இல்லை நுணுக்கங்க ளேஇத
னி்ற்பிறி தென்னும்வண்ணம்
தொல்லைநன் னூலிற் சொன்ன
உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய்அலங் கல்அணி
மார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம்சொன் னால்அது
வேஉனக் காம்வண்ணமே.
பொ – ரை : ‘இதனைக்காட்டிலும் வேறு நுணுக்கங்கள் இல்லை,’ என்னும் வண்ணம் பழையதான சிறந்த வேதத்தில் சொல்லப்பட்ட அசித்தும் சித்தும் நீயே; அகவிதழையுடைய திருததுழாய் மாலையை அணிந்த திருமார்பினையுடையவனே! என் அச்சுதனே! வல்லது ஒரு வண்ணம் சொன்னால் உனக்கு ஆம் வண்ணம் அதுவேயாம்.
வி – கு : ‘இதனில் நுணுக்கங்கள் பிறிது இல்லை என்னும் வண்ணம்’ என்று மாற்றுக. அல்லி – பூந்தாதுவுமாம்.
ஈடு : பத்தாம் பாட்டு. 1வேதங்களாலேயே அறியப்படுமவனாய்க் காரணாமாய் அதிசூக்ஷ்மமாயிருந்துள்ள சேதனங்களையும் அசேதனங்களையும் விபூதியாகவுடையவனாய் இருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.
இதனின் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம் – இதனைக்காட்டிலும் வேறு சூக்ஷ்மமாய் இருப்பது இல்லை என்னும்படி. அதாவது, இவற்றுக்குத் தனக்கு என்று ஒரு நாமமும் உருவமும் இன்றிக்கே பிரமத்தினுடைய நாமத்தையும் உருவத்தையும் இட்டுப் பேச வேண்டும்படி, காரண நிலையிலே இருக்கிற சேதனங்களும் அசேதனங்களும் நீ இட்ட வழக்கு. தொல்லை நன்னூலில் சொன்ன உருவும் அருவும் நீயே – 2‘முதன்முதலில் ‘சத்’ என்ற ஒன்றே இருந்தது’ என்றது அன்றோ?
ஸதேவ ஸோம்ய இதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம்’-என்பது, சாந்தோக்யம், 6. 2 : 1.
ஆக, உலகமே உருவமாய் இருக்கும் இருப்பைச் சொல்லிற்று. அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப-பரமபதத்தையுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. அல்லியையுடைத்தான திருத்துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திருமார்பினையுடையவனே! அச்சுதனே – அவ்விருப்புக்கு ஒரு நாளும் அழிவில்லாதபடி பரமபதத்திலே எழுந்தருளியிருக்கிற இருப்பை எனக்குப் பிரகாசிப்பிக்கிறவனே!
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணம் – இதற்கு இரண்டு படியாக அருளிச்செய்வர்: ‘இவன், தனக்கு உள்ள அளவு எல்லாம் கொண்டு பேசினால், உன் பக்கல் சொல்லிற்றாமத்தனை போக்கியல்லது, உனக்கு ஓர் அளவு இல்லையே அன்றோ?’ என்னுதல்; அப்போதைக்கு, 3அதுவே உனக்கு ஆம் வண்ணம்? – 4‘அது அன்று என்கிறது’ என்னுதல். அன்றிக்கே, உன் பக்கல் அன்புள்ளவர்களாய் இருப்பார் எத்தனையேனும் அளவுஇன்றிக்கே, இருந்தாகளாகிலும், அவர்கள் ஒன்றைச்சொன்னால், ‘ஸ்ரீவைகுண்டத்திலே நித்தியசூரிகள் நடுவே அவர்களுக்குங்கூடப் பேச்சுக்கு நிலம் அன்றிக்கே இருக்கிற நம்மைச் சம்சாரத்திலே மிகத் தாழ்ந்தவனாய் இருக்கிற இவன் அறிந்தானாகச் சொல்லுவதே?’ என்று சீறுகை அன்றிக்கே, இவன் சொன்னதுவே தனக்கு அளவாக நினைத்திருக்கும் என்னுதல்.
வேதைக சமைதி கம்யனாய் -தொல்லை நல நூல் -வேதம்
காரணம் அவஸ்தை அசித்து
சூஷ்மம்
சேதன அசேதனம் விபூதியாக -உருவும் அருவும் நீயே
இல்லை நுணுக்கங்களே-
அல்லித் துழாய் அலங்கல் அப்பொழுதே மலர்ந்த துழாய் மாலை அணிந்த
ப்ரஹ்மத்தின் நாம ரூபம் கொண்டே நிரூபிக்கும் படி
அசேதனம் சூஷ்மம் வடிவு சேர்ந்து
சதேவ சோமயஇதம் அக்ரே ஆஸீத் -சத் சப்தம்
சொமயமான குழந்தாய் அக்ரே முதலில் -சிருஷ்டிக்கு முன்பு
ஜகதாகாரன சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்ம
அல்லி துழாய் அலங்கல் நித்ய விபூதி விசிஷ்டன்
என் அச்சுதனே -அழிவு இன்றி
பிரகாசிதவன் இரண்டையும்
வல்லதோர் வண்ணம் -இரண்டு நிர்வாஹம்
தனக்கு உள்ள அளவில் பேசி ஏற்றம்
ஏகாரம் அன்றே
பிரிநிலை ஏகாரம் தேற்றமான ஏகாரம்
அதுவே அது அன்றே இல்லை இரண்டும் உண்டே
அதுவோ உனக்காம் வண்ணம் சுரம் வைத்து இரண்டு அர்த்தம் உண்டே
தன்மையை சொல்லி -அதுவோ உனக்காம் வண்ணம்
சிலவற்றை சொன்னான் -தனக்கு உள்ள அளவு பேசி –
முடிவு இல்லாத பெருமை உண்டே
தானும் ஏத்திலும் –ஏத்த எங்கே இயலும்
ச்நேகிகளாய் -அளவு இன்றிக்கே இருந்தாலும் ஒன்றை சொன்னால்
ஸ்ரீ வைகுண்டம் நித்யருக்கும் பேச்சு இன்றிக்கே இருக்க
சொன்னதையே அளவாக நினைத்து இருப்பான் –
இந்த சம்சாரத்தில் சொல்ல நினைத்தான்
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வளவே -இங்கும் ஏவகாரம்
இரண்டு அர்த்தங்களிலும் வருமே
பிரிநிலை தேற்றம் இரண்டிலும் அர்த்தம்
திருக் குறும் தாண்டகம்
இளைப்பினை -ஆங்கே காண்பார் மெய்ம்மையே கான்பிப்பாரே ஏவகாரம்
பக்தி யோகம்
இளைப்பினை இயக்கம் நீக்கி
இருந்து முன் இமையை கூட்டி
அன்பு அவர் கண்ணே வைத்து
ஆங்கே விளக்கினை விதியினால் காண்பார்
அனுக்ரகம் இல்லாமல் காண மாட்டார்கள்
இரண்டு அர்த்தங்களும் உண்டே அது போலே –
அதுவே உனக்கு ஆம் வண்ணம் -இங்கும் அது போலே
தானே தன்னை ஆக்கிக் கொண்டு வந்து கொடுப்பான்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply