ஸ்ரீ பெரிய திருமொழி-1-6-5-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அத்தனையோ-இன்னும் ஏதேனும் உண்டோ -என்ன
திரு உள்ளத்துக்கு பொறுக்க ஒண்ணாதவையும் எல்லாம்
செய்து போந்தேன் என்கிறார் –

இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி
நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய்–1-6-5-

தினம் ஆயிரம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ததீயாராதனம் செய்தவர் -நாம் சொல்லிக் கொள்ள இந்த பாசுரம்
இடுமினோ -பலர் இருக்க ஓ என்று -துற்று -ஓர் பிடி கவளமாவது இரக்க-கடுமையான சொல்லால் மறுத்த நீசனேன்
நினைக்கிலேன்-நான் நினைக்கா வில்லாவிட்டாலும் நினைத்து -இறைக்க =ஹிம்சிக்க எம படர்கள் உண்டே –

வியாக்யானம்-
இடும்பையால் அடப்புண்டு-
தாரித்ரத்தாலே நெருக்குண்டு-

இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு-
ஆரேனும் ஆகிலும் எல்லாரும் கூட எனக்கு ஒரு கால் வாயிலே இடுகைக்கு
கேட்டு அது தர வேணும் என்று –
முனியே -என்பாரைப் போலே கூப்பிடும் ஆயிற்று –
துற்றாகிறது ஒரு கால் வாயிலே அள்ளிவிடுமதாயிற்று –

துற்று என்று இரந்தார்க்கு –
இப்படியே தயா நீயமாம்படி சொல்லிக் காலைக் கட்டினவர்களுக்கு –
(இடுமின் என்றதே வேண்டியதே தான் -மேலே இரக்க -என்றது சொல்லிக் காலைக் காட்டியதைக் காட்டுமே)

இல்லையே -இத்யாதி –
அவர்களுக்கு இல்லையே –
என்னும் போது சொல்லும் வார்த்தையில் கொடுமையை அனுசந்தித்து –
நாம் இவனை ஓன்று அபேஷித்து வர
இவன் இல்லையே என்ற பாசுரத்தைக் கேட்டு
இன்னமும் ஜீவிக்க இருக்குமதில்
இத்தனை நஞ்சு பெற்றோம் ஆகில் முடிந்தோம் போம் ஆயிற்று என்று
கால தத்வம் உள்ளதனையும் அவன் நெஞ்சு புண் பட்டு கிடக்கும்படி
சொன்ன கொடுமையை சொல்லுகிறதாயிற்று –
அந்தோ –
என்கிறார் ஆயிற்று மேல் வருகிற நலிவை அனுசந்தித்து-

நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை–
கீழ் செய்த செயல் தானே அனுசந்திக்க அரிதாய் இருந்த பின்பு
அதின் பலமாய் வருமது தானே அனுசந்திகப் போதாது இறே –

கடும் சொலார் -இத்யாதி –
வெட்டிய சொல்லை உடையராய்
க்ரூரமான செயலை உடையராய் இருந்த
யம படராலே படக் கடவதான கொடிய மிறுக்கை அனுசந்தித்து –

நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன்-
தேவரீர் திருவடிகளில் வந்து சரணம் புகுந்தேன்-

நைமி சாரணி யத்துள் எந்தாய்—
இரந்தாருக்கு இல்லை என்று மறுத்துப் போந்த எனக்கு
நான் இரவாது இருக்க-
நீ வந்து சந்நிஹிதனாய் ஆயிற்று
எனக்கு உபகரிகைக்கு அன்றோ –

இவற்றால் சொல்லிற்று ஆயிற்று –
முன்பு எல்லாம் தோன்றின படி செய்து திரிந்து
அவற்றுக்கு வரும் பலத்தைக் கேட்டு
பயப்பட்டு
போக்கடி தேடி
புறம்பு ஒரு புகல் காணாமையாலே
தேவரீர் திருவடிகளில் சரணம் புகுந்தேன் –
என்கிறார் –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading