என்சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்றுஒன்றாய்
என்சொல்லால் யான்சொன்ன இன்கவி என்பித்துத்
தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்என்
முன்சொல் லும்மூவுருவாம் முதல்வனே.
பொ – ரை : என்னுடைய இனிய உயிரானது இன்று ஒரு பொருளாகும்படி, என் சொல்லால் யான் சொன்ன இனிய கவி என்பதாகப் பிரசித்தமாக்கித் தன் சொல்லால் தானே தன்னைப் புகழ்ந்து பாடிய ஆச்சரியத்தையுடையவனும், எனக்கு முன்னே சொல்லுகின்ற, மும்மூர்த்திகளின் உருவமாய் இருக்கிற முதல்வனுமான எம்பெருமானை எந்தக் காரணத்தைச் சொல்லித் தரித்திருப்பேன்?
வி-கு : ‘ஒன்றாய் இன் கவி என்பித்துத் தன்னைக் கீர்த்தித்த மாயன், என்முன் சொல்லும் மூவுருமாம் முதல்வனை என் சொல்லி நிற்பன்?’ என்க. ஒன்றாய்-ஒன்றாகும்படி.
ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘தான் தன்னைக் கவி பாடி, நான் பாடினேன் என்று உலகத்தில் பிரசித்தம் ஆக்குவதே! ஒருவனுடையபடி இருந்தபடி என்!’ என்று அவனுடைய ஆச்சரியத்தைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். ‘அநாதிகாலம் யான் எனது என்னும் செருக்காலே, இல்லாதவனுக்குச் சமமாய்த் தன் பக்கல் முகம் பாராதே போந்த என்னை, நான் ஆபிமுக்கியம் பண்ணும்படி நிர்ஹேதுகமாக அவன் அங்கீகரித்தபடியை அநுசந்தித்தால் எதனைச் சொல்லி நான் தரையில் கால் பாவுவது?’ என்கிறார்.
2என் சொல்லி நிற்பன் – 3‘அவன் என்னை அங்கீகரித்த அங்கீகாரம் காரணம் இல்லாதது என்னவோ, காரணத்தோடு கூடியது என்னவோ? 4இத்தலையை ஆராய்ந்து பார்த்த இடத்து ஒரு காரணத்தைக் காண்கின்றிலர்; அத்தலையை அநுசந்தித்துப் பார்த்த இடத்து ஒரு காரணத்தைக் காண்கின்றலர்; 5அநாதிகாலம் கைவிட்டதற்கு ஒரு காரணத்தைக் காண்கின்றிலர்; இன்று
இனி, சேதனனுக்குத் தனித்து ஒரு காரியத்தைச் செய்தலுக்கும் செய்யாமைக்கும் யோக்கியதை இல்லை அன்றோ, சொரூபம் ஸ்திதி முதலானவைகள் அவன் அதீனமாய் இருக்கையாலே? 2இதனை இனிய கவி என்று நாட்டிலே பிரசித்தம் ஆக்கினான். 3‘பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம்’ என்கிறபடியே. 4தான் வென்று மற்றையாரோடு ஒருசேர நின்று அருச்சுனனைப் புகழுமாறு போலே. 5‘செங்கண் அலவலை’ – ‘உரையாடதவன் விருப்பமற்றவன்’ என்று இருக்கக்கூடிய அவன், அது முழுதும் அழிந்து ஏத்தத் தொடங்கினான் ஆயிற்று.‘மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர்குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல் முன்நின்ற செங்கண்
அலவலைவந்து அப்பூச்சி காட்டு கின்றான்;
அம்மனே அப்பூச்சி காட்டு கின்றான்.’
என்பது, பெரியாழ்வார் திருமொழி. அலவலை-பலவாறாகப் பேசுகின்றவன்.
6‘இன்கவி என்பித்து’ என்னா நின்றீர்; இங்ஙன் அன்றோ?’ என்னில், அன்று; ‘பின்னைச் செய்தபடி என்?’ என்னில், தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த – சொல்லும் தன்னது: சொன்னவனும் தான்; சொல்லிற்றும் தன்னை. 7கவிபாட்டுண்டேன் நானாகில் அன்றோ கவிபாடினேன் நானாவது?தான் தன்னைக் கவி பாடானானாகில், நீர் கவி பாடினீர் என்று நாட்டிலே பிரசித்தமாக்கினபடி எங்ஙனே?’ என்னில், மாயன் – சொல்ல வேணுமோ? ஆச்சரியமான சத்தியோடு கூடினவன் அன்றோ?
1என்னைக் கருவி்யாகக் கொண்டு தானே கவி பாடினான். ‘உம்மைக் கருவியாகக் கொண்டு கவி பாடினபடி எங்ஙனே?’ என்ன, என் முன் சொல்லும் – அவன் முன்னே சந்தையிடப் பின்னே நான் சொன்னேன். 2தான் சொன்னான் ஆகில் ஸ்ரீகீதையைப் போன்று வறுமுறுகலாய்ப் போம் அன்றோ? 3நம்பி திருவழுதிநாடு தாசர், ‘ஸ்ரீகீதை போவான் ஒருவன் சந்தியா சதஸ்ஸிலே வந்து கண்டால், பின்னை இவனுக்கு உழக்கு அரிசியைக் கொடுப்பித்துவிடு மத்தனைபோக்கி அங்கு அவர்கள் உள்ளிடம் கொடார்கள்; திருவாய்மொழி கற்றவன் ஒரு விண்ணப்பன் செய்வான் சென்றால், சர்வேஸ்வரனும் கிராமத்திலுள்ளாரும் புறப்பட்டு எதிர்கொண்டு தங்கள் இருப்பிடத்தை ஒழித்து அவனுக்குக் கொடுத்து ஆதரியாநிற்பார்கள்,’ என்று அருளச்செய்வர். 4‘அதுதான் என் போல?’ என்றால், ‘மூவுருவாம் முதல்வனே-பிரமனைப் படைத்து அவனை அத்தியயனம் செய்வித்தித் தேவர்களுக்கு வெளிச்சிறப்பைச் செய்வித்து அது தன்னைப் ‘பிரமன் செய்தான்,’ என்று அவன் தலையில் ஏறிட்டும், 5சிவனுக்கு அந்தராத்துமாவாய்ப் புக்கு நின்று முப்புரங்களை எரிவித்துச் ‘சிவன் செய்தான்’ என்று அவன் தலையிலே ஏறிட்டும்விருது பிடிக்கப் பண்ணினாற்போலே, தானே பிரபந்தத்தைச் செய்து, நான் செய்தேன் என்று என் தலையிலே ஏறிட்டு எனக்கு ஒரு பிரசித்தியைத் தந்தான்.
1தானே காரியம் செய்து பிறர் தலையிலே ஏறிடுதல் அவனுக்குப் பண்டே சுபாவங் கண்டீர்! ‘எந்த ஸ்ரீமந் நாராயணன் உலகங்களைப் படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தான்? எவன் அவனுக்கு வேதங்களையும் உபதேசம் செய்தான்?’ என்பது உபநிடதம். ‘அளவிட முடியாத ஆற்றலையுடையவனும் பூசிக்கத் தக்கவனுமான சிவனுக்கு விஷ்ணு அந்தராத்துமாவாய் இருக்கிறார்; அப்படி விஷ்ணு சிவனுக்கு அந்தராத்துமாவாய் இருப்பதனாலே அந்தச் சிவன் வில்லை வளைத்து நாண் ஏற்றுதலாகிற அந்தக் காரியத்தைப் பொறுத்துக்கொண்டான்’ என்பது பாரதம்
யோபிரஹ்மாணம் வி்ததாதி பூர்வம் யோவை
வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை’-என்பது, ஸ்வேதாஸ்வதரம்.
‘விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமிததேஜஸ:
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸவிஷேஹே மஹேஸ்வர:’-என்பது, பாரதம், கர்ணபர்வம்.
. 2‘இப்போது தானே நடத்திக்கொண்டது என்?’ என்றால், தன் உருவமாக இருந்து காரியம் செய்யுமாறு போலே, பிரமன் சிவன் முதலானோர்களைத் தனக்குச் சரீரமாகக் கொண்டு நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து அவர்கள்மேல் ஏறிட்டாறைபோலே கண்டீர், என்மேலே ஏறிட்டுக் கவிபாடினேன் நானாகச் சொல்லித் தலைக்கட்டினபடியும்,’ என்கைக்காகச் சொல்லிற்று.
தன்னைத் தான் கவி பாடிக் கொண்டு
நான் பாடினேன் பிரசிதமாக்கி
கொண்டாடி போகிறானே
என்னை -நஷ்டமாக அஹங்கார மமகாரமாக
வைமுக்யம் பண்ணி போன என்னை
ஆபி முக்கியம் பண்ணும் படி பண்ணி நிர்ஹேதுகமாக
கிருபை -நிர்ஹெதுகம் -நமக்கும் கொஞ்சம் வேண்டும் சொல்வார் -இல்லை என்கிறார் இந்த ஈட்டில்
பண்ணுவித்தான் -இவனே பகவத் சங்கல்பம் –
அவன் விஷயீ கரித்த -எத்தை சொல்லி கால் பாவ
என்ன சொல்லி நிறுத்த
என் இன் உயிர் வஸ்துவாக இருக்க
அசத் கல்பனாய் கிடந்த என்னை சத்தாக்கி
தன சொல்லால் தான் தன்னை கீர்த்தித
என் முன் சொல்லும் அவனே சந்தை சொல்வது போலே
விஷயீ கருத்த விஷயீ காரம் நிர்ஹெதுகம்
இத்தலை அத்தலை ஆராய்ந்து பார்த்தாலும்
கை விட்டதுக்கும் காரணம் காண வில்லை
இன்றி கை கொள்ளுவதுக்கும் ‘
உடையவன் வேண்டிய பொழுது
தன உடைமை
இவர் வாக்கால் தன்னை கவி பாட -தானும் உளனாய் தனது விபூதியும் உண்டாக
இருப்பே இல்லாமல் துடிக்க
தரிக்க ஊற்றுவாய்
அங்கீகாரத்துக்கு இலக்கானதால் இன் உயிர் என்கிறார்
பொல்லாத உயிர் விபரீத லஷனை யாலும் –
இன்று ஒன்றாய்
இன்றுக்கு முன்பு ஒன்றாக வஸ்துவாக நினைக்க வில்லை
விஷயீ கரித்தவன் செய்த கார்யம் தான் என்ன
சொல்லு என்னதாய்-
சொல்லுவனும் நான்
அது தான் இனிமை நாட்டில் பிரசித்தம்
சப்தம் -வேதம் -எம்பெருமானை காட்டும்
சேதனன் தனி வ்யக்தி இல்லையே
கருவியாக கொண்டு செய்விக்கிறான் –
தனித்து பிரவ்ருத்தி நிவ்ருத்தி இல்லையே
இனிய கவி
பாலேய் தமிழர் இசை காரர் பக்தர் கொண்டாட –
தமிழ் இலக்கியம்
இசை ஆராய்ச்சி பண்ணார் பாடல் உண்டே
பத்தர் பரவும் ஆராய்ச்சி
எல்லாரும் கைக் கொள்ளும்படி உண்டே
பரவும் ஆயிரம்
தான் சாரதி யாய் நின்று அர்ஜுனன் விஜயனாக பேசும்படி தலையிலே வாய்த்த
முன்னின்ற –
மன்னவர் மா ரதரும் மற்றும் பலர் குலைய –
-பார்த்தன் தன திண் தேர் முன்னிற்ற செங்கண் அலவலை -தொண தொண பேசி
அவாகி அநாதர என்று இருப்பவன் -கம்பீரம் மேன்மைக்கு லஷணம்
அர்ஜுனனை புகழ்ந்து -ஸ்தோத்ரம் செய்து
இன் கவி என்பித்து-சொல்லும்படி பண்ணினான்
அவன் சொல்லால் தான் தன்னை கவி பாடி –
சொல்லும் தனது
சொன்னவனும் தான்
சொல்லப் பட்ட விஷயமும் தன்னை பற்றி
உபகரணமாக கொண்டு
செய்து அருளினான்
முற் சந்தை அவன் இட பிற் சந்தை நான் சொன்னேன்
தானே சொன்னால் மதிப்பு இருக்காதே
கீதையோபாதி காஞ்சு தீந்து வரை முறுவல் ஆகுமே
நம்பி திரு வழுதி வள நாடு தாசர் –
முழங்கை வழி வார கேட்டவர்
கீதை அறிந்தவர் உழக்கு அரசி -ஸ்ரீ பாஷ்யம் ப்ரஹ்ம சூத்திரம்
விண்ணப்பம் -சர்வேஸ்வரனும் -வந்து எதிர் கொண்டு அழைக்க
நாட்டாரும் புறப்பட்டு எதிர் கொண்டு
இருப்பிடம் ஒளித்து அவனுக்கு கொடுத்து
மாம் நமஸ் குரு-அஹன்காரி
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையார் ஆழ்வார்
மூ உருவாம் முதல்வனே
ப்ரஹ்மா ருத்ரன் மூலமாக செய்தது போலே
அவர்களுக்கு விருது படிக்க செய்தது போலே
பிறர் தலை ஏறிடுகை பண்டே இவனுக்கு ஸ்வபாவம்
திரிபுர தகன்
வேத அபஹார
தேஜஸ்
ஸ்வரூபென ஏறிட்டால் போலே என் மேலே ஏறிட்டு
நாவில் அமர்ந்து சொல்லவும் வைத்து தலைக் கட்டி அருளி
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply