திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-8-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

என்னுடைய மனத்தில் புகுந்த அளவு அன்றிக்கே
என் சரீரத்திலும் புகுந்து கலந்தான் -என்கிறார்

———————————————————————————————————————————

அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம்
படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன்
உணர்விலும்பர் ஒருவனே

———————————————————————————————————————————

அடியேன் உள்ளான் –
திருக் கோட்டியூர் நம்பியின் ஸ்ரீ பாதத்திலே
ஆறு மாதங்கள் ஆழ்வான் சேவித்து நின்று
மீளப் புக்கவாறே
ஆழ்வான் -ஆழ்வார் அடியேன் உள்ளான் -என்றபடி கண்டாயே என்ன –
கிருதார்த்தனானேன் -என்று போந்தாராம் –
என் உள்ளான் என்ன வேண்டும் இடத்தில்
அடியேன் உள்ளான் -என்கையாலே
ஆத்மாவுக்கு நிரூபகம் ஞானமும் ஆனந்தமும் அன்று -அடிமையே -என்கிறார் –
அஹம் அர்த்தத்துக்கு ஞாநானந்தங்கள் தடஸ்தம் என்னும்படி தாஸ்யம் இ றே அந்தரங்க நிரூபகம்
ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ சூக்தி –
ஞான ஆனந்தங்களைக் காட்டிலும் நெருங்கிய தொடர்பு உடையது
பகவானுக்கு அடிமையாக இருக்கும் தன்மை –
பகவானுக்கு சரீரமாய் இருப்பதனால் கிடைத்த இருப்பை உடைய வஸ்து ஆத்மாவாகையாலே —

உடல் உள்ளான் –
சேதனனுக்கு பகவானுடைய ஸ்வரூபத்தைக் காட்டிலும்
திவ்ய மங்கள விக்ரகமே உத்தேச்யம் ஆனால் போலே
ஈஸ்வரனுக்கும் இவருடைய ஆத்மாவைக் காட்டிலும்
இவர் கழிக்கிற சரீரம் உத்தேச்யமாய் தோற்றா நின்றது –
செருக்கர் தாம் உகந்த விஷயத்திலே அழுக்கு உகக்குமா போலே –
இதனால்
ஜீவ பர பேதமும் -அடியேன் -உள்ளான் -என்பதால்
ஜீவர்களுக்குள் உள்ள பரஸ்பர பேதமும் -அண்டத்தகத்தான் -என்பதால்
சேஷ சேஷி சம்பந்தமும் இல்லை
என்று சொல்லுகிற மாதங்கள் பொருள் ஆற்றலால் மறுக்கப் பட்டனவாம்
உம்முடைய திரு மேனியை விரும்புகின்றவன் யார் என்ன
இன்னான் என்கிறார் மேல்-

அண்டத்தகத்தான் புறத்துள்ளான்-
அண்டத்துக்கு உள்ளே இருக்கிற பொருள்களோடு
புரம்புள்ள பொருள்களோடு
வாசி அற
எங்கும் பரந்து இருப்பவன் ஆனான் –
எங்கும் பரந்து இருக்கிற பொருள் கண்டீர்
ஒரு உருவத்திலே
ஏகதேசமான சரீரத்திலே
கூற்றிலே அகப்பட்டது -என்கை-

படியேயிது வென்றுரைக்கலாம்படியனல்லன் –
எல்லா வகையிலும் ஒத்ததாய் இருப்பது
ஒரு உபமானத்தை உடையன் அல்லன் -என்றது
எல்லா இடத்திலும் பரந்து இருப்பதுமாய்
எல்லா பொருள்களையும் நிர்வஹித்துக் கொண்டு இருப்பதுமாய்
இருப்பது ஒரு பொருள் உண்டாகில் அன்றோ ஒப்பு சொல்லலாவது-என்றபடி
சொல்லலாம் படிதான் என் என்னில் –

பரம் பரன்
மேலானவற்றுக்கு எல்லாம் மேலானவன் –
இவ்வளவு அன்று இவ்வளவு அன்று -என்கிறபடியே
நேதி நேதி -ப்ருகதாரண்ய உபநிஷத் -4-3-
இவ்வளவு அன்று என்னும் இத்தனை –
ஆனாலும் இவ்விஷயத்தை நினைக்கும்படி தான் என் என்னில் –

கடி சேர் நாற்றத்துள்ளாலை-
கடி என்பதும் நாற்றம் எனபது ஒரு பொருளனவே ஆதலின்
மீமிசை சொல்லாய் -மிக்க வாசனை என்பதனைக் குறிக்கிறது
அன்றிக்கே
கடி எனபது புதுமையாய் -செவ்விப் பரிமளம் என்னலுமாம்
நாற்றத்துள் என்றார் ஏனும்
வாசனைக்கு உள்ளும் புறம்பும் இல்லாமையாலே நாற்றத்திலே -என்றுகொள்க
ஆலை – தேன்-

இன்பத் துன்பக் கழி நேர்மை –
அதனுடைய அனுபவத்தால் வந்த
சுகத்தில் துக்கத்தின் பகுதியைக் கழித்து
நுண்மையான சுகத்தின் பகுதி -என்றது
மலரில் மணத்தை உவமையாக சொல்லுகையாலே
அதில் அற்பம் அழிந்து போதல் முதலானவைகள் துக்கத்தின் பகுதி
அவை கழிந்த நுண்மை -சுகத்தின் பகுதி
துன்பம் கழிந்த இன்பம் -என்றபடி

ஓடியா வின்பப் பெருமையோன்-
அழியாததுமாய்
பெரியதுமான சுகம்
அதாவது அழியாததுமாய்
தனக்கு மேல் ஓன்று இல்லாததான
ஆனந்தத்தை உடையவன் -என்றபடி
ஆனந்தமய -என்கிறார் என்றபடி –

உணர்விலும்பர் ஒருவனே –
ஞானத்தில் வந்தால் மேலான ஒருவன்
ஒப்பற்ற ஞான ஆனந்த ஸ்வரூபன் -என்றபடி
ஓடியா இன்பப் பெருமையோன் -உணர்விலும்பர் ஒருவன்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
எல்லாருக்கும் விரும்பத் தக்கவனாய் இருக்கிறவன் காண்
என் சரீரத்தை விரும்புகிறான்-

சரீரத்திலும் புகுந்து அருளினான் —
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -எங்கு எங்கு உள்ளான் சொல்லி
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
இதுவே படி என்று உரைக்க முடியாதே
இனன் அலன்
பரம் பரன் பராத் பரா என்றே சொல்லலாம் படி
கடி சேர் -மீ மிசை -கோது கழித்த ஆலை -தேன்-
புஷ்பம் கெடலாம் – தேன் கெடாதே
துன்பம் கழிந்த இன்பம் போல்வான்
உணர்வில் உம்பர் ஒருவன் –
ஆறு மாசம் சேவித்து ஆழ்வான்-திருக் கோட்டியூர் நம்பி
பகவத் சேஷத்வம் -ஆத்மாவுக்கு நிரூபகம் காட்டி –
ஞாதிகரணம் அதிகரணம் -ஞ்தாதயேவா அறிவுடையான்
ஞாதா கர்த்தா போக்தா சொல்லி
கர்த்தா –
ஞானம் வடிவு எடுத்தவன்
ஞானமே குணமாக கொண்டவன் –
அத்வைதி குணம் உண்டு ஒத்துக் கொள்ள வில்லை -இரண்டு கூடாதே
ஏகமேவ ந அத்விதீயம் என்பதால்
ஞானமே வடிவு எடுத்தது பிரமம்
உதாரணம் கொஞ்சம்
விளக்கு சுடர் நெருப்பே வடிவு எடுத்தது சொல்வது போலே –
ஸ்வரூப ஞானம் வேற
தர்மி ஆத்மா –
தர்ம பூத ஞானம்
வஸ்த்ரம் தரமி வெண்மை குணம் தர்ம பூதம்
அத்வைதி 7 அனுபபத்தி எம்பெருமானார்
பிரமத்துக்கு ப்ரமம் அவித்யை அஞ்ஞானம் என்பர்
ஞான ஸ்வரூபம் இருக்க அஞ்ஞானம் வருமா
வாதம் -அஞ்ஞானம் வராது
ஜீவன்
அஞ்ஞானம் வந்து சம்சாரம் வருவதாக சொல்கிறீர்களே
எப்படி -என்பர்
எம்பெருமானார் –
ஞானம் குணமும் உண்டு தர்ம பூத ஞானம் குறைவு வருகிறது
பரமபதம் போனால் இதுவும் மலரும் –
ஞானாந்தம் சேஷத்வம் மூன்றும் ஸ்வரூபம்
அடிமை தன்மையே முக்கியம்
சேஷத்வம் கூடிய அறிவுடைமையா
அறிவுடைமை உடன் கூடிய சேஷத்வமா
சித்தாந்தம் இது -பிரமாணம் உள்ளதா -ஆசார்யர் மூலம் பெற்றுக் கொள்ள
கூரத் ஆழ்வான் -எம்பெருமானார் -நடந்த -காஞ்சி சுவாமி ஒத்துக் கொள்ள வில்லை
கட்டுக் கதைகள்
அதிகப்படி
பிரம்மா சூத்திரம் கூரத் ஆழ்வான் எழுத
பாஷ்ய காரர் உமக்கு தான் வர வேண்டும்
நான் எழுதுகிறேன் நீர் திருத்தும் சொல்ல
நான் திருத்துவதா
நான் சொல்கிறேன் நீர் எழுதும்
கீதா பாஷ்யம் அப்படி இல்லையே
சொல்லுகிற விஷயம் ஒத்துக் கொள்ள வில்லை என்றால் சொல்லும்
விசாரம் இருந்தால் நாளைக்கு பார்க்கலாம்
ஆளவந்தார் நினைத்து மீண்டும்
கோபித்து கொண்டு காலாலே உத்தைது -தப்பாக எழுதி
கோபித்து கொண்டாலும் அவர் வஸ்து
அசித் போன்ற பாரதந்த்ர்யம் கொண்டவர்
அனுக்ரகம் போலே நிக்ராகத்துக்கும் நான்
சீறி சுருளி
சிஷ்ய லஷனம் சீமா பூமி கூரத் ஆழ்வான்

ஆறு மாசம் –
ஸ்ரத்தை உள்ளதா பரிட்ஷை செய்து –
எம்பெருமானார் வரம்பு அறுக்கும் முன் காலம் –
அடியேன் உள்ளான்
கிருதார்த்தன் ஆனேன்
மாணிக்கம் கொண்டு -குரங்கு ஏறி உற்று -திரு விருத்தம் பாசுரம்
மாணிக்கம் ஆன அர்த்தம் கொண்டு வந்தார் -எம்பெருமானார்
ஆழ்வான் அனந்த ஆழ்வான் பணித்தான் ஏக வசனம் –
திவ்யார்த்த தீபிகை
உடல் தனியாக சொல்லி
ஆத்மாவில் உள்ளான் என்னுள்ளான் சொல்லாமல்
அடியேன் -நிஷ்க்ருஷ்ட ஆத்மா வஸ்து இங்கே காட்ட
அடியேன் செய்யும் விண்ணப்பம் -சரீரம் உடன் கூடிய வஸ்து அங்கெ
அடியேன் காண்பான் அலற்றுவன் பார்க்க சரீரம் வேண்டுமே
இங்கு மட்டும் தான் தனி ஆத்மா சொல்வதால்
பிரதான லஷனம் அடிமை-ஞானம் உள்ளான் அறிவுள்ளான் சொல்ல வில்லையே

தாஸ்யம் இ றே அந்தரங்கம்
ஞான ஆனந்தங்கள் ததஸ்தம் என்னும் படி -கரை போலே இவை –
ஞோத்வேத சூத்திர வியாக்யானம் இத்தை காட்ட வில்லை
சதுர்விதா பஜந்தே மாம் -இடத்தில்
ஞானி சொல்லும் இடத்தில் –
பகவத் செஷத்வமே முக்கியம் உணர்ந்தவன் ஞானி காட்டி அருளி
கீதா பாஷ்யத்தில் ஈடு படுத்தி உள்ளார்
பிரம்மா ஸ்வரூபம் ஞானி சங்கரர் காட்டி இதற்க்கு
ஆழ்வார் விக்ரஹ ஆசை கொண்டது போலே
இவர் ஸ்வரூபத்திலும் -வியாஜ்ய தேகத்திலும் ஆசை கொண்டார்
ஞானியை விக்ரகத்துடன் கொள்வான்
இந்த ஜன்மம் தானே ஆழ்வாரை நம்முடன் சேர்த்தது
செருக்கர் அபிமத விஷயத்தில் அழுக்கு உகக்குமா போலே
ஜீவ பர பேதம் -காட்டி -அடியேன் உள்ளான் -வெவேற
பரஸ்பர பேதம் -ஜீவருக்குள் அண்டத்துள்ளான்
சேஷ சேஷி
அர்த்தத்தில் சித்தம்
தானே கிடைக்கும்
இப்படி உம திருமேனி விரும்புகிறவன் யார்
சர்வகதன்
ஒரு வுயக்தியில் ஏக தேச சரீரத்துக்கு ஆசைப் பட்டு இருக்கிறான் –
என்னுள் இருப்பது தன்னுடைய சத்திக்கு
மற்றவற்றுள் இருப்பது அவற்றின் சத்தை கொடுக்க
உபமானம் இல்லாதவன்
சர்வகதம் -பரந்து சர்வ நிர்வாககன் –
பரத் பரன்
நேதி நேதி-ந இதி ந இதி சொல்லி
சூன்யம் அத்வைதி தப்பாக
எதுவும் ஒப்பு இல்லை காட்ட சுருதி வாக்கியம்
அறிய முடியாவிடில் பிரதி பத்தி செய்வது எப்படி -சொல்கிறார் மேல்
ஞானமயன்
கடி சேர் -மிக்க பரிமளம் செவ்விப் பரிமளம்
நாற்றத்துள் -நாற்றத்தில் என்றபடி
தேனுக்கு வாசனை -புஷ்பத்தில் பரிமளம் உண்டே
இன்ப துன்ப கழி நேர்மை
இன்பத்தில் -சக்கை
அல்ப அஸ்த்ரங்கள் துக்காம்சம்
துன்பமே கலசாத இன்பம்
ஜீவாத்மா நிஷ்க்ருஷ்ட அம்சம்
ஓடியா அழியா
நித்ய நிரதிசய ஆனந்தமயம் என்கிறார் –
உணர்வில் உம்பர் ஒருவன்
மேலானவன்
அத்விதீய ஞான ஆனந்த ஸ்வரூபன்

அப்படிப் பட்ட மேன்மை உடையவன் என்னுடைய சரீரத்தில் ஆசை கொண்டானே
நைச்சய அனுசந்தானம் சாயல் அடிக்கிறதே

—————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading