கண்கள் சிவந்து -பிரவேசம்
மாயக் கூத்தா என்னும் திருவாய் மொழியிலே
இவருக்கு ஓடின விடாய் எல்லாம் ஆறும்படி
இருத்தும் வியந்து -என்கிற திருவாய்மொழி யிலே வந்து கலந்து
இவர் விடாயும் தீர -தன் விடாயும் தீர்ந்து
இவரைப் பெற்ற பேற்றினால் ப்ரீதனாய்
நினைவு இன்றிக்கே இருக்கச் செய்தே இங்கனே சேர விழுந்தது
யாங்கனம் விழுந்தது எனின் –
இனி உண்டான கலவி உலைய ஒண்ணாது –
இவர் ஆகிறார்
வளவேழ் உலகின் -என்ற திருவாய் மொழியைப் பாடின ஆழ்வார் ஆயிற்று –
நாம் கிட்டக் கொள்ள -சிறியேனுடைச் சிந்தையுள் -என்று
தம் தாழ்வினை நினைத்தவர்
இன்னும் அது பின்நாட்டி அகலப் பார்ப்பர்
அங்கனம் அகலப்பார்ப்பதற்க்கு முன்னே அதனை நீக்க வேண்டும் -என்று பார்த்து
இனி இவர் தாம் அகலப் பார்ப்பதும்
அநாதி காலம் சம்சாரத்தில் உழன்று போந்த ஆத்மவஸ்து
அங்குத்தைக்கு இனி அது அன்று என்று ஆயிற்று
இது அங்கன் அன்று
வந்தேறியான இதனைப் பாராமல்
அடியைப் பாரீர் என்று
இந்த ஆத்மவஸ்து வினுடைய சிறப்பினை இவர் நெஞ்சிலே படுத்த வேண்டும் என்று பார்த்தான்
அங்கனம் பார்த்து
என்றும் உள்ளதாய்
ஞான ஆனந்த லஷணமாய்
நமக்கே உரிய அடிமையாய் காணும் இருப்பது
நீர் கிட்டுமது நமக்கு தாழ்வு அன்று
கௌச்துவத்தை போன்றும் பிராட்டிமாரைப் போன்றும் ‘
நமக்கு நிறமாம் இத்தனை -என்று
இவருடைய ஸ்வரூபத்தின் சிறப்பினை இவர் நெஞ்சிலே படுத்துகிறான்-
அங்கனம் படுத்தும் இடத்து
உம்முடைய ஆத்மா ஸ்வரூபம் இருக்கும்படி காட்டுவதற்கு வாரீர் -என்றால்
மின் மினி போலே இருக்கிற இதில் சரக்கு என் -என்று இசைவார் ஒருவர் அல்லர் இவர்
அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்றருள் -என்று
நம்வடிவிலே துவக்குண்டு இருப்பது ஓன்று உண்டு
ஆதலால் நம் வடிவினைக் காட்டி அதன் மூலமாக நமக்கு
பிரகாரமாக இருக்கிற ஆத்மா ஸ்வரூபத்தை காட்டிக் கொடுப்போம் -என்று பார்த்து –
வாரீர் நம்முடைய வடிவு அழகு இருக்கிறபடி கண்டீரே
நம்மைக் காணும் காட்சியிலே உம்மையும் காணலாய் காணும் இருப்பது -என்று
தம்முடைய வடிவு அழகினை முற்பட அனுபவிப்பித்து
தனக்கு நூபுரம் முதலான வைகளைப் போன்று மிகைனிய பொருளுமாய்
தனக்கே அடிமையுமாய் இருக்கிற ஆத்மா ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்க அதனை
அனுபவித்து இனியர் ஆகிறார்
இத் திருவாய்மொழி யில் முதல் இரண்டரை பாசுரங்களால்
தன்னை அனுபவிப்பித்து
பின்னர் ஆத்மா ஸ்வரூபத்தை காட்டிக் கொடுத்தானாய் இருக்கும்
அதற்கு அடி என் என்னில்
ஆத்மவஸ்து வானது சர்வேஸ்வரன் தன்னைப் பற்றி அல்லது இராமையாலே
பற்றுக்கோடான தன்னைக் காட்டி
பின்பு ஸ்வரூபத்தைக் காட்டிக் கொடுக்கிறான் -என்பாரும் உளர்
அன்றிக்கே
ஸ்வரூபம் இருக்கிற படியைக் காட்டித் தருவதற்கு வாரும் என்றால் இசையார் என்று
தன்னை முற்பட காட்டிக் கொடுக்கிறான் -என்பாருமுளர் –
அன்றிக்கே –
இரண்டரை பாசுரங்களாலும்
இருத்தும் வியந்து -என்னும் திருவாய் மொழியில் கூறிய
கலவி பின்னாட்டுகிறது -என்பாரும் உளர் –
சிறியேன் உடைச் சிந்தையுள்
நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
வள வேழு உலகு தடைக்குமே
ஓட விடக் கூடாதே
ஆத்மா ஸ்வரூப வைலஷண்யம் காட்ட –
நேராக காட்டாமல்
அவனில் பிரகாரம் ஏக தேசம் என்பதால்
அதில் தம்மையும் கண்டார்
யசோதை பிள்ளை வாயுள் தன்னையும் கண்டல்
ச பிரகார பூதனான சர்வேஸ்வரனில் தம்மையும் கண்டார் –
இது நம்மை பற்றி -என்பதால் கஷ்டம் புரிந்து கொள்ள
மற்றவை அவனை பற்றி அனுபாவ்யமான திரு வாய் மொழி
வேதாந்த சாஸ்திரம் கொண்டு நிறைய அருளுகிறார் –
மாயக் கூத்தா விடாய் ஆறும் படி சம்ச்லேஷித்து
தம் விடாயும் தீர்ந்து -இவரை பெற பேற்றால் ப்ரீதினாய்
துயர் அறு சுடர் அடி -அடியார் துயர் நீங்க தானும் துயர் அற்றவனாய்
சேர்ந்தவர் கை நழுவ கூடாதே
கம்பர் கண் இழந்தார் பெற்று இழந்தார் போலே –
பிரவ்ருதமான சம்ச்லேஷம் சிதிலம் ஆகக் கூடாதே
ஆழ்வார் வள வெழு உலகு ஆழ்வார்
இது இவருடைய எத்திறம் இருக்கிறபடி –
நெடுமாற்கு அடிமை ஆழ்வார் உடைய கண்ணி நுண் சிறு தாம்பு -என்பார்
பாகவதரையே எல்லாமாக கொள்வார் ஆழ்வார்
ஆழ்வார் வள வெழு உலகம் -சிஎன் உடை சிந்தை –
கை முதிக நியாய சித்தம் –
இப்பொழுது ராகம் ஆரம்பிக்க -பின்னாட்டி அகலப் பார்ப்பார்
முன்பே -ஏற்கவே -ஏற்க எனவே -பரிகரம் பண்ண வேண்டும்
சாக்கடை விழுந்த வஸ்து
சம்சாரத்தில் உள்ள ஆத்மா
அங்குத்தைக்கு ஏற்காது
இது வந்தேறி -அடியைப் பாரும்
கர்மத்தால் வந்தது -அது ஒழிய -உபாதி போனால் இயற்கைத் தன்மை மீனு
வைர மோதரம் சாக்கடையில் விழுந்தால் -தோஷம் வாராதே
அலம்பி கொள்வோமே
குரு மா மணியாய் அணையும் வஸ்து
ஆத்மா நித்யம்
ஞானம் ஆனந்த லஷணம் வடிவு எடுத்தது -ஸ்வரூபம்
நமக்கு அத்யந்த சேஷம்
நீர் கிட்டுமது நமக்கு அவத்யம் இல்லை –
சேஷ பூதன் -தாழ்ந்தவனாய் இருந்தாலும் முன்னே வந்து வேலை செய்ய வேண்டும்
கௌஸ்துபம் -பிராட்டி போலே
மரு -திரு மச்சம் -அசித் தத்வம்
சித் -கௌஸ்துபம் –
மாணிக்கம் போலே
குரு மா மணிப் பூ குழாவித் திகழும்
குரு மா மணியாய் அணையும் வஸ்து ஆசார்ய ஹிருதயம்
கடி மா மலர்ப் பாவசி உடன் சாம்ய சாதகம்
அநந்ய- யார்ஹா -அநந்ய சேஷத்வம் அநந்ய போக்யத்வம் சரண்யத்வம்
சம்ச்லேஷம் தரித்து
விச்லேஷம் தரியாமல் –
ஸ்வரூப வால் லஷண்யம் பெருமை தெரிவித்து
ஆத்மா ஸ்வரூபம்
மினி மினி போலே இருக்கும் இது சரக்கு இல்லை
என்பாரே -வர மாட்டார்
கேட்க இசையார்
அவ்வாய் அன்றி நாம் அறியேன் -அழகில் ஈடு பட்டவர்
அத்தை காட்டி -திவ்ய மங்கள விக்ரஹ வடிவு அழகாய்
நம்மை முன்னிட்டு –
பிரகாரமாய் இருக்கும் ஜீவாத்மாவைக் காட்டுவோம்
நம்மை காணும் காட்சியில் உம்மை காண்பீர்
நூபுராதி -திருவடி
அது போலே ஜீவாத்மாவும் திவ்ய ஆபரணம் –
முதல் இரண்டரை பாட்டால் தம்மையை காட்டி
திவ்ய மங்கள விக்ரக வை லஷ்ணயம்
ஆஸ்ரயனிய மான அத்தை காட்ட
பிரதுக் ஸ்திதி அநர்கம்-மற்றவை
தாரகம் தரிக்கும் -சக்தி அவனுக்கே –
சித்
அசித் இரண்டிலும் ஈஸ்வரன் உண்டே
சித் அசித் சேர்ந்து இருக்கும் பொழுது உயிர் இருக்க
சங்கை வருமே
பிறேதத்திலும் அவன் உள்ளான் -சித்தாந்தம்
அது நசிக்கலாமா
ஸ்வரூப மாறுபாடு தான் -நாசிக்க வில்லை
ரூபம் இழக்கும் -வஸ்து நசிக்கிறது இல்லையே
வஸ்து ரூபம் உடன் இருந்து
உள்ளதும் இல்லாததும் -ஒரு படிப் பட இல்லது -அடியோடு இல்லாதது இல்லை –
ஜீவத்வாரா சரீரம் ரூபம் அடைந்து
நித்ய இச்சையால் சேதன அசேதனங்கள் நித்யம்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடை
பார்த்திபன் வைதிகன்
குழந்தைகள் திரும்பியது பகவத் சங்கல்பம்
ஒரே உதாரணம் திரும்பி வந்தது பரம பதம் சென்று வந்தது
சங்கல்பம் கொண்டத்தால் நித்யம்
சகயம் வேற
யோக்கியம் வேற
நித்ய சங்கல்பத்தால் நித்யமாக இருக்கும்
பிரிதிக் ஸ்திதியே இல்லை -அவன் அன்றி
பூ வாசனை தனித்துக் காட்ட முடியாதே
குணம் வஸ்து போலே
பிரகாரம் பிரகாரி
முதலில் தன்னைக் காட்டி பின்பு ஆத்மா ஸ்வரூபம் காட்டுகிறான்
இருத்தும் வியந்து -பின்னாட்டுகிறது –
———————————————————————————————————————————————————————-
கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு
விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்
அடியேன் உள்ளானே
—————————————————————————————————————————————————————————-
அவன் தன்னுடைய கலவியாலே புதுக் கணித்த
தெய்வத்தன்மை உடைய வனப்பு முதலானவைகளோடே
என்னுடைய மனத்தினிலே புகுந்து இருந்தான் -என்கிறார் –
நம் ஆழ்வார்கள் வடிவு அழகிற்கு அவ்வருகு ஸ்வரூப குணங்களில் இழிய மாட்டார்கள் –
திவ்ய விக்ரகத்தை பற்றுக்கோடாக பற்றின பின்னை அவ்வருகு போவான்
என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன
இதனை விட்டுப் போக சொல்லுகின்றன அல்ல –
ஸ்வரூப குணங்களும் உபாசிக்கத் தக்கவை என்பதற்காக சொல்லுகின்றன
அவன் தன்னோடு
பிராட்டிமாரோடு
அடியார்களோடு
வாசி இல்லை
எல்லாருக்கும் விரும்பத் தக்கதாய் இருக்குமாயிற்று திருமேனி –
———————————————————————————————————————————————————————————-
கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு
விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்
அடியேன் உள்ளானே
—————————————————————————————————————————————————–
கண்கள் சிவந்து
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-சாந்தோக்யம் -1-6-
சூர்யனை கண்டு மலர்கின்ற தாமரை எவ்வண்ணன் இருக்குமோ அவ்வண்ணமே
அந்த பரம் பொருளின் உடைய திருக் கண்கள் -என்கிறபடியே
இறைவனுடைய கண்கள் சிவந்து இருக்குமே அன்றோ –
இப்படி இருக்கச் செய்தே
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே பிரிவினால் வெண்ணிறத்தை அடைந்தது –
ஆசார்ய ஹிருதயம் -சூர்ணிகை -58
மூவாறு மாசம் மோஹித்து – என்ற இடத்து
மாயக் கூத்தனில் தாம் கண்ணும் வாயும் துவர்ந்தால் போலே
தம்மைப் பிரிகையாலே அவன் கண்ணும் வாயும் துவர்ந்து
தம்மோடு கலந்த பின்பு அவை தன் நிறம் பெற்றதை அனுசந்தித்து
ஈதென்ன பிரகாரம் -என்று ஆறு மாசம் மோகித்து -மணவாள மா முனிகள் வியாக்யானம் –
இருத்தும் வியந்து -என்ற திருவாய்மொளியிலே கலவியாலே தன்னிறம் பெற்றபடி –
கண்ணிலே துவக்குண்டு கால் வாங்க மாட்டாதே இருக்கிற இருப்பு -இசையிலே காணும் இத்தனை –
பெரிய ஆய்-
பெருத்தல் குறைதல் முதலாவைகளுண்டாயினவாயிற்று
சதைகரூபரூபாயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-1-
எப்போதும் ஒருபடிப் பட்ட உருவம் உடையவன் பொருட்டு -என்கிறது
கர்மம் காரணமாக உண்டாகிற விகாரகங்கள் இல்லை என்ற இத்தனை ஒழிய
அடியார்களோடு கலக்கின்ற கலவியாலே பிறக்கும் விகாரத்தை இல்லை என்கிறது அன்று –
அப்படியேயான வன்று பற்றத்தக்கவன் அல்லனாய் ஒழியுமே
அவனும் தன் அளவில் வேறுபாடு அடையத் தக்கவன் ஆவான் அன்றோ –
வாயும் சிவந்து –
கண்களே அன்றிக்கே -திரு அதரமும் தன்னிறம் பெற்ற படி சொல்லுகிறது
செவ்வாய் வெண்பல் சுடர்க் குழை -என்றது பின்னாட்டுகிறபடி –
கனிந்து –
இந்த சிவப்பு தன்னிலே ஊறி நெய்த்து தொடரா நின்றது ஆயிற்று –
உள்ளே –
திரு அதரத்தில் சிவப்பை விட்டு
உள்ளே புகுகையில் உண்டான அருமை அடைய தோற்றுகிறது-
வெண் பல் இலகு சுடர் –
திரு அதரத்தில் சிவப்புக்கு பரபாகமான வெண்மை உடைத்தாய்
ஒளி நின்று சுழியா நின்றது ஆயிற்று –
இலகு விலகு மகர குண்டலத்தன் –
திருக் குழலில் இருட்சிக்கு பிரகாசமாய்
அலைந்து வருகின்ற திரு மகர குண்டலங்களை உடையவன் –
இக்கல்வி நமக்கு உண்டாயிற்றே -என்று தலை சித்து படா நின்றான் போலே
கடல் உடைந்தாப் போலே தன் அளவிலே உவகையன் ஆகா நின்றான் –
கொண்டல் வண்ணன் –
மழை முகில் போலே வடிவும் குளிர்ந்து கறுத்தது
முன்பு வெண்ணிறத்தை உடையதாப் போலே திருமேனி இருந்தது
சுடர் முடியன் –
அழகாலே மற்றைய அழகாய் எல்லாம் முட்டாக்கிடும் திரு முடியை உடையவன்
மாயக் கூத்தா -என்ற திருவாய் மொழியிலே இவர் விடாய்
தீர்ந்த பின்பாயிற்று நல் முடியும் தரித்தது
முடி சேர் சென்னி அம்மா –8-5-3-என்றோ அன்று கூப்பிட்டது
இவர் ஆசைப் பட்ட படியே வந்து அனுபவிப்பதற்கு சான்று –
நான்கு தோளன் –
இவரை அணைத்த பின்பு தோள்கள் பணைத்த படி
குனி சாரங்கன் –
மகர குண்டலத்தன் -எனபது போன்று
இவையும் சில ஆபரணங்கள் இருக்கிறபடி
வீரர்கள் கையில் வில் வினை இல்லாத போதும்
வளைந்தே இருக்குமாதலின் -குனி சாரங்கன் -என்கிறது –
ஒண் சங்கு
உண்பது சொல்லி –உன் செல்வம் சால அழகியது -நாச்சியார் திருமொழி –
என்னும்படியான ஒண் சங்கு
கதை வாள் ஆழியான் –
இவற்றை உடையவன் –
ஒருவன் –
தாமரைக் கண்ணனாய்
மழை முகில் போன்ற நிறத்தை உடையவனாய்
நான்கு தோளனாய்
சங்கு சக்கரம் முதலான திவ்ய ஆயுதங்களை தரித்தவன்
ஆகையாலே
ஒப்பற்றவன் –
அடியேன் –
அவனுடைய சேஷித்வம் இறைமை தன்மை ஒப்பற்றதாய்
இருப்பது போன்று
இவருடைய செஷத்வமும் -அடிமைத் தன்மையும் ஒப்பற்றது -என்றது
ஸ்வரூப ஞானத்தால் அன்றிக்கே
அழகுக்கு தோற்று -அடியேன் -என்கிறார் -என்றபடி –
உள்ளானே –
புறத்தில் திரியும் மனத்தினை உள் முகம் ஆக்கினவாறே
யுவா குமாரா -என்று கேட்டே போம் வடிவு அழகு
வயிரப் பேழை திறந்தாப் போலே
அவயவ சோபையும்
ஆயுத சோபையும்
ஆவரண சோபையுமாய்
மிளிரா நின்றதாயிற்று-
அவன் தன்னோட்டை கலவியாலே
அவனுக்கு பிறந்த புதுக் கணிப்பு -திவ்ய சௌந்தர்யம் –
வடிவு அழகுக்கு அவவருகு ஸ்வரூப குணங்களில் புகுர மாட்டார் -ஆழ்வார்கள்
தனது ஸ்வரூபம் இழியாமல் –
ஸ்வரூப குணம் -இழியாமல்
சௌந்தர்ய குணத்தில் இழிந்து –
திவ்ய மங்கள விக்ரகம் –
உபாசனன் -த்யான மந்த்ரம் -ஒருநிலைப் படுத்த
அப்புறம் சுபாஸ்ரயமான
அவனுக்கு உள்ளே
சுபம் -ஆஸ்ரயம் இரண்டும் திவ்ய மங்கள விக்ரஹம்
தாண்டி ஸ்வரூப குணம் போக சாஸ்திரம் சொல்லி
இவற்றை விட்டு போக சொல்ல வில்லை
எல்லாருக்கும் அபிமதமாய் இருக்கும் திவ்ய மங்கள விக்ரகம்
அவனுக்கும்
பிராட்டிமாருக்கும்
அடியார்க்கும்
சகா சகா அஸ்துதே =பிரமணா சகா –சொஸ்நுதே
அவனுடன் கூட அனுபவிக்கிறான் -அர்த்தம் அவனையும் குணங்களையும் என்று மட்டும் இல்லை
அவன் தானே அனுபவிப்பது போலே
அவனுக்கே ஆனந்தம் கொடுக்குமதாய் இருக்கும்-
புதுக் கணிப்பு வர்ணிக்கிறார்
கண்கள் சிவந்து
அன்பினாலே -சிவந்தது -ஆனந்தத்தால்
பெரியவை -மலர்ந்ததே
வாயும் சிவந்து கனிந்து –
உள்ளே வெண் பல் -திரு முத்துகளும்
மகர குண்டலம் -இலகு -இருபாடு இலங்கி ஆட –
விலகு –
கொண்டல்வண்ணன் -தன்னிறம் பெற்றது
சுடர் முடியன் -தரித்து
நான்கு தோளன்-\
தஸ்ய யதா -புண்டரீகம் -மாயக் கூத்தா விச்லேஷத்தால்
கண்ணும் வாயும் துவர்ந்து போனதே இவனுக்கும் ஆழ்வார் போலே
இருத்தும் வியந்து -கல்வியால் ச்வந்து
கண்ணிலே துவக்குண்டு -கால் வாங்க மாட்டாமல் இருக்கும் இருப்பு இசையிலே -சுறா பிரஸ்தானம் இங்கே
இசையிலே -தோன்றும் -கண்கள் சிவந்து -கமகம் -வைக்க வேண்டும் –
எல்லே இளங்கிளியே -நானே தான் ஆயிடுக -முக்கிய விஷயம்
நடுவிலே சுர -பிரஸ்தானம் வல்லீர்கள் நீங்களே வைத்து –
நானே தான் ஆயிடுக -வைக்காமல் —
பெரியவாய் –
கண் மாறாது -ஒரே அளவு தான் இருக்கும் என்பர் -குழந்தைக்கும் கிழவருக்கும்
இங்கே அதுக்கும் கிராசம் விருத்தி உண்டானதே
சதைக ரூபா ரூபாய –
கர்ம நிபந்தம் விகாரம் இல்லை
ஆஸ்ரயநீயர்-பற்ற தகுந்தவன்
தன்னளவிலே விகிர்தமாக கடவான்
விபு -ஆனைக்கு தக்க வாதம் –
என்னமாய் மலர்ந்தது
வாயும் சிவந்து
தன்னிறம் பெற்றது
செவ்வாய் -பின்னாட்ட
கனிந்து
நெய்த்து பள பள
உள்ளே -போவதற்கு அரியதாய்
வெண் பல் இலகு சுடர்
பரபாகமான வெண்மை தேஜஸ்
பன்னிரா முத்தல் நிலவு ஒலி
இலகு விலகு -மகர குண்டத்தன்
குழல் இருட்சி -மை வண்ண நறும் குஞ்சி
பிரகாசமாய்
அலைந்து வருகின்ற
இக் கலவி நமக்கு சம்பவிதத்தே
தலை சீய்த்து
கடல் உடைந்தாப் போலே
தன்னடைவிலே ஹ்ருஷ்டனாய்
இலகு விலகு -சந்தோஷம்
ஜீவாத்மாவைப் பெற்றதால் –
ச்வா பாவிகமாக -இருந்தாலும்
கொண்டல்வண்ணன் வடிவும் -தன்னிறம்
சுடர் முடியன் -அல்லாத அழகையும் திரை போட்டால் போல்
காஸ் துணி சாத்தி முட்டாக்கு போட்டு காஞ்சி இன்றும் சேவை
மாயக் கூத்தன் விடாய் தீர்ந்து முடி நிலைத்து நிற்க
ஆழ்வார் ஹிருதய சாம்ராஜ்யம் பெற்றதால் தரித்து இருக்க
முடி சேர் சென்னி அம்மா
தோள்கள் பணிக்க
குனி சாரங்கன்
இவையும் ஆபரணங்கள் மகர குண்டலம் போலே
வீரர் கையில் வில் வளைந்தே இருக்கும் குனி சாரங்கன் அதனால்
ஒண் சங்கு -செல்வம் சால அழகியதே
கதை
சங்கு கதை சங்கதை சேரும் பொழுது
ஒருவன்
புண்டரீகாஷனாய் கொண்டல்வன்னனாய்
அத்விதீயன்
செஷத்வமும் அத்விதீயம்
அழகுக்கு தோற்று அடியேன்
உள்ளானே
யுவா குமாரா –
பிரத்யக் –
பராக் அர்த்தம் மனஸ் கண்ணால் பார்க்க முடியாதே உணரலாம்
வைர பேழை திறந்தாப் போலே
அவயவ சோபை
ஆபரண சோபை
ஆயுத சோபை
நேராக கண்டு பேசி ஹிருஷ்டராய் அனுபவிக்கிறார் –
பட்டர்
சூர்யன்
சடகோபர்
என் மண்டலம் வகுள பூஷண
கோ சகஸ்ரம் 1000 கிரணம்
நாராயணா வசதி யஸ்ய சூர்யா மண்டல
என் மண்டலம் -சந்த்யா வந்தனம்
எவர் உடைய கோ -வாக்கு -1000 திருவாய் மொழி
அக இருள் போக்கும்
நாராயண வசதி சங்கு சக்கரம்
இந்த பாட்டு பிரமாணம்
நாராயண வசதி யத்ர
கை கூப்பி திரு குருகூர்
என் மண்டலம்
கேட்டு வணங்கு கிறார்களோ
ஆக மூன்று விஷயங்களில் சாம்யம் வகுஷ பூஷண பாஸ்கரர்
—————————————————————————————————————————————————————————
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply