பத்தாம்பாட்டு.
அகல கில்லேன் இறையும்என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!
நிகரில் புகழாய்! உலகமூன் றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல்ஒன் றில்லா அடியேன்உன் னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
த்வயம் விவரிக்கும் -இதற்க்கு விஸ்தரனமான வியாக்யானம்
திருவாய் மொழி ஆகிறது இப்பாட்டு –1தம்முடைய அபேக்ஷிதம் சடக்கெனச் சித்திக்கைக்காகப் பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக்கொண்டு திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார். 2மேலே ஒன்பது திருப்பாசுரங்களாலும் சரண்யனான சர்வேசுவரனுடைய சொரூபத்தைச் சொன்னார். சரண்யன் சொரூபமாவது, 1நிரதிசய போக்கியமுமாய் வகுத்த விஷயமுமாய் விரோதிகளைப் போக்கக்கூடியதுமாய்ச் சர்வ சுலபமுமாய் இருக்குமது.
அல்லாதவைபோல் அன்றிக்கே, பற்றுவதற்கு ஏகாந்தமாயிருப்பது சௌலப்யம். 3பரத்துவம், சேதனனுக்கு ருசி பிறந்தபோதே பற்ற ஒண்ணாதபடி தூரதேசமாக இருக்கும். வியூகமும், பிரமன் சிவன் முதலான தேவர்களுக்காமத்தனை. ஆகையாலே பரத்துவத்தைப் போன்றதேயாம். அவதாரங்கள், புண்ணியம் மிக்கவர்களாய் அக் காலத்தில் உதவினார்க்கு ஒழியப் பிற்பாடர்க்கு உதவாமையாலே காலத்தாலே கழிந்தனவாய் இருக்கும். 4அக் குறைகள் இரண்டும் இன்றிக்கே எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் வந்து அடையலாம்படி, 5“வானவர் வானவர்கோனொடும்” திருவாய். 3. 3 : 2.
-என்கிறபடியே, நித்தியசூரிகளோடு, இவ்வருகுள்ள பிரமன் முதலானோர்களோடு, இவ்வருகுள்ள மனிதர்களோடு கானமும் வானரமுமாய்க்கொண்டு மிக இழிந்த பிறவிகளிலே ஆனார்களோடு வாசி அற எல்லார்க்கும் பற்றுமிடம் திருவேங்கடமுடையான் திருவடிகளே. 6விடாத சுபாவமுடைய னாகையாலே விரும்பியவற்றைப் பெறுதற்குக்காரணங்களான ஞானம் சக்தி முதலான எட்டுக் குணங்களையுமுடையன்; ஆகையாலே, எல்லாக் குணங்களாலும் நிறைவுற்றிருக்கின்றவனான திருவேங்கடமுடையான் சரண்யன்.
இதில் தம்முடைய சொரூபம் சொல்லிச் சரண்புகுகிறார்.
அதிகாரி சொரூபமாவது, அநந்யகதித்வமும் பிராப்பியருசியும் சொரூபப்பிரகாசமும் என்கிற இவையேயன்றோ-
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா!’ என்கிற இதனாலே தம்முடைய வெறுமையை முன்னிட்டுக் கொண்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாக, சர்வசுலபனான திருவேங்கடமுடையான் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார்.
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா-3நிரபேக்ஷமுமாய் சாபேக்ஷமுமாய் இருக்கும் இவ்வுபாயம்; தன்மை வேறுபாடுகளாலே. 4நிரபேக்ஷமாகிறபடி எங்ஙனே? என்னில், ருசியைப் பிறப்பிக்கையும், பிறந்த ருசியை வளர்க்கையும், விரோதிகளைப் போக்குகையும், ஒரு தேச விசேடத்து ஏறக்கொண்டு போகையும், உரியதான அடிமையைக் கொள்ளுகையும் ஆகிற இந்த இடங்களில் நிரபேக்ஷமாகத் தானே செய்யும்; துணைவேண்டா. இனி, சாபேக்ஷமானபடி எங்ஙனே? என்னில், அதிகாரி வேண்டப்படுவதாயும் புருஷகாரம் வேண்டப்படுவதாயும் இருக்கையாலே
3மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய ஆகிஞ்சந்யத்தையும், சேஷத்துவத்தையும், அவனுடைய சரண்யதைக்கு உறுப்பாகச் சொல்லிக் கொடு போந்தார். இங்கு அது தன்னையே பேற்றுக்கு உடலாகச் சொல்லிச் சரணம் புகுகிறார்-
எல்லாச் சாத்திரங்களிலும் பரந்திருப்பது ஒன்றாய், இச்சாத்திரங்களுக்கெல்லாம் அடியான வேதாந்தங்களுக்குக் கிழங்காய்,கிழங்காய் – சாரமாய்.நம் ஆசாரியர்கள் எல்லாரும் ஒக்க ஆதரித்துப் போருவது ஓர் அர்த்த விசேடத்தை இப் பாசுரத்தால் அருளிச் செய்கிறார். 2ஆசாரியர்களுக்கெல்லாம் முதல்வருமாய், “மயர்வற மதிநலம் அருளினன்” என்கிறபடியே, பகவானுடைய திருவருளாலே அடைந்த ஞானத்தின் தெளிவையுடையவருமான இவர் ஏற்றுக் கொண்டமையாலே வந்தது ஓர் ஏற்றமும் உண்டு இதற்கு.
உபாயங்கள் எல்லாம் அகங்காரத்தின் சம்பந்தம் உடையனவாகையாலே தியாச்சியமாகச் சொல்லப்பட்டன. 4ஒன்றாய் எப்பொழுதும் இருப்பதாய் செய்தற்கு எளியதாய்த் தக்கதாய்த், தனக்கு அவ்வருகு ஒன்று இன்றிக்கே, 5“ஆதலால், மேலே கூறிய தவங்களுக்குள் பிரபத்தி என்னும் உபாயத்தை மிக மேம்பட்டதாகச் சொல்லுகிறார்கள்” என்கிறபடியே, சொல்லப்படுகிற பிரபத்தி உபாயத்தைச் சொல்லுகிறது இப் பாசுரத்தால்.
———————————————————————————————————————————————————————————————————————————————————-
இத் திருப்பாசுரத்தை, துவயத்தில்பதங்களோடு ஒக்க யோஜித்துத் தலைக்கட்டக்கடவது. 1அதில் அர்த்தத்தால் பொதருகின்ற ‘அஹம்’ என்ற சொல்லின்பொருளை இங்கு ‘அடியேன்’ என்கிறது.
——————————————————————————————————————————————————————————————————————————————————–
அகலகில்லேன் இறையும் என்று – 2இது, அகன்று இருந்து சொல்லுகிற பாசுரமும் அன்று; எப்பொழுதும் கூடியிருக்கச்செய்தேயாயிற்று ‘இறையும் அகலகில்லேன், இறையும் அகலகில்லேன்’ என்று உரைப்பது. 3நித்தியாநுபவம் பண்ணுவார்க்கு எல்லாம் பாசுரம் இதுவே. ‘
உலகத்தார் அகலகில்லேன் என்பது போன்றதன்றே இவளுடைய அகலகில்லேன்; 4அது கர்மங் காரணமாக வரும் அகலுதலேயன்றோ, 5இவளுக்கு அது இல்லாமையாலும், அவன்தான் மேல்விழும் சுபாவன் ஆகையாலும், அவனால் வரும் பிரிவும் இல்லை; தன்னால் வரும் பிரிவும் இல்லை
இச் சேர்த்திக்குப் பயன், அவனுடைய சுவாதந்திரியத்தை யாதல், தான் பிறவிப்பெருங்கடலில் பிறந்து உழன்று திரிந்து வருதலையாதல் நினைத்துக் கைவாங்க வேண்டாத படியாயிருக்கை. என்றது, அவனுடைய முற்றறிவினையும் தன்னுடைய குற்றமுடைமையையும் நினைத்து அஞ்சவேண்டாதபடியாயிருக்கையைத் தெரிவித்தபடி. 4அதாவது, இவனுடைய அபாரதகாலம் பார்த்து இருந்து எண்ணுவதற்கு அவனுக்குக் காலம் இல்லை, அவள் கூட இருக்கையாலே என்றபடி
பரிமளந்தான் ஒரு வடிவு கொண்டாற்போலே இருக்கை. உறைமார்பா – 1இதனால், நித்தியயோகம் சொல்லுகிறது.
கணநேரமும் பிரியச் சக்தியுடையயேனல்லேன் என்று.
இப்படிச் சொல்லுகிறவள் தான் யார்? என்னில், மூன்றுவித சேதனர்கட்கும் தலைவியுமாய், உபயவிபூதிநாதனையும் நியமிக்கின்றவளுமாய் இருக்குமவள் கண்டீர்
இவள் நியமிக்கும் பிரகாரம் என்? என்னில், மூன்றுவித சேதநர்களையும் தாயாந்தன்மையாலே நியமிக்கும், ஈசுவரனைக் காதல்குணம் காரணமாக நியமிக்கும்.
இவ்வுலகிற்குத் தலைவியாய் விஷ்ணுவுக்குப் பத்தினியாய்” என்றும், 1“விஷ்ணுவை விட்டு நீங்காத பிராட்டி” என்றும் சொல்லுகிறபடியே, தன் சொரூபம் குலையாமே யன்றோ நியமிப்பது. 2எங்ஙனே? என்னில், ஒளி, ஒளியையுடைய பொருளுக்குச் சேஷமாய் நின்றே அத் தலைக்கு நிறம் கொடுக்குமாறு போலவும், வாசனை, மலருக்குச் சேஷமாய் நின்று பெருவிலையன் ஆக்குமாறு போலவும், ஈசுவரன், சுவாதந்திரியம் குலையாமலே பரதந்திரன் ஆமாறு போலவும் அன்றோ, இவளும் அத்தலைக்கு அநந்யார்ஹ சேஷமாய்க்கொண்டே நிறம் கொடுக்கும்படி.
அவனுடைய வைலக்ஷண்யம் காரணமாகச் சொல்லுகிறாள்.
விலை உயர்ந்ததான இரத்தினம் ஒன்று கிடைத்தால் ‘இது நமக்குத் தொங்குமோ?’ என்று துணுக்குத் துணுக்கு என்னுமவனைப்போலே ‘அவன் மார்விலே இருந்து அகலிற் செய்வது என்?’ என்று 4அஸ்தாநேபயசங்கை பண்ணுகிறாள். 5புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறுக்கமாட்டேன் என்பாள் ‘இறையும் அகலகில்லேன்’ என்கிறாள். என்றது, அவன் உபாயமாமிடத்தில் அங்கத்தைச் சஹியாத சுணையுடைமை போன்று, புணர்ச்சிக்கு அங்கமான பிரிவும் பொறாத மிருதுத் தன்மையைத் தெரிவித்தபடி. 1அவன் மார்விலே இருந்து அவன் முகத்தை நோக்கி, ‘உன்னைவிட்டு அகலச்சக்தியுடையவள் ஆகிறிலேன் என்று அவன் வைலக்ஷண்யத்தை அவனுக்குச் சொல்லுகிறாள். தனக்குத் தானே முற்றறிவினனாயிருக்கிறவனுடைய வைலக்ஷண்யம் அவனுடைய ஞானத்துக்கு விஷயமாமே;
——————————————————————————————————————————————————————————————————————————————————
அலர்மேல் மங்கை – இங்ஙன் சொல்லுகிறவள் ஆர்? என்னில், தன் வடிவழகாலும் பருவத்தாலும் அவன்தனக்குங்கூட உத்தேசியமாயிருக்கிறவள்
அலர்மேல்மங்கை – மலரில் தள்ளத் தக்கனவான தாதும் சுண்ணமும் கழிந்த பரிமளமே வடிவானாற்போலே இருந்துள்ள மிருதுத்தன்மையும், எப்பொழுதும் அநுபவிக்கத் தக்கதான பருவமுமுடையவள். 4அவனை ‘அகலகில்லேன்’ என்னச் செய்யவல்ல பரிகரத்தையுடைய இவள், ‘அகலகில்லேன்’ என்கிறாள் அன்றோ. 5அவன் மார்வின் சுவடு அறிந்த பின்பு, பிறந்தகமான பூவும் நெருஞ்சி முள்ளினைப் போன்றதாயிற்றாதலின்
——————————————————————————————————————————————————————————————————————————————————-
உறைமார்பா’ என்கிறது. என்றது, 6ஸ்ரீஜநகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீமிதிலையை நினையாதவாறு போலவும்,முக்தன் “சனங்களின் சமீபத்திலுள்ள இந்தச் சரீரத்தை நினைப்பதில்லை” என்கிறபடியே, சம்சாரத்தை நினையாதவாறு போலவும், அவன் மார்வில் இனிமை அறிந்த பின்பு பூவினை நினைத்திலள் என்றபடி. 1சுருக்கமற்ற ஞானத்தினையுடையராயிருக்கச் செய்தே சம்சாரத்தைக் காணாத இடம் ஞானக் குறை அன்றே, இனிமையின் மிகுதி அன்றோ. இவளும் இனிமையாலே அன்றோ காணாது ஒழிகிறது. 2இவள் பூவினைக் காணாதவாறு போன்று திருமார்விற்கு அவ்வருகே வேறு அவயவங்களைக் காணாளாதலின் ‘உறைமார்பா’ என்கிறது. மற்றுள்ள அவயவங்கள் குமர்கிடந்து போமத்தனை.
——————————————————————————————————————————————————————————————————————————————————-
நிகர்இல் புகழாய் – நாராயண சப்தார்த்தம் சொல்லுகிறது. 5உபயவிபூதிகளோடு கூடி இருத்தலும்,
உலகத்திற்குக் காரணமாயிருத்தலும் இச் சொல்லுக்குப் பொருளாம். இங்ஙனமிருக்கச்செய்தே, நம் ஆசாரியர்கள் பற்றுவதற்கு அவசியமான சௌலப்யம் முதலான நான்கு குணங்களையும் அர்த்தமாகச் சொல்லிப் போருவர்கள்; அக் குணங்களுக்கு முறை அருளிச்செய்கிறார் இவர். அக் குணங்களைச் சொல்லுகிற இடத்தில், வாத்சல்யம் முன்னாகச் சொல்லுவான் என்? என்னில், இவன் குற்றங்களோடு கூடியவனாகையாலே, இக் குற்றங்களைப் பொறுக்கைக்கு உறுப்பாகப் புருஷகாரம் வேண்டினால், உடனே இக் குற்றங்களைப் போக்கியமாகக் கொள்ளத் தக்கது ஒரு குணம் முன்னாக வேண்டுகையாலே. நன்று; ‘நிகரில் புகழாய்’ என்றால், வாத்சல்யத்தைக் காட்டுமோ? என்னில், 1இதற்குப் பொருள், சத்தியத்திலே 2“எல்லை இல்லாத காருண்யம் சௌசீல்யம் வாத்சல்யம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமானவனே!” என்று குணங்களோடு ஒரு சேர எடுத்து, 3“தன்னைச் சார்ந்தவனிடத்தில் வாத்சல்யத்திற்கு முக்கியமான சமுத்திரம் போன்றவனே!” என்று“அபார காருண்ய சௌஸீல்ய வாத்ஸல்ய”என்பது, கத்யம்.
3. “ஆஸ்ரீத வாத்ஸல்யைக ஜலதே”என்பது, கத்யம்.-இந்தக் குணத்தை விசேடிக்கையாலே சொல்லிற்று.
நிகரில் புகழாய்-4அதற்கு அடுத்த பதத்தின் அர்த்தம் சொல்லுகிறது. தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல் ‘என்னடி யார் அது செய்யார்’ பெரியாழ்வார் திருமொழி, 4. 9 : 2. என்னும் குணாதிக்கியம் சொல்லுகிறது.
நிகரில் புகழாய் – இப்படி இருக்கிறவள்தானே சிதகு உரைக்கும் அன்றும் அவளுடனே மன்றாடும் குணமிகுதியின் விசேடம் சொல்லுகிறது. என்றது, 4‘என்னடியார் அது செய்யார்’ என்று என்னைப்பற்றினார்க்கு அது இல்லை காண் என்கிறது என்றபடி. ‘இல்லை, நான் இப்போது இன்ன குற்றம் செய்யக்கண்டேன்’ என்று காட்டிக்கொடுத்தாலும், ‘ஆனால் என்? தர்மம் அதர்மம் பரலோகம் என்னும் இவற்றை இல்லை என்று செய்கிறார்களோ? தங்களை அறியாதே நிகழும் குற்றங்கட்கு நாம் உளோம் என்றன்றோ செய்கிறது’ என்கை. இவளுடைய உயர்வுக்கு அடி சொல்லும் போது அவனைப் பற்றிச் சொல்லலாம்; அவனுடைய உயர்வுக்கு ஒன்று தேடிச் சொல்லலாவது இல்லையாதலின், ‘நிகரில்’ என்கிறது. 5இதுவோ தான் பொருளின் தன்மை இருக்கும்படி.இத்தால் சொல்லிற்றாயிற்று, இவள் அவனுடைய சுவாதந்திரியத்தை நினைத்து ‘இவற்றின் பக்கல் என்னாய் விளைகிறதோ?’ என்றிருக்கையும், அவன் இவளுடைய மிருதுத்தன்மையையும் இளமையையும் நினைத்து ‘இவற்றின் பக்கல் எவ்வளவாய் இருக்கிறாளோ?’ என்றிருக்கையும். ஆக, ஒருவரை ஒருவர் அதிசங்கை பண்ணி நோக்கும் இருவர் நிழலையும் பற்றி அன்றோ உபயவிபூதியும் கிடக்கிறது என்றபடி.
————————————————————————————————————————————————————————————————————————————————————
உலகம் மூன்றுடையாய் -மேலே கூறிய வாத்சல்யத்துக்கு அடியான குடல் துடக்கைச் சொல்லுகிறது. 4தன் வயிற்றிற் பிறந்த காரணத்தாலே அன்றோ தாய் வத்சலை ஆகிறாள்.
தான் குணங்கள் இல்லாதவனேயானாலும் விட ஒண்ணாத சம்பந்தம் சொல்லுகிறது.
உலகம் மூன்றுடையாய் – 2தான் குணங்கள் இல்லாதவனாயினும் விடஒண்ணாத சம்பந்தத்தைச் சொல்லுகிறது. “சிதகு உரைக்குமேல்” என்ற இடத்தில், அவளுக்குச் சொரூபத்திற்குத் தகுதியான குணங்கள் இல்லாதகாலத்திலே அன்றோ அவள் அது சொல்லுவது; அப்படியே இவனுக்கும் இக் குணங்கள் இன்றிக்கே இருந்தாலும் விட ஒண்ணாத குடல்தொடக்கைச் சொல்லுகிறது. 3அவன் ‘அல்லேன்’ என்று கைவிடும் அன்றும் செங்கற்சீரைகட்டி வளைக்கலாம்படி அன்றோ இச் சம்பந்தம் இருப்பது.இந்தச் சம்பந்தத்தைப் பார்த்தால், இருவராலும் விடஒண்ணாது என்கிறார்
———————————————————————————————————————————————————————————————————————————————————–
என்னை ஆள்வானே – சம்பந்தத்தைக் கிரயம் செலுத்திக்கொடுக்கும்படி. 5மோக்ஷத்தளவும்செல்ல நடத்திக்கொடு போந்து 1நடுவுள்ள அபேக்ஷிதத்தைக் கொடுக்கின்றவனாதல் அன்றோ ஆளுகின்றவனாவது.
1அடிமையைக் கிரயம் செலுத்திக் கொடுக்கும்படி. என்றது, 2‘அடிமையின் பொதுமையைப் பற்றிச் சொல்லுகிறீராகில் அவ்வளவே அன்றோ உமக்கும்’ என்ன ஒண்ணாதபடி, என்னை மயர்வற மதிநலம் அருளி, இவ்வளவும் வர நிறுத்திப் பொகடப் போமோ? என்கிறார் என்றபடி.
என்னை ஆள்வானே – இதனால் சௌசீல்யத்தைச் சொல்லுகிறது. வெறுமை முன்னாக அடைகிறவர் ‘என்னை ஆள்வானே’ என்று கைங்கரிய தசைபோலே, 5உபகாரம் தோற்றச்சொல்லப் பெறுவரோ? என்னில்,புருஷகாரத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார் முதல் பதத்தில்; பின்னர், உபாயத்தைப் பார்த்து வார்த்தை சொன்னார்; இதில், உலகத்தைப்பார்த்துச் சொல்லுகிறார். என்றது, 2உலக விஷயங்களினுடைய லாபா லாபமே பேறு இழவாக இருக்கிறவர்களிலே வேறுபட்டவராயிருக்கிற தம்மை, ‘கர்மம் முதலான உபாயங்கள் சொரூப விரோதிகள்’ என்று அறியும்தனையும் வர நிறுத்தி, பிராட்டி புருஷகாரமாகத் தானே உபாயமும் தானே உபேயமும் என்னும்படி செய்த உபகாரத்தைச் சொல்லுகிறார் என்றபடி.
————————————————————————————————————————————————————————————————————————————————————–
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே – 2அப்பதத்தில் முடிகிற சௌலப்யம் சொல்லுகிறது.
அங்குள்ளாரும் விரும்பி வந்து அடிமைசெய்கிறதும் இங்கே அன்றோ. 4“வைகுந்தத்தமரரும் முனிவரும்” திருவாய். 10. 9 : 9.என்று இரண்டு கோடியாயன்றோ இருப்பது; குணநிஷ்டரும் கைங்கரிய நிஷடரும். திருவேங்கடத்தானே – 5அதற்கு முடிந்தபொருள், சௌலப்யம் என்னக் கடவதன்றோ. 6குணயோகமும், சேஷித்வமும், விசேஷகடாக்ஷமும், சௌலப்யமும் இவை இத்தனையும் உண்டு அன்றோ இப் பதத்துக்கு. இவன் விரும்பியவை அனைத்தையும்இவனுக்குக் கொடுப்பதற்காக அந்தராத்மாவாக நிலைபெற்றிருக்கின்றான் என்றே அன்றோ நாராயண பதத்திற் சொல்லுகிறது. அந்தச் சௌலப்யம், இங்கு எப்பொழுதும் நிலைபெற்று இருப்பதாலே திருவேங்கடமுடையான் பக்கலிலே கிடக்குமன்றோ. 2இந்தச் சௌலப்யம் உபாயமாகிறபடி எங்ஙனே? என்னில், 3“மாமேகம் – என்னையே” என்ற இடத்தில், சாரதியாயிருக்கும் வேடத்தை அன்றோ காட்டுகிறது. 4இன்னமும் அவ்வளவு அன்றே இங்கு. அதற்கு முன்பும் பின்பும் இல்லை அன்றோ அந்தச் சௌலப்யந்தான். எப்பொழுதும் நிலைபெற்று இருக்கிற இடம் அன்றோ இவ்விடம். அங்குத்தானும் 5“பார்த்தனே! என்னிடத்தில் வைத்த மனத்தினையுடையையாய்” என்று ஒரு தேவை இட்டன்றோ சொல்லிற்று. அதுவும் இல்லை அன்றோ இங்கு.
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே’ என்றதனால், சௌலப்யம் சொல்லுகிறது. 4“வைகுந்தத் தமரரும் முனிவரும்” 10. 9 : 9.என்றும், 5“பக்தர்களோடும் பாகவதர்களோடும் கூட” என்றும் சொல்லப்படுகையாலே இருவகையாக ‘அமரர் முனிக்கணங்கள்’ என்கிறது. ‘நிகர் இல்’ என்பான் என்? என்னில், இவர்களுக்கு ஒருவரும் ஒப்பு அல்லர்; 6பிரகிருதி சம்பந்தத்தாலே சம்சாரிகள் ஒப்பு அல்லர்; பிரகிருதி சம்பந்தத்தினின்றும் விடுபட்டவர்களாகையாலே பக்தர்கள்ஒப்பு அல்லர்; 1உலகத்தைப் படைத்தல் முதலான செயல்கள் உண்டாகையாலே, ஈசுவரன் ஒப்பு அல்லன்.
இருட்டு அறையிலே விளக்குப்போலே, பரமபதத்திற் காட்டிலும் 2“கானமும் வானரமும்” -நான்முகன் திருவந். 47.என்கிறபடியே, எத்தனையேனும் தாழ்ந்தார்க்கும் முகம் கொடுக்கிற சீலம் முதலான குணங்கள் இங்கே உள்ளன ஆகையாலே, அங்கே இல்லாததும் இங்கே பெறுகையாலே, ‘விரும்பும் திருவேங்கடத்தானே’ என்கிறது
————————————————————————————————————————————————————————————————————————————————————
புகல் ஒன்று இல்லா அடியேன் – 3ஆகிஞ்சந்யமும் சொரூபமும் சரணாகதிக்குப் பரிகரங்களே அன்றோ. உன்னடிக்கீழ் – “சரணௌ” என்ற பதத்தின் பொருள்.
மேலே, “அடியேன்” என்றும், “அருவினையேன்” என்றும் தம்முடைய சேஷத்வத்தையும் ஆகிஞ்சந்யத்தையும் உருவச்சொல்லிக் கொடு போந்தார். இனித்தான், வெறுமையும், சொரூபமும், என்னும் இரண்டும் சரணாகதிக்குப் பரிகரங்கள் ஆதலின், அவற்றை இங்கேயும் அருளிச்செய்கிறார்; அவற்றைச் சரணாகதிக்கு அங்கமாகச் சொல்லவேணுமன்றோ. அவற்றை 1இங்கே சொல்ல வேண்டுகிறது என்? என்னில், அவனுக்கு உபாயத் தன்மை சொரூபமானதைப் போன்று. இவனுக்கும் இந்த நினைவு சொரூபமாகையாலே. 2இவனுக்கு இது இல்லாதபோது சர்வமுக்தி பிரசங்கமாமே. அடியேன் – 3துவயத்தில் “பிரபத்யே” என்ற சொல்லில் பொருளாலே கிடைத்த ‘அஹம்’ என்னும் சொல்லை, இங்கு ‘அடியேன்’ என்ற சொல்லாலே சொன்னதுவே வாசி
———————————————————————————————————————————————————————————————————————————————————-
உன்னடிக் கீழ் – “சரணௌ” என்றது தன்னையே சொல்லுகிறது. 4அவர், “தமையனாருடைய திருவடிகளை” என்றாற்போலே சொல்லக்கடவதன்றோ
உன் அடிக் கீழ் – 2“சரணௌ” என்ற பதத்தால் சொல்லப்படுகிற விக்கிரஹத்தைச் சொல்லுகிறது. யாங்ஙனம்? எனின், 3எளிதில் பற்றக்கூடியதாய், உலக விஷயங்களிலே அருசிமுன்னாகத் தன் பக்கல் ருசியையும் உண்டாக்கி, பிறந்த உருசியையும் வளர்த்து, பேற்றிற்கு விரோதமாயுள்ளனவற்றையும் தவிர்த்து, ஒருதேச விசேடத்திலே போனால் நித்தியமாகக் கைங்கரியத்தைச் செய்வதற்கு எதிர்த்தொடர்புள்ளதுமாய், எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பதற்கு விஷயமுமாவது விக்கிரஹம் ஆகையாலே என்க. 4முதல் முதலிலே, “துயர் அறு சுடர் அடிதொழுது எழு” என்று” திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்து, தாம் பற்றுகிற இடத்தில் “உனபாதம் கூடுமாறு கூறாய்” என்றும், “உன்னடிசேர்வண்ணம் அருளாய்” என்றும், உன்னடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே!” என்றும், “பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராய்” என்றும், “உனபாதம் சேர்வது அடியேன் எந்நாள்” என்றும், “எந்நாள் உன்னடிக்கள் அடியேன் மேவுவதே?” என்றும், “நொடியார் பொழுதும் உனபாதம் காண நோலா தாற்றேன்” என்றும், “அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையும்” என்றும், “உன்னடிகீழ் அமர்ந்து புகுந்தேன்” என்றும் இவர் அடிவிடாமல் அநுசந்தித்தபடி கண்டதே!
————————————————————————————————————————————————————————————————————————————————————
அமர்ந்து – நடு ஓர் 4இடையீடு இன்றிக்கே இருக்கை.
அவனுக்கு ஒரு துணைவேண்டுதல், தம் தலையிலே ஓர் உபாயத் தன்மை கிடத்தல் செய்யில் அன்றோ நடுவே ஓர் இடையீடு விளம்பங்கட்குக் காரணம் உள்ளது என்பார் ‘அமர்ந்து’ என்கிறார்
திருவேங்கடமுடையான் திருவடிகளும் தம்முடைய தலையும் கொக்குவாயும் படுகண்ணியும் போலே இடைவெளி இல்லாமல் பொருந்தினபடி சொல்லுகிறது
———————————————————————————————————————————————————————————————————————————————————–
புகுந்தேனே – 5இந்த உறுதியும் உபாயபாவத்தில் சேராமையாலும், 6செய்ந்நன்றியறிதல் சொரூபமாகையாலும், பற்றுதலும் அறிவினைப் பற்றிய செயலாகையாலும்,
புகுந்தேன் – 1போன எல்லை அளவு மன்றோ புகுருவதும்; முன்பும் அர்த்தத்தில் இழவு இல்லை அன்றோ. இவனுடைய மாறான உணர்வு அன்றோ உள்ளது; அது போமித்தனை அன்றோ வேண்டுவது. அறுதியிட்டேன் என்கிறார். 2துவயத்தில் உள்ள “பிரபத்யே” என்ற நிகழ்காலம், நினைவின் தொடர்ச்சிபோல் அன்று
புகுந்தேனே – பிரிந்துநிற்றல் முதலானவைகள் இல்லாதபடி சரீரத்தைப் போன்று சேஷமான தமக்கு அந்தர்யாமியாய் நிற்கிறபடியை அறிந்திருக்கிற இவர், ‘புகுந்தேன்’ என்கிற இது, ஒரு போக்கு வரத்து உண்டாய் அன்று; அவனுடைய சர்வஜகத் காரணத்வத்தையும் ஸர்வாத்ம்பாவத்தையும் ஸர்வரக்ஷகத்வத்தையும் அறிந்து, ‘அவனே உபாயம்’ என்று அறுதியிட்டிருக்கிற அத்யவசாய ஞானத்தைச் சொல்லுகிறது. 2“கதிவாசக சப்தங்கள் – புத்தி வாசங்கள்” என்கிறபடியே. புகுந்தேன் – 3“பிரபத்யே-பற்றுகிறேன்”என்னும் நிகழ்காலம் முக்கியம் அன்று; அடைந்தேன் என்பது போன்று ‘புகுந்தேன்’ என்கிற இதுவே முக்கியம்.
———————————————————————————————————————————————————————————————————————————————————-
இவை எல்லாம் அதிகாரிக்கு விசேஷணங்களாகச் சொல்லப்பட்டன அன்றோ. 7இவையெல்லாம் துவயத்தில் முடிகிற பதத்தோடே சேரக்கடவனவாம்.1
———————————————————————————————————————————————————————————————————————————————————
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply