திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-5-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும்ஒரு நூற்றுவர் மங்கஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறியஓர் சாரதி யாய்ச்சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்தநல் வார்த்தை அறிந்துமோ.

பொ – ரை : ‘தாய பாகத்தைச் செறுத்துக் கைக்கொண்ட துரியோதனாதியர்கள் அழியும்படியாக, ஒப்பற்ற பாண்டவர்களுக்காகத் தேசம் எல்லாம் அறியும்படி ஒப்பற்ற சாரதியாய்ச் சென்று, சேனையை அழித்துத் தன்னுடையச்சோதிக்கு எழுந்தருளின நல்வார்த்தையை அறிந்தும், அவனுடைய ஆச்சரியமான செயல்களை அறிகின்றவர்கள் மாயவனுக்கு அடிமை ஆவரே ஒழிய வேறு ஒருவர்க்கு அடிமை ஆவரோ? ஆகார்,’ என்றபடி.

வி – கு :
 ‘மங்கச் சாரதியாய்ச் சென்று நாசஞ்செய்திட்டு நடந்த நல்வார்த்தை’ என்க. மாயம் – தன்னை அடைந்தவர்கட்குச் சுலபனாய் இருக்கும் ஆச்சரியம்.

ஈடு : ஒன்பதாம் பாட்டு. 3தன்னை அடைந்த பிரஹ்லாதனுக்காக நரசிங்கமான அதிலும் அதிக குணமான சாரதியாய் நின்ற செயலை அருளிச்செய்கிறார்.

மாயம் அறிபவர் – 1அவனுடைய செயல்கள் முழுதும் தன்னை அடைந்தவர்களின்பொருட்டாய் ஆச்சரியமாய் இருக்கும் என்று அறியுமவர்கள். மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ-அடியவர்கட்குப் பரதந்திரப்பட்டவனுக்கு அன்றி ஆள் ஆவரோ? தாயம் செறும் ஒரு தூற்றுவர் மங்க – தாயபாகம் சம்பந்தமாகச் செறுகிற துரியோதனாதியர்களான தீயோர் கூட்டம் மங்க. 2தாயம் கொண்டு நெருக்கிற்றுத் தம்மையோ? அநுகூலரான பாண்டவர்களை நெருக்கிற்றுத் தம்மை நெருக்கிற்றாய் இருக்கிறபடி. ஒரு நூற்றுவர், ஓர் ஐவர் – 3நெருக்குகிறவர்களும் நெருக்குண்கிறவர்கள் இருக்கிறபடி. ஓர் ஐவர்க்காய் – 4தீயோர் திரள் முழுதும் அங்கே திரண்டு ஒரு சாரதியை ஒழிய வேறு துணை இன்றிக்கே இருக்கிறவர்கள்.

5‘தன்வழியே ஒழுகாதவர்களை அழியச்செய்து, தன்னை ஒழிய அறியாதவர்களுக்காகத் தான் தாழ நின்று நோக்கினான். அன்றிக்கே, சம்பந்தம் இரண்டு தலைக்கும் ஒத்திருக்க, தாழ்ந்த தலை கண்டு நோக்கினானித்தனை அன்றோ?’ என்னுதல், 6‘கண்ணனுடைய திருவடிகள் அருச்சுனனுடைய மடியில் இருப்பதைப் பார்த்தேன்;

 ‘அர்ஜூநாங்க கதௌ பாதௌ கேஸவஸ்ய உபலக்ஷயே
அர்ஜூநஸ்ய து க்ருஷ்ணாயா: ஸூபாயா: ச அங்ககாவுபௌ’-என்பது, பாரதம், உத்யோக பர்.

அருச்சுனனுடைய கால்கள் கற்புக்கரசியாக திரௌபதியினுடைய மடியில் இருப்பதைப் பார்த்தேன்,’ என்கிறபடியே,1ஒருவர்க்கு ஒருவர் கால்மேல் கால் ஏறட்டு ஒருநாளாக இருந்த சமயத்திலே ‘சஞ்சயன் வாசலிலே வந்தான்’ என்று சொல்ல, ‘அவனைப் புகுர’ விடுங்கோள்; இவ்விருப்புக் காண உகப்பான் ஒருவன்; 2உகவாதார் நெஞ்சு உளுக்கச் சொல்ல வல்லான் ஒருவன்; ஆன   பின்னர் அவனை அழையுங்கோள்,’ என்றான். உகவாதார் கண் படல் ஆகாதாவறு போன்று, உகந்தார் கண்பட்டால் உள்ள நன்மையும்; இப்படி அன்றோ பாண்டவர்கள் விஷயத்தில் அவன் இருக்கும்படி?

தேசம் அறிய ஓர் சாரதியாய் – 3‘அருச்சுனன் ரதியாகவும் தான் சாரதியாகவும் எல்லா உலகத்திலுள்ளவர் கண்களுக்கு இலக்கானான்’ என்னும்படியே, ‘

‘பார்த்தம் ரதிநம் ஆத்மாநம்ச ஸாரதிம் ஸர்வலோக
ஸாக்ஷிகம் சகார’-
என்பது, கீதா பாஷ்யம்.

இன்னார் தூதன் என நின்றான்’ பெரிய திருமொழி, 2. 2 : 3.-என்கிறபடியே. 4உலகத்தில் சுவாதந்திரியமும் பாரதந்திரியமும் முறை மாறின இடத்திலும் இரஹஸ்யத்திலே அன்றோ அவை நடப்பன? கணவனும் மனைவியும் காலைப் பிடிப்பதும் இரஹஸ்யத்திலே அன்றோ? இப்படி இருக்கச்செய்தே அன்றோ உலகப் பிரசித்தமாம்படி தன்னைத் தாழவிட்டது? சென்று சேனையை நாசம் செய்திட்டு – 5‘இதுதானும் அருச்சுனன் முதலாயினோர் அம்புகளாலே அன்று’ என்றபடி. 1‘ஆயுதம் எடுக்க ஒண்ணாது’ என்று வேண்டிக்கொண்டபடியாலே, சாரதியாயிருந்து தேர்க்காலாலே உழக்கிப் போகட்டான். நடந்த நல்வார்த்தை அறிந்தும் – 2தன் மேலே அம்பு மழையாகப் பெய்கிற இத்தண்ணிய பூமியினின்றும் தன் வரவுக்கு எதிர்கொள்வார் இருந்த இடத்தே போய்ப் புக்கான் என்கிற பெரிய வார்த்தையை அறிந்தும். 3‘நீண்ட கண்களையுடைய கண்ணபிரான் பூமியினுடைய பாரத்தைப் போக்கி உலகத்தை எல்லாம் மோஹிக்கச்செய்து மேலான தம் இருப்பிடத்தை அடைந்தார்’ என்கிறபடியே, துரியோதனாதியர்கள் இல்லாத இடத்தே போய்ப் புகப்பெற்றது அன்றோ?
‘க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந:
மோஹயித்வா ஜகத் ஸர்வம் கத: ஸ்வம் ஸ்தாநமுத்தமம்’-
என்பது, பாரதம், மௌசல். பர்.
4
‘மேலே கூறிய செயல்கள் அடங்கலும் தன் சுவாதந்திரியம் கிடக்கச்செய்தே செய்தவை அன்றோ? 5தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதற்குத் திரு உகிராலும் உண்டே அங்கு; அவை போல அன்றே இங்கு? தன்னை அடைந்தவர்க்குப் பரதந்திரனாய்த் தன்னை அழிய மாறி, பாண்டவர்களுக்கு உடம்புக்கு ஈடு இடாதே எதிரிகள் அம்புக்கு இலக்கு ஆக்கின இந்நீர்மைக்குப் போருமோ. மேலே கூறிய குணங்கள்?’ என்கிறார்.

சாரத்திய விருத்தாந்தம் இழிகிறார்
ஆழ்வார் துறை இது தானே
ராமர் -ஆரம்பித்து
அலங்கரித்த சிகை சேதம் போல –
74 திரு ஆராதன பெருமாள் லஷ்மி நரசிம்ஹன் ராமானுஜர் கொடுத்து அருளி –
ஆனால் எனக்கு கண்ணன் -ஆழ்வார்
சாரதியாய் சென்று –
மாயம் அறிபவர் மாயவருக்கு ஆள் அன்றி ஆவரோ
உன் மாயம் முற்றும் மாயமே ‘
தாயம் -பந்தாடும் வஸ்து தாயாதி -தாயம் ஆள்பவர் பங்காளி
இருவருக்கும் போது –
தாயத்தை செருத்த நூற்றுவர்
தேசம் அறிய ஓர் சாரதியாக சென்று
சேனையை நாசம் செய்து –
நடந்த
நல வார்த்தை அறிந்தும் –
மாயம் -வியாபாரம் ஆஸ்ரித அர்த்தம் ஆச்சர்யமான செயல்கள்
ஆஸ்ரித பரதந்த்ரன்
தாயம் பிராப்தி யால் சேருகிற –
பங்காளி மேல் காழ்ப்பு உணர்ச்சி
பாண்டவரை நெருக்கியது ஆழ்வார் தம்மை நெருக்கியது போலே நினைக்க

ஒரு நூற்றுவர் மங்க
ஓர் ஐவர்
நெருக்குபவர்களும் நெருக்கு படுபவர் -இரண்டிலும் ஒப்பு இல்லை
பாக்யத்தை பாதகத்தை –
துர் வர்க்கம் அடங்க அங்கெ திரண்டு
வேறு ஒரு துணை இன்றிக்கே
தன் வழியே கேட்காதவர்கள் நேருக்க –தன்னிடம் ஒதுங்கிய தான் ஒழிய செல்லாதவர்களுக்கு உதவி
தாழ்ந்த தலை நோக்கி
குனிந்த தலைக்கு உதவி
சஞ்சயன் தூது -யுத்தம் ஆரம்பம் முன்பு –
கண்ணன் சத்தியபாமை அர்ஜுனன் தரௌபதி நால்வரும் சேர்ந்து சயனித்து இருக்க –
அர்ஜுனன் அங்கத்தில் கால் மேலே கால் போட்ட அன்யோன்யம்
இவ்விருப்பு காண உகப்பான் ஒருவன் சஞ்சயன்
உகவாதார் நெஞ்சு உலுக்க சொல்லுவான் ஒருவன்
எத்ர யோகேஸ்வர தத்ர ஸ்ரீ விஷயோ பூதி –
உகவாதார் கண் பட்டால் ஆகாதது போலே உகப்பார் கண் கொண்டு பார்ப்பதும் நல்லது
பஷபாதி பாண்டவர்களுக்கு
தேசம் அறிய ஓர் சாரதியாய்
பார்த்தம் ரதி ஆத்மாநாம் சாரதி சர்வ லோக சாஷி
இன்னார் தூதன் என நின்றான்
நாட்டில் ச்வாதத்ர்யம் அழிய மாறி பாரதந்த்ர்யம் ஏறிட்டு -பார்த்தா பார்யை –
ரகச்யத்தில் ஏகாந்தமாக -பிரயோகிப்பது
அவ்யவச்திதம் -ரகசியத்தில் -இ றே
ஆனால் இங்கே -ஜகத் பிரசித்தம் அறியும் படி தன்னை தாழ விட்டான் –
சாரதி –
தேரை குதிரை குளிப்பாட்டி –
கீழ்ப்பட்ட வேலை
முட்டி போட்டு உட்கார தோள் மேலே காலை வைத்து ஏற இறங்கி-
தேர் ஓட்டும் பொழுது -காலால் சமுக்யை காட்டி -முதுகு மேல் வைத்து
நிறுத்த இரண்டு காலாலும் மிதித்து
யுத்தத்தில் இப்படி தானே காட்ட முடியும்
சர்வ லோக சாஷிதம் தேசம் அறிய எம்பெருமானார் இது கொண்டு ஒருங்க விட்ட பாஷ்யம்
செத்த பாம்பை அடித்தாப் போலே
சாரத்தியம் பண்ணி தேர் காலாலே உழக்கி போகத்தான்
நடந்த – சேனை நாசம் செய்திட்டு பரம பதம் நடந்த
ஸ்ரீ ராமாயணம் -உபன்யாசம் -முடிக்கும் பொழுதும் -பட்டாபிஷேகம் வரை சுபம் வரை
யுத்தம் சொல்லி -கவசம் இன்றி மேனியில் தைக்கும் படி
தண்ணிய பூமியில் இருந்தும் நடந்த
வரவுக்கு எதிர் கொள்வார் உள்ள இடம்
இங்கே எதிரித்ட்
சூழ்ந்து அடியார் வேண்டும் தேசம்
சு ஸ்தானம் கத -நடந்த நல வார்த்தை
துர்யோதனாதிகள் இல்லாத இடம் –
விண் மிசை -தனது தாமமே புக –
பெருமாள் ஆஸ்தானம் புக எம்பார் ஆண்டான் கூத்தாட –
சு ஸ்தானம் சேர்ந்தாரே -சந்தோஷமாக தழுவி கொண்டார்களே நான் கண்டேன் ஜீயர் அருளிச் செய்வாரே
அறிந்தும் மாயவருக்கு ஆள் அன்றி ஆவரோ
கீழே ச்வாதந்த்ர்யம் கிடக்கச் செய்தேயும் செய்தது
இங்கு அப்படி இல்லையே
பாரதந்த்ர்யம் -இங்கே காட்டி
எட்டு பாட்டும் ஒரு தட்டு இது ஒரு தட்டு
நரசிம்கன் -திரு உகிராலும் உண்டு அங்கெ
இங்கே அதுவும் இல்லை ஆயுதம் எடேன்
ஆஸ்ரித பரதத்ரனாய் அழிய மாறி
கவசம் இடாதே எதிரிகள் அம்புக்கு இலக்காகி
பார்த்த சாரதி இன்னும் செவிக்கிரோமே
காலில் விரலே இருக்காதே பாணத்தால்
யுத்த நியதி சாரதி மேல் அம்பு விட கூடாதே
விசேஷ குணம் இது தானே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading