திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-7-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

  பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும்என்
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?

    பொ-ரை :- பூவையும் பசிய கிளிகளும் பந்தும் தூதையும் அழகிய பூக்கூடையுமாகிய இவை எல்லாவற்றாலும் உண்டாகும் இன்ப முழுதும் திருமால் திருநாமங்களைச் சொல்லுவதனாலே உண்டாகும்படி அவன் திருநாமங்களைச் சொல்லி அதனாலே வாழ்வு பெறுகின்ற என் மகள், குளிர்ந்த வயல்களையுடைய திருக்கோளூர்க்கு இனிச் சென்று, கோவைக்கனி போன்ற வாய் துடிக்கும்படி தண்ணீர் நிறைந்த கண்களோடு நின்று என்ன செய்கிறாளோ? என்கிறாள்.

    வி-கு :- பெண்கள் பந்து விளையாடுதல் மரபு. தூதை – விளையாட்டுக்குரிய சிறிய மரப்பானை, புட்டில் – பூங்கூடை, போய் என்செய்யும்கொலோ? என்க.

    ஈடு :- மூன்றாம்பாட்டு. 3திருக்கோளூர் அண்மையிலிருந்ததாகில் எங்ஙனே உடைகுலைப்படக்கடவள் என்கிறாள்.

பூவை. . . . . .எழும் என்பாவை – 1வேறு ஒன்று கொண்டு பொழுதுபோக்கும் பருவத்திலும் திருநாமத்தையே கொண்டு ஜீவித்திருக்குமவள் கண்டீர் போனாள். இங்கு இருந்த நாள் மற்றொன்று தாரகமாய், அங்கே சென்று அவனாலே தரிக்கப்போனாளோ. 2பூவை தொடக்கமான லீலையின் உபகரணங்களால் பிறக்கும் உவகை எல்லாம் துவயத்தின் படியே ஸ்ரீய:பதி (திருமகள் கொழுநன்) என்கிற திருநாமத்தைச் சொல்ல அதனாலே உண்டாகா நின்றது. 3“‘ஊரும்நாடும் உலகமும் தன்னைப்போல்’ என்கிறபடியே, இவை தாம் திருநாமத்தைச் சொல்லினவானால் ஆகாதோ’ என்று, பெற்றி, நம்பிள்ளையைக் கேட்க, “அதற்குக் குற்றம் உண்டு, ‘பந்து தூதைபுட்டில்’ என்கிற விடத்தில் தட்டுப் பிறக்கும்” என்ன, அங்ஙனேயோ என்று இசைந்து போனார். நன்று; அவன் திருநாமங்களை இவற்றிற்கு இட்டு அழைத்ததாகக்கொண்டாலோ? என்னில், “உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன்” என்றிருக்கிற அளவுகடந்த ஈடுபாட்டிற்கு4 இதுசேராது.

பெற்றி என்னும் பெரியார் ஒருவருடைய நிர்வாகத்தையும், அவர் கூறும்
நிர்வாகம் பொருந்தாமையையும் காட்டுகிறார் ‘ஊரும் நாடும்’ என்று
தொடங்கி. பெற்றி நிர்வாகத்தில், “கூவி’ என்பதற்குக் கூவும்படி செய்து
என்றும், “எழும்” என்பதற்குச் சந்தோஷிக்கும் என்றும் பொருள்.

5அன்றிக்கே, பூவை பைங்கிளிகள். . . . . .எழும் என்பதற்கு, திருநாமச்சுவடு அறிந்த பின்பு விளையாட்டுக்குரிய கருவிகளைப் பார்த்தல்இவளுக்குப் பொறுக்கக் கூடாத தாயிருக்கும் என்னுதல்.

திருமால்திருநாமங்களைக் கூவி, “மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர்தோள்
கைவிட்டு” என்கிறபடியே, பூவை தொடக்கமான எல்லாவற்றையும் இகழும்
என் பாவை என்றபடி. இங்கே, “ஏழும்” என்றதற்கு, அவற்றை விட்டு எழும்
என்று பொருள் கொள்க.

ஸ்ரீ பரதாழ்வானுடைய ராஜ்யதரிசனம் அவனுக்குப் பொறுக்க முடியாமற்போனது போலே. 2சக்கரவர்த்திக்குச் சாஸ்திரார்த்தங்கள் செய்த அன்று நாயிறு பாடு, ‘கைகேசி செய்த குற்றத்துக்கு நாமும் கீழோலை இட்டோம் என்று நாட்டார் நினைத்திருப்பது ஒன்று உண்டு; அந்தக் குற்றம் நமக்கு இல்லை என்று அறிவிக்கவேணும்’ என்று சபையை அடைந்தான். அரசர் கூட்டம் அடங்கலும் திரண்டு கர்த்தாவானவனை இழந்தோம்; பின்பு அதற்குரியவர் காடு ஏறப்போய்க் கொடு நின்றார்; இனி, சக்கரவர்த்தி புத்திரர்களில் நின்றாரைக்கொண்டு நிர்வஹிக்கும் அத்தனை அன்றோ’

ஸபாஷ்ப கலயா வாசா கல ஹம்ஸ ஸ்வரோ யுவா
விலலாப ஸபாமத்யே ஜகர்ஹே ச புரோஹிதம்.”
“கதம் தசரதாஜ் ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக:
ராஜ்யம்ச அஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹசி”-என்பன, ஸ்ரீராமா. அயோத். 82 : 10, 12.

என்று பார்த்து, மங்களத்தைக்கொடுக்கிற பல்லியங்களை முழக்கிக்கொண்டிருந்தார்கள்.

இந்த முரச ஒலி செவிப்பட்டபோது “கருமாணிக்கமலை” என்னும் திருவாய்மொழியில் பிராட்டியின் சுயம்வரத்துக்கு மண முரசு அறைந்தபோது தோழி பட்டவெல்லாம் பட்டான். விலலாப சபா மத்யே – தனி இடத்தில் அன்றோ பறிகொடுப்பது. தனக்குச் சேஷத்துவம் அன்றோ சொரூபம்; சொரூபத்தை யன்றோ கொள்ள நினைக்கிறது. ஜகர்ஹேச-சந்தியா வந்தனத்துக்குப் பிற்பட்டாரைப் பெரியோர்கள் பழிக்குமாறு போலே. புரோஹிதம் – இந்தக் குடிக்கு நாங்கள் கைவாங்கியிருக்க, நீ முன்னோடிக் காரியங்கள் நடத்தக் கடவதாகச் சமைந்தபடி சால அழகியதாய் இருந்தது. சபாமத்யே ஜகர்ஹே-3“நிய மாதிக்ரமம் ரஹஸிபோதயேத்-ப்ரமாதாத் ஆசார்யஸ்ய புத்திபூர்வம்வா நியமாதிக்ரமம்
ரஹஸி போதயேத்”-
என்பது, ஆபஸ்தம்ப தர்மம்.

தவறான செயலைத் தனிமையில் தெரிவிக்கவேண்டும்” என்கிற நிலையைக் குலைத்தான். புரோஹிதத்வமாகிற காரணம் கழிகையினாலே. ராஜ்யஞ்ச அஹஞ்சராமஸ்ய-சேஷவஸ்துக்களில் ஒன்றனை ஒன்று ஆளுமோ? அங்ஙனேயாமன்று, இராச்சியந்தான் என்னை ஆண்டாலோ? தர்மம் வக்தும் இஹார்ஹஸி-உலகத்தில் தமப்பன்மாரையும் தமையன்மாரையும் அழியச்செய்து தாம்தாம் இராச்சியத்தைக் கைக்கொண்டு போருவது ஒன்று உண்டு; ‘அதனை இவனும் செய்வான்’ என்று இராதே கொள்; என் தன்மை அறிந்து அதற்குத் தகுதியாக வார்த்தை சொல்லப் பாராய். கதம் தசர தாஜ் ஜாதோ பவேத் ராஜ்ய அபஹாரக:-அவர் பிரிந்த உடனே முடியவல்லவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே? அவர் பொகட்டுப்போன இராச்சியத்தை நான் அபஹரித்தால். 2நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:-தகுதி இல்லாத வார்த்தைகளை அவன் சொல்லச் செவிதாழ்த்ததனால் அபவாதத்துக்குப் பிராயச்சித்தம் செய்கிறான்.“யத்ஹிமாத்ராக்ருதம் பாவம் நஅஹம் ததபி ரோசயே
இஹஸ்தோ வனதுர்க்கஸ்தம் நமஸ்யாமி க்ருதாஞ்ஜலி:”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 82 : 15.

என்பாவை இனிப்போய்-3என்புத்திக்கு வசமான செயல்களையுடையவள் கண்டீர் என்னை ஒழியப் புறப்பட்டுப்போனாள். அன்றிக்கே, நிருபாதிகமான பெண்மையையுடையவள் என்னலுமாம். 3விளையாட்டுப் பொருள்களால் கொள்ளும் காரியமும் அவனேயாம்படியான இந்த ஈடுபாட்டிற்கு மேலே அங்குப் போய்ப் பெறுவது என்னாகப் போனாளோ? என்பாள் ‘இனிப்போய்’ என்கிறாள். தண் பழனம் திருக்கோளூர்க்கே – சிரமத்தைப் போக்கக் கூடிய நீர் நிலங்களையுடைய திருக்கோளூர்க்கே. கோவை வாய்துடிப்ப – கோவைப்பழம் போன்ற சிவப்பையுடைத்தான அதரமானது துடிக்க.  2“ ‘பிரியேன்’ என்று பிரிந்தாய்; ‘வருகிறேன்’ என்று வந்திலை; என்னைத் தனியே இட்டுவைத்தாய்;, நான் வருமளவும் இருந்தாய்” என்பனபோலே இருக்கச் சில சொல்ல நினைக்குமே; அது தோற்றும்படி உதடு நெளிக்கிறபடி. கோவை வாய் துடிப்ப மழைக் கண்ணோடு-2நினைத்தது சொல்லித் தலைக்கட்ட வொட்டாநின்றதோ கண்ணநீர்! உடைகுலைப்பட்டுக் கண்ணநீராலே தலைக்கட்டாநின்றாள். 3“தசரதபுத்திரனான ஸ்ரீபரதாழ்வான் தீன சுரத்தோடு ஒரு தடவை ‘ஆர்யா’ என்று சொல்லிப் பின்பு வேறு ஒருவார்த்தையும் சொல்லவில்லை” “துக்காபிதப்தோ பரதோ ராஜபுத்ரோ மஹாபல:
உக்த்வா ஆர்யேதி ஸக்ருத்தீனம் புந: நோவாச கிஞ்சந”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 99 : 38.-
என்பது போன்று.

என் செய்யும் கொலோ – சொல்லமாட்டாள், தவிரமாட்டாள்; அழாதொழியமாட்டாள்; எங்ஙனே படுகிறாளோ? நம்மையும் பிறரையும் விட்டு அவன் திருநாமங்களை அநுபவிக்கிற போதை அழகு காணப்பெற்றோம்; அவனையே கண்டு அநுபவிக்கிற போதை அழகு காணப்பெற்றிலோமே. 4நினைக்கும் வேளையில் போலே அன்று, கண்டால் பிறக்கும் விகாரங்கள்; 5“காமன் உடல்கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும் தார் அலங்கல் நீண்முடியான்தன் பெயரே கேட்டிருந்து அங்கு ஆரலங்கல் ஆனமையால் கண்டு வணங்கினார்க்கு என்னாங்கொல்”- நான்முகன் திருவந். 78. என்றேயன்றோ இருப்பது. 6அலாபத்தோடே இருக்கும்இருப்புக்கண்டேன்; இலாபத்தோடே இருக்கும் இருப்புக் காணப்பெற்றிலேன் என்கிறாள்-

கிட்டே வர –
எங்கனே உள்ளம் கரைய இருப்பாளோ –
எனது பாவை போய் -கோவை வாய் துடிப்ப -த்வரை
மழைக் கண் -என் செய்வள்
பூவை -பறவை
பைம் கிளி பந்து
தூதை -பறவை
பூம் பொட்டில் -சொப்பு
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும்
தன்னைப் போல் பேர்களை பிதற்ற முதல் நிர்வாகம்
ஒட்டாது -பந்து பூம் பொட்டில் சொல்லாதே –
வேறு ஒன்றை கொண்டு ஜீவிக்கும் பருவத்திலும் எம்பெருமான் திரு நாமம் கொண்டு ஜீவிக்க தொடங்கினவள்
இங்கு இருக்கும் கால் மற்று ஓன்று தாரகமாய்
அங்கே போய் அவன் திரு நாமம் தாரகம் இல்லையே இவளுக்கு
எம்பெருமான் திரு நாமம் தான் பூவை இத்யாதி இவளுக்கு

திருமால் திரு நாமங்கள் ஸ்ரீ ய பதி –
பெற்றி நம்பிள்ளையை கேட்க –
பெற்றி நஞ்சீயர் சிஷ்யர்
தலை அல்லால் கைம்மாறு இல்லை அர்த்தம் அறிய வில்லை
நம்பிள்ளை இடம் கேட்டு
கால ஷேபம் கேட்காதவற்றையும் அறியும் படி அனுக்ரகம் செய்ய வேண்டும்
தப்பான அர்த்தம் –
தத்துவனை வரக் கூவிற்று ஆகில்
பெற்றி -தலையை அறுத்து கொடுப்பேன்
பலனாக இதை கொடுத்தால் நாயகன் இடம் எப்படி கூடுவது
அர்த்தம் சரி இல்லை
திருவாய் மொழி மூன்று தரம் கேட்டேன் நாச்சியார் திருமொழி கேட்க பெற வில்லை
தலையை காலில் மடித்து காலம்  எல்லாம் அடிமை செய்வேன்
வரத்தாலே பெற முடியாது
ஸ்ரவணத்தால் தான் அறிய முடியும் அறிந்தணு -கொண்டேன் என்றாராம்
கால ஷேபம் கேட்டு தான் அறிய முடியும்

அசேதனம் திருநாமம் சொல்லாதே
ஆகையால் –
தூதை சிறு சோறு சமைக்கும் பானைகள்
பூம் பொட்டில் குடலை சொல்லாதே
பொருந்தாதே –
அவன் திரு நாமங்களை இவற்றுக்கு கொடுத்தால் ஆகாதோ
எல்லாம் கண்ணன் அதி மாத்திர ப்ராவண்யம் இது சேராது
அத்தாலே கிடைக்கும் ஆனந்தம் கண்ணன் இடம் இவள் பெற்றால்
திரு மால் சுவடி அறிந்த பின்பு லீலா உபகரணங்கள் ஈடுபாடு வராதே
பரத ஆழ்வானுக்கு ராஜ்ய தர்சனம் அசக்யமானா போலே
அது போல் பராங்குச நாயகிக்கும் அசக்யம் ஆனது
சாஸ்த்ரார்தங்கள் சக்கரவர்த்தி முடிந்தபின்பு சுப ச்வீகாரம் ஆன பின்பு -சரம பரிகாரம் ஆனபின்பு
கஸ்மலம் -அழுக்கு
கைகேயி செய்தவற்றுக்கு தானும் காரணம் இல்லை –
பெருமாளை கூப்பிட்டு
ஜனங்களை கூப்பிட்டு
பிராப்தர் காட்டுக்கு போக
கர்த்தாவானவன் -இழந்தோம்
ராஜ புத்ரர்களில் நின்றார் ஒருவனை அமைக்க
கரு மாணிக்கம் –
தோழி இவள் எம்பெருமானுக்கு ஆனபின்பு -கல்யாணத்துக்கு ஆள் பார்ப்பதா
போலே பரதன் துடிக்க சபா -மத்யத்தில் அழுது
வசிஷ்டரை வைது
ஷத்ரியன் –புருஷன் நான்கு பேர் -நடுவில் அழுதான்
பெரிய சொத்து போனால் நடு தலையில் கை வைத்து அழுவான்
ஸ்வரூபம் போனால்
எம்பெருமானுக்கு பாரதந்த்ர்யம் அழித்து
இத்தை அபஹரித்தால்
சந்தாயவந்தனம் பிற்பாடரை பெரியவர் சின்னவரை வைவது போலே
புரோகிதர் -என்று
மேலே விளைய கூடிய நன்மை ஆராய்ந்து சொல்பவர்
இப்படி வைதான் -ஸ்வரூப நாசம் வார்த்தை சொல்பவர் இப்படியா நன்மை பார்ப்பது
சலா அழகிது இது
முன்னோடி யாக இருக்க வேண்டியவர் –
சபா மத்யே –
ஆசார்யர் தப்பை ஏகாந்தமாக பவ்யமாக சொல்ல வேண்டும்

பகிரங்கமாக சொல்லி -இழந்த வஸ்து பெருமையால்
புரோகிதர் இல்லையே ஹிதம் பார்க்காமல் சொன்னதால்
ராஜ்யமும் நானும் ராமன் உடைமை
ராஜ்ஜியம் என்னை ஆளட்டுமே
செருப்பு குடை வைத்து கோயிலுக்கு போவது போலே
தர்மம் சொல்வது நீர்
மூத்தவன் இருக்க இளையவன் ஆளலாமா
ராஜ்ஜியம் அபஹரித்த பின்பு தசரதர் பிள்ளையாக எப்படி ஆவேன்
அவன் உயிர் விட நான் கொள்வதா
நமஸ்யாமி
கிருதாஞ்ஞாலி  காதில் கேட்டதுக்கே ப்ராயாசித்தம் செய்ய வேண்டுமே
அபவாத பிராயச்சித்தம்
உண்மையால் இவனுக்கு எண்ணம் இல்லை
வசிஷ்டர் சொன்னதால் பரதன் பிராயச்சித்தம் செய்தான்
வஸ்துக்கள் அனைத்தும் இவளுக்கும் அசக்யம்
அனைத்தும் எம்பெருமானே
என் பாவை –
நிருபாதிக ஸ்த்ரீத்வம் விட்டு
தண் ஸ்ரமஹரமான நீர்வளம் மிக்கு
தனியே இட்டு வைக்க
உதடு நெளிக்கும் படி
பிரியமாட்டேன் சொல்லி
நானே வரும்படி நிலைமை
ஆக்கி இப்படி சொல்ல நினைக்கும் வாய்
கோவை வாய் துடிக்க
சொல்லி தலைக் கட்ட ஒட்டாமல்
கண்ண நீரால் தலைக் கட்டுகிறாள்
ஆர்யா -சீதை சொல்ல முற்பட்டு கண்ண நீர் விட்டால் போலே
அழுகை பீரிட்டு வர
என்ன படுகிறாளோ
அவன் தம்மையே கண்டு அனுபவிக்கப் பெற்று காணப் பெற்றிலேன்
அனுசந்தான வேளை  போலே இல்லை கண்டார் நிலைமை
கண்டு வணங்கினாருக்கு எனாகும் கொல்
ருத்ரன் த்யானம் செய்ய –
உமை கேட்க -திரு நாமம் உணர்த்ததியதும்
வண்டு -கண்ணீர் பெருகி ருத்ரன் நிலை
அலாபதொடு இருக்கும் இருப்பு கண்டேன்
லாபத்தின் இருப்பு காண பெற வில்லையே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading