சேர்வன்சென்று என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர் காள்!என்னைத் தேற்றவேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்குஇங்குஇல்லை;
கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம்உண்ட
கண்ண பிரான்வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண்கழ னிப்பழனத்
தென் திருப்பேரெயில் மாநகரே.
பொ – ரை : ‘என்னுடைய தோழிமீர்காள்! அன்னையர்காள்! என்னைத் தேற்றவேண்டா; இந்த நிலைக்கும் நீங்கள் சொல்லுகிற வார்த்தைக்கும் என்ன சம்பந்தம் உண்டு? நெஞ்சம் நிறையும் எனக்கு இங்கு இல்லை; மேகம் போன்ற நிறத்தையுடையவனும் கரிய கடல் சூழ்ந்த உலகத்தைப் புசித்த கண்ணபிரானுமான எம்பெருமான் வந்து எழுந்தருளியிருக்கின்ற அழகிய வளப்பம் பொருந்திய பார்ப்பதற்கு இனிய வயல்கள் சூழ்ந்த மருதநிலங்களையுடைய தென்திருப்பேரெயில் என்னும் மாநகரைச் சென்று சேர்வன்,’ என்கிறாள்.
வி-கு : ‘வீற்றிருந்த திருப்பேரெயில்’ என்க. ‘நீர்கள்’ என்பதில் ‘கள்’ அசை நிலை.
ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘நீங்கள் இனி என்னைத் தேற்றிப் பிரயோஜனம் இல்லை; தென் திருப்பேரெயிலைப் போய்ப் புகக்கடவேன்,’ என்கிறாள்.
சேர்வன் சென்று – 2‘உன் ஆற்றாமையாலே சில சொல்லுகிறயாகில் இது கடைப்படவற்றோ?’ என்ன, ‘அவசியம் அங்கே புக்கு அல்லது விடேன்!’ என்கிறாள். என்னுடைத் தோழிமீர்காள் அன்னையர்காள் – 3எனக்காக இருப்பாரும், என்னைத் தங்களுக்காக நினைத்திருப்பாரும் ஒன்றும் சொல்ல வேண்டா. 4தோழிமாரோடு தாய்மாரோடு வாசி இல்லைகாணும் இவளைத் தேற்றப் போகாமைக்கு. அறிவில்லாத மாக்களோ ஞானிகளை உபதேசத்தால் மீட்கப் பார்ப்பார்? 5விஷயம் காரணமாக வருகின்றதனைச் சாதனத்தில் செலவு எழுதுகின்றவர்களோ எனக்கு வார்த்தை சொல்லுவார்?
விஷயம் காரணமாக’ என்னும் இவ்விடதில் 5-ஆம் பத்து 5-ஆம் திருவாய்மொழி, வியாக்கியானம் பார்க்க.
இவள்,தன்னை மறந்து, அவனையே பார்த்துப் பேசுகிறாள்; அவர்கள் அவனை மறந்து, தங்கள் தங்களையே பார்த்து மீட்கத் தேடுகிறார்கள். நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு – 1கலங்கினாரோ தெளிந்தாரைத் தேற்றுவார்? நீங்கள் நிற்கிற நிலை எது? என் நிலை எது? போகையிலே துணிந்திருக்கிற என்னை, ‘புறப்படுகை பழி’ என்று இருக்கின்ற நீங்கள் சொல்லுவது என்? இதற்கு – எனக்கு ஓடுகிற நிலைக்கு.
‘ஆனாலும், நெஞ்சும் அடக்கமுமுடையார்க்கு இது வார்த்தையோ? நாங்கள் சொன்னபடி செய்து எங்கள் வழியே ஒழுக வேண்டாவோ?’ என்ன, ‘நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை; 2அது வேணுமாகில் அங்கே போய்ச் சொல்லுங்கோள். 3மனமும் அடக்கமும் அவன் பக்கலின், நிறைவு – அடக்கம். நெஞ்சு – அது இட்டுவைக்கும் கலம். நெஞ்சும் நிறைவும் எனக்கு ஆம்படியோ அவன் படி இருக்கிறது? கார் வண்ணன் – 4தாய்மார் தோழிமாரானவர்கள் வார்த்தை கேளாதபடியாக வடிவைப் படைத்தவன். ‘வெறுவடிவழகேயோ உள்ளது?’ என்னில், கார்க்கடல் ஞாலம் உண்ட –5‘தளர்ந்தார் தாவளம், ஆபத்து வந்தால் காப்பாற்றிவிடும் அத்தனையோ?’ என்னில், கண்ணபிரான் – தன்னைப் பிறர்க்கு ஆக்கி வைக்கும் உபகாரகன். வந்து வீற்றிருந்த-தன் செல்வம் எல்லாம் தோற்றும்படி இருந்த. ஏர்வளம் ஒண் கழனிப் பழனம் தென்திருப்பேரெயில் மாநகரே – ஏரினுடைய நிறைவினையுடையனவாய், அழகியனவான கழனிகளையும் நீர்நிலங்களையுமுடைய திருப்பேரெயிலாகிற மாநகரிலே சென்று சேர்வேன். 6உங்கள் தடைக்கு மீளுதல், அவ்வழியில் நிற்றல் செய்யேன். என்னைத் தேற்ற வேண்டா.’ வளம் – மிகுதி.
இனி தேற்றி பிரயோஜனம் இல்லை
அங்கேயே சென்று சேர்வேன் என்கிறாள்
நெஞ்சும் நிறைவும் இங்கு இல்லையே
கார் வண்ணன் -கண்ண பிரான் வீற்று இருந்த தென் திருப்பேரியில் மா நகரே சேர்வேன் –
சேர்வேன் சென்று –
ஆற்றாமையால் சொல்லுகிறாய் கடை பிடிக்கும் கார்யம் இல்லை என்கிறீர்
தோழி எனக்காக -அன்னை -தனகளுக்காக நினைத்து
அஞ்ர் விவசிதர் மீட்க முடியுமா
விஷயாதீனமாக வந்த துடிப்பு -சாதனம் இல்லை -இது
பிரயத்தினம் பண்ண கூடாது உபாய விசுவாசம்
புறம்பு என்று வைய
இதுவே அறியாமல் என்னை உபதேசிக்க
முட்டாள் அறிந்தவருக்கு உபதேசிப்பதா
இவள் தன்னை மறந்து அவனையே பார்த்து பேச
அவர்கள் அவனை மறந்து தன்னைப் பார்க்க -சாதனம் ஆகுமே பயந்து
அனுஷ்டானத்தில் தென்கலை இத்தைக் கொண்டு
வை லஷண்யம் இப்படி இவளை பண்ண வைக்க
கலங்கினார் தெளிந்தாரி தேற்றுவதா
போக துணிந்து இருக்கும் நான்
போவதே பழி என்கிறீர்கள்
நெஞ்சும் அடக்கமும் உள்ளார் செய்வதா இது
அவை உள்ள இடம் சென்று சொல்ல வேண்டுமே
நிறை அடக்கம்
நெஞ்சு அத்தை இட்டு வைக்கும் களம்
பாத்ரம் உடன் சேர்ந்து பிரசாதம் ச்வீகரித்தான்
அவன் படி -தன்மை திருமேனி கார் வண்ணன்
கார்கடல் ஞாலம் உண்ட கார் வண்ணன் -பற்றுக்கோடு ஆக உழவன்
திருக் கல்யாண குணத்தில் ஈடுபட்டு
கண்ணபிரான் உபகாரகன் சௌலப்யம்
அழகு குணம் -அனுஷ்டானத்தில் காட்டிய கண்ணபிரான் ‘வீற்று இருந்த
களனி நீர் நிலை உள்ள -தேசம்
தேற்ற வேண்டா
அழகு மிக்க தேசம் -ஏர் -அழகு
சென்று சேர்ந்தே விடுவேன்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply