ஸ்ரீ பெரிய திருமொழி-2-8-1-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

கீழே தாய் பாசுரம்
இதில் மகள் பாசுரம்
கீழே இவள் பட்ட பாடு கண்ட-ஆஸ்ரிதர்க்காக தான் முன்னமே இங்கே சந்நிதி பண்ணி
யுக்தி பிரயுக்திகளால் இங்கே அருளிச் செய்கிறார்

பிரவேசம் –
ஹ்ரீரேஷா ஹி மம துலா -என்னவும் மாட்டாதே
நிற்கிற இடம் இறே இவ்விடம்-
(வெட்கப்பட வேண்டாமல் முன்னமே ஆஸ்ரிதற்காக காத்து இருக்கும் திவ்ய தேசம் அன்றோ இது )
அவன் அப்படி இரானாகில் ஆஸ்ரயணீயன் ஆக மாட்டான் –
(ஆபத்துகளுக்கு தோற்றி உதவினால் போதாதோ என்னில் -சர்வ ஸமாச்ரயணியன் ஆவதற்காக )
(தண்டகாரண்ய ரிஷிகள் ராக்ஷஸர்கள் தின்ன உடம்பு
ஆழ்வாராதிகள் விரகம் தின்ற உடம்பைக் காட்டி விண்ணப்பம் செய்வார்கள்)

தான் யுக்த அயுக்தங்கள் அறியாதே –
நிற்பது இருப்பது விழுவது எழுவதாய்க் கொண்டு
மோஹித்துக் கொண்டு கிடந்த தசையை அனுசந்தித்த
திருத்தாயார் (இட்ட கால் இட்ட கைகள் –7-2-இதில் போல் அங்கு உண்டே )
அவன் படிகளை சொல்லிக் கூப்பிடக் கேட்டும் -தான் வாய் வெருவியும் அவ்வழியாலே அல்பம் தெளிவு பிறந்தது –

அவன் குணங்களை நெஞ்சிலே ஊற்றிருந்தது
அறிவு கலங்கும் ஆபத்திலே வந்து உதவும் ஸ்வபாவன் என்று
அவன் படிகளை அனுசந்தித்து ஆஸ்வஸ்தையாய் பின்பு
திரு அட்டபுயகரத்து நாயனாரை அனுசந்தித்து
அவரையே பாவித்து அந்த பாவன பிரகர்ஷத்தாலே ப்ரத்யஷ சாமானகாரமாய் உருவு வெளிப்பாடு போலேயாய்
அவனுக்கு சில வார்த்தைகள் தான் சொல்லுகிறாள் ஆகவும் –
அவர் அதுக்கு சில மறு மாற்றங்கள் சொல்லுகிறார் ஆகவும் –
சிலவற்றைச் சொல்ல

இதைக் கேட்ட பந்து வர்க்கம் எல்லாம்-நீ பிரமித்தாயோ -சொல்லுகிறது என் என்பது -என்ன
திரு அட்டபுயகரத்து நாயனாரை நான் இங்கனே சில வார்த்தைகளைக் கேட்டேன் –
அவர் எனக்கு சில மறு மாற்றங்கள் அருளிச் செய்தார் என்று
அவ்வார்த்தையை தாய்மார் தோழிமார்களுக்கு சொல்லுகிறாளாய் செல்லுகிறது-

————————————————————-

யஸ்ய மதம் அமதம்–சொல்லுகிற அம்சம் கடுகு சொல்ல முடியாத அறியாத அம்சங்கள் கடல் –
அறியாதவன் என்று சொல்லுமவனே அறிந்தவன் ஆகிறான் –

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப
முரிதிரை மா கடல் போல் முழங்கி மூ உலகும் முறையால் வணங்க
எரியன கேசரி வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உருவாம் இவர் யார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே -2-8-1-

திரி-சஞ்சரிக்கிற
முரி-சஞ்சரிக்கிற
இவளுக்கு அரி உருவாய் தூணிலே தோற்றின போது ப்ரஹ்மாதிகள் வியந்ததைக் கண்டார் –

அவர் வந்து தோற்றின போது இருந்த படி –
திரி புரம் -சஞ்சரிக்கிற புரம்
அதாவது ஆகாசத்திலே சஞ்சரிப்பனவுமாய்
ஒரோ இடங்களிலே போய் இருந்தவாறே கீழ்ப்பட்டது அடைய
நசிகக் கடவதாய் இருப்பது மூன்று படை வீடு உண்டு இறே –
அப்படி ஆகவுமாம்-

அன்றிக்கே –
திரிபுரம் என்று பஞ்ச பஞ்ச ஜநா-சப்த சப்தர்ஷய -என்று
தனித்தனியே ரமதேயம் ஆகவுமாம் –
(பிராண அன்னம் இத்யாதி ஒவ் ஒன்றுக்கும் பஞ்ச-
எங்கள் எம்மிறை -ப்ரஹ்மாதிகள் எம்மிறை ஸ்துதிக்கும் அவன் எங்களுடைய ஸ்வாமி போல் )
திரி புர தஹனத்தாலே அஞ்ஞாத வீரனான ருத்ரனும்

மற்றை இத்யாதி –
சம்ஹாரத்துக்கு இவன் கடவன் ஆனால்
தான் சிருஷ்டிக்க கடவனாய்
இவனுக்கும் ஜனகனாய் திரு நாபி கமலத்திலே அவயவதாநேந பிறந்து
இதர விசஜாதீயமான ஜென்மத்தை உடையன் ஆகையாலே
அஜன் என்று சொல்லப்படுகிற ப்ரஹ்மாவும்-

வியப்ப –
தாம்தாம் சில அத்புத கர்மங்களைப் பண்ணி பிறர் விஸ்மயப் பட இருக்கிற தாங்கள்
கொக்குக் கடலை கண்டாப் போலே விஸ்மயப் பட –

முரி இத்யாதி –
ப்ரஹ்மாதிகளை ஒழிந்தார் அடைய உலாவா நின்றுள்ள
திரைகளை உடைய பெரும் கடல் போலே கோஷித்துக் கொண்டு –

மூ உலகும் வணங்கும் –
மஞ்சா க்ரோசந்தி போலே-லக்ஷணையால் உலகோர்

முறையால்-
ஹிரண்யன் உடைய அநீதியாலே முறை கெட்டு அவன் காலிலே விழுந்து திரிந்தார்கள் –
அவன் சேஷியான ஸ்வ பாவத்திலே வணங்குவார்கள் என்னுதல்-
பர்யாயேண என்னுதல் -சுழற்சி முறையால் ஒவ் ஒருவராக –

எரி இத்யாதி –
அக்நி கல்பமான உளை மயிரையும் ஒளியை உடைத்தான
எயிற்றையும் உடையனாய் –
சில பதார்த்தங்களின் உடைய தோற்றரவிலே சஹஐ சாச்த்ரத்தாலே முடிந்து போம் பதார்த்தங்கள் போலே
ஹிரண்யன் உடைய சரீரம் ஆனது இரண்டு கூறாம்படியாய்
நரசிம்ஹமான

இவர் யார் கொல் என்ன –
ஒரு சிறுக்கனுக்கு தமப்பன் பகையாக
அவனிலும் அணியனாய் உதவி நோக்கினவனைப் போலே
இரா நின்றார்
இவர் யார் தான் என்கிறாள்

அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே
நிச்சயிக்க ஒண்ணாத படி இறே விஷய ஸ்வபாவம் –

அட்டபுயகரத்தேன் என்றாரே –
ஒரு சிறுக்கனுக்காக வந்து உதவின அவ்வளவோ –
உனக்கு உதவுகைகாக இங்கே வந்து அவசர ப்ரதீஷனாய்
வந்து நிற்கிறவன் அன்றோ நான் -என்கிறார் –

————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply