திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-8-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

தொடர்பினைக் காட்டின அளவே அன்றிக்கே
இவ்வாத்மா தனக்கு மிகவும் இனிய பொருள் என்னும் இடத்தையும்
காட்டித் தந்தான் -என்கிறார்

———————————————————————————————————————————————–

யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப்
பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற வொன்றை யுணர்ந்தேனே

—————————————————————————————————————————————————

யானும் தானாய் ஒழிந்தானை-
மேலே கூறிய அனந்யார்ஹ சேஷத்வத்தில் உள்ள ப்ரீதியாலே
மீண்டும் அதனையே அருளிச் செய்கிறார் –

யாதும் யவர்க்கும் –
காரண நிலையில் உள்ள அசெதனங்களையும்
செதனங்களையும் சொல்லுகிறது –

முன்னோனை –
கார்யத்துக்கு அவச்யமாக முன் கணத்தில் இருப்பது ஒன்றே அன்றோ காரணம் ஆவது –

தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை –
பிரமன் சிவன் இவர்கள் நடுவே அவதரித்த தானும் –
பிரமன் சிவன் முதலான கார்யங்களின் கூட்டமுமாய்க் கொண்டு
விரிந்த
அத்விதீய காரணம் ஆனவனை –
அறிவுடைப் பொருள்கள்
அறிவில்லாத பொருள்கள்
முழுதும் அழிந்த போது-தன் திருமேனியிலே நீறு மூடிய நெருப்பு போலே சூஷும ரூபமாக
இவை கிடக்கும்படி ஏறிட்டுக் கொண்டு நோக்கி
படைப்புக் காலம் வந்தவாறே தன் பக்கல் நின்றும் பிரித்து –
அண்ட சிருஷ்டி அளவும் தானே நடத்தி
அண்டத்தில் வசிக்கின்றவர்களுக்கு உள்ளே பிரதானரான

பிரமன் முதலாநோர்களை உண்டாக்கி
தன் உருவமாக நின்று பாதுகாத்தலைச் செய்தும்
பிரமன் சிவன் இவர்கள் உடைய சரீரங்களையும் ஆத்மாக்களையும் தொடர்பு கொண்டு நின்று
படைத்தல் அழித்தல் களைச் -செய்தும்
அவர்கள் செய்கிற கார்யங்கள் உடன் தான் செய்கிற கார்யத்தோடு வேற்றுமை இல்லாமல்
எல்லாம் தானே நடத்துகிறவனை –

தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து –
இப்படி இனிதாய் இருக்கிறது யாருக்கு என்னில் –
சர்வ ரச-என்கிறபடியே
இவனுக்கு அவன் இனியனாக இருக்குமா போலே
ஈஸ்வரனுக்கும் இது இனியதாய் இருக்கும் அன்றோ –
அவனுக்கு -என்னது -என்பதனால் இனியதாய் இருக்கும்
இவனுக்கு -அவனது -என்பதனால் இனியதாய் இருக்கும்
ஈஸ்வரனுக்கு பரதந்த்ரப் பட்டது இவ்வாத்மா என்று அறிவதற்கு முன்னும்
தன்னைத் தானே அனுபவிக்கிற ஆத்துமா அனுபவம் அமையும்
என்னும்படி இனியதாய் இருக்கிறது அன்றோ –

என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே –
என் சரீரத்திலும்
பிராணனிலும்
ஞானத்திலும்
பரந்துஇருப்பதாய்
சிறந்ததான ஆத்மாவை
தனக்கு சரீரமாக உடையவனை அறியப் பெற்றேன்-

நின்ற ஓன்று -என்று ஜீவாத்மா ஸ்வரூபத்தைக் காட்டும் இந்த சொல்லானது
இந்த ஜீவாத்மா ஸ்வரூபத்துக்கு பற்றுக் கோடாய் இதனை சரீரமாக உடைய
பரமாத்மா அளவும் சென்று அவனைக் காட்டுகிறது
ஜீவாத்மா ஸ்வரூபத்தை காட்டும் அச் சொல் தன்னளவில் நிற்பது அல்லாமையால்
பகவானைக் காட்டும் அளவாய் அன்றோ இருப்பது

நன்று இப்பாசுரம் ஆத்மாவின் உடைய இனிமையைச் சொல்லப் புகுந்ததே யாகில்
காரணமாக இருக்கும் ஈஸ்வரனுடைய தன்மையை சொல்லுகிறது என் என்னில் –
தன பக்கல் பக்தி இல்லாத ஆத்மாக்களை கர்மங்கட்கு தகுதியாக படைத்து விட்டான் –
ஐஸ்வர்யத்தை விரும்பிய பரமன் முதலார்க்கு அவர்கள் உகந்த ஐஸ்வர்யாம் கொடுத்து விட்டான் –
எனக்கு இந்த சரீரம் விடத் தக்கது என்னும் இடத்தையும் –
ஐஸ்வர்யாம் புருஷார்த்தம் அல்லாதது என்னும் இடத்தையும்
ஆத்மவஸ்து தனக்கு
அனந்யார்ஹ சேஷமாய் -எல்லை இல்லாத இனிய பொருளாய் இருக்கும் இடத்தையும்
காட்டித் தந்தான் என்கைக்காக சொல்லுகிறார் –
நின்றனர் இருந்தினர் -என்ற பாசுரத்திலே போலே
இந்த சாமாநாதி கரண்யத்துக்கு
இனிமையோடு கூடிய ஸ்வரூபத்தின் விசெஷண அம்சமான
இனிமையிலே தாத்பர்யம்
வையதி கரண்யத்துக்கும் உலகத்தார் சொல்லுகிற சுத்த பேதம் அன்று பொருள்
சாமாநாதி கரண்யத்துக்கும் ஸ்வரூப ஐக்கியம் அன்று பொருள்
அன்றிக்கே
யாதும் யவர்க்கும் முன்னோனை -என்று தொடங்கி
என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றான
யானும் தானாய் ஒழிந்தானை உணர்ந்தேன் -என்னுதல் –

பிராப்தி மட்டும் அல்ல இது அத்யந்த போக்கியம் என்பதையும் காட்டி அருளினான் –
தாழ்ந்தது சொல்லாதீர் என்கிறார் –
யாதும் எவர்க்கும் முன்னோன் -சேதன அசேதன காரண பூதன்
தான் விஷ்ணு
சிவன் பரமா அந்தர்யாமி
சரீரமாக கொண்ட போது தேனும் பாலும் கன்னலுமாகி தித்தித்து
அனந்யார்க்க செஷத்வம்ப்ரீதியாலே மீண்டும் சொல்லி
யானும் தானாய் ஒழிந்தான்
காரண அவஸ்தை சூஷ்ம யாதும் -எவர்க்கும்
முன்னோன் ஸ்தூல ரூபம் ஆக்கி
நூல் -காரணம் வஸ்த்ரம் கார்யம்
பிரம ருத்ரர்
சக்தி அவஸ்தை பிரபை போலே சூஷ்ம ரூபம்
திருமேனியில் ஏக தேசம்
சக்தி உள்ளே உள்ள தேஜஸ் போலே
வைரக் கல் தீட்டி தேஜஸ் வெளி வருமா போலே
புதிதாக நுழைக்க வில்லை
மாணிக்கம் தேஜஸ் மறைந்து இருக்கும்
இல்லாதது வர வில்லை சக்தி அவஸ்தை பிரபை காட்டி
அண்ட சிருஷ்டி அளவும் தானே நடத்தி
ப்ரஹ்மாதிகளை உண்டாக்கி
ஸ்வென ரூபேண பாலானம்
அதிஷ்டித்து கொண்டு நின்று
அயன் அரன் என உலகு அமைத்து அழித்து –
எல்லாம் தானே நடத்துகிறவன்
சர்வ ரச
சேதனனுக்கு அவன் இருப்பது போலே
எம்பெருமானுக்கு என்னுடைய ஆத்மா இப்படி இருக்க –
ஈஸ்வர பரதந்த்ரன் அறிவதற்கு முன்பே
உபாசகனுக்கு ஆத்மா சாஷாத்காரம் இனிமையாக இருக்குமே
இதுவே போதும் போலே கைவல்யம் விழும் படி இனிமை இருக்குமே
அத்தை காட்டிலும் இனிமை பரமாத்மா
சரீரத்திலும்
பிராணனிலும்
ஞானத்திலும் வ்யாப்தமாய் ஆத்மா இருக்க
உணர்ந்தேன் –
தனக்கு சரீரமாக உடையவனை
நின்ற ஓன்று -ஆத்மா சொல்லி அது பரமாத்மா பர்யந்தம் கொள்ள வேண்டும்
ஆஸ்ரயம் ஆன பிரகாரி பர்யந்தம்
தான் தனியாக இருக்காதே
போக்யத்வம் சொல்ல வந்த இது
காரணத்வம் சொல்ல
கர்மம் தக்க படி சிருஷ்டித்து
ஐஸ்வர்யம் ப்ரஹ்மாதிகளுக்கு
எனக்கு நிரதிசய போக்கியம் காட்டி கொடுத்து
சர்வதா பிரகாரம் என்பதை
அவரவர் வேண்டிய உபகாரம் காட்டி கொடுத்து
நின்றனர் இருந்தனர் போலே –
நின்ற ஒன்றை உணர்ந்தேன் -நின்ற ஓன்று -ஆத்மா இங்கே அர்த்தம்
அத்துடன் நிற்காமல் உள்ளே உள்ள அவன் பர்யந்தம் கொண்டு போக வேண்டும்
நின்றனர் இருந்தனர் சாமானாதி கரண்யம்
நிற்றல் செயலை செய்பவர் பிரகார பூதர்
விசெஷன அம்சம் போக்யத்தில் தாத்பர்யம்
வையதி கரண்யம் -இது போலே அது இல்லை –
சாமானாதி கரண்யம்-ஐக்கியம் சொல்ல வில்லை -ஸ்வரூப ஐக்கியம் பொருள் இல்லை
புஷ்பம் நீலம் -மலர்ந்த -புஷ்பம் குறிக்கும் -நீலத்வத்தை குறிக்கும்
தது
த்வம்
இரண்டும் பரமாத்வை குறித்தாலும்
பரமாத்மா வேறு ஜீவாத்மா வேறு என்கிறார்
பிரகாரமாக கொண்டவை –

காரண பூதம்- தத்
பிரகார விசிஷ்டனான நீ -த்வம்
இப்படி இரண்டும் அவன் அளவில் செல்லுமே
நின்ற ஒன்றை -ஆத்மாவை பிரகாரமாக கொண்ட அவனை குறிக்கும்

எனக்கு இப்படி காட்டி அருளினான் என்கிறார்

 

————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading