ஒன்பதாந்திருவாய்மொழி – ‘என்றைக்கும்’
முன்னுரை
ஈடு : 1மேலே பலகாலும், ‘சர்வேஸ்வரன், தன்னைப் பெறுவார்க்குத் தடைகள் உண்டாய் இருந்தாலும் தானே தன்னைத் தரப்பார்க்கும் அன்று தகைய வல்லது ஒரு தடை இன்றிக்கே இருக்க, ‘தன்னாலே பேறு’ என்று இருக்கிற என்னை இங்கே வைத்தது என்?’ என்று கேட்டுப் போருவார் ஒருவர். அவனும், இதற்கு நேரான பரிகாரத்தைப் பண்ணாதே ஏதேனும் ஒரு குணத்தைப் பிரகாசப்படுத்தி வேறொன்றிலே நோக்கைப் பண்ணுவிப்பான் ஒருவன், இவர்க்கு இதிலே நெஞ்சு செல்லாதபடி. இனி, மேல் திருவாய்மொழியிலும் ‘சம்சாரத்திலே பொருந்தாமை உண்டாய், உன்னை ஒழியச் செல்லாமை உண்டாய், நீயே உபாயமாய் இருக்க, பின்னையும் என்னை இங்கே வைத்து ஜீவிப்பித்துக் கொடுபோருகிற ஆச்சரியம் இருந்தபடி என்? இதனை எனக்கு அருளிச்செய்ய வேணும்,’ என்ன, ‘கண்டீரேதான் இது ஓர் ஆச்சரியம் இருந்தபடி? என்று அவ்வழியாலே தன்னுடைய ஆச்சரியமான உலகமே உருவமாக இருக்கும் தன்மையைக் காட்டிக்கொடுத்து அதனோடே பணி போரும்படி செய்தான். இவரும் அப்போது அத்தனையும் அதனைச் சொல்லி, அது தலைக்கட்டினவாறே பின்பு பழையபடியே கேட்கத் தொடங்குமவர் அல்லரோ?
2இச்சம்சாரத்திலே பொருந்தாது இருக்கிற என்னை இங்கு வைத்ததற்குக் காரணம் என்?’ என்ன, ‘நம்மை இதற்கு ஒரு காரணத்தை நிர்பந்தித்துக் கேட்கவேணுமோ? கண்டன எல்லாவற்றிலும் நாக்கு நீட்டி அவற்றிலே ருசி பண்ணிப் போந்தீராகில்,அதற்கு அடியான கர்மத் கிடந்ததாகில், வாசனை ருசி கிடந்தனவாகில், அவற்றாலே இருந்தால் ஆகாதோ?’ என்ன, ‘அவையும் கிடக்கச்செய்தே, அவற்றையும் பாராதே எனக்கு மயர்வு அற மதி நலம் அருளிப் பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்ட பின்பு நீ சொல்லுகிற இது பரிகாரம் அன்று; ஆகையாலே, என்னை இங்கு வைக்கிறது என்?’ என்று 1வடிம்பிட்டுக் கேட்க, 2‘நீர்தாம் உம்மை நமக்காக ஓக்கி வைத்ததாகச் சொன்னீரே, ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ –திருவாய். 2. 9 : 4.-என்று! ஆன பின்பு நாம் வேண்டினபடி உம்மைக் காரியங் கொள்ளக்கடவோம் அன்றோ? ஆன பின்பு, நமக்கு அதிசயத்தைப் பிறப்பிக்கை உமக்குச் சொரூபமாய் இருக்குமன்றோ? ஆன பின்பு, உம்மைக்கொண்டு, ஸ்ரீ வீடுமரைப் பாணங்களாகிய படுக்கையிலே இட்டு வைத்து நாட்டுக்கு வெளிச்சிறப்பைப் பண்ணிக்கொடுத்தாற்போலே, நமக்கும் 3நம்முடையார்க்கும் போது போக்காகச் சில பிரபந்தங்கனைப் பண்ணுவிக்கப் பார்த்தோம்: அது தலைக்கட்டுந்தனையுங்காணும் உம்மை இங்கு வைப்பது,’ என்று நேரான பரிகாரத்தை அருளிச்செய்தான்.
‘கண்டு கொண்டுஎன் கண்ணிணைஆ ரக்களித்துப்
பண்டை வினையாயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுதுஉண்ணச் சொன்மா லைகள்சொன்னேன்
அண்டத் தமரர் பெருமான் அடியேனே.’–என்பது, திருவாய். 9. 4 : 9.
அருளிச்செய்ய, இவரும் அதனை அநுசந்தித்து. சர்வேஸ்வரனாய் அவாப்த சமஸ்தாகமனாய்ச் சர்வ பிரகார பரிபூரணனாய் இருக்கிற அவன், தனக்கு ஒரு குறை உண்டாய். அக்குறை கின்னைத் தம்மைக் கொண்டு தீர்ப்பதாகச்சொன்ன வார்த்தையைப் 4பொறுக்கமாட்டிற்றிலர். 5‘தனக்குச் சில பிரபந்தங்கள் வேண்டினால், அதற்குத்
தகுதியான ஞானத்தாலும் சத்தியாலும் குறைவற்ற ஸ்ரீவேதவியாச பகவான், ஸ்ரீவால்மீகி பகவான் ஸ்ரீபராசர பகவான் தொடக்கமானார், 1‘செந்தமிழ் பாடுவார்’ –பெரிய திருமொழி, 2. 8 : 2.-என்று சொல்லப்படுகிற முதலாழ்வார்கள், இவர்கள் எல்லாரும் உண்டாயிருக்க, அநாதிகாலம் சம்சாரத்திலே பழகி ஐம்புல இன்பங்களிலே ஈடுபட்டவனாய், 2‘அவன் இல்லாதவன் ஆகவே ஆகிறான்’ என்கிறபடியே -‘அஸந்நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத்’
என்பது, தைத்திரீய. ஆன. 6.-அசத்தைப் போன்றவனாய் உருமாய்ந்து போன என்னைக்கொண்டு தனக்குத் தகுதியாகக் கவி பாடுவித்துக்கொள்ளவதாகச் சொன்ன வார்த்தை என்ன வார்த்தை! இது ஒரு நீர்மை இருக்கும்படியே! இது என்ன நீர்மை!’ என்று, சர்வேஸ்வரன் தம் திறத்தில் செய்த உபகாரத்தை அநுசந்தித்து, அதற்கு ஒரு பிரதியுபகாரம் காணாமையாலே தடுமாறிச் சொல்லுகிறது.
என்றைக்கும் என்னைஉய் யக்கொண்டு போகிய
அன்றைக்குஅன்று என்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை
இன்தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்றஎன் சோதியை என்சொல்லி நிற்பனோ?
பொ – ரை : காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் உஜ்ஜீவிக்கத் தகுதியாம்படி அங்கீகரித்துக் கழிகிற நாள்கள்தோறும் என்னைத் தனக்கு அடிமை ஆக்கி, என்னால் தன்னை இனிய தமிழ்ப் பாசுரங்களைப் பாடுவித்துக் கொண்ட ஈசனை, காரணமாய் நின்ற என் சோதியை என்ன என்று சொல்லித் தரிப்பேன்?
வி – கு : பாடிய-பாடுவித்துக்கொண்ட. இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.
ஈடு : முதற்பாட்டு. 3‘மிகச்சிறியேனான என்னை ஞானம் சத்தி முதலியவைகளையுடையேனாம்படி செய்து, என்னையிட்டுத்திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட உபகாரத்தைச் சொல்லித் தரிக்க மாட்டுகின்றிலேன்,’ என்கிறார்.
1‘இப்படி நீர் படுகைக்கு அவன் செய்த நன்மைதான் யாது?’ என்ன, ‘இது’ என்கிறார்: போகிய அன்றைக்கு அன்று என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு -சர்வேஸ்வரன் ஒரு நாள் ஒருவனை அங்கீகரித்தால், பின்னர் அவ்வங்கீகாரந்தன்னையே காலம் என்னும் ஒரு பொருள் உள்ளதனையும் சொல்லி உஜ்ஜீவக்கலாயிற்று இருப்பது.2‘கண்ணபிரானுடைய அந்த விஸ்வரூபத்தையும் நினைக்க எனக்கு வியப்பானது அதிகமாய் உண்டாகிறது! பின்னும் பின்னும் சந்தோஷம் அடைகிறேன்!’ என்கிறபடியே, தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபம் அத்யத்புதம் ஹரே:
விஸ்மயோ மே மஹாந் ராஜக் ஹ்ருஷ்யாமி ச புந : புந:’-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 77
பின்னர் என்றும் ஒக்க அதனை நினைத்துத் தரிக்கலாம்படியாயிற்று இருப்பது. 3‘ஸ்ரீராம பிரானுடைய பாணங்களை நினைத்துக்கொண்டு வருத்தம் உற்றான்’ என்கிறபடியே,‘ப்ரஹ்மதண்ட ப்ரகாசாநாம் வித்யுத் ஸத்ருச வர்ச்சஸாம்
ஸ்தரந் ராகவ பாணாநாம் விவ்யதே ராக்ஷஸேஸ்வர:’-என்பது, ஸ்ரீ ராமா. யுத். 60 : 3.
அம்புக்கு இலக்கானார் அலற்றுமாறுபோலேயாயிற்று, குணத்துக்கு இலக்கு ஆனாரும் அலற்றும்படி. 4அம்பு பட்ட புண் மருந்து இட்டு ஆற்றலாம்; குணத்தால் வந்த புண்ணுக்கு மாற்று இல்லை அன்றோ? 5ஆக, சர்வேஸ்வரன் ஒரு நாள் ஒருவனை அங்கீகரித்தால், அது தன்னையே என்றும் ஒக்க நினைக்கலாம்படி இருக்குமாயிற்று. ‘இப்படிப்பட்ட அங்கீகாரத்தை ஒருகால் செய்துவிட்ட இத்தனையோ?’ என்னில், போகிய அன்றைக்கு அன்று-கழிகிற நாள்தோறும் நாள்தோறும் இப்படியே ஆயிற்று அங்கீகரித்தது. 1இதுதான் இருவர் படிகளாலும் ஆற்றப்போகாது. 2அவனுடைய அங்கீகாரத்துக்கு இலக்கான இவர் படியைப் பார்த்தால், அதனை இவர் தாம் பொறுக்க வல்லர் அல்லர்; அவனோ என்னில், தன்னை நம்பி உடனே கிடந்தவனை மடி தடவினவன் ‘என் செய்தோமானோம்!’ என்று வருந்துமாறு போலே, எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதானாய் ‘இவனுக்கு என் செய்வோம்!’ என்று இருக்கும் ஒருவன்.
என்னைத் தன்னாக்கி – 3‘அறிவிலேன்’ -திருவாய், 5 7 : 1-என்கிறபடியே அறிவின்மை, ஆற்றல் இன்மை இவைகளுக்கு இலக்காய் இருக்கிற எனை, தன்னோடு ஒக்க ஞானம் சத்தி முதலானவைகளையுடையேனாம்படி செய்து. அன்றிக்கே, ‘என்னைத் தன்னுடையேனாம்படி செய்து’ என்னுதல். என்னால் தன்னை – தன்னாலே சத்தியைப் பெற்றவனான என்னாலே, வேதங்கள் ஸ்மிருதிகள் இதிகாசங்கள் முதலானவைகட்கும் அறிய முடியாதவனாய் இருக்கிற தன்னை. 4‘அந்த ஆனந்த குணம் ஒன்றினின்றும் எந்த வேத வாக்குகன்
‘யதோவாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ’-என்பது, தைத்திரீய. ஆன. 9.-
திரும்பினவோ?’ 1‘என்னால் அறிய முடியாது என்று இருக்குமவனுக்கு அறியப்படுவது, அறிந்தேன் என்று இருக்குமவர்கட்கு அறியப்படாதது’ என்கிறபடியே,‘யஸ்யாமதம் தஸ்யமதம் அவஜ்ஞாதம் விஜாநதாம்’-என்பது, கௌஷீதகீ உபநிடதம்.
பிரமாணங்களால் அறியமுடியாமல் இருக்கிற தன்னை. இன் தமிழ் பாடிய – 2இதுதன்னில் ஓடுகிற அர்த்தமும் பரிமாற்றமும் கிடக்கச் செய்தே, சொல்லில் இனிமை தானே கவர்ச்சிகரமாய் இருக்கிறபடி. பாடிய – ‘என்னைக் கொண்டு பாடுவித்தான்’ என்னுதல்; 3பாடினான் என்னுதல். 4‘இந்த ஸாமத்தைப் பாடிக்கொண்டிருக்கிறான்’ என்று முத்தன் ஸாமகானம் பண்ணுமாறு போலே, அவனும் இவருடைய அனுபவத்தால் வந்த உவகைக்குப் போக்கு விட்டுத் ‘தென்னா’ என்று பாடுமாயிற்று.
ஏதத் ஸாமகாயந் நாஸ்தே’ என்பது, தைத். பிரு. 10. ‘தென்னா’- என்பது, திருவாய். 10. 7 : 5.
5‘இப்படி இனிய இது உண்டானபடி எங்ஙனே?’ என்னில், ஈசனை-சொல்ல வேணுமோ? சர்வேஸ்வரன் செய்யமாட்டாதது உண்டோ? அரிதோ அவனுக்கு? 6‘கவி பாடினது நீராய் இரா நின்றீர்; அவனைப் பாடினானாகச் சொல்லாநின்றீர்; இதுதான் செய்தபடி என்?’ என்ன, ஆதியாய் நின்ற-‘நான் கவி பாடுகைக்குக் காரணமாய் நின்றான். அவன் அடியாக நான் கவி பாடினேன்,’என்றபடி. 1‘காரணமானபடிதான் என்?’ என்னில், என் சோதியை – 2பிடாத்தை விழவிட்டுத் தன் வடிவழகைக் காட்டினான்.‘திருத்திரை எடுத்தாற் கூப்பிடுமாறு போலே கூப்பிட்டேன்; அது கவியாய்த் தலைக்கட்டிற்று. அன்றிக்கே, 3தன் வடிவழகைக் காட்டியாயிற்றுக் கவிக்கு உள்ளுறை கொடுத்தது,’ என்னுதல். ‘நீரும் கவி பாடினீராகில் பின்னை இப்படிக் கிடந்து படுகிறது என்?’ என்ன, என் சொல்லி நிற்பனோ – 4‘நானும் பாதி வழி வந்து அவனாலே அங்கீகரிக்கப்பட்டவனாய் இருக்கிறேனோ? அன்றிக்கே, பெற்ற பேறுதமான் அளவுபட்டு ஆறி இருக்கிறேனோ?’ என்றது, 5‘ஒரு சாதனத்தைச் செய்தார்க்குப் பலம் தப்பாமையாலே, நானும் இப்பேற்றுக்குச் சில செய்தேனாய் இது தக்கது என்று இருக்கிறேனோ? பெற்ற பேறுதான் பொறுக்குமதாய் ஆறி இருக்கிறேனோ? எதனைச் சொல்லித் தரிப்பது?’ என்றபடி.6‘கிருஷ்ணத்வைபாயநர் என்னும் பெயரையுடைய வியாசரைச் சுவாமியான நாராயணன் என்று தெரிந்துகொள்; செந்தாமைரக் கண்ணனான அவனைத் தவிர வேறு யார்தான் மஹாபாரதம் செய்தவர் ஆவார்?’ என்றாற்போலே இருக்கிறதாயிற்று.
‘க்ருஷ்ணத்வைபாயநம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும்
கோஹ்யந்ய: புண்டரீகாக்ஷாத் மஹாபாரதக்ருத் பவேத்’-என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 3. 4 : 4.
இதற்கு ஆளவந்தார் அருளிச்செய்யும்படி: ‘சர்வேஸ்வரன் செய்யப் புக்கால் அரியதும் ஒன்று உண்டோ?’ என்றாம். அங்ஙன் அன்றிக்கே, எம்பெருமானார், ‘இவர் தாம் சொன்னாராகிலும் ஒருபடி போகச் சொல்லித் தலைக்கட்டுவர்: அவனும் தானே சொன்னானாகில் ஒரு குற்றுமும் இல்லாதபடி தலைக்கட்டுவான்: சிறு குழந்தை எழுத்திடப் புக்கார் தானே ஏதேனும் ஒருபடி இட்டுத் தலைக்கட்டும்; தந்தையாதல் உபாத்யாயனாதல் இடப்புக்கால்தானே எழுத்தாய் இருக்கும்? அங்ஙன் அன்றிக்கே, இவன் கையைப் பிடித்து இடுவிக்கப் புக்கவாறே, இவன் ஓரிடத்தே இழுக்க அவன் ஓரிடத்தே இழுக்கக் குதறிக் கொட்டியாய் உருவம் அழிந்து சிதறிப்போம்; அப்படியே, என்னை உபகரணமாகக் கொண்டு கவி பாடாநிற்கச் செய்தேயும, என்னால் வரும் குற்றம் தன் பக்கல் தீண்டாதபடி பாடுவித்தான் என்கிறார்’ என்று அருளிச்செய்வர்.
இதற்கு-இத்திருப்பாசுரத்துக்கு. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்துக்கு, ‘இன்தமிழ்
பாடிய ஈசன்’ என்றதிலே நோக்கு. ஈசன் – ‘சமர்த்தன்’ என்றபடி.
எம்பெருமானார் நிர்வாஹத்துக்கு ‘என்னால் தன்னை இன்தமிழ் பாடிய
ஈசனை’ என்றதிலே நோக்கு. ஈசன்-குற்றங்கட்கு எல்லாம்
எதிர்த்தட்டானவன். மேலே காட்டிய ‘கிருஷ்ணத்வை
பாயநம்’ என்ற திருஷ்டசாந்தம், ஸ்ரீஆளவந்தார் நிர்வாஹத்திற்கு.
எம்பெருமான் தன்னைக் கொண்டு பாட
உயர்ந்த திருவாய்மொழி
உரு வெளிப்பாடு
மயக்க குண அனுபவம் காட்ட
மீண்டும் உரு வெளிப்பாட்டால் நலிய
வைத்து இருக்க காரணம் –
பழைய இழவே தலை எடுக்க
உம்மைக் கொண்டு பாசுரம் பெற -இப்பொழுது தான் சொல்கிறான்
கவிகள் பலர் இருக்க என்னைக் கொண்டு பாடிவித்துக் கொண்ட குணம்
வால்மீகி வியாசர் முதல் ஆழ்வார்கள் இருக்க
என்னைக் கொண்டு பாடுவித்து தான் அனுபவிக்க -என்ன நீர்மை இது –
பிரதிபந்தகங்கள் -தன்னாலே பேறு என்றால் இருக்கலாம்
அவனால் பேறு என்றால் ஒன்றுமே இல்லையே –
பலிக்காமல் இன்னும் இருக்க என்ன காரணம் –
இனி யாம் உறாமை –
நேரான பரிகாரம் சொல்லாமல் பராக்கு காட்டி இது வரை
சந்த்ரனை கேட்ட குழந்தைக்கு தேங்காயைக் காட்டி –
உன்னை ஒழிய செல்லாமை
சம்சாரத்தில் பொருந்தாமை
நீயே உபாயம்
இங்கே வைத்து ஜீவிக்க
வஸ்துக்களை குச்சியிலே இட்டு கோத்து வைத்தாப் போலே
காட்டியவை அனுபவித்து மீண்டும் பழையபடி கேட்க
ஹேது நிர்பந்தித்து கேட்க வேணுமோ –
சம்வாதம் போலே விஷயம்
சம்சாரம் ஈடுபட்டு -நாக்கை நீட்டி
கர்மம் வாசனை ருசி -அவற்றாலே ஆகாதோ
அவற்றையும் பாராமல் பாசங்கள் நீக்கி என்னை அறக் கொண்டாயே
மயர்வற மதிநலம் அருளின பின்பு
வடிம்பிட்டு கேட்க
உம்மை -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -சொன்னீரே
என்னுடைய ஆனந்தத்துக்கு வேண்டியதை செய்து கொண்டு இருக்கிறேன்
வேண்டியபடி விநியோகம் கொள்ளலாமே
அதிசயம் முன்பு இல்லாத மகிழ்ச்சி பிறப்பிக்கை உம்முடைய ஸ்வரூபம்
பீஷ்மரை சர படுக்கையில் வைத்து நாட்டுக்கு
நமக்கும் நம் உடையாருக்கும் பிரபந்தம் தலைக் கட்டும் வரை
நேரான பரிகாரம் அருளி
தனக்கும் அதிசயம் வேண்டுமோ
சர்வேஸ்வரன்
அவாப்த சமஸ்த காமன்
தம்மைக் கொண்டு தீர்த்து கொள்ளுவதாக வார்த்தை
ஞான சக்தி குறைவற்ற வேத வியாசர் வால்மீகி பராசர பகவான்
செந்தமிழ் பாடுவார்
தம்மைக் கொண்டு
அசத் கல்பமாய் உரு மாறின என்னைக் கொண்டு
தனக்கு ஈடாக கவி பாடுவித்து கொள்வதாக
அருளிய நீர்மை
பிரத்யுபகாரம் செய்ய முடியாமல் தடுமாறி
எங்கனே இங்கு வைத்தது எதுக்கு என்ன
இன்பதமா கவி பாட
கைம்மாறு இல்லா மாறன்
நூற்று அந்தாதி பாசுரம் இந்த ஈடு சங்கதியை விவரித்து அருளுகிறதே-
உரு வெளிப்பாடு அனுபவித்து
மீண்டும் துக்கித்து
தீர்க்க சிந்தயந்தி -சுகம் துக்கம் மாறி மாறி தீர்கமாக போக
தீர்க்க சரணா கதி திருவாய்மொழி –
விசித்திர -மாக உள்ளவை காட்டி -சொல்லி சொல்லி மாளாமல்
இன்னும் கேள்விக்கு பதில் சொல்லு –
லோகம் உஜ்ஜீவிக்க உம்மை கொண்டு பாசுரம்
என்றனை நீ இங்கு வைத்தது எதுக்கு என்ன
என் தனக்கும் என் அடியவருக்கும் இனிமையான கவி பாட வேண்டுமே
கேட்டாரார் வானவர்கள் செவிக்கு இனிய
மரங்களும் இரங்கும் வகை பாடி அருளினாரே
அவனே நடத்திக் கொள்கிறான் -நாம் கருவி தானே –
நாம் யார் -தானாக வந்து மறையின் பொருளை நல்கு -மா முனிகள் -அருளியது போலே
உயர்ந்த பேற்றுக்கு பிரத்யுபகாரம் செய்ய முடியாமல் திண்டாடுகிறார்
அநாதி காலம் சம்சாரத்தில் பழகி
அசத் கல்பனாய் உரு மாய்ந்த போன என்னைக் கொண்டு
தனக்கு ஈடாக கவி பாடுவித்துக் கொண்ட நீர்மை
ரசானுபவமான திருவாய் மொழி
-தானே என்னை தன்னைப் பாட ஞான சக்தி உடையவனாய் கொண்டு –
என்ன சொல்லி நிற்பேன்
ஆதியாய் நின்ற எம் ஜோதி மூல காரணன் ஜகத் காரண பூதன்
என்றைக்கும் -என்னை உய்யக் கொண்டு
போகிய அன்றைக்கு -சப்தாதி விஷயங்களில் போகிய
என்னை தன்னாக்கி -தன்னைப் போலே ஞான சக்திகளை உண்டாக்கி –
என்றைக்கும் போகிய –
அன்றைக்கு உய்யக் கொண்டு தானாக்கி
என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு
ஒரு உபகாரம் -கால தத்வம் உள்ளவரை நினைந்து உஜ்ஜீவிக்கலாம் படி இருக்கும்
அம்புக்கு இலக்காவார் அலற்றும் படி -துன்பம் நினைந்து
குணத்துக்கு இலக்காவார் அலற்ற-அன்புக்கும் இலக்கானார் இத்தையே
என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு -அர்த்தம்
அம்பு பட்டால் புண்ணுக்கு மருந்து போட்டு ஆற்றலாம்
கிருபைக்கு அப்படி இல்லையே
ஆழ்வார் விஷயீ காரம் ஒரு கால் பண்ணி விடாமல்
கழிக்க நாள்கள் தோறும்
போகிய அன்றைக்கும் விஷயீகரித்துக் கொண்டே இருக்கிறான்
மிருது பிரகிருதி ஆழ்வார்
எல்லாம் செய்தாலும் ஒன்றுமே செய்யாதவாறு நினைத்து போவான்
இரவல் கடுக்கன் கொடுத்த மாப்பிள்ளை கதை
கடுக்கனை பற்றி சொல்ல மாட்டேன் பிரஸ்தாபித்து
என் செய்வோம் என்றே இருப்பன்
மடி தடவினவன் கதை
நம்பி படுத்து –
விச்வசித்து உடனே கிடந்தவனை மடி தடவி என் செய்தோம் -துக்கிப்பது போலே
உபகாரம் செய்தாலும் ஒன்றுமே செய்ய வில்லையே மடி தடவினவன் போலே இவனும் கவலை படுவது போலே –
அடியார்க்கு என் செய்வேன் என்று இருத்தி நீ
வைகுந்தம் கொடுக்கும்
ஓன்று உண்டு செங்கண் மால்
உன் அடியார்க்கு என் செய்வன்
நின் புகழில் வைக்கும் தம் சிந்தை விட அது உசந்ததா
வைக்குந்தம் என்று நீ அருளும் வான்
அநாதாரவு தோன்று
நீ அவருக்கு வைகுந்தம் ஓன்று வான்
van வைத்து கூட்டிப் போவானாம் வேண்டாம்
போகிற -கழிகிற நாள்களில்
என்னை -தாழ்வு
தன்னாக்கி -உசத்தி
அறிவிலேன் அஞ்ஞானம் அச்சக்தி மிக்கு
சர்வஞ்ஞன் சர்வ சக்தன்
தன்னுடையவனாக்கி
சம்சாரம் போக
த்வம் மே சொல்ல அஹம் மே ஓட இழுத்து பிடித்து
குழவி -கிட்டவும் வேட்டு வாணனும் போலே
அசித் சம்பந்தம்
அயன சம்பந்தம்
என்னால் தன்னை
தன்னால் கொடுத்த சக்தி கொண்டு
இன் கவி பாடுவித்தான்
சுருதி ஸ்ம்ருதி இதிகாசம் எதோ வாசோ நிவர்தந்த்தே மீள
இவற்றுக்கு அவிஷயமாம் படி இருக்கும் தன்னை
பிரமாணம் கொண்டு அறிய முடியாத
அளவிட்டு சொல்ல முடியாத
இன் தமிழ்
சொல்லில் இனிமை ஆகர்ஷகம்
தமிழ் என்றாலே இனிமை அர்த்தம் இங்கு
இனிமையும் நீர்மையும் தமிழ் நிகண்டு
இங்கே பாஷை சொல்ல வில்லை
இன் தமிழ் மீ மிசை போலே மிகவும் இனிமை
சாம கானம் பண்ணுமா போலே தென்னா தென்னா என்று பாடுவானாம்
முக்தர் நித்யர் போலே -அனுபவம் உள் அடங்காமல் ஹா வு ஹா வு
பாடின ஆழ்வாரை கொண்டாடி
யானாய் தன்னை தான் பாடி தென்னா என்னும் என் அம்மான்
ஹர்ஷத்தின் போக்கு வீடாக தென்னா என்று பாட
இனிமையாக வந்தது
ஈசனை -சர்வேஸ்வரன் செய்ய மாட்டாதது உண்டோ அரிதோ
கவி பாடினது நீராய் இருக்க குருகூர் சட கோபன் சொல்
ஈசன் சொல் சொல்ல வில்லை
ஆதியாய் நின்ற
கவி பாட ஹேதுவாக நின்றான்
என் ஜோதியை தேஜஸ் மிக்க திரு மேனி காட்டி பாட வைத்தான்
காஞ்சி ஸ்வாமி திருமலை உபன்யாசம் –
ஜனங்கள் இல்லை மண்டபத்தில்
பார்த்து
சரக்கு பிடிப்பதே இவர்களைப் பார்த்து தான்
சொல்லும் விஷயம் அங்கே இருந்து தான் வருகிறது
எம்பெருமான் வடிவு அழகு பாட
வஸ்த்ரம் கழற்றி பிடாத்தை நழுவ விட்டு சேவை –
ஸ்ரீ பெரும் புதூர் இன்றும் அப்படி சேவை பண்ணி வைக்க –
திருத் திரை எடுத்தால் கூப்பாடு போலே கூப்பிட்டேன்
பாட்டாக தலை கட்ட
வடிவு அழகை காட்டி – பாட்டுக்கு உள்ளுறை
நானும் பாதி வழி வந்த பின்பு இல்லையே
பூர்த்தியாக அவனே
பெற்ற பேறு அளவு பட்டு ஆறி இருக்கவோ
சாதனா அனுஷ்டானம் ஒன்றுமே இல்லாமல் பெற்ற பேறு
சாத்மிக்க ஜீரணிக்க முடியாத உபகாரம்
எத்தை சொல்லி தரிப்பது
என் சொல்லி நிற்பானோ
வியாசர் நாராயணம் வித்தி –
கிருஷ்ணம் த்வைபாதனம்
கருப்பாக இருப்பதால் கிரிஷ்ணம் வியாசர்
கோகி அந்ய-மகா பாரதம் பவதே
ஆவேசித்து எழுதினான் போலே
ஆளவந்தார் -சர்வேஸ்வரன் செய்யப் புக்கால் அரியன உண்டோ -முடியாதது உண்டா
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
திருமாலை ஆண்டான்
இப்படி
எம்பெருமானார் -ஆச்சர்யம் வார்த்தை இதுக்கு சேராதே
பிரகரணம் சேர அர்த்தம்
தாம் சொன்னான் ஆகில்
அவனும் தானே சொன்னான் ஆகில்
சிறு பிரஜை எழுதிடப் புக்கால்
பிதா தானே எழுத்தாய்
இவன் ஓர் இடம் இழுக்க பிரஜை ஒரு பக்கம் இழுக்க
என்னைக் கொண்டு இப்படி பாட வைத்தானே -இப்படி நிர்வாகம் -எம்பெருமானார்
இடுவிக்க புக்க வாறே -குதறி கொட்டி கிறுக்கலாய் ரூபம் அழித்து சிதறி
என்னால் வரும் தோஷம் அவன் பக்கல் சம்பந்தம் இல்லாமல்
இருக்கும் படி செய்த ஆச்சர்யம்
இந்த பெரிய உபகாரம் என்ன என்று சொல்லுவேன்
போகிய அன்றைக்கு -சந்தை இப்படி தான் சொல்ல வேண்டும்
சேவா காலம் வியாக்யானம் படி
என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு
போகிய அன்றைக்கு
வை மு கோபால கிரிஷ்ணமாசார்யர் அகஸ்தியர் போன்று என்பார் காஞ்சி ஸ்வாமி
அத்யாபகர் பார்த்த சாரதி கோயிலிலே
பாடம் பேதம் உண்டே
வேத சாம்யம் சப்த பிரதான்யம்
அர்த்தத்துக்கு பிரதான்யம் இல்லை
ஸ்ரத்தையா தேயம்
அஸ்ரத்தையா அதேயம் -சொல்லாமல் அஸ்ரத்தையாதேயம் சொல்வது போலே
ஆனது செம்மை அற நெறி பொய்மை
வேதம் கர்ம காண்டம்
அருளிச் செயல் அனுபவம் அர்த்த பிரதான்யம் உண்டே
திருத்தாது பெரும் குறையே -காஞ்சி ஸ்வாமி சாதிப்பாராம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply