தன் –
மத்யானம் சாயம் காலம் சொல்லினாலும்
காலை எழும் பொழுது ஹரி ஹரி
துஞ்சும் போது -நினைமின் துயர் இலில் சொல்லினும் நன்றாம் –
பெற்றத்து ஆயன் போலே -பெற்றத்து ஆயன் வட மதுரை பிறந்தான் –
சங்கல்பம் -புரை அற
பசு மேய்க்கும் இடையன்
குற்றம் இல்லாத சீர்
பிறப்பிலும் செஷ்டிதம் குறை இல்லாமல்
ஹேய ப்ரத்ய நீகண் -கல்யாண குணங்கள்
அஹம் வோ பாந்தவோஜாதா
வைகல் வாழ்தல்
கற்பது ஒரு கால்
வாழ்த்து நிச்சயம்
சக்ருதம் அஞ்சலி
ஒரு போதும் அழிவது இல்லை ஒரு அஞ்சலியால்
சிந்திப்பே அமையும் வைகல் வாழ்வு
இது ஒன்றே குணம்
மற்றவை இல்லை

————————————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading