திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-8-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

காரணம் இலாத கிருபையாலே -நிர் ஹேதுக-கிருபையாலே
தன விஷயமாக இச்சையும் பிறப்பித்து
என்னோடே கலந்து
அக்கலவி நிலைத்து நிற்கும் பொருட்டு
சிறப்பினை உடையதாய்
தனக்கே யுரியதுமான ஆத்மாவின் ஸ்வரூபத்தையும்
காட்டி அருளினான் -என்கிறார்

————————————————————————————————————————————————-

உணர்விலும் உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன்
அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி
யானும் தானாய் ஒழிந்தானே

————————————————————————————————————————————-

உணர்விலும் உம்பர் ஒருவனை
உணர்விலே உளரான நித்ய சித்தர் -என்றது
ஞானத்தில் மேம்பட்டரான நித்ய சூரிகள் உடைய
ஸ்திதி முதலானவைகள் தன
அதீனமாம்படி இருக்கிற ஒப்பற்றவனை –
இதனால்
அடையத் தக்க பேற்றின் ஸ்வரூபம் சொல்லிற்று
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கும் இருப்பே அன்றோ
அடையத் தக்க பேரு
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -என்றே அன்றோ இவர் வேண்டிக் கொண்டது –

அவனது அருளால் –
அவனுடைய திரு அருளாலே –
அடையத் தக்க பேறு அவனே என்கிற நிர்பந்தத்தைப் போன்று
அவனை அடைவதற்கு உரிய வழியும் அவன் திரு அருளாய் இருக்கிறபடி –

உறல் பொருட்டு –
அடையும் பொருட்டு
பேறும் பேற்றினை அடையும் வழியும் அவனே ஆகில்
நீர் அதிலே தொடர்பு உற்ற கார்யம் யாது -என்ன –

என் உணர்வினுள்ளே யிருத்தினேன்-
அவனை என் ஞானத்துக்கு விஷயம் ஆக்கினேன்
வைத்தேன் மதியால் -என்றது தானே அன்றோ –
விரும்பினேன் என்கை –
அவ்வாறு விரும்புதலும் தன் செயலோ என்ன –

அதுவுமவன தின்னருளே –
அந்த விருப்பம் பிறந்ததுவும் அவனுடைய திரு அருளாலே –
நின்ற நின்ற அளவுகள் தோறும்
இவ்வளவும் அவனாலே பிறந்தது என்னும்படி ஆயிற்று இருப்பது
அவனுடைய நல்ல எண்ணம் -தன் பொன்னடிக் கீழ் இருத்தும் வியந்து -என்று
பேறும்
பேற்றுக்கு வழியும் அவனே என்று கூறி
அருத்தித்து -என்றார் அன்றே –
அதனை அன்றோ இங்கு சொல்கிறது
இரண்டரைப் பாட்டு என்றது அற்றது –
மேல் ஆத்மா ஸ்வரூபத்தின் சிறப்பினைக் காட்டித் தந்தார் என்கிறார் –

உணர்வும் –
விஷய ஞானமும்

உயிரும்-
பஞ்ச விருத்தி பிராணனும் -பிராணன் அபானன் -உதானன் சமானன் விதானன் -ஐந்து பிராணனான உயிர் –

உடம்பும் –
சரீரமும் –

மற்று உலப்பினவும் –
மற்று உலப்பு இல்லனவும்
மற்றும் எல்லை இல்லாதனவான மகத்து முதலான
மூலப் பகுதியின் விகாரங்களும் –
மூலப் பகுதியும் –

பழுதேயாம் உணர்வைப் பெற ஊர்ந்து-
இவை எல்லாம் தாழ்ந்தவை என்னும்படியான
அறிவை நான் பெறும்படி நடத்தி –
அன்வர்த்த பிரயோஜன தேர் ஊருமாரு போலே -என்றது
இவை புருஷார்த்தங்கள் அல்லாதவை என்னும் உணர்வு உண்டு -மயர்வு அற்ற மதி
அதனை நான் உடையேனாம்படி செய்து -என்றபடி –

இறவேறி –
பிரக்ருதியும் பிரகிருதி சம்பந்தப் பட்ட பொருள்களும்
புருஷார்த்தங்கள் அல்லாதவைகள் என்னும் அளவே அன்றிக்கே
முடியப் போய்-என்றது
ஞான ஆனந்த ஸ்வரூபமாய்
பகவானுக்கு அடிமைப் பட்டு இருக்கும் அதனையே தனக்கு
இன்பமாகக் கொண்டு இருக்கும் ஆத்மவஸ்து
என்னும் அளவும் காட்டித் தந்து -என்னும்படி-
அன்றிக்கே
இற ஏறி -முடிய ஏற்றி என்னுதல் –

யானும் தானாய் ஒழிந்தானே-
அவ்வளவிலும் முடியாமல்
என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்லலாம்படி
தனக்கு பிரகாரம் ஆகையாலே
அடிமை என்னும் இடத்தையும் காட்டிக் கொடுத்தான் –
ஆழ்வீர்-என்றால் ஏன் -என்பான் ஈஸ்வரனே போலும் காணும்
நான் என்னும் சொல்லும்
நான் என்னும் புத்தியும்
தன்னளவும் செல்லும் படி சரீரமாய் இருக்கையே
ஸ்வரூபமாம்படி இருக்கிற படியைக் காட்டித் தந்தான் –
தத் -சப்தம் -குணங்களோடு கூடின இறைவனை காட்டுவது போன்று
த்வம் -சப்தமும் சரீரத்தோடு கூடின ஆத்மாவுக்குள்
அந்தர்யாமியாய் இருக்கிற சர்வேஸ்வரன் அளவும் செல்லக் கடவது அன்றோ –
தத் -அவன்
த்வம் -நீ
அஸி -ஆகிறாய்
போலே என்கிறார்

கேவல கிருபையாலே
இச்சை உண்டாக்கி
கலந்து
ஆத்மா ஸ்வரூபம் காட்டி அருளுகிறான்
நான் ஒன்றுமே செய்ய வில்லை
இசைவித்து கலந்தானே
பணம் கொடுத்து மனசையும் கொடுத்து -உணர்வில் உள் நிறுத்தினேன் -அதுவும் அவனது இன்னருளே
உணர்வில் உம்பர் ஒருவன் -அப்படிப் பட்டவனை
ஞானம் கொடுத்து -வெறிதே அருள் செய்தான்
உணர்வு -ஞானம்
உயிர்
மற்றவை பழுதே
யானும் தானே -யான் சொல்லில் தான் இருக்கும்படி
நித்ய சூரிகள் சத்தாதிகள் இவன் -உணர்வில் உம்பர் ஒருவன் -பிராப்ய ஸ்வரூபம்
அடியார் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ
பாகவத சமாகம் பிராப்யம்
அதுக்கு பிராபகம் -அவனுடைய அருளால்-அவன் பிரசாதமே இதுவும்
உறல் பொருட்டி பிராபிக்கையின் பொருட்டு –
என் உணர்வில் உள்ளே நிறுத்தினேன்
மனஸ் ஞானம் விஷயம் ஆக்கினேன்
வைத்தேன் மதியால் -அனுமதி கொடுத்தேன் -தடுக்க வில்லையே –
இச்சை தான் ச்வாதீனமோ என்னில் -அதுவும் அவனது இன்னருளே
இச்சை பிறந்ததும் அவன் பிரசாதம்
ஷணம் ஷணம் நின்ற நின்ற அளவிலும் அவன் அனுக்ரகம் தான்
பகவத் பிரசாதம் -எல்லாம்
யாதொன்றை செய்தாலும் பிரசாதகமாக நினைக்க கூடாது
சேவா காலம் செய்வது பிரசாதம் பெற தப்பான அர்த்தம்
எல்லாம் பிரசாதம் தான் –
இவ்வளவும் அவனாலே பிறந்தது சௌஹார்தம் கிருபை
சோபனமான ஹிருதயம்
பொன்னடிக் கீழ் இருத்தும் -அர்த்தித்து அதுவும் அவன் இன்னருளே -என்கிறார்

மேல் ஆத்மா ஸ்வரூபம் வை லஷண்யம்
உணர்வும் -ஞானமும் -வைஷைகிய ஞானம் விஷயாந்தர ஞானம் இங்கே
ஒருவனையே நோக்கும் உணர்வு சொல்ல வில்லை
வைஷைகம் விஷயம்
உயிர் -பஞ்ச வ்ருத்தி பிராணன்
உடம்பு
மற்றும் -மக தாதிகள்
பழுதேயாம் -ஹேயம் என்னும் அறிவை உணர்த்தி –
மயர்வற மதி நலம் அருளி –
அன்யர்த்தன தேர் -உருளுமா போலே
சமர்தனமான ராஜா தரித்திரன் ஆனால்
அர்ஜுனன் -தானே
சரீரம் ரதம் அன்வர்த்தம் உள்ளத்தை உள்ளபடி ஆக்குதல்
மேதாவிமணி -காஞ்சி பட்டம் ஸ்வாமி கொடுத்து –
மேதாவிமணி வேங்கட கிருஷ்ணன் 22 வயசில் கொடுத்து அருளி
பகவத் விஷய பதிப்பு proof பார்த்து
சந்தோசம்
மேதாவிமணி பட்டம் கொடுத்தேன் அது அன்வர்த்தம் ஆனது என்றார்
அன்வர்த்தம் -பெயர் வைத்து அது படி நடந்தால் பொருத்தமாக இருக்கும்
அர்த்தம் உடையதாக ஆவது
வெறும் சப்தம் மட்டும் இல்லை
அன்வர்த்தன தேர்
விஜய ரதம்
பேர் வைத்து
கிருஷ்ணன் நடத்தினதால் விஜய ரதம் ஆனதே –
ஆத்மாவாகிற தரை நடத்தி
சரீரம் ஆகிய தேரை நடத்தி –
இவை அபுருஷார்தம் காட்டிக் கொடுத்து
முடியப் போய்
த்யாஜ்யம் மட்டும் இல்லை
ஆத்மா வஸ்துவை -சேஷத்வ வஸ்துவை காட்டிக் கொடுத்தான்
யானும் தானாய் ஒழிந்தான்
பிரகாரதயா சேஷம் –
பிரிக்க முடியாத நெருக்கம் –

பிரகாரமாக இருக்குமே சகல வஸ்துக்களும்
ஆழ்வீர்-கூப்பிட்டால் ஈஸ்வரன் வருவான் போலே
அஹம் சப்தம் அஹம் புத்தியும் தன்னளவில்
தத்வமஸி வாக்யார்த்தம்
தத் த்வம் அஸி
ச்வாதஹெது உத்பாதகர்
அனைத்தும் அவன் இடம் உண்டாகி நீ அவனாகிறாய்
அத்வைதி தப்பாக
நீ அவன் வெவேற சப்தம் பிரகாரி நெருக்கம் காரணமாக –
ச்வேதஹெது -காரியம் அவன் காரணம் என்பதை காட்டி –
தத் சப்தம் -ஜகத் காரண பூதமான ப்ரமம்
த்வம் -சரீரமுடன் உள்ள ஜீவன் அந்தர்யாமி அவன்
பிரகாரம் ஆத்மா என்பதை காட்டி
அவன் பிரகாரம் பார்த்தால் தோஷம் பார்க்க கூடாதே –
ஹேயத்வம் கழியுமே-

—————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading