கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
கட்டெழில் ஆயிரத்துஇப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம்உண் பாரே.
பொ-ரை :- செறிவினையுடைய அழகுபொருந்திய சோலைகளாற் சூழப்பட்ட சிறந்த திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனை, அரண்களின் அழகையுடைய தெற்குத் திக்கிலேயுள்ள திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட அழகிய தொடைகளையுடைய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள் நித்திய சூரிகளுடைய அனுபவத்தை அனுபவிப்பார்கள்.
ஈடு :- முடிவில், 2இத் திருவாய்மொழியினை வல்லவர்கள் நித்தியசூரிகள் அநுபவிக்கின்ற இன்பத்தினை அநுபவிப்பார்கள் என்கிறார்.
கட்டு எழில் சோலை – பரிமளத்தையுடைத்தான நல்ல சோலை. கடி என்ற சொல், ‘கட்டு’ என்று வந்தது; வலித்தல் விகாரம். கடி – வாசனை. நல்வேங்கடம் – 3சேஷசேஷிகள் இருவர்க்கும் உத்தேசியமான திருமலை. வாணன் – நிர்வாஹகன். திருவேங்கடமுடையானை யாயிற்றுக் கவிபாடிற்று. 4“திருவேங்கடத்து என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகதிருவாய்.- 3. 9 : 1.
. என்னாவில் இன்கவி யான் ஒரு
வர்க்கும் கொடுக்கிலேன்” என்று இருக்கும் அவர் அன்றோ. கட்டு எழில் தென்குருகூர்-அரணையுடைய திருநகரி. கட்டு-அரண். ணூட்டு எழில் ஆயிரம் – அழகிய தொடைகளையுடைத்தாயிருக்கை. கட்டு-தொடை. கட்டு எழில் வானவர் – கட்டடங்க நல்லவரான நித்திய சூரிகள். அன்றிக்கே, ‘கட்டு’ என்பது, போகத்திற்கு விசேடணமாகவுமாம். என்றது, சம்சாரத்தில் போகங்கள் கர்மங் காரணமாக வருகையாலே அல்பமாய் நிலையற்றவையாய் இருக்கும் அன்றோ. இது, சொரூபத்துக்குத் தக்கது ஆகையாலே நிறைந்ததாய் நித்தியமாய் இருக்கையைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, நான்கு அடிகளிலுமுள்ள ‘கட்டு’ என்ற சொல்லிற்கு, முழுதும் என்றே பொருள் கோடலுமாம். 1நீர்மைக்கு எல்லையான திருமலை பற்றுதற்குரிய தலம்; மேன்மைக்கு எல்லையான பரமபதம் அநுபவத்திற்குரிய தலம். 2ஒன்றி ஆக்கை புகாமை உய்யக்கொள்வான் நின்ற வேங்கடம் அன்றோ.-திருவாய். 9. 3 : 8.
திருவாய்மொழி நூற்றந்தாதி
மாலுடனே தான்கலந்து வாழப் பெறாமையால்
சாலநைந்து தன்னுடைமை தானடையக் – கோலியே
தானிகழ வேண்டாமல் தன்னைவிடல் சொல்மாறன்
ஊனமறும் சீர்நெஞ்சே! உண்
கடி -கட்டு வலித்து
கட்டு எழில் -வாசனை மிக்க சோலை
நல் வேங்கட வாணன் -சேஷி செஷபூதநிருவருக்கும்
அவனே ஆசைப் பட்டு வந்தவன் –
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம் -தானே ஆசைப்பட்டு
சுமதி அரசன் ஆசைப் பட்டு திரு வல்லிக்கேணி
திருவரங்கம் -சோலை அழகை கண்டு இருந்தானே
வாணன் -நிர்வாகன்
பத்துப் பாட்டும் திரு வேம்கடத்துக்கும் ஆயிற்று
இது போலே வீற்று இருந்த ஏழு -உலகம் -மாரி மாராத -அங்கும்
ஆனந்த எல்லை அது
இது துக்கத்தின் எல்லை
இரண்டிலும் திரு வேம்கடத்து
திரு வேம்கடத்தான் தவிர யான் ஒருவருக்கும் கொடுத்திலேன் நானின் கவி
முதலில் திரு விருத்தம் திருவாய்மொழி இரண்டிலும் திருவேம்கடம்
பெரிய திருவந்தாதி -கல்லும்கனை -கடலும் திருவேம்கடம் தவிர வேறு இல்லையே
நன்றாக தொடுக்கப் பட்ட
கட்டு எழில் போகம் -நிரதிசய ஆனந்தம் ஸ்திரம் ஸ்வரூப அனுரூபமான நித்யம்
நான்கு அடியிலும் கட்டு முழுக்க
எங்கும் சோலை
எங்கும் அழகு
நீர்மைக்கு எல்லை ஆச்ரயண ஸ்தலம் -இத்தை சொன்னால்
அனுபவிக்க ஸ்தலம் அனுபவம் கிட்டும் -பரம பதம் கிட்டும்நிச்ச்சயம்
சாரம்
தான் கலந்து சேரப்
பெறாமையால் சால நைந்து
தானே உடைமை கழியப் பெற்றன
மாறன் சீர் -ஊனம் இல்லாத நெஞ்சை உண்பாயாக
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply