திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-8-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

 என்னசுண் டாயங்க ளால்2நின்றிட்
டாய்என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்றுஉன்னை
யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுல கும்மவை
யாய்அவற் றைப்படைத்தும்
பின்னும்உள் ளாய்!புறத் தாய்!இவை
என்ன இயற்கைகளே.

பொ – ரை : என்னை ஆளுகின்ற கண்ணனே! என்ன விளையாட்டு களையுடையையாய் நிற்கிறாய்? இப்படிப்பட்ட தன்மையையுடையை என்று உன்னைத் தெளிந்துகோடற்கு எத்தகைய ஞானிகட்கும் அரியவனாய் இருக்கின்றாய்; பழைமையான மூன்று உலகங்களுமாகியும் அவற்றைப் படைத்தும் அதற்கு மேலே பொருள்கட்கு உள்ளும் இருக்கின்றாய்; புறத்தும் இருக்கின்றாய்; இவை என்ன தன்மைகள்? அருளிச்செய்ய வேண்டும்.

வி-கு : தேற அரியை-தேற்றரியை. முன்னிய-பழைமையான.

ஈடு : எட்டாம் பாட்டு. 3‘எல்லா உலகங்களையும் படைத்து உள்ளும் புறம்பு பரந்து இப்படி நிர்வகித்து வைத்து அறிய முடியாதவனாய் இருக்கிற இது என்ன ஆச்சரியம்!’ என்கிறார்.

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா – என்ன விளையாட்டுகளையுடையையாய் நிற்கிறாய், என்னை அடிமை கொள்ளுகிற கிருஷ்ணனே! இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற அரியை -இன்ன படிப்பட்ட தன்மையையுடையை என்று, எல்லாப் பொருள்களுக்கும் காரணனாய் இருக்கிற உன்னை, எத்தனையேனும் மிகுதியுற்ற ஞானத்தையுடையவர்களாலும் அறிய ஒண்ணாதபடி நிற்புத்தி: 4‘பிரமனும் அவனுடைய தன்மையை மிக வருந்தியும் சிறிதும் அறியமாட்டான்,’ என்கிறபடியே.‘ப்ரஹ்மாபி நவேத்தி அல்பம் ப்ரயத்நத:’ என்பது.

முன்னிய மூவுலகும் அவையாய்-பிரவாஹ ரூபத்தாலே பழையதாகப் போருகிற மூவுலகுக்கும் கடவையாய். மூவுலகு – மூன்று வகைப்பட்ட ஆத்துமாக்கள்; அல்லது, மூன்று உலங்கள். அவற்றைப் படைத்து – ‘உலகமானது போது, அவற்றை உண்டாக்கி’ என்கிறது. ‘ஆத்துமாக்களான போது, அவர்களுக்கு ஞானத்தின் மலர்ச்சியை உண்டாக்கி’ என்னுதல். பின்னும் உள்ளாய் புறத்தாய்-உள்ளும் புறம்பும் பரந்திருக்கின்றாய்! இவை என்ன இயற்கைகளே-உனக்கு இவைதாம் விளையாட்டாக இராநின்றன; எங்களுக்கு இவைதாம் ஆச்சரியமாக இராநின்றன.

சிருஷ்டித்து அந்தர்யாமியாய் உள்ளும் வெளியிலும் வியாபித்து நிர்வஹித்து அறிய அரியவனாய் இருக்கிறாயே –
எங்கனே நின்னிட்டாய் பாட பேதம் -24000 படி -உரை 12000 படி என்பர்
நின்னிட்டாய் -இவை என்ன இயற்க்கை
இன்ன தன்மை என்று அறிய முடியாமல்
என்ன லீலைகள்
அடிமை செய்து கொள்ளும் கிரிஷ்ணனே
என்ன பிரகாரத்தால் நின்றாய்
எங்கனே ஸ்பஷ்டமாக 24000 அடி வியாக்யானம்
என்னை ஆளும் கண்ணா –
என் கண்ணா எனக்கு பவ்யனான
குருகூர் சடகோபன் சொன்ன -என்றும் பாடம் சில இடங்களில்
குற்றேவல்கள் -குற்றேவல் -பாட பேதங்கள்
பலர் வாயில் புகுந்து -பிராசீனம்
24000 படி வியாக்யானம் பொழுதே பாட பேதம்
சர்வ பிரகார பூதன்
ஞானாதிகர் கூட அறிய ஒண்ணாத படி
ப்ரஹ்மாபி ந வேதி
முன்னிய மூ உலகும் -கடவை நீ
முன்னே இருந்த -பிரளயம் -பிரவாகம் போலே அழிந்து உண்டாகும் –
த்ரிவித சேதனம்
தரை லோக்யர் என்னுதல்
கிருதம் அகிருதம் கிருதாகிருதம்
படைத்தது -உண்டாக்கி செத்தனர் ஞானம் விகாசம் கொடுத்து
உலகம் ஆகு பெயர் உலகில் உள்ள பக்த முக்த நித்யர்
பின்னும் உள்ளாய் பறத்தாய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading