திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -9-1-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

அவதாரத்துக்கு காரணத்தை சொல்லி
பாது காப்பவனாக அவனையே பற்றுமது ஒழிய
வேறு சீரியதாய் உள்ள ஒரு பற்றுக் கோடு இல்லை
என்கிறார் –

——————————————————————————————————————————————–

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ
மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும்
புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில்
யாதுமில்லை மிக்கதே

————————————————————————————————————————————————–

வாழ்தல் கண்டீர் குணம் இது –
அவன் குணங்களை நினைந்து வாழும் இதுவே கண்டீர்
பொருத்தமாவது –

அந்தோ –
கரும்பு தின்னக் கூலி கொடுப்பாரைப் போலே
இவர்களை நான் இரக்க வேண்டுவதே -என்றது
வாழ்ச்சி உங்களதாக இருக்க
இரந்து திரிவேன் நான் ஆவதே -என்றபடி

மாயவன் அடி பரவி போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு-
அழகு சீலம் முதலியவைகளால் ஆச்சர்யப் படத் தக்கவனாய்
இருந்துள்ள இறைவனுடைய
குணங்களுக்கு தோற்றவர்களாய் –
ப்ரீதியாலே அவன் திருவடிகளை முறை இன்றிக்கே ஏத்தி
அதனாலே போது போக்குவதலைச் செய்வதாக
அறுதி இட்டுள்ள நன்மையை உடையவர்கள் -சீரியர்கள் -என்றது –
வேறு பயன்களைக் கருதாத ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு -என்றபடி –
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும்
போது போக்குமவர்கள் -நான் முகன் திருவந்தாதி -63-
என்றவாறு –
இந்த மாயவன் அடி பரவுகையை சூது சதுரங்களை போன்று
காலத்தை கழிப்பதற்கு வழியாக
கொள்ளுகின்ற புன்மை இல்லாதவர்கள் -என்று
பட்டர் அருளிச் செய்வர் –
போக ரூபமாக உள்ளுவர்கள் என்றபடி –

வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் –
அவர்கள் தன் குணங்களை அனுபவித்து வாழ்க்கைக்கு துணையாக
வடமதுரையில் வந்து அவதரித்தவனுடைய –
புன்மை உடையவர்களும் அகப்பட கழித்து அதுவே போது போக்காகா நின்ற பின்பு
முதலிலே அது குடி புகுராதவனுக்கு அடியார்கள் உடைய சேர்க்கை ஒழிய வேறு பயன் இல்லை அன்றோ

அவதாரத்துக்கு பயன்
சாதுக்களை பாதுகாப்பதற்காகவும்
பரித்ராணாய சாதூநாம் விநாசாயா ச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -ஸ்ரீ கீதை -4-8-

வண் புகழே வீண் துணையாப் போம் இதனில் –
அவனுடைய கல்யாண குணங்களையே ஆசைப் படும் துணையாக பற்றும் இது போக்கி
வீழ் துணை -ஆசைப்படும் துணை
தாம் வீழ்வார் — தம் வீழப் பெற்றவர் -திருக்குறள் -1191-என்னக் கடவது அன்றோ ஆசையோடு கூடியவரை

இதனில்
இதைக் காட்டிலும்

யாதும் இல்லை மிக்கதே –
இதனில் மேலாக இருப்பது ஓன்று உண்டானால் அன்றோ
இதினின்று என்ன வேண்டும்
இதற்கு மேலாய் இருப்பது ஒன்றும் இல்லை

அவதார -காரணம்
மண்ணின் பாரம் நீக்க
வாழ்தல் -இது தான்
அந்தோ இங்கும்
அடி பரவி -பொழுது போக்க
புன்மை இல்லாமல்
வாழ துணையாக –
ஆசைப் படும் துணை வீழ் துணை
இதுவே உக்தம் -கல்யாண குணங்களை
கரும்பு தின்ன கூலி போலே இத்தை சொல்ல
வாழ்ச்சி உங்களுக்கு இருக்க இரக்க வேண்டி
ஆச்சர்ய பூதன் மாயவன் -சௌந்தர்யம் சீலம் –
அடி பரவி குணங்களால் ஜெயிக்கப் பாட்டு
ப்ரீதியாலே அக்ரமமாக ஏற்றி
அத்தாலே பொழுது போக்க
அநந்ய பிரயோஜனர் -தெறித்து -வாசித்து -கேட்டு எழுதி
வணங்கி வழி பட்டி பூசித்து –
பல்கலைகள் எழுதி கற்று இருந்தும் காதல் உடன் கற்பித்து
பொழுது போக்காகப் பெற்றோம் மா முனிகள் –
அன்றிக்கே
புன்மை இல்லாதவர்
வேறு ஒன்றை நினையாத புன்மை
பொழுது போக்க -இத்தை கொள்வார் புன்மை பட்டர் -நிர்வாஹம்
பொழுது போகவில்லை கோயில் போனேன்
ஈடுபாடு ஆர்வம் உடன் செய்ய வேண்டும் –
சூது சதுரங்கம் போலே இத்தை கொள்ள கூடாதே பொழுது போக்கா கூடாதே
புன்மை இல்லாமல்
சுயம் பிரயோஜனம் பரம போக்யமாக கொண்டு அடி பரவ வேண்டும்
முதலில் குடி புகுராதவனுக்கு
அடியார் கூடுவது தான் அவனுக்கும் போது போக்கு
புன்மை அவனுக்கும்
குற்றம் இல் சீர் –
ஆஸ்ரித சம்ச்லெஷம் ஒழிய அவனுக்கும் பிரயோஜனம்
பரித்ரானாம் சாதூனாம்
வாழ துணையாம்
கல்யாண குணங்கள் செஷ்டிதன்கல் காட்டி
புகழே
வீழ் துணை ஆசைபடும் துணை –
வீழுதல் ஆசை படும் அர்த்தம் உண்டோ
தாம் வீழ்வார் திருக்குறள் -தாம் வீழப் பெற்றார் -எண்ணக் கடவது இ றே
இன்பத்து பால்
தான் ஆசைப் பட்ட பெண்ணே தன்னை ஆசைப் படுவது
கனி விழுந்த பால்
கொட்டை இல்லா கனி போலே
தாம் வீழ்வார் தாம் ஆசைப் படுவார் –
இதனில் மேலாய் இருப்பது ஒன்றும் இல்லை –

————————————————————————————————————————————————————————–

நம்பிள்ளை திருவடிகளே சரணம்
நம் ஜீயர் திருவடிகளே சரணம்
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading