திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-5-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

 செல்ல உணர்ந்தவர் செல்வன்தன் சீர்அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந்தவத் தால்பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரியுரு வாய்ச்செய்த மாயம் அறிந்துமே.

    பொ – ரை : ‘எல்லை இல்லாத பெரிய தவத்தினாலே, தேவர்களுக்குப் பல வகையாக மிக்க துன்பங்களைச் செய்யும் இரணியனுடைய சரீரத்தைப் பெரிய நரசிங்கமாகிக் கிழித்த ஆச்சரியத்தை அறிந்தும், (ஐஸ்வரிய கைவல்யங்களிலே இழியாமல் பகவத் விஷயத்திலே இழிந்து, அது தன்னிலும் அவதரித்த மேல்எல்லை அளவும்) செல்லும்படி அனுபவித்தவர்கள், ‘திருமகள் கேள்வனுடைய பொருள் சேர் புகழை அன்றி மற்றையோருடைய பொருள் இல் புகழ்களைக் கற்பரோ? கல்லார்,’ என்றபடி.

வி – கு : மிறை – துன்பம்; மிறை அல்லல் – மிக்க துன்பம். அமரரை – வேற்றுமை மயக்கம். அரி – சிங்கம்.

ஈடு : எட்டாம் பாட்டு. 2வேறு தேவதையை வணங்கித் துதித்தவனை அங்கீகரித்த மஹாகுணத்தைக்காட்டிலும் மனிதவடிவம் சிங்கவடிவம் என்னும் இரண்டனையும் ஏறிட்டுக்கொண்டு தன்னை அடைந்தவனைப் பாதுகாத்த மஹாகுணத்தை அருளிச்செய்கிறார்.

செல்ல உணர்ந்தவர் – போலியான ஐஸ்வரியம் கைவல்யம் என்னும் இவற்றின் அளவிலே முடிவு பெற்று நில்லாமல், எல்லை நிலமான பகவத் புருஷார்த்தத்தளவும் செல்ல உணர்ந்தவர். என்றது, ‘அவனுடன் நித்தியமான இன்பத்தை வேண்டி இருக்குமவர்கள்’ என்றபடி. 1வாய்க்கரையான சரீரம் சரீர சம்பந்தப்பட்ட பொருள்கள் அன்றிக்கே, ஆத்துமாவினுடைய உண்மை ஞானம் முன்னாகப் பகவானை அடைதல் அளவும் செல்ல உணர்ந்தவர்கள். செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ – ஸ்ரீமானுடய கல்யாண குணங்களை ஒழியக் கற்பரோ? ‘இன்னம் சொல்லாய் சீமானை’ என்னக் கடவது அன்றோ? எல்லை இலாத பெருந்தவத்தால்-அளவு இல்லாத பெரிய தவத்தாலே. 2வரத்தைக் கொடுத்த தேவசாதிக்கும் குடியிருப்பு அரிதாம்படி அன்றோ பலித்தது? பல மிறை செய் அல்லல் அமரரைச் செய்யும் – தேவசாதி கிடந்த இடத்தில் கிடவாதபடி பல மிறுக்குகளைச் செய்து, துக்கத்தை உண்டாக்குகிற இரணியனுடைய சரீரத்தை. 3மிறுக்கின் காரியம் – துக்கம்.

மல்லல் அரி உருவாய்-மல்லல்-பெருமை. 4‘மஹாவிஷ்ணும்’ என்கிறபடியே,‘

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஹிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்’

இரணியன் குளம்படியாம்படியாகப் பெரிய வடிவைக் கொண்டு. அன்றிக்கே, மல்லல் என்று செல்வமாய், அதனால், இலட்சுமிநரசிம்மமாய்’ என்னலுமாம்;5‘நாராயணனே நரசிங்கன்’ அமரேஸ்வர்யான நீ சத்தி’ எனப்படுகின்றதே அன்றோ?

நாராயணோ ந்ருஹிம்ஹஸ்து ஸக்திஸ்த்வம் அமரேஸ்வரி’-இங்கு, ‘ஸக்தி’ என்றது, பிராட்டியை.

6அவளை ஒழிந்திருப்பது ஒரு போதும் இல்லை அன்றோ? செய்த மாயம் அறிந்துமே – 7சிறுக்கனுடைய சூளுறுவு செய்த அக்காலத்திலே தோற்றி, இரணியனுடைய உடலை இரு பிளவு ஆக்கின இவ்வாச்சரியமான செயலை அறிந்தும்.

ஒருவன் புருஷகாரமாகக் கொடுவர் அவனைக் காப்பாற்றியது ஒரு குணமோ, தமப்பன் பகையாக, முகம் ஒருவடிவம் திருமேனி ஒரு வடிவுமாகக் கொண்டு பாதுகாத்த குணத்துக்கு?’ என்கிறார். 2‘பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து’ பெரிய திருமொழி.
8. 9 : 7.-
என்கிறபடியே வந்து பாதுகாத்த குணம் அன்றோ?

புலி பூனை
நீ இவனைக் கொல்லில் நான் கொடுத்த வரம் வீண் ஆகுமே
கிருஷ்ண கிருஷ்ண மகா பாவோ ஜெகன்னாதா
எனது காலில் குனிவார் இல்லாமல் போவாரே
பல் காட்டுகையாலே விட்டான்
புருஷோதமனே உன்னை அறிந்தேன் –
கழுத்திலே கயிறு இட்ட பின்பு தான் இன்னவர் என்று அறிந்தேன் –
எலியை பிடிக்குமா பூனை -கொஞ்சம் விளையாடுமா
பெரிய எலி என்று நினைந்து விளையாடுமாம்
அம்பை விளையாட்டாக விட –
பின்பு தான் பூனை என்று அறிந்தானாம் –
ஜானே -உள்ள படி அறியாமல் -அம்பை விட்ட பொழுது –
கழுத்தில் கயிறு பிராணன் ஆபத்து பொழுது தான் இன்னவர் என்று அறிந்தேன்
ருத்ரன் வாக்கியம் –

குணங்கள் கூட்டி கொண்டு சொல்லி
கீழே மார்கண்டேயன் அனுக்ரகம் சொல்லி –
இதில் -நரத்வ சிம்கத்வம் இரண்டும் கொண்டு
தமப்பனே விரோதியாக வந்த பிரகலாதனை ரஷித்து-
செல்ல உணர்ந்தவர் -நன்றாக -செல்வம் தம் சீர் என்று
அரி உருவான செல்வன்
நாரசிம்ஹ வகுபு ஸ்ரீ மான் -அழகியான் தானே அரி உருவம் தானே
எல்லை இல்லாத தபசால் வரம் கொண்டு அமரரை அல்லல் செய்த ஹிரண்யன்
மிடுக்கை செல்வம் மல்லல் அரி –
ஆபாசமான ஐஸ்வர்யம் -மேல் எழுந்த வாறு விஷயமாக காட்டும்
ஐஸ்வர்யம் கைவல்யம் நிற்காமல் செல்ல உணர்ந்தவர்
வாய்க்கரை பிரகிருதி பிராக்ருதங்கள் இன்றி
பகவத் பிராப்தி அளவும் செல்ல -அப்படி செல்ல உணர்ந்தவர்
இழிந்து அவதரித்த மேல் எல்லை அளவும் சென்று –
களை பிடுங்கி -விரக்தி ஏற்படுத்தி மேலே கூட்டிப் போ
கைங்கர்யத்தில் களை வது தனக்கு எண்ணப் பண்ணுகி
அப்படி செல்ல உணர்ந்தவர்

கண்ணன் கதை -இன்னம் சொல்ல -கேட்கும் ஆனந்தம் இன்னம் சொல்லாய் ஸ்ரீ மானை பற்றி -போரும் தோன்றாதே செல்ல உணர்ந்தவர் செல்வன் சீர் வரம் கொடுத்த தேவ ஜாதிக்கும் குடி இருப்பு போகும் படி –எல்லை இல்லாத பெரும் தபஸ் பல செய் -மிருக்குகளை நெருக்கி ஹிம்சை செய்து அல்லல் -துக்கம் பண்ணும் வர பல பூண் கட்டிய சரீரம் -மல்லல் -பெருமை மிடுக்கு மகா விஷ்ணும் -நிருசிம்ஹா மந்த்ரம் -உகரம் வீரம் மகா விஷ்ணும் -ஜலந்தம் –மிருத்யும் மிருதயம் -ஹிரண்யன் குளப்படியாக பெரிய வடிவைக் கொண்டு -மகா விஷ்ணு மல்லல் சம்பத் லஷ்மி நரசிம்ஹன் என்றுமாம் -24000 படி -திருவோடு புணர்ந்த சிம்கம் ஒரு தமிழன் சொல்லி வைத்தான் திரு சம்பத் லஷ்மி மிடுக்கு –

நாராயணன் நரசிம்ஹன் சக்தியாய் நீ அன்றோ இருந்தாய் -பிராட்டி ஸ்தோத்ரம் –
அவனை ஒழிந்து இருப்பது ஒரு போது இல்லையே
செய்த மாயம் -சிறுக்கன்-
எங்கும் உளன் கண்ணன் பிரதிஞ்ஞா சமகாலத்தில் தோன்றி
அளந்திட்ட தூணை -அவன் தட்ட ஆங்கே
வேறு தூணில் வராமல்
தான் தட்டாமல் கம்பத்தில் பாய்ச்சி
ஆங்கே -வளர்ந்திட்டு –
தோன்றிய பின்பு வளர்ந்திட்டு
ஆச்சர்யம்
சர்வ வியாபி -நடுங்கி -ஆபத்து எம்பெருமானுக்காம்
எங்கே தட்டுவானோ –
இரு பிளவாக்கிய ஆச்சர்ய செஷ்டிதன்கள்
புருஷகாரமாக கொண்டு வந்த பொழுது உபகரித்து குணமோ
இரண்டு ரூபம் கொண்டு -தமப்பன் பகையாக
மங்களா சாசன பரர் என்பதால்
அந்தியம் போது அசுரர் பலம் அதிகம் உண்டான காலம் வந்து
அரி உருவாகி-சேர்த்து செய்யாத கார்யம் முதல் பரிஷை அரக்கன் முன்பா செ4ய்ய வேண்டும்
அரியை அழித்தவனை -அவனை சேர்ந்தவர்கள் பழி வாங்க துடிப்பார்களே

இப்படி ரஷித்த குணம் ஏற்றம் தானே கீழே விட
பெற்றார் பெற்று ஒழிந்தார்-வளர்த்தது இவனே
வளர்த்த தாய் -கிரிஷ்ணம்மாள் சுவாமிக்கு போலே
ருசி உண்டாக்கி -காட்டிக் கொடுத்து –
ஹிரண்யன் விட -இவன் தானே பின்னும் நின்று உற்றானாய் அடியேனை வளர்த்து -திரு மங்கை
வளர்த்த இதத் தாய் எம்பெருமானார் -ஆழ்வார் விட பெருமை –
ஹிதம் நெஞ்சில் கொண்டு வளர்த்து
உற்றானாய் வளர்த்து ரஷித்த குணம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading