திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-10-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

நிகமத்தில்
இத் திருவாய் மொழி வல்லார்
இதில் சொன்ன
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலைப் பெற்று
பெண்டு பிள்ளைகளோடு
வாழப் பெறுவர்
என்கிறார்

———————————————————————————————————————————————–

நல்ல கோட்பாட்டுலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே

———————————————————————————————————————————————————–

நல்ல கோட்பாட்டுலகங்கள்-
இவர் பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தலே
மிக மேலான பேறு -என்று
நெடுமாற்கு அடிமை -என்னும் திருவாய்மொழி -அருளிச் செய்த பின்பு காணும்
உலகம் கட்டளைப் பட்டது –

மூன்றின் உள்ளும் தான் நிறைந்த-
பரந்து இருக்கும் தன்மையும் தேவை ஆகை அன்றிக்கே புதுக் கணித்தது
அடியார்க்கு அடிமைப் பட்டு இருத்தல் ஆகிய ஞானம்
உடையவர்கள் உடைய மனத்தில்
இருக்கையாலே வ்யாப்தியும் தேவையாய் இராதே புதுக் கணித்தது –

அல்லிக் கமலக் கண்ணனை-
இவர் தன்னைப் பற்றினாரைப் பற்றி விரும்ப விரும்ப
திருக் கண்களும் சிவந்து புதுக் கணித்தது –

அந்தண் குருகூர்ச் –
ஊரும் காண்பதற்கு இனியதாய்
சிரமத்தை போக்கக் கூடியதாயிற்று –

சடகோபன் சொல்லப்பட்ட வாயிரத்துள்-
வேதம் போல் தான் தோன்றி இன்றிக்கே -இருக்கை
பரத்வம் போலே வேதம்
அவதாரம் போலே திருவாய்மொழி –

இவையும் பத்தும் வல்லார்கள்-
இப்பத்தை கற்க வல்லவர்கள்

நல்ல பதத்தால் –
நல்ல பதம் ஆகிறது –
பாகவதர்களுக்கு அடிமைப் பட்டு இருத்தல் அன்றோ –
அதனை இத் திருவாய் மொழியிலே இவர் அறுதி இட்ட படியாலே –

அதனோடு கூட -மனை வாழ்வர்
இல்லற தர்மத்தில் வாழ்வார்கள்

கொண்ட பெண்டிர் மக்களே-
தாங்கள் ஒன்றனை நினைக்க
தம் மனைவி மக்கள் முதலாயினோர் வேறு ஒன்றை நினைக்கை அன்றிக்கே

குடும்பத்தோடு பாகவதர்களுக்கு உறுப்பாக வாழப் பெறுவர் –
திருவனந்த புரத்துக்கு சாத்தாகப் -கூட்டமாகப் -போகா நிற்கச் செய்தே
திருக் கோட்டியூரிலே செல்வ நம்பி திரு மாளிகையிலே
போய்ப் புக்கார்களாக
நம்பி தாம் வேற்று உஊருக்காக சென்று இருக்க
நங்கையார் நூறு வித்துவக் கோட்டை கிடக்க
அவற்றைக் குற்றி ஸ்ரீ வைஷ்ணவர்களை அமுது செய்யப் பண்ணி விட
பிற்றை நாள் நம்பி வந்து -அவை செய்தது என் என்ன –
பரம பதத்திலே விளைவதாக வித்தினேன் -என்றாராம் –
தொண்டனூர் நம்பி எச்சான் -என்று மகா புருஷர்கள் சிலர் உளர் அன்றோ
பாகவத செஷத்வமே யாத்ரையாக போந்தவர்கள்
அவர்கள் படியே ஆகப் பெறுவர்கள்-

நிகமத்தில்
பாகவத சேஷத்வம் பெற்று
நல்ல பதத்தால் மனை வாழ்வார்
சொல்லப் பட்ட ஆயிரம் -சடகொபனால் சொல்ல இல்லை
சடகோபன் சொல்ல
பட்ட ஆயிரம் -எழுந்த ஆயிரம்
லோகம் இந்த திருவாய் மொழி அப்புறம்
நல்ல கோட்பாடு கட்டளை பட்டதே
உலகங்கள் மூன்றிலும் தான் நிறைந்த
புதுக் கணிப்பு பெற்றதாம்
கடனுக்காக இருந்தானாம் முன்பு
லோகம் திருந்திய பின்பு
அல்லிக் கமலக் கண்ணன் சிவந்து புதுக் கணித்தது
அடியவர்களை கொண்டாட
அல்லி–உள் இதழ் -புற இதழ் புஷ்பம்
இவர் தம்மைப் பற்றினாரை பற்றனாரை விரும்ப
புதுக் கணிப்பு
திருக் குருகூருக்கும் புதுக் கணிப்பு
அத்தனையும் பாகவத சேஷத்வம்
வேதம் போலே தான் தோன்றி இல்லை
பரத்வம் போலே வேதம்
அவதாரம் போலே திருவாய் மொழி
சொல்லப் பட்ட
ஆழ்வார் சொல்ல அதனால் எழுந்த -ஆயிரம்
பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் -மனை வாழ்வார்
கொண்ட பெண்டிர்
தாங்கள் ஒன்றை நினைக்க
சபரிகரமாக அனுகூலமாக கொண்ட
கைக் கொண்ட அர்த்தம் இல்லை
மனைவி மக்கள் -இவர்களும் இவன் நினைவை கொண்டு
மக்களை எப்படி கொள்ள முடியும்
எண்ணத்துக்கு அனுகூலமாக கொண்ட
இதுவே பலம்
பாகவதர்களுக்கு உறுப்பாக இருக்கப் பெறுவார்

செல்வா நம்பி திரு மாளிகை நடந்த ஐதிகம்
நங்கையார் –
விதை நெல்லை -அடுத்த போகத்துக்கு –
குத்தி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அமுது செய்விப்பித்து
பத்னி பாகவத கைங்கர்யத்தில் ஊன்றி இருந்த ஐதிகம்
பரம பதத்தில் விளைவதாக –
அப்படி பட்ட பத்னி வாய்க்கப் பெறுவார் –
உலக்கை -பூஜை கதை –
ததீயாராதனை ஆனபின்பு ஓங்கி போடுவாரே
உலக்கை கொடு கேட்டார்
வாங்கி போக
வேண்டாம் ஓட -வேடிக்கை கதை காஞ்சி ஸ்வாமி
ஆண்டாள் ஆழ்வான் போல்வார் –
எதி யாக இருப்பது விசேஷம்-வைராக்கியம் வருவது கஷ்டம்
கிரகத்திலே சப்தாதி விஷய வைராக்கியம் நிதி
உஞ்ச விருத்தி செய்து உண்டார் களே
எதி பிரதி வந்தனம் செய்ய வேண்டும் நம் தென் ஆச்சார்யா சம்ப்ரதாயம்

அனந்தாழ்வான் போல்வார் கிரக ஆஸ்ரமம் இருந்து
மணவாள மா முனிகள்
பாகவத கைங்கர்யம்
செய்ய -உள்ளத்துக்கு அனுகூலமான பத்னி இருக்க
சன்யாச ஆஸ்ரமம் வேண்டாம்
நஞ்சீயர் பட்டர் பல்லக்கு எழுந்தருள
சந்நியாசி -ஆச்சார்யா கைங்கர்யம் ஹானி இருந்தால்
சன்யாசத்துக்கே சன்யாசம் வாங்கி கொள்வேன் என்றாராம் –
திருக் கோவலூர் கிரக ஆஸ்ரமம் இருந்தே ஸ்வாமி
தேக பந்துக்கள் கைங்கர்யம் செய்து கொண்டு இருக்க

மேலே தேக பந்துகள் த்யாஜ்யம்
பிரதி கூல தேக பந்துக்கள் த்யாஜ்யம் என்று அருளுகிறார்
பகவத் பாகவத ஆச்சார்யா கைங்கர்யம் அனுகூலமாக
பெரும் செல்வராக திரு மால் அடியாரை உகப்பர்கள்
நெருப்பான செல்வம்
தொண்டனூர் நம்பி -எச்சான் -அனந்தாழ்வான் –
பாகவத செஷத்வமே யாத்ரையாக கொண்டு இருப்பார்கள்-

பந்துக்களை கண்டால் சர்ப்பம் கண்டால் போலேயும்
ஸ்ரீ வைஷ்ணவர்களை கண்டால் பந்துக்களை கண்டால் போலே யும்
ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூ க்தி

கிருஷ்ண அனுபவமே ஆழ்வார் ஈடுபட்டு –
வாமனன் கண்ணன் சாம்யம்
வரையாதே தீண்டி மநோஹரமான செயல்
ஆயன் உத்சவர்
மூலவர் திரிவிக்ரமன்
எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள்
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்கள்
மடாதிபத்யம் வகிக்கிற -ஏக பாத்திர பூதர் – மனை வாழ்ந்து
திரு முன்பே அனுபவிக்கப் பட்ட பாக்கியம்
மூல காரணம் -பகவத் விஷயம் கால ஷேபம்
திரு குமாரன் -வித்யாப்யாசம்
மணி வண்ணன் ஸ்வாமி
6 வயசு முதல் திரு மாளிகையில் இல்லை
வித்யாப்யாசம் நிமித்தம் வெளி யில் இருந்து
ஜீயர் நியமனம் பற்றியே இது வரை நடந்து –
அத்யங்கி ஸ்வாமி
நேரடியாக ஆறு ஸ்வாமிகள் கேட்டு
செந்தாமரைக் கண் திரு குறளன் அன்றி அவன் அடியார் –சிறு மா மனிசரே இங்கே திரிவார் என்னை ஆண்டான்
இவர் திரு முன்பே நடக்க பெற்ற பாக்கியம்
பங்குனி மாசம் சாத்து முறை நடக்க உள்ளது –
ஸ்ரத்தையாகே கேட்டு அனுபவிக்கிறார்கள் யுவா குமார பருவம் –

—————————————————————————————————————————————————————-

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை உடைய பத்தர்க்கு -அடிமை தன்னில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது
தொல்லை நில மான நிலை கொண்டு

சாரம்
நெடுமால் அழகு தனில்
நீள் குணம் தனில் ரஷிக்கும்
ஈடுபடும் பக்தர்கள்
அடிமை தனில் எல்லை நிலம்
தானாக எண்ணினான்
கொல்லை நிலம் -சரம பர்வம் –
கொண்டான் மாறன் –

—————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading