மேய்நிரை கீழ்புக மாபுர ளச்சுனை
வாய்நிறை நீர்பிளி றிச்சொரி யஇன
ஆநிரை பாடிஅங் கேஒடுங்க அப்பன்
தீ்மழை காத்துக்குன் றம்எடுத் தானே.
பொ-ரை : மேய்க்கின்ற பசுக்கூட்டங்கள் கீழே புகும்படியாகவும், மேலேயுள்ள விலங்குகள் புரண்டு விழும்படியாகவும், சுனைகளின் வாயளவும் நிறைந்திருக்கின்ற தண்ணீரானது ஒலித்துக்கொண்டு சொரியும்படியாக, பசுத்திரளும் ஆயர்பாடியும் அங்கே ஒடுங்கும்படியாகவும், என்னப்பன் கொடிய மழையினின்றும் பசுக்களையும் ஆயர்களையும் பாதுகாப்பதற்காகக் கோவர்த்தனம் என்னும் மலையைக் குடையாக எடுத்தான்.
வி-கு : ‘புக, புரள, சொரிய, ஒடுங்க, குன்றம் எடுத்தான்’ என்க. பாடி-ஆயர் பாடி.
ஈடு : பத்தாம் பாட்டு. 1கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்துப் பாதுகாத்த செயலை அருளிச்செய்கிறார்.
மேய் நிரை கீழ் புக – 2மேய்கிற பசுக்கள் புல்லும் உமிழாதே அசையிட்டுக்கொண்டு கீழே புகுர. மா புரள – மலையை எடுத்து மறிக்கையலே அங்கு வாழ்கின்ற மிருகங்கள் எல்லாம் புரண்டு விழ. சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய-சுனையிடத்து நிறைந்து நிற்கிற நீரானது, நிறைகுடத்தைக் கவிழப் பிடித்தாற்போலே ஒலித்துக்கொண்டு சொரிய. 3ஒரு மழை காக்கப் புக்கு அங்கே பல மழையை உண்டாக்கினபடி. 4இன ஆநிரை பாடி அங்கே ஒடுங்க – பசுத்திரளும் திருவாய்ப்படியும் அங்கே ஒடுங்கவும். அப்பன்-ஆபத்திற்குத் துணைவனான உபகாரகன். தீ மழை காத்து – 5கேட்டினை விளைக்க வந்த மழையாகையாலே ‘தீ மழை’ என்கிறார். 6ஆயர்களும் பசுக்களும் அன்றிக்கே அன்று தாமே அன்றோ நோவுபட்டார்? குன்றம் எடுத்தானே – 7‘மலையை எடுத்துக் காத்த
மஹோபகாரகன்’ என்கிறார். 1‘பசியினால் உண்டான கோபம் ஆறுந்தனையும் மழை பெய்து போவானுக்கு’ என்று ஏழுநாள் அன்றோ மலையைத் தரித்துக்கொடு நின்று நோக்கிற்று? இராவணன் முதலானோர்கள் ஆனால் அன்றோ அழியச்செய்யலாவது? அநுகூலனால் வந்த கேடு ஆகையாலே செய்யலாவது இத்தனையே அன்றோ? ‘இதனால் என் சொல்லியவாறோ?’ எனின், அடியவன் தப்பினாலும் தான் பொறுத்துக் காப்பாற்றுவான் என்பதனைத் தெரிவித்தபடி.
கோவர்த்தன உத்தொரணம்
கிருஷ்ண அவதாரம்
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே
மேய நிரை கீழ் புக
ஆநிரை அங்கெ ஒடுங்க
மேய்க்கின்ற பசுக்கள் புல்லும் உமிழாதே -சாவதானமாக
மேய நிரை -உமிழாமல் ந்க்தானமாக அசை இட்டு வந்ததாம்
மா புரள -மிருகங்கள் புரண்டு
மலையை எடுத்து மரிக்கையாலே
தலை கீழே -ம்=கவிழ்த்து பிடித்த மலை
காம்பாக கொடுத்து கவித்த மலை
சுனை நீர் பிளிறி சொரிய
நிரை குடம் கவிழ்த்தால் சப்திப்பது போலே
ஒரு மழையை காக்கப் புக்கு அநேகம் மலை உண்டாக்கி
அது தீ மலை இது ன்பள்ள மலை
இன ஆநிரை பாடி
பசுக்களும் ஆய்ப் பாடியும் ஒதுங்கும் படி
தீ -தாமே நோவு பட்டார்
தாம் தீ மலையில் வருந்துவது போலே
குன்றம் எடுத்த அப்பன் –
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
பசியால் வர்ஷித்தான்
ஏழு நாள் தரித்து
ஆரும் தனையும் -நின்று நோக்கினான்
ராவணாதிகள் அழிய செய்யலாம்
இந்த்ரன் ஆஸ்ரிதன் என்பதால் -இடையர் சீராட்டுவது கண்டு பழைய குழந்தை
ஆஸ்ரிதர் தப்பினாலும் பொறுமையாக நின்று ரஷிப்பான்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply