திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறிகொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறிசெய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.

பொ-ரை :- ஞானிகளுக்கு உயிராக இருப்பவனே! வாசனையைக் கொண்டிருக்கிற ஒளிபொருந்திய விக்கிரஹத்தையுடையவனே! அடியேனுடைய நெடிய மாலே! விரகு அறியாத எனக்குக் கிருபைசெய்தருள்வாய்; வேறு ஒன்றனையும் அறியாத அடியேனுடைய உயிரானது திகைக்கும்படியாக வேறு உபாயங்களைச்செய்து என்னைப் புறத்திலே தள்ளி இன்னம் கெடுப்பாயோ? என்கிறார்.

வி-கு :- வெறி – வாசனை. கிறி – விரகு. ஆவி திகைக்கக் கெடுப்பாயோ என்க.

ஈடு :- எட்டாம் பாட்டு. 4“அருளாய்” என்ற வாயோடே வந்து அருளக் கண்டிலர்; தன் பக்கல் நின்றும் பிரித்து என்னைக் கைவிடப் பார்த்தானாகாதே என்கிறார்.

  அறிவிலேனுக்கு அருளாய் – 1“நின்னருளே புரிந்திருந்தேன்” –பெரியாழ்வார் திருமொழி, 5. 4 : 1.
-என்னுமாறுபோலே உன்னருள் ஒழிய வேறு ஒன்றை அறியாத எனக்கு அருளவேணும். 2“அவ்வருள் அல்லன அருளும் அல்ல” –முதல் திருவந். 15.
-என்றேயன்றோ இவர் இருப்பது. வையகத்துப் பல்லார் அருளும் பழுதே அன்றோ. அறிவார் உயிரானாய் – அறிவார்க்கு உயிர் ஆனவனே! என்னுதல்; அறிவாரை உயிராகவுடையவனே என்னுதல். 3“ஞானியானவன் எனக்கு உயிர் போன்றவன் என்பது என்னுடைய மதம்” என்கிறபடியே; “என்னுடைய இரண்டாவது ஆத்மாவாக இருக்கிற உன்னை” என்கிறபடியே.“ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்” என்பது ஸ்ரீ கீதை, 5 : 18.
“த்விதீயம் மே அந்தராத்மாநம் த்வாம் இயம்ஸ்ரீ: உபஸ்திதா”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 43.

வெறி கொள் சோதி மூர்த்தி – 4அருளாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகு. “சர்வகந்த:” என்னுமதன்றோ. பரிமளத்தையுடைத்தாய், எல்லையற்ற தேஜசையுடைத்தான வடிவழகையுடையவனே! அடியேன் நெடுமாலே – எனக்கு இப்போது 5எட்டாது இருக்கிறவனே! என்னுதல் ; வடிவழகைக் காட்டி எனக்கு வியாமோஹத்தை விளைத்தவனே! என்னுதல். கிறிசெய்து – 6நீ இப்போது உதவாமையாலே, முன்பு செய்தவையெல்லாம் விரகு அடித்தாய் என்று தோற்றாநின்றது காண்? என்னைப் புறத்திட்டு – பிராட்டியை அசோக வனத்திலே வைத்தாற்போலே,பகவத்குணங்கள் நடையாடாதே ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே பொகட்டு இன்னம் கெடுப்பாயோ – முன்பு இழந்தது போராதோ? 1“சம்சாரம் தியாஜ்யம்” என்றும், “பகவத்குணங்கள் நன்று” என்றும் அறிந்த பின்பும் கெடுப்பாயோ? 2“நினைவு கெடுவதனால் புத்தி கெடுகிறது, புத்தி கெடுவதனால் நாசத்தை அடைகிறான்” என்பது ஸ்ரீகீதை.“த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷு உபஜாயதே
ஸங்காத் ஸம்ஜாயதே காம: காமாத் க்ரோத: அபிஜாயதே”
“ஸ்மிருதி ப்ரம்சாத் புத்திநாச: புத்தி நாசாத் ப்ரணச்யதி”-என்பன, ஸ்ரீ கீதை. 2. 62 : 63.

பிறிது ஒன்று அறியா அடியேன் – வேறு கதியில்லாதவனாய் வேறு ஒருவர்க்கு உரியன் அல்லாதவனாய் இருக்கிற என்னுடைய, ஆவி திகைக்க – மனம் கலங்கும்படி. கிறிசெய்து என்னைப்புறத்திட்டு இன்னம் கெடுப்பாயே?

அருளாய் சொன்ன உடன் வர வில்லை
பிரித்து கைவிட பார்த்தாயா கதறுகிறார்
கிறி- உபாயம் புறத்து இட்டு இன்னம் கேடுப்பாயா
தரியேன்
திருவடிகள் கொடுத்து
அருளே புரிந்து இருந்தேன்
உன்னை ஓன்று வேறு இல்லை
வையத்து பல்லார்  அருளும் அருள் எல்லாம் இருள் பழுது

தேவதைகளே அழியும்
நின் அருளே புரிந்து இருந்தேன்
ஞான பிரான் நீ கிருபை பண்ணி அருளாய்
அறிவாருக்கு உயிர் ஆனாய்
அறிவாரை  உயிர் ஆக உடையவன்
ஞானிகள் எனக்கு உயிர் நீ அருளி
அவனுக்கு ஆத்மா இல்லை திவ்ய ஆத்மா ஸ்வரூபம் வேதாந்தம் சொல்ல
மே மதம் -என்னுடைய சித்தாந்தம்
விசாரமே பண்ண வேண்டாம்

ஞானிகள் இல்லை என்றால் அவனும் இல்லை
அந்யோந்ய ஆஸ்ரமம்
கண்ணன் நம் ஆழ்வார்
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்
ஆசை இரண்டு பக்கமும் உண்டே
அறிவார் உயிர் ஆனாய்
அருளாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத
சர்வ கந்த தேஜஸ் உடைய வடிவு அழகு
அடியேன் -நெடு மாலே எட்டாமல் இருக்க
வடிவு அழகை காட்டு வ்யாமொஹம் விளைத்த நெடுமால்
கிறி செய்து முன்பு செய்தவை எல்லாம் வீணாக போகுமே

இவ்வளவு செய்தாலும் இப்பொழுது உதவாமல்
புறத்திட்டு
பிராட்டியை  அசோகா வனம் வைத்தாப் போலே
சம்சாரத்தில் பொகட்டி வைத்து
இன்னம் கெடுப்பாயொ
மயர்வற மதி நலம் அருளின பின்பும்
சம்சாரம் த்யாஜ்யம் அறிந்த பின்பும்
மனஸ் கலங்கும் படி கிறி செய்து இன்னம் கெடுப்பாயொ-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading