குறுகா நீளா இறுதி கூடா எனைஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறுகா லத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.
பொ-ரை :- மாயோனே! இயல்பாகக் குறைவதும் பெருகுவதும் இல்லாததும், முடிவு இல்லாததும், எத்துணைக் கற்பங்கள் சென்றாலும் கால வேறுபாட்டினால் குறைவதும் பெருகுவதும் இல்லாததும் அளவு இல்லாததுமான சிற்றின்பமாகிய ஆத்ம அநுபவம் சேர்ந்தாலும், தெளிந்து பார்க்குமிடத்து மறுபடியும் ஒருகாலம் இல்லாமல் உனக்கே கைங்கரியத்தைச் செய்கின்ற சிறிய காலத்தை அது ஒக்குமோ?
வி-கு :- முதல் இரண்டு அடிகளில் கைவல்யம் கூறப்படுகிறது. குறுகா, நீளா, கூடா, சிறுகா என்பன; ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்; குறுகா இன்பம் எனத் தனித்தனியே கூட்டுக. அந்தோ: இரக்கத்தின்கண் வந்த இடைச்சொல்
ஈடு :- பத்தாம் பாட்டு. 1‘செல்வம் முதலானவை அல்பமானவை, நிலைஅற்றவை’ என்று ‘வேண்டா’ என்றீராகில், அவ்வளவினது அன்றே; முடிவில்லாததுமாய் நிலைத்திருப்பதுமாய் இருக்குமன்றோ ஆத்மாநுபவம்; அதனை அநுபவித்தாலோ? என்ன, ‘நீ சொன்னது பொருத்தமுள்ளதாயின் செய்யலாயிற்று; ‘அவை அல்பம், நிலையற்றவை’ என்ற இடம் சொரூபத்தைச் சொன்னேனத்தனை: உன்னுடைய இனிமையைச் சொன்னதும் சுவாபம் இருந்தபடி சொன்னேனத்தனை; ‘அது தீது’ என்று விட்டும், ‘இது நன்று’ என்று பற்றுகிறேனும் அல்லேன்; உன்னைப் பற்றிற்றும் நீ ஆகையாலே, அவற்றை விட்டதும் நீ அல்லாமையாலே’ என்கிறார். வகுத்த விஷயத்திலே குணம் அழகு முதலானவைகளும் உண்டாகப் பெற்றேனித்தனை.
குறுகா நீளா – 2தன் இயல்பிலே குறுகுதலும் நீளுதலும் இன்றிக்கே இருக்கை. இறுதிகூடா – 3முற்றும் அழிவு இன்றிக்கே இருக்கை. 4எனை ஊழி சிறுகா பெறுகா – கால வேறுபாடுபற்றிக் குறைதலும் விரிதலும் இன்றிக்கே இருக்கை. அளவில் இன்பம் சேர்ந்தாலும் – 5இங்ஙனே இருக்கையாலே முடிவின்றிக்கே இருக்கிறஆத்ம அநுபவ சுகத்தை அடைந்தாலும். மறுகால் இன்றி – 1பகவானுடைய அநுபவமானது ஒரு கால் அநுபவித்தால் மற்றைப்போது இன்றிக்கே இருப்பது. மாயோன் – மீண்டு இன்றிக்கே ஒழிந்தாலும் விடொண்ணாத கல்யாணகுணயோகம் சொல்லுகிது. உனக்கே ஆள் ஆகும் சிறு காலத்தை உறுமோ – ‘உன்திருவடிகளில் அடிமையே புருஷார்த்தம்’ என்று இருக்குமது, 2மறுத்து இன்றியிலே இருப்பது, அதுதான் கணநேரமாவது; இங்ஙனே இருந்தாலும் அளவில் இன்பம் சேருகை உறுமோ? இதனைப் பார்க்க. அந்தோ – பர்த்தத்துக்கும் பரமாணுவுக்கும் இருந்த வேற்றுமையைச் சொல்லும்படி ஆவதே! தெரியிலே – தோற்றிற்றுச் சொல்லின் செய்யலாவது இல்லை; ஆராய்ந்து சொல்லுமன்று இங்ஙன் அல்லது இல்லை. 3இந்தப் பொருளை உபதேசிக்கவேண்டுவது ஆவதே!
ஐஸ்வர் யார்திகள் அல்பம் அஸ்தரம் என்றால்
ஆத்ம அனுபவம் கைவல்யம் உண்டே என்ன
நீ சொன்னது உபபத்தி ஆகில் செய்யலாயிற்று
உனக்கு இது நியாயம் என்றால் அருள்
ஸ்வரூப கதனம் –
தோஷங்களால் வேண்டாம் இல்லை
அவை நீ அல்ல என்பதால் வேண்டாம் என்றேன்
எனக்கு நீ கை கொள்ள வேண்டும்
உன்னை அனுபவிப்பது அல்பம் அஸ்தரம் ஆக இருந்தாலும் நீயே வேண்டும்
குண கருத தாஸ்யம் வேண்டாம்
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் ஒன்றே வேண்டும்
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாதே
வகுத்த விஷயம் -அனுசூயைக்கு பிராட்டி வார்த்தை –
அது இது உது என்னாலாவது இல்லை உனது செய்கையே நைவிக்கும் போலே –
அந்தோ இதை சொல்லி புரிய வைக்க வேண்டி இருக்கிறதே
குருகியோ நீண்டோ இருந்தாலும் சரி
சிறியதாகவோ பெரியதாகவோ
உனக்கே ஆளாகும்
கால உபாதி
முடிவும் இல்லாத கைவல்யம் -அளவில் இன்பம் இருந்தாலும் –
இது நிரந்தர இன்பமாக இருந்தாலும்
பகவத் விஷயம் -ஒரு கால் மட்டும் இருந்தாலும்
விட ஒண்ணாத கல்யாண குண யோகம்
உனக்கே ஆளாகும் சிறு காலத்துக்கு சமம் ஆகாதே
உனது திருவடிகளிலே அடிமையே புருஷார்த்தம்
இத்தைப் பார்க்கில் அது தகுமோ
லோகத்தர் சொல்லும் வார்த்தை
புலிக்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக
மாற்றியும் சொல்வார்கள்
அந்தோ –
ஈடாகாது சொல்லி புரிய வைக்க வேண்டுமா
10 மூட்டை உமிஒரு மூட்டை நெல்
10 இருந்தாலும் ஒன்றே சிறந்தது போலே
சைதன்யமா கண்ணனா போலே
அளவு பெரியதாக இருப்பதால் துரியோதனன் கொண்டான்
ஆராய்ந்து சொல்லில் இதுவே உசந்தது
இதை உபதேசிக்க வேண்டி இருப்பது தலை எழுத்து
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply