குன்றம் எடுத்த பிரான்அடி யாரொடும்
ஒன்றி நின்றசட கோபன் உரைசெயல்
நன்றி புனைந்தஓர் ஆயிரத் துள்இவை
வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே.
பொ-ரை : ‘மலையை எடுத்த உபகாரகனான கண்ணபிரானுடைய அடியார்களோடும் பொருந்தி நின்ற ஸ்ரீசடகோபராலே அருளிச்செய்யப்பட்ட நன்மை பொருந்தி ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இவை பத்தும் பொருந்திக் கற்பவர்கட்கு வெற்றியைக் கொடுக்கும்,’ என்றபடி.
வி-கு : ‘இவை பத்தும் மேவிக் கற்பார்க்கு வென்றி தரும்’ என்க.
ஈடு : முடிவில், 2‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்கட்கு இது தானே வெற்றியைத் தரும்,’ என்கிறார்.
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல் – 3கோவர்த்தனத்தை எடுத்துத் தரித்த நீர்மையிலும் அப்போதை அழகிலும் ஈடுபட்டு இருக்குமவர்களோடே கூடிநின்று தாமும் பிரீதராய், பிரீதிக்குப் போக்கு வீடாகச் சொன்ன பாசுரமாயிற்று. நன்றி புனைந்து ஓர் ஆயிரம் – 1சர்வேஸ்வரனுடைய பரத்துவ சௌலப்பியங்களை வகையிட்டுத் தொடுத்த ஆயிரம் 2நன்மையாவது, சம்சாரி சேதனுக்கு, இவனே சர்வஸ்மாத்பரன் என்றும், சர்வ சுலபன் என்றும், சர்வ சமாஸ்ரயணீயன் என்றும் சொல்லுகை அன்றோ? 3அவையே அன்றோ முதல் திருவாய்மொழி தொடங்கி அருளிச்செய்தது? அன்றிக்கே, 4‘எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களைத் தொடுத்துச் சொன்ன இப்பத்தும்’ என்னுதல். மேவிக் கற்பார்க்கு வென்றி தரும் – ஆசையோடு கற்பார் யாவர் சிலர், அவர்களுக்கு வெற்றியைப் பண்ணிக் கொடுக்கும். 5செல்வத்தை விரும்புகிறவனுக்குச் செல்வத்திற்குத் தடையாகவுள்ளனவற்றை வென்று கொடுக்கும்; கேவலனுக்கு விரோதியைப் போக்கிக் கொடுக்கும்; பகவானைச் சரணம் அடைந்தவர்களில் உபாசகனுக்கு
ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்; பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.
‘இது தான் ‘குலந்தரும்’ என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும்
கொடுக்கும்’; ‘ஐஸ்வர்ய கைவல்ய பகவல்லாபங்களை ஆசைப்பட்டவர்களுக்கு
அவற்றைக்கொடுக்கும்’; ‘கர்ம ஞான பத்திகளிலே இழிந்தவர்களுக்கு
விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக்கட்டிக் கொடுக்கும்’; ‘பிரபத்தியிலே
இழிந்தவர்களுக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்துக் காலக்ஷேபத்துக்கும்
போகத்துக்கும் ஹேதுவாயிருக்கும்’ என்ற வாக்கியங்கள் இங்கு அநுசந்தேயங்கள்.
(முமுக்ஷூப்படி. திருமந்திரம். சூ. 18-21.)
திருவாய்மொழி நூற்றந்தாதி
ஆழிவண்ணன் தன்விசய மானவைமுற் றுங்காட்டி
வாழிதனால் என்று மகிழ்ந்துநிற்க-ஊழிலவை
தன்னைஇன்று போற்கண்டு தானுரைத்த மாறன்சொல்
பன்னுவாரே நல்லதுகற் பார்.
இது தானே விஜயத்தை கொடுக்கும் நிகமத்தில் சொல்லி
அருளி
மேவிக் கற்பாருக்கு வெற்றி தரும்
குன்றம் எடுத்த பிரான் அடியவர் உடன்
ஆழ்வாரும் ஒதுங்கி
அழகில் ஈடுபட்டு தாமும் ப்ரீதராய்
கிருஷ்ணன் திருவடிகளையே
உபகார சீலத்தில் ஒதுங்கிய ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடியில் ஒதுங்கி
மழையை எடுத்த அன்று மலைக்கு கீழே ஒதுங்கி
சம்சாரம் துக்க வர்ஷணி -இருட்டில் துக்க மழை அஞ்சி கிருஷ்ணன் திருவடிகளில்
அடியார் உடன் ஒன்றி நின்ற ஆழ்வார்
நன்றி புனைந்த ஓர் ஆயிரம்
பூ தொடுப்பது [போலே
பரத்வம் சௌலப்யம்
இவனே சர்வ ஸ்மாத் பரன் நன்மை
அவனே உபகாரகன் பந்து
பஜநீயன் -நன்மையை புனைந்து தொடுத்த ஆயிரம்
எம்பெருமான் விஜயம் சொல்லி
மேவி ஆசை உடன் கற்றால்
விஜயத்தை பண்ணி கொடுக்கும்
ஐஸ்வர்யா விரோதி ‘கைவல்யம் விரோதி நிவ்ருத்தி பிரகிருதி சம்பந்தம் போக்கி கொடுக்கும்
பகவத் சரனார்தி உபாசகனுக்கு இந்த்ரிய ஜெயம்
பிரபன்னனுக்கு கைங்கர்ய விரோதி போக்கி கொடுக்கும்
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் கைங்கர்ய ஸ்ரீ வர்த்திக்க
சாரம் மா முனிகள்
ஆழி வண்ணன் விஜயம் முற்றும் காட்டி
ஈட்டின் அவதாரிகை தான் உரைத்த மாறன் சொல்
நல்லது கற்பார் பண்ணுவாரே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply