திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-8-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

துயரங்கள் செய்யும்கண் ணா!சுடர்
நீள்முடி யாய்!அருளாய்
துயரஞ்செய் மானங்க ளாய்மத
னாகி உகவைகளாய்த்
துயரஞ்செய் காமங்க ளாய்த்துலை
யாய்நிலை யாய்நடையாய்த்
துயரங்கள் செய்துவைத் தி;இவை
என்னசுண் டாயங்களே.

பொ-ரை : துன்பங்களைச் செய்கின்ற கண்ணனே! பிரகாசம் பொருந்திய நீண்ட திருமுடியையுடையவனே! துன்பங்களைச் செய்கிற சாதி முதலானவை பற்றி வருகின்ற மானங்களாகியும், செருக்காகியும், மகிழ்ச்சிகளாகியும், துன்பங்களைச் செய்கின்ற காமங்களாகியும், அளவாகியும், நிற்றலாகியும், நடத்தலாகியும் துன்பங்களைச் செய்து வைத்தாய்; இவை என்ன சுயநலக்காரிங்கள்? அருளிச்செய்ய வேண்டும்.

ஈடு : ஏழாம் பாட்டு. 3 துயரங்கள் செய்யும் கண்ணா-துக்கங்களைச்செயக்கூடிய கிருஷ்ணனே! ‘எதனாலே நலிவது?’ என்னில், ‘முடிச்சோதி’ என்ற திருவாய்மொழியிற்கூறியபடியே திருமுடியில் அழகைக் காட்டியாயிற்று. சுடர் நீள் முடியாய்- 1விபூதியைச் சொல்லுவதும் திருமுடியைப் போன்று பாதகம் ஆகாநின்றதாயிற்று. நிற்றி முற்றத்துள்’ (7. 7 : 10.) என்ற
திருப்பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி.-அன்றிக்கே, ‘‘முற்ற இம்மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே ஒற்றுமை கொண்டது’ என்றது, ‘பின்னாட்டுகிறது,’ என்று பிள்ளான் பணிப்பர். அருளாய் – 2அவனைக் கேட்டு அறிய வேண்டுகையாலே பாதகமாம் அன்றோ? துயரம் செய் மானங்களாய் – 3‘அடியவனான நான்’ என்கிற அபிமானம் அடிக்கழஞ்சு பெற்றிருக்கும். அங்ஙனன்றிக்கே, ஸோஹம் – அந்த நான்’ என்று துக்கங்களைச் செய்யும் அபிமானங்களாய். மதனாகி உகவைகளாய் – களிப்பும் அதற்கு அடியான உகவையுமாய். துயரம் செய் காமங்களாய் –4‘பொருளின் தொடர்பினால் அப்பொருளில் விருப்பம் முதலியன உண்டாய்ப் புத்தி கெட்டுக் கெடுகின்றான்’ என்கிறபடியே, ‘ஸங்காத் ஸம்ஜாயதே காம: புத்திநாஸாத்ப்ரணஸ்யதி’-என்பன, ஸ்ரீகீதை, 2. 62 : 63.

கேட்டினை எல்லையாகவுடைய காமங்களாய்; 5அங்ஙன் அன்றே, பகவத் காமம்? துலையாய் – பிரமாணமாய்; 6நிறுக்குமதாய். நிலையாய் நடையாய் – தாவரங்களும் சங்கமங்களும். அன்றிக்கே, நிற்றல் நடத்தல்களைச் சொல்லுதலுமாம். துயரங்கள் செய்து வைத்தி – இப்படித் துக்கங்களைச் செய்வியாநின்றாய். இவை என்ன 1சுண்டாயங்கள்-உனக்கு விளையாட்டாக இராநின்றது, எங்களுக்குத் துக்கத்திற்குக் காரணமாக இராநின்றது.

துக்கத்திற்குக் காரணமான அபிமானம் தொடக்கமான விசித்திரமான பொருள்களை விபூதியாகவுடையனாய் இருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.துயக்காய் – துயக்கா இரண்டு பாட பேதம் முந்திய பாசுரத்தில் உண்டே –
துக்க ஹேதுவான அபிமானம் தொடக்கமான அனைத்துமே உன் ஆதீனம்
அஹங்காரம் போல்வன அபிமானம்
அபிமான துங்கன் சாத்விக அபிமானம் -உத்தேச்யம் செல்வ நம்பி

விசித்திர ஜகதாகாரம் அனுபவம் –
துக்க ஹேதுவான அபிமானம் தொடக்கமான -விசித்திர -பதார்த்தங்களை விபூதியாக கொண்டவன்
சாத்விக அகங்காரம் உத்தேச்யம் –
எனக்கு யார் இனி நிகர் நீள் நிலத்தே -குரவை ஆய்ச்சியர் அனுபவித்த பின்பு –
அபிமான துங்கன் செல்வனைப் போல நானும் உனக்கு பழ வடியேன் –
துயரங்கள் செய்யும் கண்ணா
சுடர் நீங முடியாய்
இவை என்ன சுண்டாயங்கள்
துயரம் செய் மானங்கள் –
மதம் கர்வம் உகவை
துயரம் செய் காமங்கள்
துலை துலா தராசு
நிலை
நடையாய்
துக்கங்கள் பண்ண கடவ கிருஷ்ணன்
திரு அபிஷேகம் காட்டி -ஐயோ கிட்டி அனுபவிக்க முடிய வில்லையே
புண்ய பாபங்கள் நீ இட்ட வழக்கு என்னவுமாம்
விபூதி அனுசந்தானமும் திரு அபிஷேகம் போலே பாதகம் இவருக்கு
பிள்ளான் -பின்னாட்டுகிறது காட்டி வர
பாட்டுகள் தோறும் இப்படி அர்த்தம் உரு வெளிப்பாடு நீங்க வில்லை
நஞ்சீயர் இவை ரசாந்தரம் ஆனதால்
சங்கை கேட்டு அறியும் படி
மானங்கள் -அபிமானம் அகங்காரம்
தாசோஹம் அபிமானம் அடி களைஞ்சு பெற்று இருக்கும்
அத்வைதி அஹம் ப்ரஹ்மாசி சோஹம் சொல்லி கொடுக்க
விசிஷ்டாத்வைதி
தாசோஹம்
அத்வைதி மீண்டும் சதாசோஹம்-
மீண்டும் இவர்
தாச தாசோஹம் –
சதா சதா சோஹம்
தாச தாச -கணம் -அடி நிலைக்கு போய் நிற்க வேண்டும்
சோஹம் துக்கம் பண்ணி இருக்கும் அவனும் எம்பெருமான் ஆதீனம்
பட்டர் -அழகியதாக அர்த்தம் இருக்க எதிர் தட்டாக சொல்லி
கண்டனம் செய்யாதீர் வருந்த வேண்டும்
பாக்கியம் இன்றி இழந்து போனார்களே என்று
அனைத்துக்கும் இவனே நிர்வாஹகன்
களிப்பும் அதுக்கு அடியான
கர்வம் -உகவை -பிரீதி-அடியான –
மதம் துர்மானத்தால் வந்த கர்வம்
மதம் மதன் கடைப் போலி ஆனது

வித்யா மத அபிஜன மத தன மதம் முக்குறும்பு திமிரு இவை –
கூரத் ஆழ்வான்
குழியைக் கடக்கும் கடத்தும் -நினைத்தவர்களுக்கும் போக்கித் தருவார் –
மூன்றுக்கும் விஷயம் இருந்தவர் -இவர் தானே –
செருக்கால் உகவை பிரீதி உண்டாகுமே
காமங்கள் –
சங்கம்- காமம்- குரோதம் -சம்மோஹம் -புத்தி நாசம் –
கேட்ட சகவாசம் -விநாசம் வரை கூட்டிப் போகுமே –
அங்கன் அன்றே பகவத் காமம்
அழிவிலே கொண்டு விடும் காமமாயும் அவனே
நிறுத்தும் -தராசில்
நிலை ஸ்தாவரம்
நடை சங்கமம்
ஸ்திதி கமனங்கள்
சுண்டாயம் விளையாட்டு –
சுண்டி விளையாடுகிறாய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading