ஸ்ரீ பெரிய திருமொழி-2-6-1-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

பிரவேசம்-

அஹம் அஸ்ம்ய  அபராதா நாம் ஆலய அகிஞ்சன அகதி த்வமேவ மே உபாய பூதோ மே பவ
பிரார்த்தனா மதி சரணாகதி -என்றும்
சாதே தேஸ்மின் பிரத்யுஜ்யதாம் –
என்று சரணாகதிக்கு லஷணம் சொல்லிற்று
அது தன்னை
வானிலா முறுவலிலும்
தாயே தந்தை யிலும் ஆக அனுசந்தித்தார் –

அது தன்னை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன் என்றும்
தொண்டனேன் கண்டு கொண்டேன் என்றும்
அது தன்னை அனுபாஷித்தார் -( விளக்கி அருளிச் செய்தார் )

ஆனுகூலஸ்ய சங்கல்ப
பிரதிகூலஸ்ய வர்ஜனம்
(ப்ரதிஷ்யஸ்தி விஸ்வாசம்
கோப் த்ருத்வ வரணம்
ஆத்ம நிஷேபம் )-என்று
அவனுக்கு சம்பாவிதமாய்
அநந்தரம் வரும் ஸ்வபாவங்களை சொல்லுகிறது –

அவை தமக்கு பிறந்தபடி சொல்லிற்று ஆயிற்று இதில் –
கடல் மல்லைத் தல சயனத்துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே-என்று
அவை தான் இரண்டும் லஷணமாக வேண்டிற்று இல்லை
பரஸ்பர விரோதத்தாலே -த்வமே-என்று உபாய
நைரபேஷ்யத்தை சொல்லுகையாலும்
இதில் அங்கங்களோடு கூடி இருப்பதாகச் சொல்லுகையாலும் –
ஆகையால் இது லஷணமாய்
இது அவனுக்கு சம்பாவித ஸ்வ பாவமாம் இத்தனை –

(ஷட் வித அங்கங்கள் என்று சொல்ல முடியாதே -த்வமேவ உபாய பூத -அங்கங்களை எதிர் பார்க்க மாட்டாரே
சரணாகதி லக்ஷணம் சொல்லும் பிரமாணம் இருப்பதால் -பொருந்த விட இவை சம்பாவித ஸ்வ பாவங்கள் என்றதாயிற்று
நெல் குத்த வியர்வை தானே வருமா போல் )

அடுத்து இரண்டாவது விஷயமாக பிரவேசம்

பசுர் மனுஷ்ய பஷீரே ச வைஷ்ணவ சம்ஸ்ரபா
தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –
என்று பாகவத சமாஸ்ரயணத்தை
ஞானமும் ஞான அனுரூபமான வ்ருத்தமும் ஒழியவேயும்
பகவத் பிராப்திக்கு சாதனமாக சொல்லா நின்றது இறே-
மிருக பஷி யாதிகளையும் கூட எடுக்கிறது இறே

இவை தான் பின்னை இரண்டோ –
பாகவத சமாஸ்ரயணம் ஆவது -பகவத் சமாஸ்ரயண்த்தின் உடைய காஷ்டை அன்றோ -என்னில்
அவ்யவதாநேந பகவத் சமாஸ்ரயணம் பண்ணுகிறோம் என்று இருப்பது ஓன்று –
பாகவத சமாஸ்ரயணத்தாலே பகவத் சமாஸ்ரயணம் பண்ணுமதும் ஓன்று உண்டு
இந்த முக பேதத்தைப் பற்றிச் சொல்லுகிறது –
பாகவத சமாஸ்ரயணம் ஒழிய பகவத் விஷயத்தில் இழியும் துறை இல்லை-

(இருப்பிடம் வேங்கடம் –பாகவதர்களைப் பற்ற அவனும் இதற்குள் அடங்குமே-
இவர்களே உபாயம் –கீழில் சரணாகதி-இவர்களைப் புருஷகாரமாகப் பற்றுதல்
இவர்களையே உபாயமாக புருஷார்த்த சித்திக்கு இதில் )

மாறாய -இத்யாதி –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் யார் –
மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் யார் –

இத்தை ஒரு உதாஹரன நிஷ்டமாகக் காட்டலாமோ வென்னில் –
வேறாக வேத்தி இருப்பார் யாகிறார் -சர்வேஸ்வரனைக் கண்ட அநந்தரம்-தம்மைப் பேணாதே
பகவத் சம்ருத்திக்கு மங்களா சாசனம் பண்ணும் பெரியாழ்வார் போல்வார் –

மற்று அவரை சாத்தி இருப்பார் யாகிறார் –
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்று இருக்கும் ஆண்டாள் போல்வார் –

இனி இவர் தாம் பாகவதாராக நினைத்து இருப்பது
உகந்து அருளின நிலங்களிலே நீர்மையிலே ஈடுபட்டு இருக்கும் அவர்களை –
அபாகவதாராக நினைத்து இருப்பது அங்குத்தை வாசி அறியாதவர்களை –

ஆனுகூலஸ்ய சங்கல்ப -என்கிறது
ஓன்று செய்து தலைக் கட்டிற்றாய் ஓர் அளவில் மீளுமது அல்லாமையாலே
ப்ராப்தி தசையிலும் அனுவர்த்திக்குமது இங்கு ஓர் அளவில் மீளாதிறே-
ப்ராதி கூலஸ்ய வர்ஜனம் -ப்ராப்தி அளவும் இறே நிற்பது –
ப்ராதி கூல்ய நிவ்ருத்தி பிறந்தால் உண்டாமதாகையாலே
ஆனுகூல்யம் பிற்பட்டது இறே –
அந்த ப்ராதி கூல்ய நிவ்ருத்தி தமக்கு உண்டான படியைச் சொல்லுகிறார் முதல் பாட்டில் –

இது தான் உண்டாகவே அமையும் இறே –
சம்பந்தம் இன்றாக உண்டாக்க வேண்டாவா –
தானே ஏறிட்டுக் கொண்டத்தை  தவிரும் இத்தனை வேண்டுவது –

(பூர்வ விருத்தாந்தம் அனுசந்தித்து திருமந்திரம்
நைமிசாரண்யம் திருவேங்கடம் -சரண் புக்கு -நின்று இருந்து கிடந்தது பல திவ்ய தேசம் அனுபவித்து
இதில் உள் பொருளான பாகவத சேஷத்வம் -மஹா சங்கதி இதுவே
பிராதி கூல்ய வர்ஜனம் அனுகூல்ய சங்கல்பம் -அபாகவதர்களை நிந்தித்து
பாகவதர்களைக் கொண்டாடி
கண்டு கொண்டேன் -சித்த உபாயம் பற்றியதைச் சொன்னபடி
அனு பாஷணம் -நமக்கு உபதேசிக்கிறார்
உபாயமாக வரிப்பது உபாயம் ஆகாதே -அங்கங்கள் ஒன்றுமே விதிக்க மாட்டாதே –
பலமான அவனுக்கு அங்கங்கள் என்னும் அளவில் சர்வ சக்தனாக இருப்பதால் அங்க அபேக்ஷை இல்லாமல்
நிரபேஷ உபாயம் அன்றோ

அவனை அங்கமாகக் கொண்டு இவற்றை உபாயமாகக் கொண்டால் -த்வமேவ உபாய பூத பவ
இயற்கையாக வரும் என்று சொல்லலாமோ
சஅங்க பிரபன்னனுக்கு -உபாயான்தர சூன்யத்தை வராது அவனே உபாயம் புத்தி வராதே
அதிகாரி பேதத்தால் இரண்டும் என்று சொன்னாலும் பொருந்தாது
இரண்டையும் பொருந்த இடம் இருக்க அதிகப்படி கற்பனையாக அதிகாரி பேதம் சொல்ல வேண்டாமே
பகவத் -ஏக இருக்க பாகவதர்களை சேஷிகளாக்ஸவும் அவர்களை ஆஸ்ரயிக்க சொல்லுவான் என்னில்
பகவத் ப்ரபன்னனுக்கு பாகவத சேஷத்வம் தன்னடையே வரும்
இரண்டும் விரோதிக்காதே
பிரகார பேதம் ஒழிய ஸ்வரூப பேதம் இல்லை

அவனே உபாயம் -இவர்கள் புருஷகாரம்
அவர்களைப் பற்றினால் அவர்கள் திரு உள்ளத்தில் இவன் இருப்பதால் அவனே உபாயம் ஆவான்
நிரங்குச ஸ்வ தந்த்ரத்துக்கு அஞ்ச வேண்டாமே
இதுவே பெற்றுக் கொடுக்கும்
இதுக்கு பிரமாணம் -ஆண்டாள் ஏற்றம் காட்டி அருளுகிறார்
தங்களைப் பேணாதே பகவத் ஸம்ருத்திக்கு மங்களா சாசனம் -வேறாக ஏத்தி இருப்பாரே –
தனது பேற்றுக்கு உபாயம் என்று இருந்தால் அவன் ஸ் வா தந்தர்யம் வேலை செய்யாதே
பேறு கை இலங்கு நெல்லிக்கனி போல் சித்தம் இவர்களுக்கு
ப்ராதிகூல்ய வர்ஜனம் வந்தால் தானே அனுகூல்ய சங்கல்பம் வரும்
அங்கு ப்ராதிகூல்யர்களே இல்லையே

இரண்டாம் பாசுரம் பின்பு பிரவேசம் வேறாக அருளி மீண்டும் வியாக்யானம் அருளிச் செய்கிறார்
பாகவத வைபவத்தின் ஏற்றம் நம் நெஞ்சில் பட பரம காருண்யராக அருளிச் செய்கிறார்
ப்ராப்ய தமர்கள் -பாகவதர்கள் -ஆனந்த அனுபவம் உஸாத் துணை –
அவனோ பிராட்டியோ போதயந்த பரஸ்பரம் பண்ணி அருளுவார்
வடுக நம்பி மதுர கவி ஆழ்வார் சத்ருக்னன் நிஷ்டை )

———

(மொய் மா பூம் பொழில்–துள்ளாதாரை நிந்தித்தும் -பிராதி கூல்ய வர்ஜனம் –
அடுத்த பாசுரம் அனுகூல்ய சங்கல்பம் போல் இவரும் இங்கு
பிரமாணம் -அனுகூல்ய சங்கல்பம்
அன்பால் ஆள் செய்வாரை ஆதரித்தும் அன்பிலாதவரை நிந்தித்தும் -மா முனிகள் அதே பிராமண வரிசையில் )

நண்ணாத வாளவுணர் இடைப் புக்கு வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார்  மருவினிய
தண்ணார்ந்த கடல் மல்லைத் தல சயனத் துறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே–2-6-1-

பெருமானார்-பெருமை உடையவர் –
எண்ணாதே இருப்பாரை-அவனை எண்ணாதே அந்த ஷேத்ரத்திலே இருப்பாரே
எண்ணோமே–நினைக்க மாட்டேன் -ஆளாகவே எண்ண மாட்டேன்

————————

பிரயோஜனாந்த பரராய் –
தன்னை உகவாது இருப்பாருக்கும்  கூட
அபேஷித சம்விதானம் பண்ணுமவன்-
நம்மை உகப்பாரையும் கிடைக்க வற்றோ என்று
அவசர ப்ரதீஷனாய் இங்கே வந்து கிடக்கிற
இந் நீர்மையை அனுசந்தியாதே
புறம்பே உண்டு உடுத்து போது போக்குவாரை
ஒரு வஸ்துவாக நினைத்து இரோம்
என்கிறார்-

வியாக்யானம் –

நண்ணாத-
ஸ்ரீ விதுரர் பட்டது படுகிறார் ஆயிற்று –
(நடுவே இவர் -அவன் அவர்கள் நடுவே போவதை எண்ணி படுகிறார்-
ஞானம் முற்றி கலங்கின மஹா மதிகள் )
சம்ஸ்புரு சந்நாசனம் சௌரேர் மஹா மதி ருபா விசத் –
என்றது இறே-
கடல் கலங்கினால் போலே கலங்கும் போலே காணும்
மஹா மதிகள் என்று துர்யோதன க்ரஹத்தில் எழுந்து
அருளின போது பொய் ஆசனமும் வஞ்சனமுமாய்ப் புகுந்த
பிரமாதத்தை நினைத்து நெஞ்சு அஞ்சினபடியால்
நாமும் ஒரு குலையில் காய் அன்றோ –
நாமும் சம்சாரிகளில்  ஒருவரான பின்பு
நம்மைத் தான் விஸ்வசிக்க வேணுமோ என்று
தம்மை அதிசங்கை பண்ணின படியால்
தாம் படுத்த படுக்கையையும் தடவிப் பார்த்தார் இறே –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் பெருமாள் எழுந்து அருளப் புக்கால்
சொட்டை முட்டியில் கையை வைத்துக் கொடு சேவிப்பாராம்-
ஒருவர் இடறுதல் -பேர்தல் -செய்தது ஆகில் தம்மை முடித்துக் கொள்வாராக –
அத்தை அனுசந்தித்து நம் முதலிகள் இவரை மஹா மதிகள் என்றாம் அழைப்பது –

கலங்குகை போலே காணும் மஹா மதிகளாவது அஸ்தாநே
பயசங்கை பண்ணுவார்க்கு எல்லாம் பேராய் கொள்ளீர்
மஹா மதிகள் என்று –

(நடுவில் திருமங்கை ஆழ்வார் படும் பாட்டுக்கு விதுரர் பிள்ளை உறங்கா வல்லி தாசர் விருத்தாந்தங்கள் –
இவரும் இவர்களுக்கு நடுவில் உள்ளவர் தானே)

நண்ணாத –
பகவத் விஷயத்தில் த்வேஷம் பிரக்ருதியாயிற்று  இருப்பது –
மனுஷ்ய ஜென்மமாய் இருக்கச் செய்தே
அசுர ஆவேசத்தாலே பொருந்தாதே இருப்பாருண்டு
அங்கன் இன்றிக்கே பிறப்பே ஆசூர பிரக்ருதிகளாய் இருக்குமவர்கள்
அதுக்கு மேலே சாயுதருமாய் இருக்கும் அவர்கள் நடுவே போய் புக்கு

இப்படிப் போய் புகுவது ஒரு ப்ரஹ்லாதலன் போல்வாருக்கோ என்னில் –
வானவரை –
அமிர்தம் கொண்ட அநந்தரம்
உன்னோ பாதி நாங்களும் நித்யர் என்று ஒக்க அபிமானித்து இருக்கும்படியான தேவர்களுக்காக ஆயிற்று –

பெண்ணாகி –
புருஷோத்தமான தன் படிக்கு சேராத ஸ்திரீ வேஷத்தை ஏறிட்டு கொண்டு –

அமுதூட்டும் –
அவன் தன்னை உகந்து (அவனையே என்று காட்டவே அவன் தன்னை ) நீ எங்களுக்கு வேணும் -என்கை அன்றிக்கே
உப்புச் சாறு அமையும் என்று இருப்பார்க்கும் அத்தைக் கொடுக்குமவன் ஆயிற்று –
அமிர்த பானத்திலே ஆயிற்று அவர்களுக்கு அந்வயம்-
கடல் கடைகை துடக்கமான வியாபாரங்களை அடைய
தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு –
(மற்றவையில் அவர்களுக்கு அன்வயம் இல்லையே -உப்புச் சாறு ஒன்றிலே நோக்கு )

பெருமானார் –
உறங்குகிற பிரஜையை எழுப்பி ஊட்டி தாயைப் போலே இது என்ன நிருபாதிக சம்பந்தம் தான் –

மருவினிய – ( மருவ இனிய -கடைக்குறை )
ரச வஸ்துவை ஆதரிப்பாரைப் பெற்றது –
சர்வ ரச என்கிற நம்மையும் ஆதரிப்பாரை கிடைக்குமோ
என்று படுகாடு கிடந்தான் ஆயிற்று –

மருவினிய -இத்யாதி –
மருவினிய தேசமாய் -ஸ்ரமஹதை விஞ்சி இருப்பதாய் –
சிறு திவலை திரு மேனியிலே வந்து ஸ்பர்சிக்கும் படியாய்
இருக்கிற திருக் கடல் மல்லையிலே-
ஆஸ்ரிதனை உகந்து ஸ்தல சயனத்திலே நித்ய வாஸம் பண்ணுகிறவனை-

எண்ணாதே –
நித்ய ஸூரிகள் நடுவே இருக்கக் கடவ வஸ்து
இப்படி சம்சாரத்திலே புகுந்து தரைக் கிடை கிடப்பதே –
இது என்ன நீர்மை  இருக்கும்படியே என்று அநவரதம்
பாவித்தல் சொல்லுதல் செய்கையாயிற்று சேதனர்க்கு
செய்ய அடுப்பது –

இது செய்யாதே இருப்பாரை –
அவனிடை ஆட்டம் கொண்டு -கார்யம் அற்று-
கேவல தேக போஷண பரராய் இருப்பாரை –

இறைப் பொழுதும் எண்ணோமே-
எண்ணப் பெற்றிலோம் என்ற
அனுதாபமும் இன்றிக்கே இருப்பாரை –
(அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர்-அறிவு இல்லை என்ற குறையும் இல்லாமல் போல் இங்கும் )
அ வஸ்துக்களை எண்ணும் போது ஒரு கால விசேஷம் உண்டு இறே
வஸ்து பிரதியோகியாக எண்ணும் அது உண்டு இறே
அவ்வளவிலும் எண்ணோம் என்கிறார் .
(அ வஸ்துக்கள் எண்ணும் பொழுதும் இவர்கள் எண்ணத் தக்கவர்கள் அல்லர்)

—————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading