திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-5-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

வார்த்தை அறிபவர் மாயவற்கு
ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு
மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற
நீக்கித்தன் தாளின்கீழ்ச்
சேர்த்துஅவன் செய்யும் சேமத்தை
எண்ணித் தெளிவுற்றே.

    பொ – ரை : ‘ஆத்துமசொரூபம் தெரியாதபடி மறைத்துக்கொண்டிருக்கிற பிறப்பும் நோயும் மூப்பும் இறப்பும் என்னும் இவற்றை நீக்கிப் பெரிய நரகத்துன்பத்தையும் அடியோடு நீக்கித் தன் திருவடிகளின் கீழே நித்தியமான கைங்கரியத்தைக் கொடுத்து, அவன் செய்கின்ற சேமத்தை எண்ணித் தெளிவை அடைந்து, அவனுடைய வார்த்தையை அறிகின்றவர்கள், அக்கண்ணபிரானுக்கு அடிமை ஆவரே அன்றி மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரோ?’ என்றபடி.

வி – கு : வார்த்தையாவது, ‘என்னையே சரணமாகப் பற்று; நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் நீக்குகிறேன்,’ என்ற பகவத் கீதை வாக்கியம். ‘பேர்த்து நீக்கிச் சேர்த்துச் செய்யும் சேமம்’ என்க. ( அதனை) எண்ணித் தெளிவுற்று அறிபவர் என்க.

ஈடு : பத்தாம் பாட்டு. 1மேலே சேதநர்க்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்சாரத்திலே இருக்கச்செய்தே செய்தவை அன்றோ? அவை போன்றது அன்றி, சம்சாரம் மறுவல் இடாதபடி செய்து தன் திருவடிகளிலே சேர்த்துக்கொண்டது ஒரு மஹோபகாரத்தை அருளிச்செய்கிறார்.
‘ஸர்வ தர்மாத் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்ய; மோக்ஷயிஷ்யாமி மாஸூச:’-என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.
வார்த்தை அறிபவர் – 2மஹாபாரதம் எல்லாவற்றாலும் சொல்லிற்றாயிற்றது ஒருவார்த்தை அன்றோ?3வார்த்தையாவது, பிரயோஜனத்தோடு கூடி இருப்பது அன்றோ? 1‘என் ஒருவனையே சரணமாகப் பற்று,’ என்றதனை அன்றோ இங்கு வார்த்தை என்கிறது? 3மேலே சொன்னவை அடங்கலும் கடல் போலே; அதில் அமிருதம் போலே இது. மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ- 3அவன் ‘என்னையேபற்று’ என்று சொல்லாநின்றார், இவர்கள் அவனை ஒழியவும் பற்றுவார்களோ?4இரஹஸ்யங்கள் எல்லாவற்றையும் வெளியிட்டான் அன்றோ அவள் சூழல் முடிக்கைக்காக?

போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை – பரணி, கூடு வரிந்தாற்போலே, இவ்வாத்துமாவை அறிய ஒண்ணாதபடி சூழப் பொதிந்து கிடக்கிற பிறவிகள், அவை புக்க இடத்தே புகக்கடவ நோய், அங்ஙனேயாகிலும் சிலநாள் செல்லாதபடி இடி விழுந்தாற்போலே நிற்கிற முதுமை, அங்ஙனேயாகிலும் இருக்க உண்ணாதபடி இவனுக்கு விருப்பம் இல்லாத இறப்பு, இவற்றை எல்லாம். பேர்த்து – 5ஈஸ்வரனுக்கு ஒரு விரகு பார்த்துத் தள்ள வேண்டும்படி அன்றோ அவற்றின் கனம், விரகர் நெடுஞ்சுவர் தள்ள மாறுபோலே தள்ளி? பெருந்துன்பம் வேர் அற நீக்கி – பிறவி போனால்பின் வரக்கூடியமான கைவல்யமாகிற பெரிய துக்கத்தை வாசனையோடே போக்கி. 1‘முன்பு நின்ற நிலைதான்  நன்று’ என்னும்படி அன்றோ இதன் தன்மை? அதற்கு, பின்னை ஒரு சரீரத்தை எடுத்தாகிலும் பகவானை அடைவதற்குத் தகுதி உண்டே அன்றோ? இது எப்பொழுதும் அழிந்ததே அன்றோ?

தன் தாளின் கீழ்ச் சேர்த்து-பாதரேகைபோலே இருக்கத் திருவடிகளிலே சேர்த்து. அவன் செய்யும் சேமத்தை எண்ணி –2பின்னை இவனுடைய மீட்சி தன் புத்தி அதீனமாம்படி பண்ணிவிடுகை. ‘

 ‘இமாந் லோகாந் காமாந்நீ காமரூப்யநுஸசஞ்சரந்.’ தைத்திரீ. பிரு.

இவன் நினைவோடு தன் சங்கற்பத்தோடு வாசி அறும்படி செய்தல். 3இவனும் சேதனனாய் இருக்கச் செய்தே, முத்தன் ஆனாற் கொள்ளும் பல வகையான நிலைகளும் அவன் புத்தி அதீனமாய் அன்றோ இருப்பவன்?’ இவன் கையிலே இவனைக் காட்டிக் கொடுத்தாலும் அவனுக்கு அஞ்ச வேண்டாதபடியாய் இருக்கை. எண்ணித் தெளிவுற்று – இதனை எண்ணித் தெளிந்து. 6அவன் ‘என்னையே பற்று’ என்று

சொன்னதில், தலையாடியிலே, ‘எல்லா விரோதிகளையும் நானே போக்கி என்னைத் தருவான்’ என்று சொன்னதனைத் தெளிந்திருக்குமவர்கள்; அவனுக்கு அல்லது ஆள் ஆவரோ? 1மேலே கூறிய குணங்கள் எல்லாம், ‘மண் தின்ன வேணும்’ என்று அழுத குழந்தைக்கு அதனை இட்டு அதற்குப் பரிஹாரம் பண்ணுமாறு போலே ஆயிற்று; இங்கு, இவற்றினுடைய ஹிதமே பார்த்துச் சம்சாரம் தொடக்கமான எல்லாத் துன்பங்களும் மறுவலிடாதபடி போக்கித் தன் திருவடிகளின் கீழே வைத்துக் காத்த பெரிய நீர்மைக்குப் போருமோ மேலே கூறியவை அடங்கலும்?

2மேலே செய்த பரிஹாரங்கள் கிரந்தி கிடக்கச் செய்யும் பரிஹாரம் போலே சம்சாரம் கிடக்கச் செய்த பரிஹாரங்கள் அன்றோ? அது புண் இல்லாதபடி அறுத்து நோக்குவாரைப்போலே இதிற் சொல்லுகிற குணம். 3மேற்கூறியவை சம்சாரிகள் இச்சையாலே செய்தவை; இது ஈஸ்வரன் தன்னிச்சையாலே செய்ததன்றோ?

சம்சாரம் மருவல் இலாத படி செய்து அருளிய குணம்
வார்த்தை அறிபவர்
சரம ஸ்லோகம் அருளி உஜ்ஜீவிக்கப் பண்ணிய
கிரிஷ்ணாவதாரம் ஒழிய தஞ்சம் இல்லையே -ஆழ்வார் துறை
மகிமை அறிந்து -வார்த்தைக்கு
பிறப்பு -இறப்பு போக்கி
பெரும் துன்பம் வேரற நீக்கி
தாளில் கீழ் சேர்த்து
அவன் செய்யும் சேமங்கள்
மகா பாரதம் 125000 ஓன்று போதுமே சரம ஸ்லோகம் -32 எழுத்து தான் வார்த்தை –
பிரயோஜனம் -மாம் ஏகம் -மா சுச மட்டும் போதும்
கீழ் அடங்கலும் கடல் இது அமிர்தம்
என்னையே பற்று சொல்லிய பின்பு வேறு ஒருவரை பற்றுவாரோ
ரகசியம் நீசர் நடுவில் குழல் முடிக்க வியாமோகம்
கைப்பட்ட மாணிக்கம் கடலில் பொகட்டு நெஞ்சு பதன் பதன்
மாயவன் -வியாமோகம் உடையவன்
போத்த பிறப்பு -நாமே போத்து கொண்டு
ஆத்மாவை -மறைத்து பரணி கூடு போலே -வெளி வர முடியாமல்
சூழ போத்து கிடக்கும் ஜன்மங்கள்
வியாதி -ஜரை மூப்பு -விநாசம் -மேலே மேலே வர
அத்வைதி ஆபத் சன்யாசம் வாங்கி மோஷம் -அனந்தராம தீஷிதர் வாங்கி கொண்டார் –
ஆபத் தனம் -ஆயத்தனம் இரண்டாம் கல்யாணம் கொடுப்பாளா கேட்டாராம் -ஆவர்த்தனம் என்று கேட்டு-
சொத்துக்காக செய்வார்களாம் முன்பு
பேர்த்து -விரகு ஈஸ்வரன் கூட பார்த்து நீக்கும் படி
விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே –
கல் கட்டடம் கட்டும் கெட்டிகாரர் சதாபிஷேக சுவாமிகள்
பெரும் துன்பம் வேரற நீக்கி -கைவல்யம் -துக்கம் தானே
தன்மை கீழ் நின்ற நிலை நன்று என்னும்படி -தண்மை தாழ்வு -சரீரம் பண்ணி பகவத் சமாஸ்ரயணம்

கைவல்யம் நித்ய விநாசம்
பாத ரேகை போலே சேர்த்து
அவன் செய்யும் சேமங்கள் –
ஏக்தா பவதி -தன் பொறுப்பில்
இவன் கையிலே இவனைக் காட்டிக் கொடுத்தாலும் அஞ்ச வேண்டாத படி
எண்ணி -மனோ ரததித்து தெளிந்து
தலையாடி முதலில் -என்னைப் பற்று –
சார்பா பாபேப்யோ மோஷ இஷ்யாமி -மாம் சரணம் விரஜ
அவனுக்கு அல்லது ஆள் ஆவாரோ
மண்தின்ன வேண்டும் பிரஜைகளுக்கு அத்தை கொடுக்க கீழ்
இங்கு ஹிதமே பார்த்து துரிதம் மறுத்தல் இல்லாதபடி
உஜ்ஜீவனம் இங்கு தான்
கீழே ஜீவனம்
பெரிய நீர்மை இது தான்
கிரந்தி கிடக்க பண்ணும் பரிகாரம் கீழ் சொன்னவை
இது கட்டியை அறுத்து தள்ளி
சம்சாரம் நீக்கி செய்த உபகாரம் இது
சம்சாரி இச்சையால் கீழ்
இது எம்பெருமான் இச்சையால் செய்து –
அயோத்யாவாசிகள் பரம பதம் இரண்டாவது -பாசுரத்தில்
சாஷாத் மோஷம் இல்லை சாந்தானிக மோஷம் -லீலா விபூதியில் மோஷ பிரதானம்
இந்த பாசுரம் தான் பரம பதம் –

 

மா சுச தனக்கு செய்யும் இச்சை அருளி

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading