அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்வாழ்மின் என்றென்
றருள்கொடுக்கும்
படிக்கே ழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவைபத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.
பொ-ரை :- அடியீர்! திருவடிகளிலே பொருந்தி புகுந்து வாழுங்கோள் என்று திருவருள் செய்கின்ற, இப்படிக்கு ஒப்பு இல்லாத திருவேங்கடமுடையானை, வயல்கள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் முடிப்பதாக அருளிச்செய்த, ஆயிரத்திலே திருவேங்கடத்தைப் பற்றிய இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்றவர்களைப் பற்றியவர்கள் அந்தமில் பேரின்பத் தழிவில் விட்டிலே சென்று பேரின்பத்தை அடைவார்கள்.
வி-கு :- அடியீர் புகுந்து அமர்ந்து வாழ்மின் என்று அருள் கொடுக்கும் பெருமான் என்க. முடிப்பான்: வினையெச்சம்.
ஈடு :- முடிவில், 2இத் திருவாய்மொழி கற்றார், பரமபதத்திலே சென்று அடிமையிலே முடிசூடினவராய் அடிமை செய்யப் பெறுவர்கள் என்கிறார்.
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று-1உங்கள் உத்தேசியம் கண்டீர்கோளே, இத் திருவடிகளைப் பற்றி ஆழ்ந்து கிருதக்கிருத்தியராய்ப் போங்கோள் என்று, அருள் கொடுக்கும் 2படிக் கேழ் இல்லாப் பெருமானை – அடியார்கள் விஷயத்தில் அருள்கொடுக்கும் சுபாவத்துக்கு ஒப்பு இல்லாத சர்வேசுவரனை. 3“மாஸுச: – துக்கப்படாதே” என்ற கிருஷ்ணனும் ஒவ்வான் இவன் படிக்கு. பழனம் குருகூர்ச் சடகோபன் – நல்ல நீர் நிலங்களையுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார். முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும் – “பல நீ காட்டிப் படுப்பாயோ” என்கிற சம்சார விரோதத்தை முடிக்கையிலே திருவுள்ளத்தாலே உத்சாஹம்கொண்டு அருளிச்செய்த ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தும் திருமலைக்குச் சொல்லிற்றின. 4“சுவாமி! இலக்ஷம் பசுவின் விலையை வாங்கிக் கொண்டு சபளை என்கிற காமதேநுவை எனக்குக் கொடுக்க வேண்டும்; இந்தக் காமதேநு பசுக்களில் இரத்தினம் என்பது பிரசித்தம்;கவாம் ஸத ஸஹஸ்ரேண தீயதாம் சபளா மம ரத்நம் ஹி பகவந் ஏதத் ரத்நஹாரீ ச பார்த்திவ:”- என்பது, ஸ்ரீராமா. பால. 53. 9.
தர்மசாத்திரப்படி இரத்தினத்தைக் கொள்ளுகிறவன் அரசன்” என்கிறபடியே. பிடித்தார் பிடித்தார் – பிடித்தவர்களைப் பிடித்தவர்கள்; பற்றினாரைப் பற்றினார். வீற்றிருந்து – 1“அந்த முக்தன் சுவதந்திரனாகிறான், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாக ஆகிறான்” என்கிறபடியே, “ஸஸ்வராட்பவதி” என்பது, சாந். 7 : 25.-இருவர்க்கும் ஒக்குமன்றோ வீற்றிக்கை. 2தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் சேஷமாகவுடையனாகையாலே வந்த ஆனந்தத்தையுடையனா யிருப்பான் அவன்; “இவனேயன்றோ ஆனந்திப்பிக்கப்படுகிறான்” என்கிறபடியே, அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தத்தையடைகின்றவனாக இருப்பான் இவன். பெரிய வானுள் நிலாவுவரே – 3“மஹாகம்” என்றும், “பரமாகாசம்” என்றும் சொல்லப்படுகிற பரமபதத்திலே வாழப்பெறுவர்கள். 4இந்திரன் முதலானோர் வாழும் இவ் வருகில் வெளியில் அன்று, 5மேல் வரும் அநுபவம் ஒழியப் பேற்றுக்குச் சரணம்புக வேண்டாத தேசத்திலே போய்ப் புகப்பெறுவர். 6இவர் செய்த சரணாகதியே நமக்கும் எல்லாம்; தனித்து வேண்டா; இத் திருப்பாசுரத்தைச் சொல்லிப் பலத்திலே சேர்தல் அத்தனை. 7நற்கன்றுக்கு இரங்கினது தோல் கன்றுக்கு இரங்குமாறு போலே, இவரை நினைத்து இப்பத்துங் கற்றார்
பக்கலிலும் ஈசுவரன் பிரசந்நனாம். 1ஸ்ரீவிபிஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன்செய்த சரணாகதியே அமைந்ததே அன்றோ. 2‘இவன் உடையவன்’ என்று எதிர்த்தலைக்குத் தோற்ற இருக்குமத்தனையே வேண்டுவது.
திருவாய்மொழி நூற்றந்தாதி
உலகுய்ய மால்நின்ற உயர்வேங் கடத்தே
அலர்மகளை முன்னிட் டவன்தன் – மலரடியே
வன்சரணாய்ச் சேர்ந்த மகிழ்மாறன் தாளிணையே
உன்சரணாய் நெஞ்சமே உள்.
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து -அடியீர் வாழ்மின் -என்று அருள் செய்யும்
மாம் ஏகம் சரணம் விரஜ
கிருஷ்ணன் சொன்னதை வேங்கடவன் காட்டுகிறான்
அவன் பாட இவன் ஆடிக் காட்டுகிறான்
வேங்கட கிருஷ்ணன்
திருவடி பற்றினால் சம்சார சாகரம் முலம் கால் கீழ் வற்றிப் போகும் –
ஒப்பில்லாத படிக் கேள் இல்லா பெருமான்
முடிப்பான் சொன்ன சம்சாரம் அடியுடன் முடிக்க
பிடித்தார் பிடித்தார் பிடித்தார் -பத்தையும் பிடித்தவரை பிடித்து
உஜ்ஜீவக்கலாம் –
ஒப்பில்லை -அனைவரும் வந்து
மாசுச கிரிஷ்ணனும் ஒப்பு இல்லை
சோகப் படாதே என்றான்அவன் வாழ்மின் என்றான் இவன்
முடிப்பான் -சம்சாரம்
தாச தாச கணம் -அடி நிலையில் மா முனிகள்
பெரிய வானுள் –
வீற்று இருக்கை-அவனைப் போலே
இவனுக்கும் ஒப்பு இல்லையே
எம்பெருமான் -ஆனந்திப்பிக்க -இவனும் ஆனந்திக்கிறான்
பெரிய ஆகாசம்
இவர் பண்ணின பிரபத்தியே நமக்கும்
தனியாக செய்ய வேண்டாம்
இப்பாசுரம் சொல்லி
நல்ல கன்றுக்கு இரங்கிய பசி தோல் கன்றுக்கும் இரங்குமா போலே –
ஆழ்வார் பாசுரம் தோல் பார்த்து நமக்கும் அனுக்ரகம் செய்வான் –
விபீஷணன் ஆழ்வான் கூட வந்த நால்வரும் உஜ்ஜீவித்தாப் போலே-
இவன் நம்முடையவன் என்று அபிமானமே போதுமே –
பிரத்யஷமாக ஜீயர் பின்னே சென்று நாமும் கோஷ்டியில் அனுபவிப்பது போலே
ஆயிரம் பாட்டுக்கும் விஷய பூதன் திருவேங்கடமுடையான்
த்வயராதம் தீர்க்க சரணாகதி சார சங்கரகம்
பத்து பத்தும் த்வயம் தெரிவிக்கும்
இரண்டு திருவாய் மொழி ஒழிவில் காலம் உலகம் உண்ட பெரு வாயான்
முதல் பாசுரம் திரு விருத்தம் -தண் தாமரை வேங்கடமுடையான்
திருவாசிரியம் எம்பெருமானை மலையை
பெரிய திருவந்தாதி கல்லும் –
பத்து பத்திலும் திருவேகடமுடையான் திருவாய்மொழி
திருவேம்கடம் முதலிலும் இறுதியிலும் –
\ஆசார்யர் திருவன்ரங்கம்
ஆழ்வார் திருவேம்கடம்
சொன்னால் விரோதம் ஆகிலும் சொல்லுவான் -என்னாவின் இன்கவி நான் ஒருவருக்கும் கொடுக்கிலேன்
தென்னா தென்னா -திருவேம்கடமுடையான்-
அனந்தாழ்வான் திரு முன்பே ஒழிவில் காலம் எல்லாம் –
உலகம் உண்ட பெரு வாயன் -பெரிய ஜீயர் சுவாமி -சடகோப ராமானுஜ சுவாமிகள் –
சுவாமி எழுந்து அருளும் இடம் தான் பெரிய மேடம்
அறியா காலத்தில் அடிமைக் கண் அறிவித்து –
நம் பையல் என்று –
இரண்டு சுவாமிகளும் ஓன்று பட்டு
ராம லஷ்மணர் போலே –
கோஷ்டிகள் பல்லாண்டு பாட வேண்டும் -இருவருக்கும்-
பஞ்ச பேரர் இங்கே எழுந்து அருளி –
மணவாள மா முனிகள் தாமே மூன்று ஆண்டுகள் எழுந்து அருளி -இருந்து கைங்கர்யம் செய்து அருளினாராம் –
உடையவர் மா முனிகள் இருவரும் ஸ்தானத்தில் எழுந்து அருளி -இருந்த மடம் –
அனந்தாழ்வான் சிஷ்யர் முதல் இருந்து –
விகிருதி வருஷம் வெள்ளிக் கிழமை 1119 வருஷம் –
ஆராத்ய தேவதை பஞ்ச பேரர் –
நாராயண சேவை- ப்ரஹ்மோச்தவம்-மூன்று ஆயிரமும் சேவை
திருவாய்மொழி -சேவை இங்கே இருந்து
அனந்தாழ்வான் தோட்டம் 2004 -ராமானுஜ புஷ்கரணி –
தேவஸ்தானம் கைங்கர்யம்
செம் பொன் கழல் அடி செல்வா –
ஆசார்ய புருஷர் ஷ்ரேயஸ் காரணம் –
ஸ்ரீ ரெங்காசார்யர் சுவாமிகள்
அனந்தான்பிள்ளை கிரிஷ்ணாசார்யர் –
திருகோவலூர் சுவாமிகள் மூவருடன் சேர்ந்து
பகவத் விஷயம் காலஷேபம் செய்யும் பாக்கியம்-
கைங்கர்ய பரர்கள் -அனைவரும் -பரிந்து –
மா முனிகள் சாரம் அருளி
உயர் வேங்கடத்தை
அருள் மாறன் தாள் இணையை நெஞ்சே உள்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply