திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-8-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

ஆம்வண்ணம் இன்னது ஒன்றுஎன்று
அறிவது அரியஅரியை
ஆம்வண்ணத் தால்குரு கூர்ச்சட
கோபன் அறிந்துஉரை த்த
ஆம்வண்ண ஒண்தமிழ் கள்இவை
ஆயிரத் துள்இப்பத்தும்
ஆம்வண்ணத் தால்உரைப் பார்அமைந்
தார்தமக்கு என்றைக்குமே.

பொ – ரை : ‘உண்டான பிரகாரம் இன்னபடிப்பட்டது ஒன்று,’ என்று அறிதற்கு அரிய சர்வேஸ்வரனை, ஆகின்ற தகுதியால் திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அறிந்து அருளிச்செய்த பொருந்திய ஓசையையுடைய அழகிய தமிழ்ப் பாசுரங்கள் ஆயிரத்துள் இப்பத்துப் பாசுரங்களையும் தங்களுக்குத் தகுந்த முறையால் சொல்ல வல்லவர்கள், தாங்கள் என்றைக்கும் ஈஸ்வரனுடைந அனுபவத்துக்குச் சமைந்தார்கள் ஆவார்கள்.

ஈடு : முடிவில், 1‘அங்குத்தைக்குத் தகுதியாக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரம் திருவாய்மொழிகளிலும் தங்கள் தகுதிக்குத் தக்கவாறு சொல்ல வல்லார் என்றைக்கும் கிருத்தியர்,’ என்கிறார்.

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை -இன்னபடிப்பட்டது ஒரு தன்மையையுடையவன் என்று கொண்டு யாவராலும் அறிய அரியனாய் இருக்கிற சர்வேஸ்வரனை ஆயிற்றுக் கவி பாடிற்று. 2‘அந்த ஆனந்த குணத்தினின்றும் வேத வாக்குகள் மீண்டனவோ?’ என்கிறபடியே,

‘யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மாஸாஸஹ’-என்பது, தைத்திரீய. ஆனந். 9 : 1.

வேதங்களும்மீண்டவனை ஆயிற்றுப் பேசிற்று. ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த-அவனுக்குத் தகுதியாம்படி ஆழ்வார் அருளிச்செய்த. ‘அறிவது அரிய அரியை’ என்றதாகில், ‘ஆம் வண்ணத்தால் உரைக்கையாவது என்? முரண் அன்றோ?’ என்னில், ‘அறிந்து உரைத்த’ என்கிறார்; என்றது, 1‘அவன் மயர்வற மதிநலம் அருள ஆயிற்று இவர் பேசிற்று. தன் முயற்சியால் அறியப் பார்க்கில் அன்றோ அரிது?’ என்றது, அவன் கொடுத்த அறிவு கொண்டு அறிவார்க்குக் குறை இல்லை அன்றோ? 2‘நெறிவாசல் தானேயாய் நின்றனை ஐந்து. பொறி வாசல் போர்க்கதவம் சார்த்தி அறிவானாம்’ நான்முகன் திருவந்தாதி.-என்று ஆக்ஷேபிப்பது, தம் முயற்சியாலே அறியப் பார்ப்பாரை அன்றோ?

ஆம் வண்ணம் ஒண் தமிழ்கள் – ‘அவனுக்குத் தகுதியாம்படி இருக்கிற அழகிய தமிழ்’ என்னுதல்; ‘தகுதியாக இருக்கிற பாசுரங்களையுடைத்தாய், சர்வாதிகாரமாகிற நன்மையையுடைத்தான தமிழ்’ என்னுதல். வண்ணம் – பா. அன்றிக்கே, வண்ணம் என்று ஓசையாய், ‘நல்ல ஓசையையுடைய செந்தமிழ்’ என்னுதல். தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும் – தமிழாக இருந்துள்ள இவை ஆயிரத்துள் இப்பத்தையும். ஆம் வண்ணத்தால் உரைப்பார் – ‘பின்னை, இதனைச் சொல்லுமவர்களுக்கும் மயர்வு அற மதி நலம் அருளப்பெற்று அவனுக்குத் தகுதியான சொல்லாலே சொல்ல வேணுமோ?’ என்னில், அத்தேவை எல்லாம் ஆழ்வார்தம்மோடே; இவர்களுக்குத் தாங்கள் வல்ல அளவும் சொல்ல அமையும். அமைந்தார்தமக்கு என்றைக்கும் – அவர்களுக்கு இவ்வாத்துமா உள்ளதனையும், 3ஈஸ்வரன் முழங்கைத் தண்ணீர் வேண்டா; ஆழ்வார்

அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே போரும். என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.

 

        திருவாய்மொழி நூற்றந்தாதி

        மாயாமல் தன்னைவைத்த வைசித் திரியாலே
தீயா விசித்திரமாச் சேர்பொருளோடு- 1ஆயாமல்——————–‘ஓயாமல்’ என்பதும் பாடம்.
வாய்ந்துநிற்கு மாயன் வளமுரைத்த மாறனைநாம்
ஏய்ந்துரைக்க வாழுநாள் என்று?

அங்குத்தைக்கு தகுதியான ஆழ்வார் அருளிய ஆயிரம்
ஆம் வண்ணம்
வித வித வியாக்யானம்
இன்னது ஆம் என்று அறிவது அரியஅரியை
ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து
ஆம் வண்ண ஒண் தமிழ்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் முடிந்த வரை உரைத்தாலும்
அறிய முடியாத எதோ வாசோ நிவர்த்தந்தே வேதமே மீள
தெரிந்து கொள்ள முடியாதவனை
அவனால் அருளப் பெற்று இவர் பேச
ஸு யத்னத்தால் அரிது
நெறி வாசல் தானேயாய் நின்றானை -உபாயம் உபேயம்
ருத்ரன் தபஸ் பண்ண –
கோள் கதவம் சாத்தி
மன்மதனை எரித்தான் காமம் வசப்பட்டு சுப்ரமண்யன் பெற்றானே –
அறிய முடியாது என்றே அறிந்து சொன்னார் ஆழ்வார்
உயர்வற உயர் நலம் உடையவன்
தகுதியான அழகான சந்தஸ் ஓசை த்வனி வண்ணம்
தமிழ் –
பின்னை இத்தை சொல்பவர் மதி நலம் அருளப் பற்று சொல்ல வேணுமோ என்றால்
இல்லை
மயர்வு அற்று
மதி நலம் பெற்று
சொல்ல வேண்டியது இல்லை
அத்தேவை எல்லாம் ஆழ்வார் தம்மோடு
ஆம் வண்ணம் -முடிந்த வண்ணம் ஆகும் வரை சொன்னாலே போதுமே
ஆழ்வார் கடாஷமே போதும்
ஈஸ்வரன் முழம் கை தண்ணீர் வேண்டாமே
தாகம் மிக்கவன் -முழம் கை வழியும் நீரை குடிக்க
முழம் கை வைத்தால் உண்டு இல்லை என்றால் இல்லை –
தாமே அமைந்து இருப்பர்
ஆழ்வார் அபிமானத்தில் ஒதுங்கி பேறு தனனடையே கிட்டுமே
சாரம் -பாசுரம் –
மாயாமல் தன்னை வைத்த
வைசித்ரி விசித்ரம்
ச்வாதந்த்ர்யம் சுதந்திரம்
சௌந்தர்யம் சுந்தரம்
ஆயாமல் ஓயாமல்
வாய்ந்து நிற்கும்
வஸ்துகள் உடன் சேர்ந்து இருந்தாலும் தனித்து

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading