ஸ்ரீ திருப்பாவை – புள்ளின் வாய் கீண்டானை -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

இன்று போதரிக் கண்ணினாய்-கண் –ஸ்வரூப ஞானம் நாளை நா உடையாய் -உபதேசம் -ஞான அனுஷ்டானங்களை உடைய ஆச்சயர்யர்

கீழே மனதுக்கு இனியான் -இங்கு கிருஷ்ண விருந்தாந்தமும் ராமன் விருத்தாந்தமும்
புள் ஜடாயு -என்று கொண்டு இரண்டுமே ராம விருத்தாந்தமே -என்றும் சிலர் சொல்வர்

அப்ராதான்யம் தோற்ற கிள்ளிக் களைந்தான் -பிரதானம் சாது பரித்ராணாமே

பாவைக் களம்-சங்கேத் இடம் வடக்கே உண்டே -ராதா ராணி ஸ்தலம் -விருஷ பாஹு இவள் திருத்தகப்பனார் -ருக்மிணி மந்திரமும் இங்கு உண்டே

கீழும் புள்ளும் சிலம்பின பார்த்தோம் -கால மருட்சி குற்றம் வரக் கூடாதே -கூட்டை விட்டுப் புறப்படும் பொழுது பேடையுந் பேசியது
இங்கு ஆகாசத்தில் இறை தேடும் காலத்தில் சிலம்பினத்தைச் சொன்னவாறு

போது அரிக் கண்ணினாய் -சஞ்சரிக்கும் மான் போன்ற கண் -பூவை வெல்லும் கண்

மார்கழி திங்கள் மதி நிறைந்த -நன்னாள் –கீழ் இங்கும் நன்னாளால்  கள்ளத்தனம் காட்டாமல் கலந்தால் தான் ஸித்திக்கும் இங்கு

புள்ளும் சிலம்பின

அவதாரிகை –
இப் பாட்டில்-
நமக்கு ஸ்வரூப ஞானமுண்டாகில்
அவன் தானே வருகிறான் என்று
நிர்ப்பரராய் இருக்குமவரை
எழுப்புகிறார்கள் –

(நாராயணாயா -சீர்மை மனதில் பட பேற்றுக்குத் த்வரிக்கவும் வேண்டுமே)

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்

பதவுரை

புள்ளின் வாய் கீண்டானை–பறவை யுருவம் பூண்டு வந்த பகாசுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும்
பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை-கொடியனான இராவணனை முடித்து
(அரக்கர் குலத்தை வேரோடு) களைந்தொழித்தவனுமான எம்பெருமானுடைய
கீர்த்திமை பாடி போய்-லீர சரிதங்களைப் பாடிக் கொண்டு சென்று
பிள்ளைகள் எல்லாரும்-எல்லாப் பெண்பிள்ளைகளும்
பாவைக் களம் புக்கார்-நோன்பு நோற்பதற்காகக் குறிக்கப்பட்ட இடத்திற் புகுந்தனர்;
வெள்ளி எழுந்து-சுக்ரோதயமாகி
வியாழம் உறங்கிற்று-ப்ருஹஸ்பதி அஸ்தமித்தான், (அன்றியும்)
புள்ளும்-பறவைகளும்
சிலம்பின–(இறை தேடப் போன இடங்களில்) ஆரவாரஞ்செய்தன;
போது அரி கண்ணினாய்–புஷ்பத்தின் அழகைக் கொள்ளை கொள்ளா நின்ற கண்ணை யுடையவளே;
பாவாய்–பதுமை போன்றவளே!
நீ –நீ
நல் நாள்-கிருஷ்ணனும் நாமும் கூடு கைக்கு வாய்த்த காலமாகிய இந்த நல்ல நாளில்
கள்ளம் தவிர்ந்து-(கிருஷ்ணனுடைய குண சேஷ்டிதங்களைத் தனியே நினைத்துக் கிடக்கையாகிற) கபடத்தை விட்டு
கலந்து –எங்களுடன் கூடி
குள்ளக் குளிர குடைந்து நீர் ஆடாதே-உடமபு வவ்வலிடும்படி குளத்திற் படிந்து ஸ்நானம் பண்ணாமல்
பள்ளி கிடத்தி யோ-படுக்கையிற் கிடந்துறங்கா நின்றாயோ?
ஆல்-ஆச்சரியம்!

வியாக்யானம் –
புள்ளின் வாய் கீண்டானை –
ஸ்வ ஆஸ்ரிதருக்கு
ஸ்வ அனுபவ விரோதியான
காமாதி தோஷ நிவர்தகனாய்

(காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண ஸமுத்பவ: | மஹாசநோ மஹா பாப்மா வித்த்யேந – மிஹ வைரிணம் || · காமாத் க்ரோதோ (அ)பிஜாயதே | · த்ரிவிதம் நரகஸ்யேதம் …காமம் பிரதானம்
மரண ஜனனம் முதலையின் வாய் -ஸம்ஹாரம் -ஸ்ருஷ்ட்டி ரக்ஷணம் -மரணமே பிரதானம் -இந்த லீலா விபூதியில் மரணம் பிரதானம் நித்ய விபூதியில் ஜனனம் பிரதானம் )

(ரஜோ குணம் ஒரு கொக்கு இரண்டு அலகுகள் காமம் க்ரோதம்)

(ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா –பிரேம ஆவில ஆசய பராங்குச பாத பக்தம்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பதாம்ஸ்ரிதா நாம் -ராமா நுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –)

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் –
பொல்லாத அப்ராப்த விஷய ஸூசகமான
அஹங்காரத்தை

அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –
அஹம் மம -என்றால்
ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும்
ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–அஹந்காரத்துக்கு நன்மை யாவது –
தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை -அஹந்காரத்துக்கு–தீமையாவது –

(விபீஷணன் நல்ல அரக்கன் -பகவானையும் பகவத் விபூதியை நம்மதாகக் கொண்டு ரக்ஷிக்க வேண்டுமே
முனியே நான்முகனே என் பொல்லா கரு மாணிக்கமே
போனாய் மா மருதூடே என் பொல்லா மணியாய் )

அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய
கீர்த்திமை பாடிப் போய்-
கல்யாண குணங்களை
ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி
அதுவே தாரகமாய் போய் –

பிள்ளைகள் எல்லோரும் –
நாம் சென்று எழுப்ப வேண்டிய அகில அபி நவ பாகவதரும் –

(பிள்ளைகள்  அபி நவ பாகவதர்-ச சந்தனர் -ஸ்வ ஆச்சார்யர் -ஆச்சார்யர் -சிஷ்யர்கள் -மூவரையும் கீழேயே பார்த்தோம்)

பாவைக் களம் புக்கார்-
அனந்யார்ஹரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிரூபகமான
சங்கேத ஸ்தலத்தை பிரவேசித்தார்கள் –
அதாவது காலஷேப கூடம்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்-
பரிசுத்தமான ஞானம் அபிவ்ருத்தமாய்
அஞ்ஞானம் தலை மடிந்தது –

(தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா
சப்தம் நாரயணாக்க்யம் விஷய சபலதீச் சேத சதுர்தீம் ப்ரபன்ன—அஷ்ட ஸ்லோஹி ஸ்லோகம் -4

தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
தேக ஆசக்த -ஆத்மபுத்தி -பவதி யதி-
தேஹத்திலே ஊன்றின ஆத்மபுத்தி -தேகாத்ம ப்ரமம் யுடையவனாகில் –
த்ருதீயம் பதம் சாது வித்யாத் –
பிரணவத்தில் மூன்றாவது பதமான மகாரார்த்தை நன்கு நோக்கக் கடவன்-
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஸ்வா தந்த்ர்ய அந்த ச்யாத்யாதி-
ஸ்வ தந்திர ஆத்ம ப்ரமம் யுடையவனாகில்
பிரதம பதம் வித்யாத் –
முதல் பதமான லுப்த சதுர்த்தியோடு கூடின அகாரார்த்தை நோக்கக் கடவன்
இதர சேஷத்வதீ சேத்-
அந்ய சேஷத்வ ஜ்ஞானம் யுடையவன் ஆகில்
த்வதீயம் பதம் வித்யாத்
இரண்டாவது பதமாக உகாரத்தை நோக்கக் கடவன் –
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா-சப்தம் நாரயணாக்க்யம்-
ஆத்மத்ராண உந்முக சேத் –
ஸ்வ ரஷணத்தில் ஊக்கம்  யுடையவன் ஆகில்
நம இதி பதம் வித்யாத் –
நம என்ற நடுப்பதத்தை நோக்கக் கடவன் –
பாந்த ஆபாஸ லோல –
ஆபாஸ பந்துக்களின் இடத்தில் ஆசக்தி யுடையவன்
நாராயணாக்யம் சப்தம் வித்யாத்
நாராயண பதத்தை நோக்கக் கடவன் –

விஷய சபலதீச் சேத சதுர்தீம்
சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்
நாராயண பதத்தின் மேல் யுள்ள
வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்

ப்ரபன்ன
இப்படி எல்லாம் நோக்கக் கடவனான அதிகாரி யார் என்னில்
பிரபன்ன அதிகாரி –

திருமந்தரம் சப்த சக்தியாலும் அர்த்த சக்தியாலும் ரஷணம் செய்து அருளும் –
உபாசனர் ஜபம் -செய்து சப்த சக்தியால் பெறுவார்
பிரபன்னர் எம்பெருமானே உபாயம் உபேயம் – என்
முமுஷூப்படி -எம்பிரான் எந்தை என்கையாலே –
நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –
நாராயண -கரேன வ்யுத்பத்தியும் கர்மணி வ்யுத்பத்தியும் சாஸ்திர சித்தம்
ஈயதே அசௌ இதி அயநம்-என்கிற இது கர்மணி வ்யுத்பத்தி  -உபேயத்வம் பலிக்கும்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சர்வபிரகார விசிஷ்டமாய்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –)

புள்ளும் சிலம்பின காண் –
மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள் –

போதரிக் கண்ணினாய்–
ஸ்வச்சமாய்
ஸ்லாக்கியமாய்
சாராஹ்ராஹியான
ஞானத்தை உடையவரே –

குள்ளக் குளிரக் –
அவனைப் பிரிந்த வ்யசனம் எல்லாம்
நிஸ் சேஷமாய் போம்படி –

(அத்யந்த ஸூ குமாரராய் பரதன் எவ்வாறு சரயுவில் நீராடுகிறானோ -லஷ்மணனுக்கு வெப்பமே தெரியாதே
பாரதனோ ராம விரஹத்தால் சரயுவே வற்றி விடுமே)

குடைந்து –
கால ஷேப கூடத்திலே பிரவேசித்து

நீராடாதே-
பகவத் அனுபவத்தைப் பண்ணாதே –

பள்ளிக் கிடத்தியோ –
தனித்து குணானுபவத்தைப் பண்ணுகிறாயோ

பாவாய் நீ –
தனித்து குணாநுபவம் பண்ண வல்லையோ நீ

நன்னாளால்–
சத்வோத்தரமான காலம் நேர்பட்ட படி என் தான் –

கள்ளந்தவிர்ந்து –
உன்னை எங்களுக்கு காட்டாமல் இருக்கிற-களவை விட்டு

கலந்து –
எங்களோடு ஒரு நீராக கலந்து
எங்கள் சத்தையை உண்டாக்காய்-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading